இடுகைகள்

பங்கு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

13. படித்துவிட்டு வெளியே வரும் இளம் ஆடிட்டர்களால் ஒப்புதல் தரப்படும் கணக்கு! மோசடி மன்னன் அதானி

படம்
      அதானி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மேனேஜ்மென்ட் சர்வீசஸ், அதானி குழுமத்தில் உள்ள தனியார் நிறுவனமாகும். 2022ஆம் ஆண்டு, இந்த நிறுவனம் சம்பாதித்த லாபம், 6.9 பில்லியன் டாலர்கள். வணிக சேவைகளை வழங்கியது, பிற பரிவர்த்தனைகளை அதானி குழும நிறுவனங்களுக்கு செய்து கொடுத்ததது என தனது வர்த்தக நடவடிக்கைகளைப் பற்றி ஆண்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதானியின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் அடிப்படை கட்டுமானத் திட்டங்களில் கவனம் செலுத்துகின்றன. தொழிலில் சிறந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் பல்வேறு அதானி குழும தனியார் நிறுவனங்கள்,   முதலீட்டாளர்களால் ஆதிக்கம் செலுத்தப்படுபவையாகும். அதானி குழுமத்தில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களிலிருந்து, 31.9 மில்லியன் டாலர்களை அதானி குழும தனியார் நிறுவனங்கள் பெற்றுள்ளன. 2022ஆம் ஆண்டு அதானி இன்ஃப்ராக்ஸ்ட்ரக்சர் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் நிறுவன ஆவணங்கள் சில தகவல்களை வெளியிட்டுள்ளன. அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் துணை நிறுவனங்களான இவை, சம்பாதித்துள்ள வருமானம்: 1.அதானி பவர் முந்த்ரா -12.2 மில்லியன் டாலர்கள் 2.அதானி பவர் மகாராஷ்டிரா -12.2 மில்லியன் டாலர்கள் 3

12.மோசடி நிரந்தரம், முறைகேடு ஒரு சந்தர்ப்பம் - மோசடி மன்னன் அதானி

படம்
  ஆதி குழுமம், அதானி குழுமத்திற்கு நிலக்கரியை விநியோகம் செய்யும் நிறுவனமாகும். நீண்டகாலமாக அதானி குழுமத்தின் வாடிக்கையாளராக உள்ளது. ஆதி குழுமத்தின் முதலீட்டாளர் பெயர், உட்கர்ஷ் ஷா. இவர், கௌதம் அதானியின் முப்பதாண்டு கால நண்பர் என எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை கட்டுரை தகவல் கூறுகிறது. 2020ஆம் ஆண்டு கணக்குப்படி, ஆதி குழுமத்தின் வருவாய், 9 மில்லியன் டாலர்களாகும். மொத்த லாபம் 97 ஆயிரம் டாலர்கள் என்ற தகவல், நிதி தொடர்பான ஆவணங்களிலிருந்து தெரிய வருகிறது. அதானி குழுமத்தில் உள்ள நான்கு நிறுவனங்கள், ஆதி குழுமத்திற்கு 87.4 மில்லியன் டாலர்களை கடனாக வழங்கியுள்ளது. ஆனால் இதுபற்றி விசாரித்ததில் பணம் கடன் கொடுக்கப்பட்டதற்கான எந்த ஆவணங்களும் இல்லை. இத்தனைக்கும் கடன் கொடுத்த பல நிறுவனங்கள், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டவை. ஆதி குழுமத்தின் வருமானம், லாபம் அடிப்படையில் அந்த நிறுவனம், பிற நிறுவனத்திடமிருந்து கடனைப் பெற்றதே தவறான நடவடிக்கை. பொருளாதார ஆலோசகர் எவரும் கடன் வாங்கும் யோசனையை ஏற்கவே மாட்டார்கள்.   ஆதி குழுமம், வாங்கிய கடனைக் கட்ட900 ஆண்டுகள் தேவைப்படுகிறது. அப்படி கடினமாக உழைத்தாலும் கூட அச

