இடுகைகள்

கணியம் சீனிவாசன் செய்த உதவி - கடிதங்கள் - கதிரவன்

படம்
  பரஸ்பர உதவி ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? இன்று மடிக்கணினியை அன்வர் என்பவரிடம் பழுது நீக்க கொடுத்தேன் . புதிதாக ஓஎஸ் பதிவாகும்போது அதில் உள்ள கோப்புகள் அழிந்துவிடும் . கணியம் சீனிவாசன் சார் செய்யும் உதவி இது . முன்னமே கூறியுள்ளது போல அவரின் தளத்திற்கு நிறைய நூல்களை இலவசமாக கொடுத்துள்ளேன் . இதில் என்னுடைய சுயநலமும் உள்ளது . பரஸ்பர சகாயம் என நினைக்கிறேன் . மூன்றாவது மாடியில் ஆட்களின் எண்ணிக்கை கூடிவிட்டது . 14 பேருக்கு 2 கழிவறை 2 குளியலறை உள்ளது . ஆட்களின் வரத்து கூடியதால் , நான் இன்டக்ஷன் ஸ்டவ்வில் சமையல் செய்வது குறைந்துவிட்டது . வயிற்றுக்கு பிரச்னை செய்யாத இடத்தில் தான் உணவு வாங்கி சாப்பிடுகிறேன் . அலர்ஜி பாதிப்பு எப்போது வெளியே வருமோ ? அன்பரசு 23.12.2021 மயிலாப்பூர் -------------------------------------------------------------------------------------------------------------- பிறரை விற்றுப்பிழைக்கும் சுயநலம் ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? வேலைகள் இப்போது அதிகரித்துள்ளன . நாளிதழ் பொறுப்பாசிரியர் கட்டுரைகளை முன்கூட்டியே மென்பொருளில் பத

ரயில் நிலையத்தில் ஜோதிட நிரூபணம் - கடிதங்கள் - கதிரவன்

படம்
  ஜோதிட நிரூபணம் ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? நீங்கள் எப்படியிருக்கிறீர்கள் என கார்ட்டூன் கதிரவன் போன் செய்தபோது விசாரித்தார் . நலமோடு இருப்பதாக பதில் கூறினேன் . நாகப்பட்டினத்தில் இருந்து இப்போதுதான் சென்னைக்கு வந்திருக்கிறார் . அவர் மனைவி அகிலா , அரசுத்தேர்வுக்கு படித்து தேர்வுகளை எழுதி வருவதாக கூறினார் . ஒருமுறை தேர்வு எழுதிவிட்டு ரயில் நிலையத்திற்கு வந்திருக்கிறார் . திருவான்மியூர் ரயில் நிலையம் என்று சொன்னார் . அங்கு , ஆதவன் நாளிதழில் முன்னர் பணியாற்றிய குமார் என்பவரை சந்தித்திருக்கிறார் . முழுநேர ஜோதிடரும் , பகுதிநேர ஃப்ரூப் ரீடருமான குமார் , ரயில் நிலையத்திலேயே அகிலாவுக்கு ஜோதிடம் பார்த்து வேலை பற்றி கூறுவதாக சொல்லியிருக்கிறார் . கதிரவனுக்கு மனதில் சங்கடமாகியிருக்கிறது . இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கதிரவன் குமாரை சந்தித்திருக்கிறார் . ஆனால் அவர் அப்போதும் தனது ஜோதிட திறனை நிரூபிக்க வாய்பைத் தேடியிருக்கிறார் . அகிலா தடாலடியாக பேசக்கூடியவர் . கணவரின் நண்பர் என்பதால் நிதானம் கூட்டி பொறுத்திருக்கிறார் . நாளிதழ் பணிக்கான கட்டுரைகளைத் தேடி படித்து வர

மனநோயாளிகளோடு ஒரு போர் - கடிதங்கள் - கதிரவன்

படம்
  மனநோயாளிகளோடு நேருக்கு நேர் ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? உடல்நலனோடு மனநலனைப் பராமரிப்பது கடினமாக இருக்கிறது . நான் அமைதியாக இருந்தாலும் அலுவலகத்தில் உள்ள உளவியல் பிரச்னை கொண்டவர்கள் ஏதாவது பிரச்னையை செய்துகொண்டே இருக்கிறார்கள் . நமக்கு தொடர்புடையவர்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் . இதன் பொருட்டு சில சமயங்களில் நமக்கே பாதகமான முடிவுகளைக் கூட நாம் எடுக்கவேண்டியுள்ளது . அண்மையில் அலுவலகத்தில் சேர்ந்தவர் , கணிதப்பக்கத்தைக் கவனிக்கிறார் . அவர் , இதுபோல குறைபுத்தி கொண்டவர்களால் பாதிக்கப்பட்டார் . என்னோடு டீ குடிக்க வருவதால் அவரை கார்னர் செய்தனர் . எனவே , அலுவலக நண்பரை விட்டு தனியாக பிரிய முடிவெடுத்துள்ளேன் . ஆசையா , நிம்மதியா என்றால் நான் நிம்மதியைத் தான் தேர்ந்தெடுப்பேன் . நன்றி ! அன்பரசு 7.12.2021 மயிலாப்பூர் ------------------------------------------------------------------------------- ------------------------------------------------ என்னமோ ஏதோ ... அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? எங்கள் நாளிதழ் ஜனவரி தொடங்குவதாக கூறியிருக்கிறார்கள் . கட்

