இடுகைகள்

விபத்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரத்த இழப்பைத் தடுக்கும் வேதிப்பொருள் கண்டுபிடிப்பு!

படம்
      cc ரத்த இழப்பைத் தடுக்கும் கண்டுபிடிப்பு விபத்து நேர்ந்த பிறகு ஒருவரை அரும்பாடுபட்டு அவசர ஊர்தியில் மருத்துவமனை கொண்டு சென்றாலும் கூட அவரின் உயிருக்கு நேரும் ஆபத்து , ரத்த இழப்பு காரணமாகவே நடக்கிறது . ரத்தம் உறைதலை வேகப்படுத்தினால் , ரத்த இழப்பை கட்டுப்படுத்தினாலே சாலை விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களை காப்பாற்றிவிடலாம் .. காயங்களின் வழியாக ரத்தம் வெளியேறுவதைத் தடுக்க , அதிலேயே பிளேட்லெட்ஸ் செல்கள் உண்டு . சிறிய காயங்களில் வெளியேறும் ரத்தம் என்றால் இந்த அமைப்பு காப்பாற்றுகிறது . அதிக ஆபத்தான நிலைகளில் பிளேட்லெஸ் சிறப்பாக செயல்படுமா என்பது கேள்விக்குறிதான் . ‘’’ இந்த ஆராய்ச்சியின் முக்கியமான நோக்கம் , ஒருவருக்கு ஏற்படும் ரத்தக்கசிவை உட்புறமாக முடிந்தளவு தடுப்பதுதான் . இதன்மூலம் ரத்த இழப்பு நிறுத்தப்படும் . அவரை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றலாம் '’ என்கிறார் இந்த ஆராய்ச்சியின் மூத்த ஆராய்ச்சியாளரான சமீர் மித்ரகோத்ரி . ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள வேதிப்பொருளை நேரடியாக ஊசி மூலம் அல்லதூ சலைன் பாட்டிலின்

பசுமைப் பட்டாசுகள் என்றால் என்ன?

படம்
பசுமைப் பட்டாசுகள் சாதாரண பட்டாசுகளுக்குப் பதிலாக அரசு பசுமைப்பட்டாசுகளை அறிமுகம் செய்திருக்கிறது. உண்மையில் பசுமைப் பட்டாசுகளின் சிறப்பு என்ன? இதில் சாதாரண பட்டாசுகளை விட மாசுபடுதல் அளவு பிஎம் 2.5 எனும் அளவுக்கு இருக்கும். பட்டாசு தயாரிப்பில் பயன்படும் பேரியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருளுக்கு மாற்றாக, பொட்டாசியம் நைட்ரேட் மற்றும் ஜியோலைட் எனும் வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது அரசு நிறுவனங்களாக சிஎஸ்ஐஆர் என்இஇஆர்ஐ ஆகியவை பசுமைப் பட்டாசுகளுக்கான ஒன்பது மூலக்கூறு கலவையை உருவாக்கியுள்ளன. இவை 30 சதவீதம் மாசுபடுதலைக் குறைக்கும். இதில் ஒலி, ஒளி சந்தோஷம் குறைவுபடாது. இந்தியாவில் பட்டாசுகளுக்கான சந்தை மதிப்பு 1800 கோடி. இவற்றின் தேவையை சிவகாசி பட்டாசுகள்தான் தீர்த்து வைக்கின்றன. இந்திய சந்தையில் சிவகாசியின் பங்கு 95 சதவீதம். இந்தியாவிலுள்ள எட்டு ஆய்வகங்கள் பசுமைப்பட்டாசுகளுக்கான மூலக்கூறு கலவையை ஆய்வு செய்து தயாரித்துள்ளன. எந்த பட்டாசில் என்ன மாதிரியான ஆய்வுக்கலவை உள்ளது என்பதை க்யூஆர் கோட் மூலம் ஸ்கேன் செய்து பார்த

