இடுகைகள்

மொழியாக்க கட்டுரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நேர்காணல்: ஜோக்கின் அற்புதம்

நேர்காணல் : ஜோக்கின் அற்புதம்                                                 ஆங்கிலத்தில் : ஓமர் ரஷீத்                                                 தமிழில் : கார்த்திக் வால்மீகி                                                                      ஷாம்பவி மித்ரா திறந்த வெளியில் அமர்ந்து மலம் கழிப்பதை யாரும் ரசித்து செய்வார்களா என்ன ?                 இவரின் நாட்கள் தொடங்குவதும் , நிறைவடைவதும் கழிப்பறை தொடர்பான பணிகளில்தான் . 68 வயதாகும் ஜோக்கின் அற்புதம் தனது நாற்பது ஆண்டுகால குடிசைப்பகுதி மக்களுக்கான வாழிடம் மற்றும் சுகாதார வசதிகளுக்கான போராட்டத்திற்காக மகசேசே விருது , பத்ம விருது போன்றவையும் பெற்றுள்ளார் . மும்பை தாராவி , உலகிலேயே பெரிய குடிசைப்பகுதி ஆகும் . அப்பகுதியைச் சேர்ந்தவரான அற்புதம் , அந்தப்பகுதி மக்களுக்கு உதவுவதை தன்னியல்பாக பெற்றிருக்கிறார் . தேசிய குடிசை வாழ் மக்கள் சங்கத்தின் தலைவராக செயல்பட்டு வருகிறார் . அச்சங்கம் இந்த ஆண்டு நோபல் அமைதிப்பரிசிற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது . கழிவறைகளை கட்டு

நிழலுக்கு வெளியே…

நிழலுக்கு வெளியே…           பங்கஜா ஸ்ரீனிவாசன்              தமிழில்: ஜோசப் மென்கீல்      சாலி ஹோல்கரின் பணியினால் கைத்தறி நெசவு செய்பவர்கள் வெளிச்சம் கிடைக்கிறது.     சாலி ஹோல்கர் அவர்களை நிழல்பெண்கள் என்று அழைக்கிறார். தறியில் அமர்ந்து சேலைகளை நெய்து அதனை சரியான நேரத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள். பிறகுதான் அவர்களுக்கு அப்பணிக்கான ஊதியம் வழங்கப்பட்டு குடும்பங்களை நடத்துவதற்கான வலிமை அதன்மூலம் கிடைக்கிறது.      ‘’ அந்த சமயம் நான் ரேவாவில் இருந்தேன். (சாலி மகேஸ்ரி நெசவாளர்களுக்கு உதவி செய்து கொண்டு இருந்தார்) எனது அனுபவத்தின் வாயிலாக நான் உணர்ந்தது பெண்கள்தான் இந்த துறையின் முதுகெலும்பாக உள்ளார்கள் என்பதுதான். இந்தப்பணியில் பெண்கள்தான் பல முன்னேற்பாடான பணிகளை செய்து, நெசவுக்கான தேவைகளை நிறைவு செய்கிறார்கள். ஆனால் ஊதியமோ ஆண்களுக்குத்தான் சென்று சேர்கிறது ’’.      ஹோல்கர் இந்தப்பெண்கள் வாழ்வதற்காக பருத்தி பறிப்பது, பாத்திரங்கள் கழுவுவது, கல் உடைப்பது ஆகியவற்றை செய்து வந்ததைப் பார்த்தார். ‘’ நெசவுக்கான சிறிய வாய்ப்புகள் உள்ள ஊரில் இதுபோன்ற குறைந்த சம்பளம் கொண்ட வேல

இளைய இந்தியாவிற்கான புதிய கற்றல் முறைகள்

இ ளைய இந்தியாவிற்கான புதிய கற்றல் முறைகள்                                                 ஆங்கிலத்தில் :                                                                                                 அனில் முல்சந்தினி                                                                                                 கெவின் பிரகன்சா                                                                 தமிழில் : தியோ வான்யா மோடி அரசின் தூய்மையான பாரதம் திட்டம் மூலம் காந்தியின் சிந்தனைகள் நாட்டின் மேடையில் அண்மையில் இடம்பிடித்து இருக்கின்றன . ஆனால் 1947 ஆம் ஆண்டிலிருந்தே காந்தியின் சிந்தனைகள் அகமதாபாத்திலிலுள்ள பள்ளியொன்று மாணவர்களுக்கு கற்பித்து வருகிறது . காந்தியின் தத்துவமான தூய்மையான இந்தியா , மரியா மாண்டிசோரி குழந்தைகளுக்கான செயல்பாடுகளில் ஏற்படுத்த மாற்றம் தந்த வாய்ப்புகள் , தாகூரின் இயற்கையோடு இணைந்த கல்வி என இவை அனைத்தையும் தனது பள்ளியான ஸ்ரேயாவில் நிகழ்த்தியிருக்கிறார் அதன் நிறுவனரான ல ¦ னா சாராபாய் . தற்போது அந்நிறுவன