11.அலுவலகமே இல்லாத நிறுவனத்தில் இருந்து கிடைத்த கடன் - மோசடி மன்னன் அதானி

படம்
  எப்படி ஏமாத்தினோம் பாத்தீங்களா? 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாத ஆவணங்களில் உள்ள தகவல்படி, ரேவார் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் முகவரி, மக்கள் வாழும் அடுக்கு குடியிருப்பில் அமைந்திருந்தது.   தற்போது மாற்றப்பட்டுவிட்ட அதன் புதிய முகவரியில் அலுவலகம் அகமதாபாத் நகரில் உள்ள கட்டிடத்திற்கு மாறிவிட்டது. இந்த நகரில்தான் அதானி குழுமம் இயங்கி வருகிறது.   ஹிண்டன்பர்க் அமைப்பு, புலனாய்வாளரை ரேவார் அலுவலக முகவரிக்கு   அனுப்பியது.   பெயின்ட் உதிர்ந்துகொண்டிருந்த பழைய கட்டிடத்தில்   ரேவார் அலுவலகம் அமைந்திருந்தது. வெள்ளி வணிகம் செய்யும்,   202 மில்லியன் டாலர்களை கடனாக வழங்கும் திறன் கொண்ட நிறுவனம், இப்படியொரு மோசமான இடத்தில் இயங்கி வருவது ஆச்சரியமாக இருந்தது. புலனாய்வாளர் அலுவலக நேரத்திலேயே, ரேவார் அலுவலகத்திற்குச் சென்றார், ஆனால் அப்போதே கதவில், ‘அலுவலகப் பார்வை நேரம் முடிந்துவிட்டது’ என தகவல் கூறப்பட்டிருந்தது. மேலும் தகவல் தேவை என்றால் அணுகும்படி, ஜிக்னேஷ் தேசாய் என்பவரின் பெயர், தொடர்புஎண் கையால் எழுதப்பட்டிருந்தது.     லிங்க்டுஇன் தளத்தில் ஜிக்னேஷ் தேசாய், அதானி என்டர்பிரைசஸ் நிறுவ

10.வணிகமே செய்யாமல் பெரும்தொகையைக் கடன் கொடுக்க முடியும் - மோசடி மன்னன் அதானி

படம்
  சிங்கப்பூரில் வினோத் அதானிக்கு சொந்தமான நிதி நிறுவனம் உள்ளது. 2013-2015 காலகட்டங்களில், இந்த நிறுவனம் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு அதிக லாபம் காட்டும் விதமாக பயன்படுத்தப்பட்டது.   2013-2015ஆம் ஆண்டு கார்மிசல் அண்ட் போர்ட் சிங்கப்பூர் ஹோல்டிங்க்ஸ் லிட். நிறுவனத்தை வினோத் அதானி நிர்வாகம் செய்து வந்தார். (ப.2) இந்த நிறுவனத்தில் இருந்து மூன்றுநிதி   பரிவர்த்தனைகள் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மொத்த வருமானம் அதிகரித்தது. சொத்துகளுக்கு ஏற்படும் சேதம் அடிப்படையில் பெரிய நிறுவனம் என்ற அங்கீகாரத்தை இழக்கும் நிலையை அதானி குழுமம் நிதி பரிவர்த்தனை மூலம்தான் சமாளித்தது. ஆஸ்திரேலியாவில் உள்ள சுரங்கம், ரயில்வே, துறைமுகம் ஆகிய நிறுவனங்களுக்கு நிதி பரிவர்த்தனைகள் செய்யப்பட்டன. ஆனால் இந்த நிதி பரிவர்த்தனை அதானி என்டர்பிரைசஸ் நிறுவனங்களின் ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. ஹிண்டன்பர்க் அமைப்பு செய்த ஆய்வில் நிதி பரிவர்த்தனைகளைச் செய்த நிறுவனம் சிங்கப்பூரைச் சேர்