இடுகைகள்

கிரியேட்டிவிட்டியை அடையாளம் காண்பது எப்படி? - சில அறிவுறுத்தல்கள்....

படம்
  புதுமைத்திறன் உலகம் கிரியேட்டிவிட்டியை உருவாக்கிட பிறருக்கு தெரியாத கலை வடிவம் ஏதும் கிடையாது என எழுத்தாளர் ரிக் ரூபின் கூறுகிறார். இவர் இதுபற்றி, தி கிரியேட்டிவ் ஆக்ட் – எ வே ஆஃப் பீயிங் என்ற நூலை எழுதியிருக்கிறார்.’’ நீங்கள் கிரியேட்டிவிட்டியை நாடகம் போல எடுத்துக்கொண்டு முன்னேறி செல்லுங்கள். நிஜ உலகைப் போலவே அனைத்து விஷயங்களையும் உருவாக்குங்கள். அது சிறியதாக அல்லது   வினோதமாக கூட இருக்கலாம். புதிய பரிசோதனை முயற்சிகளை செய்து பாருங்கள். உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் உருவாக்கியதை காட்ட நினைத்தால் உலகில் அதை வெளியிடலாம்.’’ என்பது இவரது கருத்து. தனி பார்வை ‘’உங்களுக்கென தனி பார்வையை உருவாக்கிக்கொள்ளுங்கள்’’ என ஒளிப்பதிவாளர் ரோஜர் டீக்கின்ஸ் கூறுகிறார். இவர் 50 திரைப்படங்களைப் பார்த்து அதன் வழியாக தனக்கான கிரியேட்டிவிட்டி பாதையை உருவாக்கிக்கொண்டார். தன்னை வழிநடத்திய திரைப்படங்களாக எ பியூட்டிஃபுல் மைண்ட் தொடங்கி 1917 என்ற திரைப்படங்கள் வரை குறிப்பிடுகிறார்.’’யாரையும் நகல் செய்யாதீர்கள்’’ என்றும் குறிப்பிட மறக்கவில்லை. ஆற்றலின் பிரதிபலிப்பு ‘’நான் திரைப்படங்களுக்கான நடிகர்களை அடைய

மைண்ட்ஃபுல்னெஸ் ஈட்டிங் - உணவை ஐம்புலன்களால் உள்வாங்கி உண்ணும் முறை!

படம்
    கவனம் ஒருமித்த உணவு உண்ணும் முறை – மைண்ட்ஃபுல்னெஸ் ஈட்டிங் காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் உணவு உண்கிறோம். ஆனால் உணவை எந்தளவு கவனித்து உண்கிறோம் என்பதில்தான் சிக்கல் எழுகிறது. இதனால், ஒரு வாரத்தில் என்னென்ன வகையான உணவுகளை எப்போது, எந்தளவில் சாப்பிட்டோம் என்று தாளில் எழுதச்சொன்னால் நினைவுபடுத்த முடியாமல் தவித்துப்போய்விடுவோம். இதற்கு காரணம், சாப்பிடும்போது டிவி அல்லது ஓடிடியில் படம் பார்ப்பது, ஸ்பாடிபையில் பாடலை ஒலிக்கவிட்டு சாப்பிடுவது, நூல்களை படித்துக்கொண்டே சாப்பிடுவது   என நிறைய கவனத்தை சிதைக்கும் விஷயங்கள் உள்ளன.   இதன் விளைவாக, உணவு உண்ணும் அளவு அதிகரிக்கிறது. மன அழுத்தம் அதிகமாக இருக்கும்போது, உணவின் அளவு கூடி, நாளடையில் உடல்பருமன் ஏற்படுகிறது. இதன் விளைவாக, நீரிழிவு நோய், இதயநோய் பிரச்னைகள் எழுகின்றன. கவனம் ஒருமித்த உணவுமுறையில் உணவை எப்படி சாப்பிடுவது?, தட்டில் உணவை எடுத்து வைத்துக்கொண்டு அதன் வாசனையை முகர்ந்து பார்ந்து மிக நிதானமாக அதை உண்ணவேண்டும். இந்த நேரத்தில் ஒருவர் உணவைப் பற்றி மட்டுமே சிந்திக்கவேண்டும். ஐம்புலன்களாலும் உணவை உணர்ந்து சாப்பிட்டால்,

மாஃபியா கேங்கின் கொலை முயற்சியைத் தடுத்து காதலியைக் காக்கும் ராணுவ அதிகாரி! மிஸ்டீரியஸ் லவ் - சீன டிவி தொடர்

