இடுகைகள்

உரிமைகளைக் காக்கும் இன்டர்நேஷனல் வக்கீல் குழு! -ச.அன்பரசு

படம்
மக்களின் அடிப்படை உரிமைகளைக் காக்கும் இன்டர்நேஷனல் வக்கீல் குழு ! - ச . அன்பரசு கர்நாடகாவின் காகல் கிராமம் . கடந்தாண்டு மே மாதம் 16 ஆம் தேதி கடற்கரையில் சிலிகா மணல் தொழிற்சாலையை சிலர் உருவாக்கி , மணல் அள்ளத்தொடங்கினார் . முதலில் குறைவாகவும் பின்னர் டன் கணக்கிலும் அள்ளத்தொடங்கினர் . சும்மாயிருக்குமா கடல் ? , மெல்ல ஊருக்குள் தலைகாட்டத் தொடங்கியது . கடலையொட்டி வாழ்ந்து வந்த துர்க்கி நாயக் என்ற பெண்மணி உட்பட ஆறு குடியிருப்புவாசிகளுக்கு என்ன செய்வதென்றே தெரியாத நிலை . அப்போதுதான் உதவிக்கு வந்தார் நமதி சூழல் சட்ட அமைப்பைச் சேர்ந்த வினோத் பட்கர் . பரபரவென சட்டவிரோத மணல் நிறுவனத்தைப் பற்றி ஆதாரங்களை திரட்டி நகர கமிஷனருக்கு அனுப்ப , கள விசாரணை நடந்ததோடு ஏற்படுத்திய சூழல் கேட்டிற்கான அபராதம் 6.3 லட்சம் அபராதம் கட்ட உத்தரவானது . " கிராமத்து மக்களின் ஒத்துழைப்பினால் பாதிப்பை கண்டறிந்து தடுக்க முடிந்தது " என மலர்ச்சியாகப் பேசுகிறார் சட்ட ஆலோசகர் வினோத் . தற்போது மணல் அள்ளப்பட்ட பகுதிகளி

ரீசைக்கிள் சுகாதார புரட்சி -ச.அன்பரசு

படம்
ரீசைக்கிள் சுகாதார புரட்சி - ச . அன்பரசு இந்தூர் சுகாதாரத்தின் முதலிடம் பிடித்தது எப்படி ? கொண்டாடுகிற நிஜம்தான் . மத்திய பிரதேசத்தின் கமர்ஷியல் நகரங்கள் போபால் , இந்தூர் . இதில் இந்தூரில்தான் க்ளீன் அண்ட் கிளியர் மேஜிக் நடந்துள்ளது . நகரங்கள் பொதுவாக எப்படியிருக்கும் ? மிக்சர் பாக்கெட்டுகள் , வேர்க்கடலை பொட்டலங்கள் , மதுபாட்டில்கள் , பிளாஸ்டிக் டம்ளர்கள் , அழுகிய பழங்கள் , மீந்துபோன பிரியாணி , இறைச்சி கழிவுகளிலுள்ள எலும்புகளுக்கு போரிடும் தெருநாய்கள் , மொய்க்கும் ஈக்கள் படை என்பது அஷ்டலட்சணங்கள் கொண்ட மினி டூ மெகா நகரங்களில் நாம் காணும் ரெகுலர் காட்சி . ஆனால் இந்தூரில் இக்காட்சிகளை பைனாகுலர் வைத்து தேடினாலும் காணக்கிடைக்காது . தன் புல்லட் வேக அதிரடி பிளான்களால் , சுகாதாரத்தில் 86 இடத்திலிருந்த இந்தூரை இரண்டே ஆண்டுகளில் ஸ்வட்ச் பாரத் லிஸ்டில் நம்பர் 1 இடத்திற்கு கொண்டுவந்திருக்கிறார் முனிசிபாலிட்டி கமிஷனர் மனிஷ் சிங் . 2009 ஆம் ஆண்டு ஐஏஎஸ் ஆன மனிஷ்சிங் , மத்திய பிரதேசத்தின் போபால் , இந்தூர் இரண்டு நகரங்களுக்கும் 2015 ஆம் ஆண்டு முனிசிபல் கமிஷனரானதிலி

