இடுகைகள்

கிரிஸ்பிஆர் குழந்தைகளை உருவாக்குவேன் - ரஷ்ய ஆராய்ச்சியாளரின் தில்!

படம்
கிரிஸ்பிஆர் குழந்தைகள் ரெடி! ரஷ்யாவைச் சேர்ந்த காது கேளாத தம்பதிகள் ஐவர்,  தங்களின் குழந்தைகளின் டிஎன்ஏவை செம்மை செய்ய ஒப்புக்கொண்டுள்ளனர் என்று உயிரியலாளர் டெனிஸ் டெப்ரிகோவ் தகவல் தெரிவித்துள்ளார். ரஷ்ய அரசிடம் இதுபற்றிய அனுமதி பெறுவதற்காக விண்ணப்பித்து காத்திருக்கிறார். அரசின் அனுமதி கிடைக்குமா இல்லையா என்பதை அவரை விட பிற நாடுகளும் ஆராய்ச்சியாளர்களும் கவனமுடன் பார்த்து வருகின்றனர். காது கேளாத இத்தம்பதிகளுக்கு மரபணு வரிசைப்படி பிறக்கும் குழந்தைக்கும் காது கேட்காமல் போக அதிக வாய்ப்புகள் உள்ளன. இதைத் தடுக்கவே கிரிஸ்பிஆர் சிகிச்சையை நாடுகின்றனர். இதன்மூலம் ஹெச்ஐவி முதல் காது கேளாமை வரை தீர்க்க முடியும் என்று நம்புகின்றனர். சீனாவில் அரசு அனுமதியின்றி குழந்தைகளை கிரிஸ்பிஆர் செம்மையாக்கல் செய்த சம்பவம் உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா? BJ2 எனும் மரபணுவை மாற்றினால் பிறக்கும் குழந்தைகளின் காது கேளாமையைத் தீர்க்க முடியும் என டெனிஸ் நம்புகிறார். ஆனாலும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் உள்ள ஆய்வாளர்கள் இதற்கு கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். ஆனால் இதற்கான வாய்ப்புகள் உள

தீவிரவாத அமைப்பைச் சந்திப்பது பெருமையா? -ஜெர்மன் தூதர்

படம்
யா ஆர்எஸ்எஸ், கோல்வால்கர், சாவர்கர் காலத்திலிருந்தே ஜெர்மனியின் நாஜிக் கொள்கையை புகழ்ந்து பேசிவருகிறவர்கள். அவர்கள் நாஜி படையினரைப் போலவே ஷாக்கா எனும் பயிற்சி முறைகளை செய்து வருகிறவர்கள். வாஜ்பாய் காலத்தில் அரசு அமைப்புகளுக்குள் ஊடுருவ முயன்று தோற்றவர்களுக்கு, 2014 ஆம் ஆண்டு மோடி ஆதரவு தர இன்று அனைத்து அமைப்புகளையும் உடைத்து நொறுக்கி அதன் நம்பகத்தன்மையை தூள் தூளாக்கி வருகின்றனர். அண்மையில் ஜூலை 17 அன்று ஜெர்மனியைச் சேர்ந்த இந்தியாவிற்கான தூதர், ஆர்எஸ்எஸ் தலைமையகத்தை சுற்றிப்பார்த்து அதனை பெருமையாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். இதுவே இணையத்தில் மிகவேகமாக பரவி வரும் செய்தி. ஆர்எஸ்எஸ், கலாசாரத் தளத்தில் முக்கியப் பங்காற்றும் அமைப்பு. கலை, அறிவியல், விவசாயம், தொழில்நுட்பம் என அனைத்து தளத்திலும் இதற்கு கிளை அமைப்புகள் உண்டு. ஜனநாயகத்திற்கு ஆதரவான அனைத்து அமைப்புகளிலும் கிளைபரப்பி வரும் ஆர்எஸ்எஸ் அமைப்பு அதன் ஜனநாயகத் தன்மையை வற்றச்ச்செய்து அதனை மற்றொரு ஆர்எஸ்எஸ் போல ஒற்றைத் தலைமைக்கு கட்டுப்பட்டதாக மாற்றி வருகிறார்கள். 2002 ஆம்ஆண்டு  குஜராத் கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டத

பொருளாதாரத்தை சிதைக்கும் காசநோய்!