படம்
  மிஸ்டீரியஸ் லவ் (2021) சீன டிவி தொடர் பதினாறு எபிசோடுகள் ருவான் நினான் சூ என்ற நாடக நடிகைக்கும், ராணுவ வீரனுக்கும் உருவாகும் காதல் நிறைவேறியதா இல்லையா என்பதே கதை. ருவான் என்ற நாடக நடிகைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் அடிக்கடி கனவாக வந்துகொண்டிருக்கிறது. அந்த நேரத்தில், ருவான் மாஃபியா கும்பலால் கடத்தப்படுகிறார். அவரை, அந்த குழுவில் கருப்பு ஆடாக இருந்த ராணுவ அதிகாரி லீ, காப்பாற்றுகிறார். அதேசமயம் கப்பலில் நடைபெறும் விபத்தில் அவர் இறந்துபோகிறார். அதாவது, ருவான் அப்படி நினைத்துக்கொள்கிறார்.   ருவானுக்கு, ராணுவ அதிகாரி தன்னைக் காப்பாற்றிய காரணத்தால் அவரை எப்போதும் நினைத்துக்கொண்டே இருக்கிறார். அவர் தனக்கு கொடுத்த பூச்செடியை தொட்டியில் வைத்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பராமரிக்கிறார். இறந்துபோய்விட்டார் என மனது சொன்னாலும், அதே மனதின் இன்னொருபகுதி அப்படி நடந்திருக்காது என கூறுகிறது. பின்னாளில் ருவான், தனது வெய் குழுவினரின் நாடகத்திற்காக முன்னணி விளம்பர மாடல் ஒருவரை அழைக்கப் போகும்போது அவருக்கு பாதுகாவலராக இருப்பவர், ராணுவ அதிகாரி லீ சாயலில் இருப்பதைப் பார்க்கிறாள்.

இயற்கைப் பாதுகாப்பு சட்டங்களை நடைமுறைப்படுத்த வலிமையான அரசியல் தலைமை தேவை - பெலிண்டா ரைட் , சூழலியலாளர்

படம்
  பெலிண்டா ரைட், சூழலியலாளர் பெலிண்டா ரைட், சூழலியலாளர்  பெலிண்டா ரைட் தலைவர், வைல்ட்லைஃப் புரடக்‌ஷன் சொசைட்டி ஆஃப் இந்தியா இந்தியா, புலிகள் பாதுகாப்பில்,   50 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்? இத்தனை ஆண்டுகள் கழித்தும் காடுகள் அழியாமல் இருக்கின்றன. அதில் வாழ்ந்த புலிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்துள்ளது என்ற செய்தி அதிசயமாகவே உள்ளது. புலிகளின் வாழிடத்திற்கு அருகில் வாழ்ந்து வந்த மக்களின் சகிப்புத்தன்மை, புலிப்பாதுகாப்பு திட்டத்தின் சிறப்பான அணுகுமுறை ஆகியவற்றை பற்றி இந்தியா நிச்சயமாக பெருமைப்படலாம். ஆனால், எதிர்காலத்தில் இந்தியா மனிதர் விலங்கு மோதல் என்ற பெரிய சவாலை சந்திக்கவேண்டியுள்ளது. மக்களிடம், காடுகளில் உள்ள புலிகளைப் பாதுகாப்பதில் முன்னர் காட்டிய சகிப்புத்தன்மை மெல்ல மறைந்து வருகிறது. அரசின் எரிவாயுவிற்கான மானியம் குறையும்போது காட்டில் உள்ள விறகுகளைத் தேடி மக்கள் வருவார்கள், நகர கட்டுமானத்திற்கான சட்டவிரோத மணல் குவாரிகள், காட்டு விலங்குகளைத் தடுக்கும் சட்டவிரோத மின்சார வேலிகள் ஆகியவற்றை நாம் அடையாளம் காண வேண்டும். காட்டுத்தீ மற்றும் காட்டில்

கழுத்தை நெரித்தபடியே உடலுறவு கொள்வது பாலியல் வன்முறை - சில பெண்களின் அனுபவங்கள்...

