இடுகைகள்

நெடுஞ்சாலை கொலைகாரருக்கு மாற்று! - அவருக்கு பதிலாக இவர்

படம்
  நீதியைக் காப்பாற்றுவதற்கு காவல்துறை உள்ளது. அதன் வழியாக நீதிமன்றம் தண்டனைகளை வழங்கி சட்ட ஒழுங்கை காப்பாற்றுகிறது. ஆனால் இப்படி நடக்கும் செயல்பாடுகள் எளிதானவை அல்ல. சரியாக நடக்கிறது என்றும் கூறமுடியாது. குற்றங்கள் நடந்து அவற்றை காவல்துறை அறிய முடியாமல் அல்லது செய்த குற்றவாளிகளை கண்டுபிடிக்க   தாமதமாகும்பொழுது குற்றவாளி என யூகித்தவர்களை மாட்டிக்கொடுப்பது வாடிக்கை. இதில் குற்றவாளி என காவல்துறையில் கூறப்படுபவர்களின் உறவினர்களே அவர்தான் குற்றவாளி என தனிப்பட்ட வன்மத்திற்கு இடம் கொடுத்து அவர்களை பழிவாங்கினால் எப்படியிருக்கும்? ஆபெல் என்பவரின் விவகாரத்தில் இப்படித்தான் உண்மைகள் வளைக்கப்பட்டன. அரசு அமைப்புகள் இதற்கு கூறிய பதில்களும்   என்னென்ன சொல்றான் பாருங்க என்ற ரீதியில் இருந்தன. ஐ-45 கொலைகாரர் என அழைக்கப்பட்டவர் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அவர் செய்த கொலைகள் அத்தனையும் நிஜம். ஹூஸ்டன், கால்வெஸ்டன் இடையிலான நெடுஞ்சாலைதான் 45 என குறிப்பிடுகிறார்கள். இந்த சாலையில் 1982-1997 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 42 சிறுமிகள், இளம்பெண்கள் காணாமல் போய் பிறகு பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். நா

வாழ்ந்து அனுபவித்தலே உண்மையை புரிந்துகொள்வதற்கான வழி - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  வரையறுக்கப்படாதபடி வாழ்க்கையை நிஜத்தில் வாழ்தல் நம்மில் பெரும்பாலானோர் உண்மையான வாழ்க்கை இருப்பதாக நம்புகிறார்கள். அதை அழியாத ஒன்றாக நினைக்கிறார்கள். ஒருவர் , வாழ்க்கையில் அழியாத தன்மை கொண்ட விஷயங்களை உணர்வது அரிதிலும் அரிதாகவே வாழ்க்கையில் நடைபெறுகிறது. என்னைப் பொறுத்தவரை நிஜம் என்பது, கடவுளாக இருக்கலாம். அதை அமரத்துவம், அழியாத தன்மை   அல்லது வேறு எந்த பெயர்களைக் கொண்டும் குறிப்பிடலாம். உயிர்வாழக் கூடிய புதுமைத்திறன் கொண்ட விஷயங்களை வரையறை செய்து குறிப்பிட முடியாது. நிஜ வாழ்க்கை என்பது இந்த வரையறைகளைக் கடந்தது. உண்மையை நீங்கள் வரையறை செய்து கூறினால்,அது நிலையானதாக இருக்காது. வார்த்தைகளைப் பயன்படுத்தி உருவாக்கும் மாயமாகவே இருக்கும். பிறர் கூறும் வார்த்தைகளின் அடிப்படையில் காதலை நீங்கள் புரிந்துகொள்ள முடியாது. காதலை நீங்கள் அனுபவித்தால்தான் அதை உணர முடியும். உப்பின் சுவையை அறிய, நீங்கள் அதை சுவைத்துப் பார்க்கவேண்டும். நாம் பெரும்பாலான நேரம், உண்மையைத்   தேடி உணர்வதை விட அதைப் பற்றி குறிப்புகளை வரையறைகளையே விரும்புகிறோம்.   நான் அதை வரையறை செய்யப்போவதில்லை. வார்த்தைகளுக்குள்

