இடுகைகள்

கொலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜோம்பி தனது கடந்தகாலத்தை தானே டிடெக்டிவ்வாகி கண்டறியும் கதை!

படம்
              ஜோம்பி டிடெக்டிவ் கொரிய தொடர் ராகுட்டன் விக்கி மருத்துவக் கழிவு கொட்டிக்கிடக்கும் இடத்தில் இருந்து ஒரு உருவம் எழுகிறது . அதுதான் நாயகன் காங் மின்கோ . எழுந்தவர் சிகரெட் பிடிக்கிறார் . வாயில் புகைவிட நினைத்தால் வயிற்றில் உள்ள ஓட்டை வழியாக புகை வெளியே செல்கிறது . அப்போதுதான் அவர் வயிற்றில் துப்பாக்கியால் சுடப்பட்டிருப்பதை உணர்கிறார் . அங்கிருந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்தால் அதிர்ந்துபோ கிறார் . இறந்து புதைக்கப்பட்டவர் மீண்டும் உயிர் வந்தால் உடல் சதைகள் எப்படி சிதைந்து கிடக்கும் . அப்படித்தான் அவர் உடல் முழுக்க பஞ்சர் ஒட்டியது போல சதைகள் கிழிந்து ஒ ட்டுப்போடப்பட்டது போல உள்ளன . சுருக்கமாக வாழும் பிணம் . அதாவது ஜோம்பி . அவருக்கு தான் யார் , பெயர் , ஆதார் எண் , வங்கியில் கொடுத்த பான் எண் , வீட்டு முகவரி என எதுவுமே நினைவில்லை . தான் யார் , எப்படி கொல்லப்பட்டோம் . ஏன் ஜோம்பி ஆனோம் என்ற உண்மையை மெல்ல கண்டுபிடிக்கிறார் . இந்த கதையை நகைச்சுவையாக கூறியிருக்கிறார்கள் . அடுத்த பாகம் தொடங்கி ஒளிபரப்பப்பட்டாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை . காங் சன்ஜ

சாலை விபத்தில் ஒருவரைக் கொன்றுவிட்டு குற்றவுணர்ச்சியில் தவிக்கும் நாயகன்!

படம்
      எலா செப்பனு - தருண், ஷிரியா       எலா செப்பனு தருண் , ஷிரியா சரண் ஜெர்மனி , இந்தியாவில் ஆந்திரம் என இரு நாடுகளில் பயணிக்கிற கதை . தற்செயலாக நடைபெறும் விபத்தால் நாயகி மணம் செய்துகொள்ளப்போகும் அவளது காதலன் இறந்துபோக , நாயகன் காதலனின் இழப்பை எப்படி ஈடுகட்டுகிறான் என்பதே கதை . இறந்துபோனவர் நடத்தும் தொழில் , குடும்பம் , சமூகம் என அனைத்து இடங்களிலும் தன்னை நாயகன் பொருத்திக்கொண்டு சாப விமோசனம் தேடுகிறார் . இந்த நேரத்தில் தன்னால் வாழ்க்கை இழந்த நாயகியையும் சந்தித்து , அடையாளம் மறைத்து அவரைத் தேற்றுகிறார் . தொழிலை மேலே மீட்டு கொண்டுவருகிறார் . இந்த நேரத்தில் அவர் மெல்ல நாயகியை காதலிக்கத் தொடங்குகிறார் . நாயகியும் அப்படித்தான் . இவர்களது காதல் ஒன்று சேர்ந்ததா , நாயகன் பற்றிய உண்மை நாயகிக்கு தெரிந்ததா , காவல்துறை அதிகாரி நாயகனின் தற்செயல் விபத்துக்காக அவரை கைது செய்தாரா இல்லையா என்பதே கதையின் இறுதிப்பகுதி . படத்தில் ஷிரியா சரணுக்கு நடிக்க நிறைய வாய்ப்பு உள்ளது . ஆனால் அவரோ எங்கோ பராக்கு பார்ப்பது போல நிற்கிறார் . ஒரு நிறுவனத்தை தனது காதலனோடு சேர்ந்து நடத்தியவர

ரவுடிகளை அசாத்திய துணிச்சலோடு பந்தாடும் கல்லூரி மாணவன்!