படம்
இந்தியாவை வதைக்கும் காசநோய்! விறகு புகை, தொழிற்சாலை மாசுபாடு, பசு சாணம் ஆகியவை காரணமாக ஏற்படும் காசநோயின் அளவு தொண்ணூறுகளில் 28 சதவீதமாக இருந்து தற்போது 55 சதவீதமாக உயர்ந்துள்ளது. மார்ச் 2019 ஆம் ஆண்டு இந்தியா ஸ்பெண்ட் செய்த ஆய்வுப்படி பத்து லட்சம் பேர் ஆண்டுதோறும் இறந்து வருகின்றனர். அரசு இந்நோய்களைக் கட்டுப்படுத்துவதில் தடுமாறி வருகிறது. ஆண்டுதோறும் இந்தியா இந்நோயைக் கட்டுப்படுத்த 32 ஆயிரம் கோடி ரூபாயை செலவழித்து வருகிறது. அதாவது அரசு அப்படிக் கூறுகிறது. இத்தொகை நடப்பு ஆண்டில் தேசிய சுகாதாரத் திட்டம், கல்வித்திட்டம், பிரதமந்திரி வீடு கட்டும் திட்டம் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட இத்தொகை அதிகம். 2010 ஆம் ஆண்டு தொற்றா நோய்களுக்கான நாடு தழுவிய திட்டம்  தொடங்கப்பட்டது. இதில் புற்றுநோய், இதயநோய், நீரிழிவு ஆகியவை முக்கியமாக கவனிக்கப்பட்டன.  2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஐந்து கோடிக்கும் அதிகமானோர் இணைந்தனர். நாங்கள் மாநிலங்களுக்கு கருவிகள் வாங்க 150,000, மருந்துகள் வாங்க 250000 ரூபாய் வழங்குகிறோம். மைசூருவைச் சேர்ந்த லக்ஷம்மா, பால் கறந்து வீடுகளுக

இயற்பியல் பிட்ஸ்!

படம்
நீர் ஒரே நேரத்தில் சூடாகவும் மாறும் உறையவும் செய்யும். இதனை  டிரிபிள் பாயிண்ட் (Triple point)என்று கூறுகின்றனர். வெப்பம் மற்றும் அழுத்தம் காரணமாக நீர் திட, திரவ, வாயு நிலைகளுக்கு மாறும். மூக்கு கண்ணாடிகள் இல்லாதபோது, உங்கள் கையில் உள்ள விரல் இடைவெளியில் பார்க்கும்போது, எதிரிலுள்ள பொருட்களை ஓரளவு தெளிவாக காணமுடியுமாம். கி.மு.650 ஆம் ஆண்டு கிரேக்கர்களால் உருவான அறிவியல் துறை இயற்பியல். Physics  என்ற வார்த்தைக்கு இயற்கையிலிருந்து பெற்ற அறிவு என்று பொருள். நவீன ஜிபிஎஸ் முறை தொழில்நுட்பம் ஐன்ஸ்டீனின் E=MC 2 சூத்திரப்படி இயங்குகிறது.செயற்கைக் கோள்கள், ரேடியோ அலைகள் மூலம் தகவல்களை பரிமாற்றம் செய்கின்றன. தகவல்: MinutePhysics படம் - கிராபிக் ரிவர் - பின்டிரெஸ்ட் ஸ்

மூத்த குடிமகன்களுக்கான வட்டி குறைவது இயல்பானதுதான்!