வயிற்றைக் கிழித்து, கால்களை விரித்து, உடைகளைக் கிழித்து.. கண்டறிய முடியாத கொலையாளி

படம்
  அமெரிக்காவின் பிலெடெல்பியாவில் உள்ள ஃபிராங்க்ஃபோர்ட் மாவட்டம் திரைப்பட நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலனால் புகழ்பெற்றது. ராம்போ படத்தில் முதல் பாகம் அங்குதான் எடுக்கப்பட்டது. அதற்கடுத்து புகழ் தேடிக் கொடுத்த விஷயம். குற்றம்.   அங்கு நடைபெற்ற ஏழு கொலைகள். கொலைகளுக்குத் தொடக்கம் 1985ஆம் ஆண்டுதான். ஆகஸ்ட் மாதம், நகர பராமரிப்பு தொழிலாளர்கள் ஒரு பெண்ணின் நிர்வாண உடலைக் கண்டனர். பெண்ணின் மார்பகம் வெளியே தெரியும்படி இருக்க, அவரது உடலில் இருபது கத்திக்குத்து காயங்கள் இருந்தன.வயிறு கத்தியால் கிழிக்கப்பட்டிருந்தது.   ஹெலன் பேடன்ட் என்ற அந்த பெண்மணி, பல்வேறு பார்களில் புழங்கி வருபவர் என காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. நான்கு மாதங்களுக்கு பிறகு அடுத்த கொலை நடைபெற்றது. இதில் அறுபத்தெட்டு வயது பெண்மணி அன்னா கரோல் மாட்டிக்கொண்டார். இக்கொலையிலும் அன்னாவின் வயிறு கிழிக்கப்பட்டு மார்பெலும்பு வெளியே தெரிந்தது. உடல் பாதி நிர்வாணமாக கிடந்தது. உடலில் ஆறு கத்திக்குத்து காயங்கள் இருந்தன. முதல் கொலை நடந்த இடத்திலிருந்து அன்னா கரோல் இறந்துபோனது பத்து கி.மீ. தொலைவில்தான். அன்னாவின் வீட்டுக்கதவு, திறந்துகிடக்க

கொலம்பியாவின் குழந்தை வல்லுறவு கொலையாளி

படம்
  கிராவிடோ, லூயிஸ் ஆல்ஃபிரடோ போதைப்பொருட்கள் பரவலாக விற்கும் நாடான கொலம்பியாவில் வன்முறை சம்பவங்களுக்கும் குறைவில்லை. மக்களைக் கொல்வது, அரசியல்வாதிகளைக் கொல்வது என்பது மழை பெய்வது, வெயில் காய்வது போல தினசரி நடக்கும்   நாடு. 1990களில் குழந்தைகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுவது அதிகரித்தது. யார் இதை செய்கிறார் என தொடக்கத்தில் பலருக்கும் தெரியவில்லை. கடத்தப்பட்டவர்களில் அதிகம் ஆண் பிள்ளைகள்தான். பெண் பிள்ளைகள் குறைவு. கொலம்பியாவின் போகோட்டாவிலுள்ள மிகுவாலிடோ என்ற மாவட்டத்தில்   காணாமல் போன பிள்ளைகளை தேடத் தொடங்கினர். 1995ஆம் ஆண்டு நவம்பர் தொடங்கி, 1997ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையில் தேடுதல் வேட்டை தொடங்கியது. பனிரெண்டு ஆண்பிள்ளைகள், ஒரு பெண்பிள்ளை என பதிமூன்று   பிணங்கள்   தோண்டியெடுக்கப்பட்டன. இதில், பிணங்களுக்கு தலைகள் இல்லை. எட்டிலிருந்து பதிமூன்று வயது வரையிலான குழந்தைகள் கொல்லப்பட்டிருந்தனர். இறந்தவர்களின் உடல்களில் அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதற்கான தடயங்கள் இருந்தன. இறந்தவர்களை யார் என காவல்துறையால் அடையாளம் கண்டறிய முடியவில்லை. 1998ஆம் ஆண்டு, குழந்தைகளை கொலை   செய்த குற்றவாளி

