இடுகைகள்

கடத்தி, வல்லுறவு செய்து கொலை - கென்னத் - ப்யூனோ சகோதர்களின் அட்டூழியம்

படம்
  1951ஆம் ஆண்டு, விலைமாது ஒருவருக்குப் பிறந்தார். குழந்தையாக இருக்கும்போதே   தத்து கொடுக்கப்பட்டார். பதினெட்டு வயதில் திருமணம் செய்துகொண்டார். ஒருமுறை தனது பெண் தோழிக்கு கடிதம் எழுதியபோது, தான் ஒருவரைக் கொன்றதாக கூறினார். ஆனால், அதை தோழி கென்னத் தனது ஆண்மையின் பெருமைக்காக கூறுவதாக நினைத்துக்கொண்டார். 1973ஆம் ஆண்டு காவல்துறை கென்னத் பியான்சியை கொலை வழக்கு ஒன்றில் சந்தேகப்பட்டது. ஆனால் உண்மையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னரே கென்னத்தின் கார் கொலை சம்பவம் நடந்த இடத்தில் இருந்ததை காவல்துறை அதிகாரி ஆவணத்தில் குறிப்பிட்டிருந்தார். 1976ஆம் ஆண்டு கென்னத் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் சென்றார். அங்கு கென்னத்தின் சகோதரர்   இருந்தார். அவருடன் சேர்ந்துதான் பின்னாளில் பல்வேறு கொலைகளைச் செய்தார். சகோதரர் பியூனோ ஜூனியர், சிறுவயதில் இருந்தே அம்மாவுடன் பல்வேறு ஊர்களில் வசித்த அனுபவம் கொண்டவர். பதினான்கு வயது தொடங்கியதிலிருந்தே கார்களைத் திருடி விற்கத் தொடங்கினார். சோடோமி எனும் மலப்புழை வழியாக   உடலுறவு கொள்வதில் ஆர்வம் கொண்ட ஆள். கார் திருட்டுக்காக சிறை சென்ற அனுபவம் உள்ளவர். செக்ஸ் குற்றவாளியான

காதலிக்க, காதலிக்கப்பட செய்யவேண்டியவை - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி தென் தேர் ஈஸ் லவ் ஜே கிருஷ்ணமூர்த்தி தமிழாக்கம்   எது காதல் என்ற கேள்விக்கு பதிலைத் தேடி   நாம் பயணிக்க வேண்டும் என்றால் பல நூற்றாண்டுகளாக கூறப்பட்டுள்ள முன்மாதிரிகள், கருத்துகளை சற்று தள்ளி வைக்கவேண்டும். வாழ்க்கையை பல்வேறு பிரிவுகளாக பிரிக்கும், அழிக்கும் விவகாரங்களையும் விட்டு தள்ளிச் செல்ல வேண்டும். இப்போது, காதல் என்று கூறும் தீப்பிழம்பை பற்றி கண்டறிவோம். உண்மையில் அதன் அர்த்தம் என்ன? இதை அறிய முதலில் தேவாலாயம், நூல், பெற்றோர், நண்பர்கள், தனிப்பட்ட மனிதர்கள் ஆகியோர் கூறியுள்ள விஷயங்களை ஒதுக்க வேண்டும். காதல் என்பதை நாமாகவே தேடி அடைய வேண்டும்.   காதல் என்பதை மனிதர்கள் பலநூறு வரையறை கொண்டு கூறமுடியும். காதலை நமக்கு பிடித்தது போல, குறிப்பிட்ட முறையில் புரிந்துகொண்ட வகையில் உருவாக்கிக் கொள்ள முடியும். எனவே, காதலைப் பற்றி தேடுவதற்கு முதலில் நமக்குள் உள்ள முன்முடிவுகளை, கருத்துகளை விலக்க வேண்டும். நமக்குள் இருக்கும் குழப்பத்திலிருந்து   வெளியே வந்தால்தான், எது காதல் இல்லை என்பதைக் கண்டறிய முடியும். அரசு ‘’ உங்கள் நாடு மீது வைத்துள்ள காதலுக்காக சென்று பிற

