இடுகைகள்

காந்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காந்தியை குழிதோண்டி புதைக்க முயலும் இந்து தீவிரவாத அமைப்பும், அதன் அரசியல் அமைப்பும் !

படம்
          ஒருவர் நிஜத்தில் எப்படி இருக்கிறார் என்பதும் , தன்னை எப்படி வெளியே காட்டிக்கொள்கிறார் என்பதிலும் தான் வேறுபாடுகள் உள்ளன . ஜெர்மனி நாட்டின் சர்வாதிகாரி ஹிட்லரைப் பார்த்திருப்பீர்கள் . அவரது செயல்களையும் அறிந்திருப்பீர்கள் . சிறிய உருவம் கொண்ட மனிதர்தான் லட்சக்கணக்கான யூத மக்களின் அழிவுக்கு காரணமானவர் . இதை ஊடகங்களின் வழியே எளிதாக அறிய முடியாது . அவர் வைத்திருந்த ஊடக பிரசாரகர்கள் குழந்தைளள் , மாணவிகளோடு இருக்கும் புகைப்படங்களைக் காட்டுவார்கள் . சைவ உணவுப்பழக்கம் கொண்டவர் . இசையை ரசிப்பவர் . குறையாததற்கு ஓவியர் வேறு . ஆனால் அவர் புகைப்படத்தின் பின்னாலுள்ள அசுர மனதை அறிந்தவர்கள் மிகச்சிலரே . இந்தியாவில் அப்படி அரசியல் களங்களில் வேறுபட்ட காரண காரியங்கள் நடக்கும் . புள்ளிகளை இணைத்துப் பார்த்தால் யோக்கியர்களின் முகத்திரை கிழிந்துவிடும் . காவிக்கட்சி ஒருமுறை காந்தி சங்கல்ப் யாத்ரா என்ற பேரணியை தொடங்கியது . அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி தொடங்கிய பேரணியில் சுத்தம் , உண்மை , சுய ராஜ்ஜியம் , அகிம்சை ஆகிய விஷயங்கள் முன்வைத்து பேசப்பட்டன . ஆனால் காந்தி வாழ்நாள் முழுக்க

நெருக்கடியான சூழலில் நமக்கு உதவும் காந்தி!

படம்
                      காந்தியை , இந்தியாவில் எப்போது நெருக்கடியான சூழல் வந்தாலும் நினைத்து பார்க்கிறோம் . அவர் எப்படி சூழலை , நிலையைக் கையாண்டிருப்பார் என சிலர் பேசுகிறார்கள் . இடையறாது , தேசிய நாளிதழ்களில் பத்தி எழுதப்படுகிறது . இதற்கு என்ன காரணம் ? நவீன இந்திய சிற்பிகளில் உள்ள பிற தலைவர்களை இப்படி யாரும் எதிர்பார்ப்பதில்லையே ? அதற்கு காரணம் , காந்திக்கு இந்தியா பற்றியும் , மக்கள் பற்றியும் அடிப்படையான உள்ளுணர்வுத்தன்மை இருந்தது . அதனால்தான் காந்தியின் எழுத்துகளைப் படிக்காதவர்கள் கூட அறியும்படி தனது உருவத்தை வடிவமைத்துக்கொண்டார் . தகவல்தொடர்பு வேகமாக இல்லாத காலத்தில் கூட காந்தி என்ற பெயர் அனைத்து இடங்களிலும் பரவியிருந்தது . 1915 ஆம் ஆண்டு காந்தி வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பினார் . அப்போதும் அவருக்கு பிரிட்டிஷார் ஆட்சியிலிருந்து இந்தியாவை விடுவிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை . அதற்கான சக்தியும் அவருக்கு அப்போது உருவாகியிருக்கவில்லை . ஆனால் அதற்கான முயற்சியை அரசியலமைப்பு மூலம் செய்யவேண்டுமென்ற தெளிவு அவருக்கு இருந்தது . ஆனால் இதைக்கூட காந்தியின் பேராசைக

