இடுகைகள்

நிதானமான படம் பார்க்கணுமா? சம்மோகனம் இருக்கு!

படம்
சம்மோகனம் (தெலுங்கு) தெலுங்கு படங்களில் நீங்கள் என்னென்ன எதிர்பார்க்கிறீர்களோ அது எதுவும் சம்மோகனம் என்ற இந்தப்படத்தில் கிடையாது. குத்துப்பாட்டு, பன்ச் டயலாக், முதுகுத்தண்டு சில்லிடும் ஃபைட் என எதுவும் கிடையாது. கதையை 21 பஸ் டிக்கெட்டில் எழுதிவிடலாம். அப்புறம் என்ன விசேஷம்? எடுத்த விதம்தான் அம்சமாக இருக்கிறது. பதட்டமே இல்லாமல் படம் செல்கிறது. இல்லை நான் போயபட்டி ஸ்ரீனு படம்போல வேகமாகவேண்டும் என்று சொன்னால் இந்தப்படத்தை பார்க்காமல் இருப்பது நல்லது. குழந்தைகளுக்கான படங்கள் வரையும் ஓவியர், நடுத்தர வர்க்கத்திற்கு மேலுள்ள குடும்பம். சினிமா நடிகர்கள், நடிகைகளை தீவிரமாக வெறுப்பவர். ஆனால் தந்தையின் சினிமா ஆசைக்காக வீட்டில் நடக்கும் ஷூட்டிங்குக்கு ஒப்புக்கொள்கிறார். அங்கு வரும் நடிகை மீது காதலாகிறார். ஆனால் நடிகை ஓவியரை காரணமேயின்றி தயக்கத்துடன் மறுக்கிறார். மறுக்க என்ன காரணம், ஓவியரின் தந்தைக்கு இருக்கும் நடிகர் ஆசை என்னவானது? ஆகியவற்றுக்கு இதமான இசை, இசைவான நடிகர்களின் பங்களிப்புடன் கதை சொல்கிறார்கள். மோகன கிருஷ்ண இந்திரகாந்தியின் படம்(அமிதுமி, ஜென்டில்மேன்படங்களை இயக்கியவர

கொட்டாவி விடும்போது காது கேட்கும் திறன் குறைவது ஏன்?

படம்
SF ஏன்?எதற்கு?எப்படி? கொட்டாவி விடும்போது நம் காது கேட்கும் திறன் குறைவது ஏன்? இதற்கு காரணம், காதில் உள்ள தசையான டென்சர் டைம்பானி. கோடாரி ஷேப்பிலுள்ள எலும்புடன் இத்தசை இணைந்துள்ளது. தீபாவளி சமயத்தில் உங்கள் மீது சீனிப்பட்டாசை தூக்கிப்போடும்போது, தண்டபாணி வாத்தியார் கணக்கே வரலையே படவா என ஓங்கி அறையும்போது, ரசத்திற்கு அதிக அப்பளம் எடுத்து லஷ்மி அம்மாவிடம் பிடிபட்டு காது முறுக்கப்படும்போது இத்தசை காதை பாதுகாக்கிறது. குறிப்பாக அதிக ஒலிகளிடமிருந்து நம்மை பாதுகாக்க தானியங்கியாக இயங்கும் தசை இது. கொட்டாவி விடும்போது இத்தசை தூண்டப்பட மூக்கு, காது, வாய் என மூன்று உறுப்புகளுக்கும் இடையே ஒருங்கிணைவு உருவாகிறது. அப்போது காது கேட்கும்திறன் மழுங்குகிறது.

மின்சிக்கனத்தை வழிமொழியும் இங்கிலாந்து பொறியாளர்!