பேராசை பூதம் 2 - ஹிண்டன்பர்க் அறிக்கையின் தமிழாக்கம் - மின்னூல் வெளியீடு

படம்
  இன்று இந்தியாவில் மத்திய அரசு எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை  பலம் வாய்ந்த தொழில் நிறுவனங்களே முடிவு செய்கின்றன. அரசின் கொள்கை மாற்றங்களை பெருநிறுவனங்கள் முடிவு செய்து அறிவிக்கச்செய்து பயன் பெறுகின்றன. நாட்டின் பிரதமர் தொழில்நிறுவனங்களோடு நெருக்கமாக இருப்பது, அணுக்க முதலாளித்துவம் என்று கூறப்படுகிறது. இப்படி இருப்பதால் அவருக்கும் அவர் சார்ந்த கட்சிக்கும் நன்மை உண்டு. வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் இருக்காது. தொழிலதிபரின் வாராக்கடன்களுக்கு, வரிச்சுமையை சுமக்க வேண்டியது மக்கள்தான்.  அதானி குழுமம், பல்லாண்டுகளாக திட்டமிட்டு செய்த மோசடிகளை பேராசை பூதம் 3 நூல் விவரிக்கிறது. இதைப் படிக்கும்போது இப்படியெல்லாம் யோசித்து நிதி மோசடிகளை செய்ய முடியுமா என பிரமித்து அதிர்ச்சியடைவீர்கள்.  அந்தளவு நேர்த்தியாக திட்டமிட்டு இந்தியாவை மட்டுமல்ல வரி கட்டும் அத்தனை குடிமக்களையும் ஏமாற்றியுள்ளது அதானி குழுமம். மோசடிக்கு கௌதம் அதானியின் மொத்த உறுப்பினர்களுமே காய்களாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர்.   பங்குச்சந்தை நிதியை மடைமாற்றி தனது இஷ்டம்போல நிறுவனத்தின் மதிப்பை மாற்றிக் காண்பித்து அதை அடையாளம் கண

காதலைப் புரிந்துகொள்வது எப்படி? - ஜே.கிருஷ்ணமூர்த்தி

படம்
  தென் தேர் இஸ் லவ் இலவச நூலில் இருந்து… ஜே கிருஷ்ணமூர்த்தி தமிழாக்கம் ஒரு உறவில் பாதுகாப்பைத் தேவையாக நினைக்குப்போது அது பயத்தையும் சோகத்தையும் உருவாக்குகிறது. பாதுகாப்பைத் தேடும்போது அது, பாதுகாப்பின்மையை அழைத்து வருகிறது. உங்கள் உறவுகள் எதிலாவது பாதுகாப்பைத் தேடியுள்ளீர்களா? நம்மில் பெரும்பாலானோர்   காதலிக்க, காதலிக்கப்பட என்ற வகையில் ஒருவகை பாதுகாப்பை விரும்புகிறவர்கள். உண்மையில் ஒருவருக்கொருவர் காதலிக்கிற சூழ்நிலையில் அந்த காதல் இருவருக்குமான பாதுகாப்பைக் கொண்டிருக்கிறதா? இந்த பாதுகாப்பு என்பது, குறிப்பிட்ட வழிமுறையைக் கொண்டுள்ளதா? நாம் காதலிக்கப்படுவதில்லை. காரணம், நமக்கு எப்படி காதலிப்பது என்று தெரியாது. காதல் என்பது என்ன? இதைப்போல உலகம் முழுவதும் களங்கப்படுத்தப்பட்ட தவறாக பொருள் கொள்ளப்பட்ட வார்த்தை வேறு ஏதும் இருக்க முடியாது. நீடித்த காதல், அழியாத காதல் என்பதை மாத இதழ், நாளிதழ், மிஷனரிகள் வரையில் பேசியுள்ளனர். ‘’நான் எனது நாட்டை, அரசரை, நூலை, மலையை, மனைவியை, மகிழ்ச்சியை, கடவுளைக் காதலிக்கிறேன்.’’ இப்படி பலமுறை பலரும் சொல்ல கேட்டிருப்போம். உண்மையில் காதல் என்பது ஒரு சிந

சிறுமிகளை, இளம்பெண்களை சித்திரவதை செய்த அரச குடும்பத்துப் பெண்மணி

படம்
  எலிசபெத் பாத்தோரி ஹங்கேரியைச் சேர்ந்த அரச குடும்ப உறுப்பினர்களில் ஒருவர். ராணுவத்தில் எலிசபெத்தின் அப்பா வேலை செய்தார். அந்த நாட்டில் மரியாதையான குடும்பமாக இனக்குழுவாக இருந்தது. மன்னர், நீதிபதி, பாதிரியார்   என்றெல்லாம் பதவி வகித்தவர்கள் பின்னாளில் சாத்தானை வழிபடுபவர்களாக, தாந்த்ரீகத்தில் ஈடுபடுபவர்களாக மாறினர். அந்த சமயத்தில் பிறந்த எலிசபெத், அவரது மாமாவால் பிறரை வருத்தி துன்புறுத்தி மகிழ்வதை ரசிக்கத் தொடங்கினார். பதினொரு வயதில் எலிசபெத்திற்கு திருமணம் நிச்சயமானது. பதினைந்து வயதில் மணம் செய்து கொடுக்கப்பட்டார். கணவரும் ராணுவத்தில் பணியாற்றிய வீரர்தான். கணவர் வீட்டில் இல்லாதபோது தான் வாழ்ந்த பெரிய மாளிகை போன்ற வீட்டில் என்ன செய்வது என தெரியாமல் தவித்தார். பிறகுதான், அங்கேயும் தனது பிறந்த வீட்டில் இருப்பதைப் போலவே சித்திரவதை செய்யும் அறைகளை கட்டி, கருவிகளை அமைத்துக்கொண்டார். நோ ஸ்டேட்மென்ட்ஸ் ஒன்லி ஆக்சன் என களமிறங்கிய எலிசபெத், அருகிலுள்ள கிராமங்களில் வீட்டு வேலைக்கு பெண்கள் தேவை என சொல்லி படிப்பறிவு இல்லாத சிறுமிகளை, இளம்பெண்களை அழைத்து வந்தார். இப்படி வந்தவர்கள் யாரும் திரும்ப