உடைந்துபோன திருமண உறவு - கடிதங்கள் - கதிரவன்

படம்
  பிரேக் இல்லாத வண்டியை இயக்குவது போல ... அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? எனது லினக்ஸ் கணினி பழுதானதால் இதுவரை எழுதிவந்த , எழுதி வைத்து சேமித் கோப்புகள் தானாகவே அழிந்துவிட்டன . சோதித்ததில் சில கோப்புகளை குப்பைத்தொட்டியில் பார்த்தேன் . மீட்க முடியவில்லை . அதை மீண்டும் எழுத வேண்டும் . லினக்ஸ் கணினியில் காணாமல் போன கோப்பைத் தேடுவது கடலில் கலந்துவிட்ட ஆற்று நீரை தனியாக பிரிப்பது போல கடினமாக இருக்கிறது . லினக்ஸ் அமைப்பு முறையை முழுமையாக கற்காமல் அதை பயன்படுத்துவது தவறு என இப்போது எனக்குத் தோன்றுகிறது . கணியம் சீனிவாசன் சார் உதவினாலும் கூட கோப்பை எளிதாக மீட்க முடியவில்லை . பேக்அப் எடுத்து வைத்திருக்கவேண்டும் என அரிய அறிவுரையைச் சொன்னார் . நல்ல அறிவுரை . ஆனால் அதற்கான காலம் கடந்துவிட்டது . பிரேக்கிற்கு இணைப்பு கொடுப்பதற்கு முன்னரே வண்டியை சாவி போட்டு இயக்கியாயிற்று . வண்டி இப்போது சேட்டாவின் டீக்கடை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது . இந்த நிலையில் லபோதிபோ என கத்துவது , ட்விட்டரில் போடும் அட்வைஸ்களை சொல்லி என்ன செய்வது ... இனி க்ளவுட்டில் கோப்பைச் சேமித்து வ

புங்கமர நிழலாக பூக்கும் காதல்- கடிதங்கள் - கதிரவன்

படம்
  வெயிலுக்கு புங்க மர நிழல் ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலம் . மழை பெய்தாலும் பத்திரிகைகளுக்கு விடுமுறை கிடையாது . வேலை செய்தே ஆகவேண்டும் . நாமும் ஆபீஸ் போயே ஆகவேண்டும் . ஆனால் அந்த நேரத்தில் வேலை செய்யும் மனநிலை வரவே மாட்டேன்கிறது . அதுதான் இருப்பதிலேயே கடினமானது . இனிய உதயம் பத்திரிகை படித்தேன் . இதில் சுரா மூன்று சிறுகதைகளை தமிழில் எழுதியிருக்கிறார் . அதாவது மொழிபெயர்த்து தமிழில் எழுதியிருக்கிறார் . பூட்டப்பட்ட வீடுகள் உறூப் எழுதிய கதை . சுகுமாரன் என்பவரைக் காதலிக்கும் உடல் ஊனமான பெண்ணின் கதை . அம்முக்குட்டி என்ற பெண்ணை அவளது பெயரைச் சொல்லி அழைக்கும் ஒரே ஆள் சுகுமாரன் மட்டுமே . பிறர் அவளை கேலி செய்து ஊனத்தை பட்டப்பெயராக வைத்து அழைக்கிறார்கள் . இதனால் சுகுமாரனின் மீது அம்முக்குட்டிக்கு காதல் பிறக்கிறது . அவரைப் பார்க்கும்போது கத்தரி வெயிலில் புங்கமர நிழல் கிடைத்தது போலாகிறது . அவள் தனது காதலைச் சொல்லப் போகும்போது சுகுமாரனுக்கு பெண் பார்த்துவிடுகிறார்கள் . அதற்குப் பிறகு , அம்முக்குட்டியின் நிலை என்னவானது என்பதே கதை . நன்றி ! அன்பரசு 30.11.2021 மயிலாப்பூர் -----------------