படம்
சக்தி காந்த தாஸ் ஆர்பிஐ ஆளுநர் கரன்சி செயல்பாடு புதிய எல்லையைத் தொட்டுள்ளது? சதவீத அளவில் பணமதிப்பு நீக்கத்திற்கு பிறகு குறைந்தளவே மக்களிடம் புழங்கி வருகிறது. வளர்ச்சி அடிப்படையில் பார்த்தால் ரூபாயின் புழக்கம் மக்களிடம் அதிகமாகத்தான் இருக்கிறது. இது விரைவில் குறையும் என நம்புகிறேன். வட்ட சதவீதம் குறைந்தால் அது மூத்தவர்களுக்கு பாதகமாகும் என்பதை அறிந்துள்ளீர்களா? பணவீக்கம் குறையும் போது வட்டி சதவீதமும் குறைவது வழக்கமானதுதான். பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருக்கும்போது வட்டி எட்டு சதவீதமாக இருக்கும். அது குறையும்போது வட்டி 4 சதவீதமாக குறைவது இயல்புதானே! வெளிநாடுகளிலும் கூட இந்திய கடன் பத்திரங்களை வாங்க முடியும் என பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார்களே? நாங்கள் அரசு கடனை நிர்வாகம் செய்யும் மேலாண்மை அமைப்பு மட்டுமே. அதை மட்டுமே செய்கிறோம். கடன், வட்டி பிரச்னைகளை குறித்து அரசுடன் தொடர்ந்து பேசிவருகிறோம். அரசின் வேறு முடிவுகளை பற்றி நாங்கள் பதில் கூறமுடியாது. முழுக்க டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறை சரியாக செயல்படுகிறதா? நிறைய நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதே? அவ
படம்
நேர்காணல் சுபாஷ் பாலேகர் ஷிஸ்கர் ஆர்யா 2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு சுபாஷ் பாலேகரின் ஜீரோ பட்ஜெட்டை கையில் எடுத்துள்ளது. இதுபற்றி சுபாஷ் பாலேகர் என்ன சொல்லுகிறார்? உங்கள் விவசாய முறையை இந்திய அரசு கையில் எடுத்துள்ளது. இதுபற்றி உங்கள் கருத்துழ 2014 ஆம் ஆண்டு பிரதமர் தேர்தலின்போது  மோடி, தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்குவதாக கூறினார். அவர் இந்திய விவசாய கௌன்சில் சில ஐடியாக்களை இதற்காக தனக்கு கூறும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அம்முறையில் விஷயங்கள் நடைபெறவில்லை. நிதி ஆயோக் இதுகுறித்து சர்வே ஒன்றை செய்தது. வேதிப்பொருட்கள் பயன்படுத்தும் மற்றும் இயற்கை விவசாயம் ஆகிய இரண்டும் எதிர்பார்த்த விளைச்சலைத் தரவில்லை என்று இதன் மூலம் தெரிய வந்தது. அதன்பின்னர்தான் என்னுடைய டெக்னிக் மீது நம்பிக்கை வந்துள்ளது. அடுத்து என்ன நடக்கும்? இந்த ஆண்டு டில்லியில் இதுபற்றி சந்திப்பு நடைபெற்றது.  நிதி ஆயோக்கின் துணைத்தலைவர் ராஜிவ் குமார், இந்திய விவசாய கௌன்சில் தலைவர்  திரிலோச்சன் மொகபத்ரா, விவசா

எழுத்தாளரை சிறைப்படுத்திய சீனா!

படம்
எழுத்தாளரும், இணைய விமர்சகருமான யாங் ஹெங்ஜூன் என்பவரை. சீன அரசு சிறையில் ஆறு மாதமாக அடைத்து வைத்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 19 அன்று குவாங்ஜூ விமானநிலையத்தில் சீன காவல்துறையால் கைது செய்யப்பட்டார். யாங் ஹெங்ஜூன் தன் குடும்பத்துடன் ஷாங்காய் செல்லும் முயற்சியில் அங்கு இருந்தார். அமெரிக்காவில் பணியாற்றிய யாங், நியூயார்க்கிலுள்ள கொலம்பியா பல்கலையில் வருகைதரும் பேராசிரியராக பணியாற்றி வந்தார். அவர் சீனாவுக்கு அடிக்கடி வந்து செல்வதை தேசப்பாதுகாப்புக்கு ஆபத்தாக உளவுத்துறை சந்தேகப்பட்டது. மேலும் யாங் கைது செய்யப்படுவது முதல்முறை கிடையாது. 2011 ஆம் ஆண்டு கூட சீன காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். விசாரிக்கப்படும்போது அவரின் நடவடிக்கைகளை சொல்லுமாறு வற்புறுத்தப்பட்டுள்ளார். 2002 ஆம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலியாவின் குடிமகனாக யாங் இருந்து வருகிறார். 1980 களில் சீனா வெளியுறவுத்துறையில் பணியாற்றியுள்ளார். ஆனாலும் கூட ஆஸ்திரேலியா அரசு கைதுக்கு கண்டனம் தெரிவித்து உதவிக்கு வரவில்லை. இவரின் கைது குறித்து அரசியல் எழுத்தாளர் கிரிஸ் உஹிமன் போன்றவர்தான் இணையத்தில் இப்பிரச்னை

கல்விக்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடு எவ்வளவு?