நாம் வாழும் வாழ்க்கையில் பாதுகாப்பு கிடையாது - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி நாம் உண்மையைத் தேடவில்லை; ஆறுதலைத் தேடுகிறோம் மனம், இதயம் ஆகியவை பற்றி ஆராயத் தொடங்கினால் புதிய சிந்தனை, வாழ்க்கைத் தெளிவு, உணர்வு நிலை ஆகியவற்றைக் கண்டறியலாம். வாழ்க்கையை இந்த வகையில் மாறுபட்டதாக்கி அமைத்துக்கொள்ளலாம்.   நீங்கள் உண்மையில் உங்களுக்கு   மனதில் திருப்தி ஏற்படுத்தும் விளக்கங்களை தேடுகிறீர்கள். உங்களில் பெரும்பாலானோர் உண்மையைப் பற்றிய வரையறையைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி வரையறையைக் கண்டுபிடித்தவர்கள் தங்கள் வாழ்வை அழியாத பெருஞ்ஜோதியில் ஐக்கியமாக்கிக் கொள்ள முடியும். உங்கள் தேடுதலின் லட்சியம் உண்மைதான் என்றால்,   நீங்கள் தேடிக்கொண்டிருப்பது உண்மையல்ல. ஆறுதல் அல்லது சொகுசான வேறு ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கிறீர்கள். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் தினசரி வாழ்கையில் எதிர்கொள்ளும் பல்வேறு நெருக்கடிகள், முரண்பாடுகளிலிருந்து தப்பித்துக்கொள்ள நினைக்கிறீர்கள். உண்மையைத் தேடுவதில் உள்ள கஷ்டங்களைக் கடந்து பார்த்தால், நாம் பிறந்ததே உண்மையைத் தேடி அறிவதற்குத்தான் என புரிந்துகொள்ள முடியும்.   உண்மையைத் தேடுவதில் உள்ள சிரமங்கள், மனநிலையைக் குலைத்து தேடலை

குற்றவுணர்ச்சியால் கொலைகளை ஒப்புக்கொண்டவர் - எட்வர்ட்ஸ்

படம்
  எட்வர்ட்ஸ், மேக் ரே 1919ஆம் ஆண்டு அமெரிக்காவின் அர்கான்சாவில் பிறந்தவர். 1941ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு இடம்பெயர்ந்தார். கனரக வாகனங்களை இயக்கும் தொழிலாளி. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உருவாக்கிய சாலைப் பணிகளை செய்த தொழிலாளர்களில் இவரும் ஒருவர். திருமணமாகி இரு குழந்தைகள் உண்டு. எட்வர்டுக்கு பதினாறு ஆண்டுகள் குற்ற வரலாறு உண்டு.இதை உலகம் பின்னாளில்தான் அறிந்தது.   22 உடல்களைக் கண்டெடுத்த காவல்துறையிடம் ‘’நான் செய்த கொலைகள் ஆறு மட்டும்தான்’’ என சாதித்தவர். நீதிபதியிடம் மின்சார நாற்காலியில் அமர வைக்கவேண்டும்   என்று கோரினார். கேட்டதை கொடுப்பதற்காக நீதிமன்றம் உள்ளது? சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது, எட்வர்ட்ஸ் தற்கொலை செய்துகொண்டார். 1970ஆம் ஆண்டு, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் புறநகரப் பகுதியில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. அதில் கொள்ளைக்காரர்கள் கொள்ளைப் பொருட்களோடு இரு சிறுமிகளையும் கடத்திக்கொண்டு வந்தனர். அதில் இரு சிறுமிகள், தங்களை கடத்தியவர்களிடமிருந்து தப்பித்தனர். ஆனால், ஒரு சிறுமியைக் காணவில்லை. அங்குதான் எட்வர்ட் வருகிறார். காவல்நிலையத்திற்கு வந்த எட்வர்ட், தான்தான் அந்த இன்னொரு சிற

வெளியில் அழகானவர் உள்ளே உறுமும் விலங்கு!