காந்தியின் அரசியலைச் சொன்ன அவரின் உணவுமுறை

படம்
              காந்தியின் அகிம்சை , சுய சிந்தனை அனைவரும் அறிந்த ஒன்றுதான் . இதைக்கடந்த ஒன்றை அவர் செய்தார் . அதுதான் , நேர்த்தியான உணவு பண்டங்களைக் கொண்ட உணவுமுறை . காந்தி , வைஷ்ண குடும்பத்தில் பிறந்தவர் . சைவ உணவுப்பழக்கத்தைப் பின்பற்றினார் . அவர் சிறுவயதில் ஒருமுறை ஆட்டின் இறைச்சியை ரகசியமாக சாப்பிட்டுப் பார்த்தார் . பிறகு வாழ்வெங்குமே இறைச்சியை அவர் சாப்பிடவில்லை . அதற்கு மாற்றாக கிடைத்த பொருட்களை உண்டார் . அவை அனைத்துமே எளிமையான உணவுதான் . கோதுமை , சோளம் , சோயாபீன்ஸ் அல்லது வேர்க்கடலை பால் ஆகியவற்றை காந்தியின் உணவு என ஆப்பிரிக்க அமெரிக்க மருத்துவர் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் உருவாக்கினார் . இது இன்று வீகன் என்று கூறப்படுகிறது ., பசுவின் பாலை தானே பயன்படுத்தி வந்தாலும் கூட ஒரு கட்டத்தில் அப்படி விலங்கிடமிருந்து பெற்று குடிப்பது அறமல்ல என்று தோன்றியிருக்கிறது .. உடனே அதை நிறுத்திவிட்டார் . ஆனால் அந்த பால் கொடுத்த நிறைவை அதற்கு பதிலீடான உணவுகள் ஏதும் கொடுக்கவில்லை . எனவே , வேறுவழியின்றி பாலுக்கு மாற்றாக பாதாம் பாலை காய்ச்சி குடிக்கத் தொடங்கினார் . ஆனால் பசுவின் பாலைப்ப

இந்தியாவுக்கு ஏற்றதா காந்தியப் பொருளாதாரம்? - எதிர்கொண்ட முரண்பாடுகள்

படம்
         காந்தியப் பொருளாதாரம் முக்கியமானது எப்படி?   இன்று உலகளவில் வெளியான பொருளாதார நூல்களை எடுத்துக்கொண்டால் அதில் , ஒரு பத்தியேனும் காந்தியப் பொருளாதாரம் பற்றி குறிப்பிட்டிருப்பார்கள் . காந்தி , சுயராஜ்யம் நூலில் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா இருக்கவேண்டுமென கூறியிருந்தனர் . இந்த கருத்தை அப்போது இருந்த தலைவர்களான கோகலே , நேரு , ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாவர்க்கர் அந்தளவு நம்பிக்கையாக எதிர்கொள்ளவில்லை . ஆனால் காந்தி அந்த சிந்தனையைத்தான் சர்வோதயா எனும் அமைப்பாக மாற்றிக் காட்டினார் . மத்திய அரசு நடத்திவரும் காதி அமைப்பும் காந்தியின் சிந்தனை வழியாக உருவான அமைப்பேயாகும் . இந்த அமைப்புகள் மூலம் கைத்தொழில் கற்ற மக்களுக்கு வருவாய் ஈட்டும் வழி கிடைக்கிறது . பாலியெஸ்டர் நிறுவனங்களுக்கு ஆதரவாக அனைத்து விஷயங்களையும் செய்துவிட்டு கதரைப் போற்றுதும் என காந்தி செயல்படவில்லை . தான் பேசிய விஷயங்களையே செயல்பாடாக செய்து காட்டினார் . இவரது சிந்தனைகளை அடியொற்றி இரு பொருளாதார அறிஞர்கள் உருவானார்கள் . அவர்கள் - ஜே சி குமரப்பா , வினோபா பாவே என்ற இருவரும் இந்தியாவின் சுயசார்பை