படம்
கல்விக்கு கை கொடுக்கிறதா பட்ஜெட் 2019? அண்மையில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட் 2019இல் கல்வித்துறைக்கு 94, 854 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சிகளுக்கென தனி அமைப்பு உருவாக்க அறிவிப்பு, உயர்கல்விக்கான செயற்பாடுகள் என பல்வேறு திட்டங்கள் மாணவர்களுக்கு உற்சாகமூட்டியுள்ளன. பள்ளிக் கல்விக்கான 'சமக்ரா சிகா அபியான்' திட்டத்திற்கு 36,322 கோடி ரூபாயும், மதிய உணவுத் திட்டத்திற்காக 11,200 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த ஒதுக்கீடான 94, 853 கோடி ரூபாயில் 56,536.63 கோடி ரூபாய் பள்ளிக்கல்விக்கும், 38,317 கோடி ரூபாய் உயர்கல்விக்கும் செலவிடப்பட உள்ளது. 2018 ஆம் ஆண்டு ஆசிரியர்களின் பயிற்சிக்கென இந்திய அரசு ஒதுக்கிய நிதி 871 கோடி ரூபாய். இந்த நிதிநிலை அறிக்கையில் அத்தொகை குறைக்கப்பட்டு 125 கோடி ரூபாயாக சுருங்கியுள்ளது.  கல்விக் கடன்களுக்கான உத்தரவாத நிதி  அரசு வழங்கி வந்த 1,250 கோடி ரூபாய், நடப்பு ஆண்டில் 1,900 கோடியாக வெட்டப்பட்டுள்ளது. நாட்டு மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரதமர் கல்வி உதவித் தொகைக்கான நிதி ,கடந்த ஆண்டில் 75 கோடியாக இருந்து, தற்போது 5

பாதுகாப்புக் காவலர் பட்டதாரி ஆகிறார்!

படம்
செய்தி ஜாம் அசத்தல்! கற்க கசடற! நேரு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புக் காவலராக பணியாற்றி வந்தார் ராஜ்மல் மீனா (34). அங்கு, நுழைவுத்தேர்வில் அதிக மதிப்பெண்களோடு வென்று பிஏ இளங்கலைப் பட்டப்படிப்பை ரஷ்ய மொழியில் கற்கவிருக்கிறார்.  TOI கிளாப்ஸ்! விடாமுயற்சி! புதுடில்லியின் வடக்குப்பகுதியில் உள்ள கஜூரி காஷ் பகுதியில் ரோஹிங்கியா முஸ்லிம்களின் அகதிகள் முகாம் உள்ளது. இங்கு மனித உரிமை அமைப்பு மொழி மற்றும் கணினி திறன்வகுப்புகளை நடத்தியது. இதில் ரியாஸ் உல் கான் என்ற மாணவர், முதன்மை மாணவராக பரிசு வென்றார். indianexpress அச்சச்சோ! வணிக பாதிப்பு? நடப்பு பட்ஜெட்டில், வங்கிக் கணக்கில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பெறுபவர்களுக்கு 2சதவீத வரிவிதிப்பு அமலாகிறது. இது வேளாண் வணிகத்தைப் பாதிக்கும் என்பது வல்லுநர்கள் கருத்து. ‘டிஜிட்டல் பரிமாற்றத்திற்கான முயற்சி ’என இதற்கு நிதி அமைச்சர் பதில் அளித்துள்ளார். ie ஆஹா! சூழல் உதாரணம்! கம்போடியாவின் காம்போங் ஸ்ப்யூ நகரில், சூழல் பாதிப்பை மக்களுக்குச் சொல்லும் விதமாக ரப்பிஷ் கஃபே உருவாகியுள்ளது. இதனை பீர் மற்றும் குடிநீர் பாட்டில்க

நிலவில் ராக்கெட்டுகளை தாக்கும் தூசு மண்டலம்!

படம்
நிலவுக்குச் செல்ல அனைவரும் இன்று தயாராக இருக்கின்றனர். மனிதர்களை அனுப்ப இந்தியா தயாராக இருக்கிறது. நிலவுக்கு மனிதரகள் என்ற கனவு இந்தியாவுக்கு 2022 இல் அது பாகுபலி ராக்கெட்டின் மூலம் நிறைவேறலாம். ஆனால் அதைவிட முக்கியமாக நிலவில் சுற்றிவரும் தூசு மண்டலம் ராக்கெட்டுகளில் கடுமையான கீறல்களை ஏற்படுத்தி வருகிறது. நிலவில் பல்வேறு குப்பைகள், தூசுகள் ஒன்று சேர்ந்த தோட்டாக்களின் வேகத்தில் சுற்றி வந்து கொண்டு இருக்கின்றன. இவை மேகம் போல உள்ளன. இதனை எப்படி சமாளிப்பது என்பதை நாம் கண்டுபிடிக்கும் அவசியம் உள்ளது என்கிறார் இயற்பியலாளர் பில் மெட்ஜர். அப்போலோ 11 விண்வெளி வீர ர்கள் நிலவில் இறங்கும்போது சிக்கல்களை சந்திப்பார்களா என்று ஆராய்ச்சியாளர்களுக்கு பயம் உள்ளுக்குள் இருக்கிறது. இதற்கு வேறெந்த வழியும் இல்லை. தூசுகள் குறைந்த இடத்தில் வலிமையான விண்கலங்களை தயாரித்து அனுப்பி இறங்குவதே ஒரே வழி. நன்றி: ஃப்யூச்சரிசம்