படம்
  சில பெற்றோர்கள் தங்களுக்கு பெண் பிள்ளை பிறக்கும் என நினைப்பார்கள். ஆனால் ஆண் குழந்தை பிறந்துவிட்டால், என்ன   செய்வது? ஆசையை எதிர்பார்ப்பை விட்டுவிட முடியாது. எனவே, ஆண் பிள்ளைக்கு பெண் பிள்ளை போல உடை உடுத்துவது, தலையில் பூ வைத்து புகைப்படம் எடுப்பது எல்லாம் உண்டு. இதெல்லாம் கொஞ்ச ஆண்டுகள்தான். அப்புறம் ஆண்களுக்கான உடைகளை உடுத்தக் கொடுப்பார்கள். ஆனால் சில பெற்றோர் ஆண் பிள்ளைகளுக்கு பெண் பிள்ளையின் உடைகளைக் கொடுத்து அணிய வைப்பார்கள், விருந்துகளில் பங்கேற்பார்கள். இதனால் பிள்ளைகளின் மனம் என்னவாகும் என்பதை அவர்க ள் யோசிப்பதில்லை. பாலின வேறுபாடு குழப்பம் பிள்ளைகளுக்கு ஏற்படுகிறது. சமூக அழுத்தம் அவர்களை ஆணா, பெண்ணா என இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வற்புறுத்துகிறது. இதில் பெற்றோரின் ஆசை வேறு தனி நெருக்கடியைத் தருகிறது. இதனால் கேலி, அவதூறு ஆகியவற்றை எதிர்கொள்ள வன்முறையைக் கையில் எடுக்கிறார்கள். தொடர்கொலைகாரர்கள் இப்படித்தான் உருவாகிறார்கள். பெரும்பாலும் தாய்கள்தான் ஆண் பிள்ளைகளுக்கு பெண் பிள்ளை போல உடை உடுத்தி பார்த்து மகிழ்கிறார்கள். இதனால் இப்படி வளரும் பிள்ளைகள், அம்மாவை கொல்வதாக நினைத

போதைமருந்து கும்பலின் வணிகம் சிறக்க நரபலி கொடுத்த மத தலைவர்!

படம்
  கான்ஸ்டான்ஸோ – அடாஃபோ டி ஜீசஸ் 1962ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் தேதி பிறந்தவர், அடால்ஃபோ. மியாமியில் வாழ்ந்தவர்கள், க்யூப நாட்டை பூர்விகமாக கொண்டவர்கள். அடால்ஃபோ குழந்தையாக இருக்கும்போது அவரின் அம்மா, புவர்டோ ரிகா சென்று இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.அடால்ஃபோவுக்கு மொத்தம் மூன்று சகோதரர்கள். இவர்கள் அனைவருமே வெவ்வேறு தந்தைகளுக்குப் பிறந்தவர்கள்.   கத்தோலிக்கராக மாறி வழிபடத் தொடங்கியது அவரின் குடும்பம். இரண்டாவது தந்தை இறந்தபோது, குடும்பம் பொருளாதார ரீதியாக சற்று நல்ல நிலையில் இருந்த து. மியாமிக்கு வந்த அடால்ஃபோவின் அம்மா, ஆடு, கோழி ஆகிவற்றின் தலைகளை அறுத்து வைத்து தாந்த்ரீக சடங்குகளை செய்யத் தொடங்கினார். இதனால் ஊரார் அவரை சூனியக்காரி என கூறத் தொடங்கினார். அடால்ஃபோவின் அம்மா, அவருக்கு புதிய மதமான சான்டெரியாவை அறிமுகம் செய்தார். அந்த மதத்தை தழுவியவர், மெல்ல காட் ஃபாதராக மாறினார். அவர், போதைமருந்து குழுக்களோடு தொடர்பு வைத்து வசதியாக வாழ்ந்தார். ‘’நம் ம தத்தை நம்பாத ஆட்களை போதைப்பொருளை வைத்து கொல்லலாம். அவர்கள் முட்டாள்தனத்தை வைத்து பணம் சம்பாதிக்கலாம்’’ என்றார். அடால்ஃபோவுக்கு