கேலக்ஸி உருவானது எப்படி? -ச.அன்பரசு

படம்
கேலக்ஸி உருவானது எப்படி ? - ச . அன்பரசு உங்கள் செல்லக்காதலிக்கு கோன் ஐஸை வாங்கி ஊட்டிவிட்டு காசு கொடுக்கும்போது , மனைவி உங்களை பர்சேஸிங்குக்காக சாலையில் இழுத்துப்பிடித்து சிக்னலில் க்ரீன் விழ காத்திருக்கும்போது ,  மன்த் எண்டில் நண்பணுக்கு இருபது ரூபாய் கடன் கொடுக்கலாம் என்று நினைக்கும்போது திடீரென உங்கள் உருவம் துகள்களாக மறைந்தால் எப்படியிருக்கும் ? சுஹானுபவம் என பதில் சொல்வீர்கள் . பாஸ் ! நாம் உருவானதே அப்படித்தான் என அதிரடிக்கிறார்கள் அமெரிக்க வானியல் ஆராய்ச்சியாளர்கள் . பால்வெளியில் தொலைதூர விண்மீன் கூட்டத்திலிருந்து பெருவெடிப்பு ஏற்பட்டதால் , காற்றுவழியாக பரவிய துகள்களின் வழியாக அகதிகளாக அல்லது பயணிகளாக வந்தவர்கள்தான் மனிதர்கள் என்று கூறுகிறது இந்த அதிரடி ஆய்வு . காற்று கடுகளவும் இல்லாத இடத்தில் எப்படி நிகழ்ந்திருக்கும் பெருவெளி வெடிப்பு ? பால்வெளியில் உள்ள வாயுத்துகள்கள் ஒரு நொடிக்கு பல கி . மீ வேகத்தில் வீண்மீன் கூட்டத்தின் மீது தடார் என்று ஹைஸ்பீடில் மோத , நட்சத்திரங்கள் அந்த வேகத்தால் பிளக்கப்பட்டு இதில் வெளியான போட்டான்கள் வாயுக்களோடு இணைந்து பல்வேறு

கோமாளிமேடை ஸ்பெஷல்ஸ்!- ரோனி

படம்
இது ஜிஎஸ்டி பேபி !  இன்று ஊரின் வாய்க்கு கிடைத்த கிலோ கணக்கிலான அவல்   ஜிஎஸ்டி மேட்டர்தான் . கடந்த 30 ஆம் தேதி நள்ளிரவில் அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை பின்னாளில் மக்கள் மறந்தாலும் ஜிஎஸ்டி என்ற பெயரை யாரும் மறக்கமுடியாதபடி ராஜஸ்தான் பெண்மணி செய்துவிட்டார் . அப்படி என்ன செய்தார் ? மாநிலத்திலேயே முதல் ஆளாக ஜிஎஸ்டி கட்டிவிட்டாரா ? இல்லை இது அதுக்கும் மேல் வேற லெவல் !   ராஜஸ்தானின் பேவா கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு ஜூலை 1 அன்று நள்ளிரவு 12.02 மணிக்கு மிகச்சரியாக குழந்தை பிறந்தது . அதேசமயம் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியும் அதிரடியாக அமலாகி ஊரே அதைப்பற்றி பேசத்தொடங்க , ஜிஎஸ்டியை விட ஃபேமஸாக வேறு பெயர் எதற்கு ? என தன் குழந்தைக்கும் ஜிஎஸ்டி என சிம்பிளாக பெயர் வைத்துவிட்டார் இந்த ராஜஸ்தான் தாய் . தகவல் கசிந்தால் விடுவார்களா காவி பாய்ஸ் ? உடனே ட்விட்டரில் வாழ்த்துகளை குவித்ததோடு , ஜிஎஸ்டியின் சக்திக்கு இதுவே சாட்சி என இக்குழந்தையின் பிறப்பையும் ராஜஸ்தான் மாநிலமே கொண்டாடத் தொடங்கிவிட்டதுதான் மிரட்டல் . தெறி பேபி !    இந்தியன்போலீசின் வீரச்செயல் ! மத்தியப்பிரதேசத