படம்
  தற்போது, இணையம் பெரும் சக்தியுடன் இயங்கி வருகிறது. இதன் வழியாக மக்கள் ஆபாச படங்கள் பார்ப்பது சகஜமாகிவிட்டது. உண்மையாக ஒரு பெண்ணுடன் நேரடியாக உடலுறவு என்ற நிலையை சாதிக்கும் முன்னரே, ஆண் கற்பனையில் பலநூறுமணி நேரம்,   உடலுறவு கொண்டுவிடுகிறார். இந்த அதீத நிலையை ஆபாச படங்கள் ஆதரிக்கின்றன. ஊக்கம் கொடுக்கின்றன.   ஆபாச படங்கள் பெரும்பாலும் ஆண்களுக்கான கண்ணோட்டத்தில் உருவாக்கப்படுகின்றன. இதனால், அதில் ஆண்களின் முகம் காட்டப்படாவிட்டாலும் யாரும் பெரிதாக கவலைப்படுவது கிடையாது. ஆனால் பெண்ணின் முகம் நிச்சயம் தேவை. இப்படங்களில் பெண் ஏறத்தாழ ஒரு பொருள் போலவே கையாளப்படுகிறாள். பலமணிநேரங்கள், இப்படி ஆபாச படங்களைப் பார்க்கும் ஆண்கள் நிஜவாழ்க்கையில் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளும்போது அவர்கள் செயல்கள் பாலியல் வன்முறை கொண்டதாக மாறிவிடுகிறது. அதாவது, கழுத்தை நெரித்தல், முகத்தில் எச்சில் துப்புதல், கைகளை துணி கயிறால் கட்டுவது என சில செயல்களை வேட்கையுடன் செய்கிறார்கள். உண்மையில் இதை பெண்கள் விரும்புகிறார்களா என்பதைப் பார்ப்போம். சாரா, 42 விளம்பரப்படத்துறை அண்மையில், சில ஆண்டுகளாக அறிமுகமாகி பேசி வந

நகைகளை வடிவமைக்க கற்கும் ஆர்வம் இருந்தால் போதுமானது! - நிஃப்ட் வழங்கும் படிப்புகள்

படம்
  படிப்பு வேண்டாம் - ஆர்வம் இருந்தால் போதும் நகைகளை எளிதாக வடிவமைக்கலாம்! சென்னையிலுள்ள கண்ணகி நகர், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள பலரும் நகை வடிவமைப்பு சார்ந்த பாடங்களை கற்கத் தொடங்கியுள்ளனர். இதற்கு சென்னையில் இயங்கும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி நிறுவனமே காரணம். இந்த நிறுவனம், தற்போது நகை வடிவமைப்பு பற்றிய படிப்புகளை இணையம் வழியாக படிப்பதற்கான வழிவகைகளை செய்துள்ளது. இதனால், பள்ளிப்படிப்பை படிக்காதவர்கள், எட்டாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தவர்கள், டீக்கடை, பெட்ரோல் பங்க் என பிழைப்புக்கான வேலைகளை செய்து வருபவர்கள் கூட நகை வடிவமைப்பு பற்றிய படிப்பில் இணைகிறார்கள். படித்து முடித்து நகைகளை தாங்களே வடிவமைத்து வேலையையும் பெற்று வருகின்றனர். கற்களை பதிப்பது, வெல்டிங், மெழுகு மாதிரியில் நகைகளை தயாரிப்பது ஆகிய விஷயங்களில் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அரசு, திறன் சார்ந்த வேலைவாய்ப்புகளை ஊக்குவித்து பத்து லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க திட்டமிட்டுள்ளது.எனவே, குறைந்த கல்வித்தகுதி இருந்தாலும் கூட கற்றலின் தீப்பொறி உள்ளவர்களுக்கு நகை வடிவமைப்பு த

நாங்கள் மக்களிடம் முதலீடு செய்கிறோம்! - ஶ்ரீதர் வேம்பு, இயக்குநர், ஜோஹோ

படம்
  ஶ்ரீதர்வேம்பு, ஜோஹோ நிறுவன இயக்குநர் ஶ்ரீதர் வேம்பு படம் - மனிகண்ட்ரோல் ஶ்ரீதர் வேம்பு நேர்காணல்   உங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் பலரும் புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் பட்டங்களைப் பெற்றவர்கள் அல்ல. தொழில்நுட்பத் துறையில் வேலை இல்லாமல் தவிக்கும் பட்டதாரிகளைப் பார்க்க முடிகிறது. ஒருவர், இரண்டு வேலைகள் செய்து வாழவேண்டியிருக்கிறது. திறமையானவர்களுக்கு தட்டுப்பாடு ஏறபட்டிருக்கிறதா? இந்த பிரச்னையை எப்படி பார்க்கிறீர்கள்? சந்தையில் நிறைய நிறுவனங்கள் திறமைசாலிகளை தேடுகிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை திறமைசாலிகள் இருந்தாலும் அவர்களை வழிகாட்டி வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல யாரும் முயல்வது இல்லை. நாங்கள் அந்த பணியை செய்கிறோம். இதன் மூலம் ஊழியர்களின் திறன் உயர்கிறது. அவர்கள் எங்களோடு விசுவாசமாக பணியாற்றுகிறார்கள். இவர்கள் மூலமே எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியும் உயர்கிறது. நாங்கள் தொழிலில் முதலீடு செய்வதை விட மக்களின் மீது முதலீடு   செய்கிறோம். மூன்லைட்டிங் (இரு நிறுவனங்களில் பணிகளை செய்வது) பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பொறியாளர் ஒருவர் ஒரு நிறுவனத்தில் இருந்துகொண்டு