படம்
  அசாத்யுடு - கல்யாண் ராம், தியா அசாத்யுடு தெலுங்கு கல்யாணம் ராம், தியா   கல்லூரியில் படிக்கும் பார்த்துவுக்கு ஒரு செயலை செய்தால் அதன் முன்பின் என்ன நடக்கும் என்பது தெரியும். இதனால் அடுத்தவர்களின் பிரச்னையில தானாக சென்று தலையிட்டு அதை முடித்து வைக்க தயங்குவதில்லை. இவனது குணத்தால் பெத்த ரவுடியின் தம்பியை தன்னியல்பாக அடித்து கொல்கிறான். இதனால் ஏற்படும் பிரச்னைகளை காவல்துறை உதவியுடன் எப்பபடி கையாள்கிறான். ரவுடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனியொருவனாக அசாத்திய துணிச்சல் கொண்ட மனிதனாக எப்படி உதவுகிறான் என்பதே கதை. கல்யாண் ராமின் படங்களில் கொஞ்சமேனும் கதைக்காக மெனக்கெடுகிறார்கள். அந்த வகையில் படத்தை பார்ப்பதில் அந்தளவு சலிப்பு ஏற்படுவதில்லை. இதற்காக அவரது அத்தனை படங்களும் சிறப்பானவை என்று கூற முடியாது. இந்த படத்தில் பார்த்து என்ற பாத்திரத்தின் வடிவமைப்பு நன்றாக இருக்கிறது. ஒரு கல்லூரியில் ஒரு இளம்பெண்ணை ராக்கிங் செய்து அவளை பாலியல் வல்லுறவு செய்ய துரத்துகிறார்கள். கல்லூரி தலைவரின் மகன் என்று தெரிந்தும் அவனை அடித்து உதைத்து பெண்ணைக் காப்பாற்றுகிறான் பார்த்து. இதன் விளைவாக அவனுக்க

செஃபின் உதவியாளர் உடலில் புகுந்து தான் இறந்துபோன காரணத்தை தேடும் இளம்பெண் ஆவி!

படம்
  ஓ மை கோஸ்டெஸ் கே டிராமா ராக்குட்டன் விக்கி   சன் என்ற ஹோட்டலில் நா போங் சன் என்ற இளம்பெண் கிச்சன் அசிஸ்ட்டெண்டாக வேலை செய்கிறாள். அவள் அந்த வேலைக்கு வர காரணமே செஃப் காங் வூ சன்தான் அவரை அவள் தனது குருவாக காதலனாக பார்க்கிறாள். ஹோட்டலில் வேலை என்றால் பாத்திரங்களை கழுவி வைப்பதுதான். அவள் வேலையில் தூங்கி வழிகிறாள். அதற்கு காரணம், அவளால் பேய்களை பார்க்க முடியும் என்பதுதான். தற்கொலையால் இறந்த பேய் ஒன்று ஷின் சூன் ஆ, நா போங் சன்னின் உடலுக்குள் புகுகிறது. தனது இறந்த காலத்தை தனக்கு என்ன நடந்தது என்பதை அறிய முயல்கிறது. இதனால் நா போங்கின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்னைகள் என்னென்ன என்பதை தொடர் விவரிக்கிறது. இந்த கொரிய தொடர், சற்று ஜாலியாக பார்க்க வேண்டியது என்பதால் பதற்றம் கொள்ளவேண்டாம். சமையல் சார்ந்த சாகச தொடர்.   செஃப் காங் வூ சன், அவனது தங்கை இயுன் ஜீ ஆகிய இருவருமே பிறரால் கேலி கிண்டல செய்யப்பட்டு உருவானவர்கள்தான். அதிலும் காங் , சிறுவயதில் இருந்தே தனியாக இருந்து வளர்ந்தவன். அவனது அம்மா வேலைக்கு சென்று வந்தவள் என்பதால், அவளது கையில் சாப்பாடு கூட சாப்பிட்டதில்லை. எனவே, ரெடிமேட் நூடு