இடுகைகள்

குங்குமம் கட்டுரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காங்கிரஸ் -அன்றும் இன்றும்!

படம்
காங்கிரஸ் - அன்றும் இன்றும் - ச . அன்பரசு காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்டும் தலைவராக ராகுல்காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டு குஜராத் தேர்தலிலும் ஒரு கை பார்த்துவிட்டார். பெற்றது தோல்விதான் என்றாலும் ஜெயித்த பிஜேபியை கலங்கவைக்கும் தோல்வி இது. மூத்தோர்களின் வழிகாட்டுதலில் இளைஞர்கள் வேகம் காட்டும் கட்சியாக காங்கிரஸ் மலர வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில்  காங்கிரஸ் கட்சியின் 133 ஆண்டுகால வரலாற்றை ஒரு கிளான்ஸ் பார்த்துவிடுவோம் . 1907 காஷ்மீர் பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்த வழக்குரைஞரான மோதிலால் நேரு , அலகாபாத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் மூலமாக அரசியலில் நுழைந்தார் . 1916 நான்கு ஆண்டுகள் இங்கிலாந்தில் தங்கி வழக்குரைஞர் படிப்பை முடித்த ஜவகர்லால் நேரு , இந்தியா திரும்பினார் . காஷ்மீரி பெண் கமலா கவுலை மணந்தவர் , தந்தையுடன் இணைந்து வழக்குரைஞர் பணியை செய்யத் தொடங்கினார் . 1917 இந்திய சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட தியோசபிகல் சொசைட்டியின் ' ஹோம்ரூல் ' அன்னிபெசன்ட் கைது செய்யப்பட்டிருந்தார் . நேருவின் அரசியல் ஆர்வம் அதிகரித்த இக்காலகட்டத்தில் அவர

தற்கொலையைத் தூண்டுகிறதா ஸ்மார்ட்போன்?

படம்
தற்கொலையைத் தூண்டுகிறதா ஸ்மார்ட்போன் ? - ச . அன்பரசு இப்போதுதான் ஆக்ரோஷ தாண்டவம் ஆடிய ப்ளூவேல் பூதம் விழிப்புணர்வு மூலமாக கன்ட்ரோலாகி இருக்கிறது . அதற்குள் ஸ்மார்ட்போன்களின் மூலமாக டீன் ஏஜினருக்கு ஏற்படும் மன அழுத்த தற்கொலைகள் உலகை அதிர வைத்துக் கொண்டிருக்கின்றன . அமெரிக்காவின் கனெக்டிகட்டைச் சேர்ந்த ஹைஸ்கூல் மாணவியான நினா லாங்டன் , எதையும் டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொள்ளும் ஜாலி கோழி . ஆனால் அப்படிப்பட்ட பெண்ணான நினாவுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலைக்கு முயற்சித்தார் என்பதை அவரது பெற்றோரும் , நண்பர்களாலும் கூட முதலில் நம்ப முடியவில்லை . " எனக்குள் மெல்ல சோகம் உருவாகி மன அழுத்தமாக மாறியது எப்படி என இன்னுமே ஆச்சரியமாக இருக்கிறது " என தெளிவாக பேசுகிறார் நினா .  தொடர்ச்சியான கவுன்சலிங் தெரபிகள் நினாவின் முகத்தில் சோகம் துடைத்து மலர்ச்சியைக் கொண்டுவந்திருக்கின்றன . தற்கொலை அட்டெம்ப்ட்டுக்கு காரணம் நினா , தான் இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்யும் மாடலிங் பெண்களின் உடல் போல தன் உடல் டோன்ட்டு ஷேப்பாக இல்லையே என தாழ்வுணர்ச்சி கொண்டதுதான் . இது நினாவின் கதை மட்டும

பறவை டாக்டர்!

படம்
பறவை டாக்டர் ! - ச . அன்பரசு உலகெங்கும் வல்லரசு கனவு நாட்டுக்கு நாடு தீயாய் பரவி வருவதால் , காடுகள் அழிந்து விண்ணுயரக் கட்டிடங்களாகவும் தொழிற்சாலைகளாகவும் , மக்களுக்கான குடியிருப்புகளாகவும் மாறிவருகின்றன . இதன் விளைவாக 90% உலகில் அழிந்துவிட்ட பறவை இனங்களில் ஒன்றுதான் கானமயில் . இன்று உலகில் மொத்தமுள்ள கானமயில்களின் எண்ணிக்கை வெறும் 250 மட்டுமே . அதில் நூற்றுக்கும் மேற்பட்ட கானமயில்கள் ராஜஸ்தானின் தார் பாலைவனத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன . உணவு பற்றாக்குறை , வாழிடம் அழிவு , இறைச்சி வேட்டை ஆகியவற்றைக் கடந்து கானமயில்களை காப்பாற்றி வருவதில் டாக்டர் பிரமோத் பாட்டீலின் பங்கை யாரும் மறுக்க முடியாது . இந்தியாவில் பதினாறு மாநிலங்களில் ஏகபோகமாக வாழ்ந்த கானமயில் இன்று அரிதாக தட்டுப்படுவது மகாராஷ்டிரா , குஜராத் , ஆந்திரா , கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களில்தான் . ராஜஸ்தான் பாலைவனத்தில் 19 ஆயிரத்து 728 ச . கி . மீ பரப்பளவில் கானமயில்கள் வாழ்கின்றன என இந்தியாவின் வைல்ட்லைஃப் சொசைட்டியின் 2016 அறிக்கை