இடுகைகள்

ஜனநாயகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நிகழ்காலத்தின் வாளின் முனையில் நாம் நிற்கிறோம்! - ஜவாகர்லால் நேரு - வின்சென்ட் காபோ

படம்
          குறிக்கோள்களை பின்பற்றுதல் ! மக்களவையில் தீர்மானங்களை பற்றி பேசுவதற்கு நான் முன்னமே ஆறு வாரங்களுக்கு முன்னமே தயாராகத் தொடங்கிவிட்டேன் . இதனை உங்களிடம் பெருமையாக கூறிக்கொள்கிறேன் . இந்த தருணம் தன்னகத்தே தனித்துவத்தையும் எடையையும் ஒரு்ங்கே கொண்டுள்ளது . இந்த தீர்மானத்தின் காரணமாக நான் கூறும் வார்த்தைகள் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தலாம் . நான் இங்கு மக்களின் முன்னே நிற்பது அவர்களின் எதிர்காலத்தை சரியான முறையில் வடிவமைப்பதற்கான பணி காரணமாகத்தான் . நிகழ்காலத்தின் வாளின் முனை போன்ற முனையில் நாம் நிற்கிறோம் . பல கோடி இந்தியர்களின் பிரதிநிதியாக நான் இங்கு நிற்கிறேன் . நமது முன்னோர்கள் நாம் எதிர்பார்த்து நிற்கும் எதிர்காலத்தை உழைத்து பெறுவதற்கான ஆசிர்வாதத்தை வழங்குவார்கள் என நம்பலாம் . நான் கூறியுள்ள தீர்மானம் , மாநிலங்களிலுள்ள ஆட்சியாளர்களை குறிப்பிடவில்லை என்று புதுமையான் விமர்சனங்களும் , மறுப்புகளும் எழுந்துள்ளன . இதுபோன்ற மறுப்பான கருத்தை மாநில ஆட்சியாளரான ராஜா அல்லது மக்களின் பிரதிநிதிகள் எழுப்பலாம் . இவற்றைப் பற்றி மக்களவையில் கூட விவாதிக்கலாம் .

நிஜ வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களை நடிப்பில் பிரதிபலிக்கிறேன்! - ரிச்சா சதா

படம்
        ரிச்சா சதா தனது அரசியல் நிலைப்பாடுகளை கூட வெளிப்படையாக கூறும் தைரியம் பெற்ற இந்தி நடிகை . நாடகங்கள் , சினிமா , ஓடிடி தளம் என இயங்கி வருகிறார் . மேடம் சீஃப் மினிஸ்டர் படம் வெளியாகியுள்ளது . இதுபோன்ற படத்தின் கதாபாத்திரங்கள் உங்களை புரட்சிகரமான நடிகராக காட்டுகிறதேழ மாசான் படத்திலும் , கேங்க்ஸ் ஆப் வாசிப்பூர் , பக்ரி ஆகிய படங்களிலும் நான் நடித்த கதாபாத்திரங்கள் இப்படித்தான் அமைந்திருக்கின்றன . நான் நடிக்கும் பாத்திரங்கள் என்னோடு உரையாடும்படி பார்த்துக்கொள்கிறேன் . இந்த படத்தில் நடித்துள்ள தாரா என்ற பாத்திரமும் அப்படித்தான் . முதல்வராவது இவளின் ஆசை .    இவர் எந்த அரசியல்வாதியை மையமாக கொண்டுள்ளவர் என்று கூட சர்ச்சை எழுகிறதே ? நிஜ சம்பவங்களை நினைவுபடுத்தும் காட்சிகள் படத்தில் நுணுக்கமாக இருக்கும் . இயக்குநர் எட்டு ஆண் , பெண் அரசியல்வாதிகளின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு படத்தை உருவாக்கியுள்ளார் . நான் மக்கள் ஒருவரின் பாத்திரத்தை இன்னொருவருடன் ஒப்பிட்டு புரிந்துகொள்வதை ஏற்கிறேன் . ஆனால் இக்கதாபாத்திரம் குறிப்பிட்ட ஒருவரை நோக்கியது அல்ல . சமூ