படம்
எல்இடி மூலம் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்! ஓய்வுபெற்ற பொறியாளர்கள் நம்மூர்ப்பக்கம் என்ன செய்வார்கள்? கோவையின் தண்டாயுதசாமி கோயிலுக்கும், ஈஷாவுக்கும் சென்று தலைமுழுகி துறவி அவதாரம் எடுக்க முயற்சிப்பார்கள். வெளிநாட்டவர்கள் குளிப்பதில் சோம்பல் பட்டாலும் சாகும்வரை நிறைய கண்டுபிடித்துவிட்டுத்தான் போவார்கள் போல. ஓய்வுபெற்ற பொறியாளர் ரோட்னி பிர்க்ஸ் , எல்இடி பல்புகளை வீடு முழுக்க பயன்படுத்தி 90 சதவீத மின் கட்டணத்தை குறைத்துவிட்டார். எப்படி? இங்கிலாந்திலுள்ள 25 மில்லியன் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் வரும் மின் கட்டண பில் மட்டும் 2 பில்லியன் பவுண்டுகள். அதோடு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான கார்பன் வெளியீடு வேறு உள்ளது. எங்கள் குழுவில் சூழலுக்காக ஜனனியும், கார்பன் வெளியீட்டுக்காக மனோவும் பிரான்ஸ் அதிபர் மேக்ரானை விட அதிகம் கவலைப்படுகிறவர்கள். அவர்களுக்காகவாவது ரோட்னி எப்படி சாதித்தார் என்பதை கூறவேண்டும். ஒளிவீச்சு குறைந்த 40 எல்இடி பல்புகளைக் கொண்டே ரோட்னி மின்சார சாதனையைச் செய்துள்ளார்.  “முதலில் என் வீட்டில் நிறைய பல்புகளை பயன்படுத்தி வந்தேன். அப்போது எல்இடி பயன்ப

சிம் ஸ்வாப் கொள்ளை உஷார் ப்ளீஸ்!

படம்
சிம் கார்டு பித்தலாட்டம்! அண்மையில் மும்பையைச் சேர்ந்த வணிகர் ஒருவரின் சிம் கார்ட்டை திருடி 1.86 கோடி ரூபாயை ஆட்டையைப் போட்டுள்ளது சைபர் கும்பல் ஒன்று. இதில் நாம் அறியவேண்டியது, கும்பலின் சாமர்த்தியத்தையோ, வணிகரின் வெகுளித்தனத்தையோ அல்ல. எப்படி இந்த புதைகுழியிலிருந்து தப்புவது பற்றி மட்டுமே. ”நீங்கள் உங்களது 3ஜி சிம்மை கம்பெனியிடம் சொல்லி 4ஜியாக மாற்றுகிறீர்கள். இதுவே உங்களுக்கு தெரியாமல் மாற்றினால் கொள்ளை எனலாம். இதனை பொதுவாக சிம் ஸ்வாப் என்கிறார்கள்” என்கிறார் ரிதேஷ் பாட்டியா.  போனை மினி கணினியாகவே பலரும் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். குறிப்பாக புகைப்படம், வங்கி ஓடிபி எண்கள், பண இருப்பு தகவல்கள், பணப்பரிமாற்றம் என இருந்த இடத்தில் உள்ளங்கையிலே செய்யமுடிகிறது. இதனைத்தான் சைபர் கொள்ளையர்கள் சாதகமாக பயன்படுத்தி தரமான சம்பவத்தை நம் கண்முன்னே செய்து அசர வைக்கிறார்கள்.  உங்களது சிம் கார்டை முடக்கி, உங்களது எண்ணிலேயே புது கார்டை சேவை வழங்கும் கம்பெனியிடம் வாங்கி வங்கித்தகவல்களைப் பெற்று அக்கவுண்டை கொள்ளையடிக்கிறார்கள்.  முதலில் உங்களுக்கு மால்வேர் செய்தியை அனுப்புவார்கள்

ஜிபிஎஸ்ஸைக் கண்டுபிடித்தவர்கள் யார் தெரியுமா?