சிந்தனை, காலத்தைக் கடந்தால் காதல் கிடைக்கும் - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி தென் தேர் ஈஸ் லவ் ஜே கிருஷ்ணமூர்த்தி தமிழாக்கம் ஒருவரின் மனம், தேடுதலில் வேட்கை கொண்ட மனத்தை பெற்றுத்தராது. காதலைப் பொறுத்தவரை மனம் அதை தேடவேண்டும் என்பதல்ல. தேடாமலேயே அது கிடைத்துவிடும். நாமறியாமல் காதல் கிடைத்துவிடும்.காதல் கிடைப்பது மனிதர்கள்   முயற்சி, செய்து பெறும் அனுபவம் போல இருக்காது. காதலை காலத்தைப் பொறுத்து தேடினால் பெற முடியாது. காதலை ஒன்றாக, பலவாக, தனிப்பட்டதாக, பொதுவானதாக பார்க்கலாம். இதை பூவைப் போல கூறலாம். பூக்களின் மணத்தை, அதை கடந்து செல்பவர்கள் பார்க்கலாம். மணத்தை நுகரலாம். பூக்களை தொல்லையாக நினைப்பவர்களும், அதை மலர்ச்சியாக பார்ப்பவர்களும் உண்டு. பூக்களுக்கு அதைக் காணபவர்கள் அருகில் இருந்தாலும் அல்லது வெகுதூரத்தில் இருந்தாலும்   ஒன்றுதான். பூக்களிடம் நறுமணம் உள்ளது. அதை அனைவருக்கும் பகிர்ந்துகொண்டே இருக்கிறது. காதல் என்பது புதியது, உயிரோடு இருப்பது, உற்சாகம் அளிக்கக்கூடியது. இதில், நேற்று, நாளை என்பது கிடையாது. சிந்தனை என்பதைக் கடந்தது. வெகுளித்தனமற்ற உலகில் வாழும் அப்பாவித்தனமான மனது காதலை தெளிவாக அறியும். தியாகம், வழிபாடு, உறவு, உடலுறவு

யாரும் புரிந்துகொள்ள முடியாத வினோதமான அடியாள் - ஊசரவல்லி - டோனி

படம்
  ஊசரவல்லி - டோனி ஊசரவல்லி - டோனி  ஊசரவல்லி (தெலுங்கு) டோனி (ஜூனியர் என்டிஆர் ) இயக்குநர் - சுரேந்தர்ரெட்டி   ஊசரவல்லி படத்தில் வரும் டோனி பாத்திரத்தை யாருமே புரிந்துகொள்ள முடியாது. இதற்காகவே முரளி சர்மா, பிரபாஸ் சீனுவின் தொடக்க காட்சியை வைத்திருக்கிறார்கள். இதில் டோனி என்பவன் எறும்புக்கும் தீங்கு நினைக்காதவன். அதேசமயம் தனக்கு தேவைப்படும் விஷயம் கிடைக்க என்னவேண்டுமானாலும் செய்யக்கூடிய, அதற்கு தனது கொள்கைகளை மாற்றிக்கொள்ளக்கூடியவனாக அறிமுகப்படுத்தி பேசுவார். படத்தின் தெலுங்கு தலைப்பின் பொருள் பச்சோந்தி. ஜூனியர் என்டிஆரின் சிறந்த அறிமுக காட்சிகளில் ஊசரவல்லியும் ஒன்று. டோனியைப் பொறுத்தவரை தனக்கு காரியம் ஆகுமென்றால் எப்படியென்றாலும் மாறக் கூடியவன். விதிகளை அழித்து மீண்டும் எழுதினாலும் அதையும் அழித்துவிட்டு தனக்கு பிடித்ததுபோல காரியங்களைச் செய்பவன். யாராலும் புரிந்துகொள்ள முடியாத   குணம் கொண்டவன். டோனி, கூலிக்கு பிறரை அடித்து மண்டையைப் பிளக்கும் அடியாள். மும்பையில் வாழ்ந்து வந்தவரின் தந்தையும் டான் அந்தஸ்தில் இருந்தவர