தற்செயல் என்பதை அறிவியல் ஏற்கிறதா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி தற்செயல் என்பதை நம்புகிறீர்களா? அறிவியல் இதனை விளக்கியுள்ளதா? தற்செயலாக நாம் உருவாக்குவது இதில் சேராது. ஆனால், அரிதாக சில நிகழ்ச்சிகள் அப்படி நிகழ்வது உண்டு. அப்படித்தான் டைட்டானிக் பனிப்பாறையால் உடைந்து நொறுங்குவதை பல ஆண்டுகளுக்கு முன்னரே தி ரெக் ஆப் தி டைட்டன் நாவலில் விவரித்துவிட்டனர். இதில் கப்பலின் பெயர் உட்பட பல விஷயங்கள் ஒற்றுமையாக அமைந்தன. இதனை நிகழ்தகவு தியரிப்படி வேண்டுமானால் விளக்கலாம். கால்பந்து மைதானத்திலுள்ள 23 பேரில் ரெஃப்ரி உட்பட இருவருக்கு ஒரேநாளில் பிறந்த தினம் வர வாய்ப்புள்ளது. அதாவது, 50:50 அளவு. மற்றபடி, அப்படியே முழுக்க அறிவியல் தற்செயல் நிகழ்வுகளை நம்புவதில்லை. ஏனெனில் ரெக் ஆப் தி டைட்டன் என்ற நூல் எழுதி 14 ஆண்டுகளுக்குப் பிறகுதான் டைட்டானிக் கப்பல் கவிழ்ந்து போனது. ஸ்பைடர்மேனுக்கு வயது குறையும்போது அவரது அத்தை என்னவாகுவார் என பஸ்பீடில் யோசித்துப் போட்ட மீம் இது. நன்றி: பிபிசி, பஸ்ஃபீடு

விபத்திற்கு வெப்பம்தான் காரணம்!

படம்
தமிழ்நாட்டில் கோடைக்காலங்களில் அதிக விபத்துகள் நிகழ்கின்றன என்று ஜாலியாக பலரும் டீ குடித்தபடி பேசியது நிஜமாகி இருக்கிறது. கடந்த ஆண்டின் ஏப்ரல் மே மாதங்களில் மட்டும் 57 ஆயிரத்து 927 விபத்துகள் நடைபெற்றுள்ளன. அதேசமயம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மழைக்காலங்களில் நடந்த விபத்துகளின் எண்ணிக்கை 5,346 .இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 1077. கூறியது தமிழ்நாடு போக்குவரத்துத்துறை ஆராய்ச்சித்துறை. பனிக்காலமான டிசம்பர் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் 2,163 விபத்துகள் நடந்துள்ளன. அதில் 390 பேர் இறந்துள்ளனர். இதற்கு போக்குவரத்துத்துறை என்ன சொல்கிறது? கோடைக்காலத்தில் மக்கள் பலரும் சுற்றுலா தலங்களுக்குச் செல்கிறார்கள். அதனால் வண்டிகள் சாலைகளில் அதிகம் விபத்துகளில் சிக்குகின்றன என்கின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மதிக்காமல் இஷ்டப்படி குறுக்குவழிகளைப் பயன்படுத்துகின்றனர். அதேபோல நடைபாதைகளில் பாதசாரிகளை நடக்கவிடாமல் அதில் பைக்குகளை ஓட்டுவது, அங்குள்ள ஆக்கிரமிப்புகள் ஆகியவையும் விபத்துகளுக்கு காரணம். மேலும் பலரும் ஹெல்மெட்டுகளை அணிவதில் ஆர்வம் காட்டுவதில்லை என அலுத்துக்கொள்கிற

குடிக்கும்போது ஆவேசப்படுவது ஏன்?

படம்
மிஸ்டர் ரோனியின் ஏன்?எதற்கு?எப்படி? சிலர் மது அருந்தியதும் ஆவேசப்படுகிறார்களே ஏன்? மது அருந்தியவுடன் எல்லோரும் எல்லாவற்றையும் மறந்துவிடுவதில்லை. சிலருக்கு அது சாக்கு. சில விஷயங்களை அதைச் சாக்காக வைத்து சொல்லலாம். இது உளவியல். அறிவியல்படி என்ன சொல்ல லாம்? மூளையின் முன்முகுளப் பகுதியில் சுய கட்டுப்பாட்டு, முடிவெடுக்கும் பகுதி ஆகியவற்றை மது பாதிக்கிறது. இப்பகுதி மழுங்கும்போதுதான், இதுவரை பார்த்திராத ஜேப்படித் திருடர்களோடு ஜோக் அடித்து சிரிப்பதும், அவர்களோடு சேர்ந்து வண்டியில் வேகமாக செல்வதும், குற்றங்களில் ஈடுபடுவதும் நடக்கிறது. சாதாரணமாக பார்க்கும்போது சைலன்ஸ் ப்ளீஸ் சொல்லாமல் அமைதியாக இருப்பவரும், குடிக்கும்போது டி.ஆர் மாதிரி ஆகிவிடுகிறார். நன்றி பிபிசி