படம்
ஏன்?எதற்கு? எப்படி? sciencefocus ஜிபிஎஸ்ஸை கண்டுபிடித்தது யார்? 1970 ஆம் ஆண்டு ஜிபிஎஸ்ஸை கண்டுபிடித்தது அமெரிக்க ஆயுதப்படைதான். இன்று இந்த ஜிபிஎஸ் வசதி மூலம்தான் தொல்பொருள் ஆய்வு தொடங்கி தானியங்கி கார்கள் வரை இயங்குகின்றன.  2003 ஆம் ஆண்டு இயற்பியலாளர் இவான் கெட்டிங் - பொறியாளர் கலோனல் பிராட்ஃபோர்டு பார்கின்சன் ஆகியோருக்கு ஜிபிஎஸ்ஸை நடைமுறைப்படுத்தியதற்காக அமெரிக்க தேசிய அகாடமி விருதளித்து பாராட்டியது. ஜிபிஎஸ் உருவாக்கத்தில் இவர்களது பங்கு என்ன என்பது பற்றி பிறகு யாரும் கேள்வியே கேட்கவில்லை. 1950 ஆம் ஆண்டு கெட்டிங் குழுவினர், பூமியிலுள்ள இடங்களை சரியாக குறிக்க முயற்சித்தனர். ஆனால் அப்போது அமலாகியிருந்த க்வார்ட்ஸ் வாட்சை இவர்கள் நம்பவில்லை.  பின்னர் 1964 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கடற்படை அணுக்கடிகாரத்தை முன்வைத்து செயல்படத் தொடங்கியது. இந்த திட்டத்தை கடற்படை ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ரோஜர் ஈஸ்டன் வழிநடத்தினார். ஆனால் 2010 ஆம் ஆண்டு வரை ஈஸ்டன் அமெரிக்க தேசிய கண்டுபிடிப்பாளர்கள் சங்கத்தில் சேரவில்லை. 

ஏன்?எதற்கு?எப்படி? - கட்டிடங்கள் உடைவது சந்தோஷம் தருவது ஏன்?

படம்
rpmretail.com உருவாக்கத்தை விட அழிவு ஏன் சந்தோஷம் தருவதாக உள்ளது? தினசரி வாழ்க்கை என்பது பலருக்கும் பிறருக்கு கட்டுப்படுவதாகவே அமைகிறது. இதன் விளைவாக நமக்கு ஏற்படும் விரக்தி, கோபம், இயலாமையை வெளிப்படுத்த வாய்ப்பே இருப்பதில்லை. இக்கோபத்தை வெளிப்படுத்த ஒரு பொருளை உடைக்கிறீர்கள். அடுத்த நொடி உங்கள் மனதும், மூளையும் ஒரு வித சுகத்தை உணரும். அதேசமயம் என்னுடைய டைமெக்ஸ் வாட்ச்சை என்னால் உடைக்க முடியாது. அடிடாஸ் ஷூவை தீயில் எரிக்க முடியாது என யதார்த்தமாக யோசிப்பவர்கள் யூட்பில் உடையும் கட்டிடங்கள், நொறுங்கும் வீடுகள், நிலநடுக்கங்கள் பார்த்து ரிலாக்ஸ் செய்யலாம். உடைவது என்பது ஆற்றலை வெளியிடும் நிகழ்வு என புரிந்துகொள்ளுங்கள். அதனால், உடையும் கட்டிடங்கள், தீவிபத்து, வாகன விபத்து என்பது ஆல்டைம் வேடிக்கைக்கு உரியதாக உள்ளது. 

இழுத்து மூடிய கதவு!