மதச்சார்பற்ற தன்மையை மூலம் ஜனநாயகத்தை உருவாக்கிய நேரு, காந்தி மீது எனக்கு மரியாதை உண்டு! எழுத்தாளர் ஃபரீத் ஜக்காரியா

படம்
            எழுத்தாளர் ஃ பரீத் ஜக்காரியா மேற்குலக நாடுகள் இனி ஆதிக்கம் செலுத்த முடியாதா ? பிற நாடுகள் அந்த இடத்திற்கு நகருமா ? 35 ஆண்டுகளுக்கு முன்னர் துருக்கிக்கு அமெரிக்கா பல்வேறு உதவிகளை செய்துவந்தது . அவர்களுக்கு அமெரிக்காவின் பல்வேறு உதவிகள் உயரத்திற்கு வருவதற்கு தேவைப்பட்டது . முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு துருக்கி அமெரிக்கா சொல்லுவதை கேட்பதில்லை . அங்கு ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி பிற அரசியல் கலாசார அமைப்புகளின் தாக்கம் அப்படியுள்ளது . இப்படித்தான் உலகம் மெல்ல மாறி வருகிறது . அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தாக்குதலுக்கு ஆட்பட்டது . இந்த நிலையில் அமெரிக்க அரசு பிற நாடுகளின் ஜனநாயகத்தி்ற்காக பேசும் அதிகாரம் கொண்டிருக்கிறதா ? நான் இதற்கு கூறும் ஆலோசனை ஒன்றுதான் . ஒவ்வொரு நாடுகளுக்கும் அவற்றுக்கு உரித்தான பல்வேறு எதிரிகளை சமாளிக்க வேண்டியுள்ளது . பிற நாடுகள் தவறுகள் , வெற்றிகளை கவனமாக பார்த்து தங்களை திருத்திக்கொள்ளலாம் . இதுதான் இங்கு நான் நேர்மையான முறையில் கூற விரும்புவது . சுதந்திரம் என்பதிலுள்ள பல்வேறு முரண்பாடுகளைக் கொண்ட நாடு அமெரிக்கா என்று இ

ஜனநாயக இந்தியா - ஜவாகர்லால் நேரு உரை! - இடைக்கால அரசு பற்றிய நேருவின் உரை மொழிபெயர்ப்பு!

படம்
            ஜனநாயக இந்தியா  ஜவாகர்லால் நேரு உரை  தமிழில் வின்சென்ட்காபோ இடைக்கால இந்திய அரசு நண்பர்களே தோழர்களே ஜெய்ஹிந்த் . ஆறு நாட்களுக்கு முன்னர் நான் இந்திய அரசின் நிர்வாக அலுவலக அறையில் அமர்ந்து சக அதிகாரிகளோடு பேசிக்கொண்டிருந்தேன் . முழுமையான சுதந்திரம் பெற்று தொன்மை நிலத்திலிருந்து அரசு உருவாகியிருந்தது . அதற்கு வாழ்த்து்கள் தெரிவித்து உலக நாடுகளிலிருந்தும் , இந்தியாவின் மூலை முடுக்குகளிலிருந்தும் ஏராளமான வாழ்த்துகள் வந்துகொண்டிருந்தன . பலர் ஏன் புதிய அரசு அமைந்த வரலாற்று தருணத்தை கொண்டாடவில்லை என்று கேட்கின்றனர் . காரணம் , நாம் ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரத்தை பெற்றாலும் நாம் நினைத்த லட்சியத்தை இன்னும் அடையவில்லை . மக்கள் இந்த உண்மையைப் புரிந்துகொள்ளவேண்டுமென்று நான் நினைக்கிறேன் . நமது பயணத்தில் நிறைய தடைக்கற்களும் , சவால்களும் எதிர்கொள்ள நேரிடும் . இப்பயணத்தில் பலவீனத்தை அல்லது மனநிறைவை உணர்ந்தோம் என்றால் அத்தோடு பயணம் முடிவுக்கு வந்துவிடும் . கல்கத்தாவில் சகோதர ர்களாகிய நாம் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டதை மறக்கமுடியாது . அச்சம்பவம் நமது இதயத்த