பணியாளர்களைக் கொன்றால்தான் முதலைக்கு உணவு கிடைக்கும்!

படம்
  ஜோபால் 1892ஆம் ஆண்டு பிறந்த முதலை விரும்பி. முதலை நேயர். சோசியபிள் இன் என்ற ஹோட்டலை நடத்தி வந்தார் ஜோ பால். இவருக்கு நிறைய மனைவிகள் உண்டு. முதலைகளுக்கு இறைச்சியை தனது கையால தூக்கி வீசுவது பிடித்தமானது. ஒருமுறை இவரது குளத்தில் அழுகிய இறைச்சி வாடை வருகிறது என அருகில் வாழ்ந்த வீட்டுக்காரர் கூறினார். அதற்கு ஜோ டக்கென துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அதை தடவியபடியே, ‘’அழுகிய இறைச்சியை முதலைக்கு போட்டேன். அதுதான் காரணம்’’ என்று சொன்னார். துப்பாக்கி கையில் இருக்க சமாதானம் ஏற்படாமல் இருக்குமா என்ன? டெக்ஸாஸின் எல்மண்டோர்பில் வாழ்ந்தவர், ஜோபால். எல்லோருடனும் பேசும் ஜோவியலான ஆள்தான். ஆனால் அவரது இருளான பகுதியை பலரும் அறியவில்லை.ஜோ பாலைப் பற்றி பலரும் அறிய வந்தது, அவரது ஹோட்டலில் வேலை செய்த பெண் பணியாளர்கள் காணாமல் போன சம்பவத்தின் போதுதான்… முதல்முறை ஒரு பெண் பணியாளர் காணாமல் போனார். காவல்துறை சம்பிரதாய சடங்காக ஜோவிடம் கேள்வி கேட்டபோது, அந்த பெண் வேறு வேலை தேடி போனதாக கூறிவிட்டார். சரி சொன்ன பதில்தான் லாஜிக்காக இருக்கிறதே என நினைத்து விட்டுவிட்டார்கள், ஆனால் அடுத்தடுத்து பெண்கள் காணாமல் போனபோது

கோடாரியால் மண்டையை பிளந்து கொலை.. கொலைக்கு முன்னரே குறியீட்டுச் செய்தி - கோடாரி மனிதன்

படம்
  கோடாரி மனிதன்   தெலுங்கு படங்களில் அதிகம் பயன்படுத்தும் பொருள் என்ன? பன்ச் டயலாக்குகள் அல்ல. கோடாரி. சிங்கமுகம், சூரியன் என விதவிதமான உருவங்கள் பொறித்த கோடாரிகளை பயன்படுத்தி நல்நோக்கமில்லார்களை நாயகன் வெட்டுவார். அவரும் வெட்டப்படுவார். அதேபோல ஒரு கோடாரி கிரைம் கதைதான் இது. ஆனால் இறுதியாக யார் அந்த கோடாரி மனிதன் என்பதை கண்டறிய முடியவில்லை. 1918ஆம் ஆண்டு மே மாதம், அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தவரான ஜோசப் மேகியோ கொலை செய்யப்பட்டார். மேகியோ மட்டுமல்ல, கூடவே அவரது மனைவியும் தலையில் கோடாரியால் வெட்டப்பட்டிருந்தனர். இருவரின் குரல்வளைகளும் அறுக்கப்பட்டிருந்தது மேகியோவின் சகோதரர்கள் கொலைக்கு காரணம் என்று காவல்துறை சந்தேகப்பட்டாலும் பின்னாளில் அவர்கள் விசாரணைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டனர். மேகியோ வீட்டைவிட்டு சில மீட்டர் தூரத்தில் நடைபாதையில் ஒரு செய்தி எழுதப்பட்டிருந்தது. அதில் ‘’திருமதி மேகியோ, இன்று திருமதி டோனி போலவே அமர்ந்திருக்கப் போகிறார்’’ என எழுதியிருந்தது.    1911ஆம் ஆண்டு கோடாரியால் வெட்டப்பட்டு மேகியோ கொல்லப்பட்டது போலவே நிறைய கொல