படம்
இழுத்து மூடிய கதவு! - ட்ரம்ப்பின் நோக்கம் என்ன? அமெரிக்க அரசின் செயல்பாடுகளை ட்ரம்ப் தலைமையிலான அரசு நிறுத்தி 23 நாட்களுக்கு மேலாகின்றன. குடியரசுக்கட்சியைச் சேர்ந்த அதிபர் ட்ரம்பின் மூர்க்கமான நடவடிக்கையால் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஊதியமின்றி வேலை செய்யும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். எதற்கு இந்த நடவடிக்கை? அமெரிக்கா - மெக்சிகோ இடையே சுவர் கட்டுவதற்குத்தான். இதற்கான தோராய செலவு 5.7 பில்லியன் டாலர்கள். இத்தொகையை ட்ரம்ப் பெறுவதை ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் தடுத்து வருகின்றனர். மக்கள் என்ன நினைக்கிறார்கள் என ஷங்கர் படம் போல கருத்து கேட்பதுதானே அமெரிக்காவின் வழக்கம்? யெஸ். அதேபோல ஏபிசி நியூஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் ட்ரம்ப் வழுக்கி விழுந்துள்ளார். ஏறத்தாழ அமெரிக்க மக்கள் 53% ட்ரம்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னே பலரும் ஏர்போர்ட் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் இழுத்து மூடினால் எப்படி? தேர்தல் வாக்குறுதியாக ட்ரம்ப் சொன்ன வாக்குறுதிதான் இது. ஆனால் செலவிடுவது மக்கள் பணம் என சபையில் ஜனநாயக கட்சி

வித்திங்க்ஸ் ஸ்மார்ட் வாட்ச்

படம்
சிஇஎஸ் 19 ஆம் ஆண்டு ரிலீசான வாட்ச்சுகள் இவ். வெறும் வாட்சுகள் போணியாகாததால் நம் உடல்நலனைக் கண்காணிக்கும் ஸ்மார்ட் வாட்ச்சுகளாகவே மாறிவிட்டன. இரண்டு வாட்ச்சுகளையும் பாருங்கள். அனலாக் டிசைனுடன் சாதாரணமாக இருக்கலாம்.  இரண்டுமே உங்களது உடல்நலனை கண்காணிக்கும் திறன் கொண்டவை. பதினெட்டு மாத பேட்டரி கேரண்டியுடன் இதயத்தை இதயம் நல்லெண்ணெய் போல பார்த்துக்கொள்ளும் என கம்பெனிக்காரர்கள் சத்தியம் செய்கின்றனர். உண்மையோ பொய்யோ வாங்கி கட்டிப்பார்த்து விடுங்கள். பக்கத்தில் ஜாம் தடவிய சப்பாத்தி போல சுருண்டிருப்பது பிபிஎம் கோர் சாதனம். டிஜிட்டல் ஸ்டெத்தாஸ்கோப் போல டென்ஷனில் இதயம் நொறுங்குகிறதா இல்லையா என கண்காணித்து உங்களுக்கு தகவல் சொல்லும். பிரயோஜனமா இல்லையா என்பதும் இதனை தேர்ந்தெடுப்பதும்  உங்களது விருப்பம். 

பொது பயன்பாட்டு ஆங்கில நூல்கள்!

படம்
புத்தகங்களுக்கான காப்புரிமை என்பது நூறு ஆண்டுகள் என்பது உங்களுக்கு தெரியும். தமிழில் உப்புமா பதிப்பகங்கள் இப்படிப்பட்ட நூல்களை தேர்ந்தெடுத்து தட்டச்சு கூட செய்யாமல் ஸ்கேன் செய்தே நூல்களை அச்சிட்டு விற்று லாபம் பார்க்கின்றனர். இதில் நூலக அதிகாரிகளின் ஆதரவும் உண்டு.  ஆங்கிலத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்களான  ஆல்டோஸ் ஹக்ஸ்லே, டி.ஹெச். லாரன்ஸ், வர்ஜீனியா வுல்ஃப் ஆகியோரின் நூல்களை இனி நீங்கள் இபுக் வழியாக தரவிறக்கி படிக்கலாம். விலையின்றி என்பதுதான் இதில் முக்கியமானது. 1923 ஆம் ஆண்டு எழுதிய நூல்களை இம்முறையில் படிக்கலாம். அடுத்த ஆண்டும் இதேபோல நூல்கள் காப்புரிமை முடிந்து பப்ளிக் டொமைனில் வருகின்றன. 1923-77 வரையில் பதிப்பிக்கப்பட்ட நூல்களை இம்முறையில் சட்டப்பூர்வ முறையில் இலவச நூல்களாக தரவிறக்கி படிக்கும் வாய்ப்பு உள்ளது.  Jacob’s Room  by Virginia Woolf,  The Murder on the Links  by Agatha Christie,  The Prophet  by Kahlil Gibran,  The World Crisis  by  Winston Churchill ,  Don Quixote  by Miguel de Cervantes,  Alice’s Adventures in Wonderland  by Lewis Carroll,  The Three

அன்டார்டிகா பனி உருகினால் என்ன ஆகும்?

படம்
அன்டார்டிகாவில் ஐஸ் இழப்பு 1979 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் அன்டார்டிகா 40 பில்லியன் டன்களுக்கு மேற்பட்ட பனிக்கட்டிகளை இழந்துவிட்டது. பின்னர் 2009 ஆம் ஆண்டு செய்த ஆராய்ச்சியில் இந்த எண்ணிக்கை 252 டன்களாக மாறியுள்ளது தெரிய வந்தது. கலிஃபோர்னியா ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து செய்த ஆராய்ச்சியில் 18 அன்டார்டிகா பகுதிகள், 176 ஆறுகளின் படுகைகளை ஆராய்ந்து அறிக்கையை  Proceedings of the National Academy of Sciences , இதழில் பிரசுரம் செய்துள்ளனர்.  அன்டார்டிகாவில் ஐஸ் கரைந்தால் எனக்கென்ன என நீங்கள் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் சுற்றிக்கொண்டிருப்பது ஆபத்து. கடலில் கலக்கும் பனிக்கட்டிகளால் கடல்மட்டம் உயருமே. 1990 களிலிருந்து இன்றுவரை எட்டு அங்குலத்துக்கு கடல் மட்டம் உயர்ந்துள்ளது. முதலில் கடலை ஒட்டியுள்ள தீவுகள், நாடுகள் இதனால் பிரச்னைக்கு உள்ளாகும். வேறென்ன? மூழ்கிவிடும். 2100 ஆம் ஆண்டு இதே வேகத்தில் போனால் மூன்று அடி கடல்மட்டம் உயரும்.  அன்டார்டிகா ஐஸ் முழுக்க கரைந்தால் 187.66 அடி கடல் மட்டம் உயரும். நாம் என்னாவோம் என்பதை நீங்களே கற்பனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள். 

எலிகள் பேசுவதை கேட்கலாம்!

படம்
எலிகள் பேசுவதைக் கேட்கும் புதுமையான கருவியை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். ராட்டோ உல்லே போல நல்ல எலிகள் நம்மைச்சுற்றி கிடையாது. உணவை திருடுவது, எலி மருந்தை தின்னாமல் நம்மை ஏமாற்றுவது, ஹிட் வாங்கி அடித்தால் பெப்பே காட்டுவது என எலிகள் செய்வது ஏராளமான மாஃபியா வேலைகள். அதன் தகவல் தொடர்பை கண்டுபிடித்தால் தனுஷ் போல வெச்சு செஞ்சிருவேன் என மிரட்டலாம் இல்லியா? அதற்காகத்தான் செயற்கை நுண்ணறிவு வரை சென்றவர்கள் DeepSqueak எனும் மென்பொருளை கண்டுபிடித்திருக்கிறார்கள். இதன்மூலம் எலிகளின் கீச் கீச் வாக்குவாதங்களை, கிரிமினல் திட்டங்களை கண்டுபிடித்து அதற்கு செக் வைக்க முடியும்.  எலிகள் பேசும் ஒலியின் டெசிபலை மனிதர்களால் கேட்க முடியாது. எனவே அந்த ஒலியை ஒளி வடிவில் மொழிபெயர்த்து நாம் புரிந்துகொள்ள முடியும் என்கிறார் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான ரஸ்ஸல் மார்க்ஸ்.  டீப்ஸ்க்யூக் கருவி சோனோகிராம் போல செயல்பட்டு இந்த செயல்பாட்டை மொழிபெயர்ப்பு செய்கிறது. தற்போது சோதனையில் 20 க்கும் மேற்பட்ட முறைகளில் செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆய்வு நியூரோசைக்கோ பார்மகாலஜி ஆய்விதழில