இடுகைகள்

ஏஐ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செயற்கை நுண்ணறிவுத் துறையில் நிறைய சவால்கள் உண்டு!

படம்
      மேக்ஸ் டெக்மார்க், அறிவியலாளர்       மேக்ஸ் டெக்மார்க் -Max Tegmark   விண்வெளி பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தவர் நீங்கள் . திடீரென எதற்கு செயற்கை நுண்ணறிவு துறையில் ஆய்வு செய்யத் தொடங்கினீர்கள் ? எனக்கு பெரிய கேள்விகளைக் கேட்பதில் விருப்பம் அதிகம் . கற்பனைக்கு எட்டாத பெரிய கேள்விகள் , பெரிய , சரியான கேள்வி என்று கூட வைத்துக்கொள்ளலாம் . விண்வெளி உருவாகியது , அதூபற்றி தத்துவங்கள் , அனைத்து விஷயங்களும் எப்படி தொடங்கியிருக்கும் ?, அடுத்து என்ன நடக்கப்போகிறது , இந்த விவகாரங்களுக்கு இடையில் நமது பங்கு என்ன ? என்று இப்படி கேள்விகள் சென்றுகொண்டே இருக்கும் . நான் வானியலில் நிறைய விஷயங்களைக் கண்டுபிடித்திருக்கிறோம் . ஆனால் அதில் புதிய விஷயங்களைக் கண்டுபிடிப்பது கடினமானதாக இருக்கிறது . மிகவும் அரியதும் கூடத்தான் . எனவே , நான் விடை காண முடியாத சிக்கல்களைக் கொண்ட துறையை தேடினேன் . அப்போதுதான் நரம்பியல்துறை சார்ந்த தகவல்கள் , அதில் உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவு பற்றி தெரிய வந்தது . இன்று நாம் நுண்ணோக்கிகள் வழியாக நம் முன்னோர்கள் பார்க்க முடியாத அற

தோல் புற்றுநோயைக் கண்டுபிடித்து மைக்ரோசாப்ட் விருது வென்ற மும்பை இளைஞர்கள்!

படம்
  மும்பையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், தோல் புற்றுநோயை செயற்கை நுண்ணறிவு மூலம் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். இதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இமேஜைன் விருதை வென்றுள்ளனர்.  ஆசிம் கான், சித்தார்த்தா ஜெயின் ஆகிய இருவரும் தங்களது கண்டுபிடிப்பிற்காக இமேஜைன் ஜூனியர் ஏஐ விருதை வென்றுள்ளனர். பதினேழு வயதாகும் இருவரும் ஆன்மை ஓன் டெக்னாலஜி என்ற பெயரில் கண்டுபிடிப்பு மையம் ஒன்றில் போட்டியில் பங்கு பெற்றனர். டீம் ஜிபோர்ஸ் என்பது இவர்களது குழுவின் பெயர்.  புற்றுநோய் என்பது குணப்படுத்த முடியாத நோய் அல்ல. அதனை ஆரம்ப நிலையில் அறிகுறிகளை வைத்து ஒருவர் அடையாளம் கண்டால் அதை எளிதாக குணப்படுத்த முடியும். புற்றுநோயை கண்டுபிடிக்க திசு செல்களை எடுத்து சோதிக்கிறார்கள். ஆனால் பிறப்புறுப்பில் இருக்கும் திசுக்களை எடுத்து சோதிப்பது வலி நிரம்பிய செயல்முறை. எனவே, புற்றுநோய் இருப்பதாக சந்தேகப்படும் இடங்களை புகைப்படம் எடுத்து அதனை சோதித்து உறுதி செய்யும் ஏஐ முறை பலரையும் கவர்ந்துள்ளது.  நோயைக் கண்டுபிடிக்கும் மாதிரியுடன் மொபைல் ஆப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ப

டீப் லேர்னிங் தொழில்நுட்பத்தை நம்பலாமா?

படம்
            செயற்கை நுண்ணறிவை நம்பலாமா ?   டீப் லேர்னிங் என்பதில் இல்லாத அம்சங்களே கிடையாது . இதில் முகமறியும் தொழில்நுட்பம் , மொழிபெயர்ப்பு வசதி , விளையாட்டுகளை விளையாடுவது ஆகியவையும் உள்ளது . இதன் அடிப்படையில்தான் செயற்கை நுண்ணறிவு என்பது கடந்த பத்தாண்டுகாக தொழில்நுட்பத் துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது . டீப் லேர்னிங்கில் நிறைய சாதகமான அம்சங்கள் இருந்தாலும் இந்த அமைப்பு எப்படி இயங்குகிறது , அப்ளிகேஷன்கள் முதல் தானியங்கி கார்கள் வரை இந்த அமைப்பில் இயங்குவது பாதுகாப்பானதுதானா ? கணினியில் இயங்கும் அல்காரிதம்கள் வெளிப்படையாக இருக்கவேண்டும் என பலரும் நினைக்கிறோம் . ஆனால் டீப் லேர்னிங்கில் இது சாத்தியமில்லை . கணினி குறிப்பிட்ட விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் முறையை இப்போது மாற்றியுள்ளனர் . இதனை ஆர்ட்டிபிஷியல் நியூரல் நெட்வொர்க்ஸ் என்று அழைக்கின்றனர் . நமது மூளையில் நியூரான்கள் செய்யும் வேலைகளையே இந்த அமைப்பும் செய்கிறது . நியூரான்கள் எப்படி மூளையில் செய்கிறதோ அந்த முறை இன்னும் எளிமையாக்கி செயல்படுகிறது என கூறலாம் . 1950 களில் நியூரல் நெட்வொர்க்ஸ் பற்றிய ஆராய்ச்

ஏ.ஐ. விவசாயம்! - உணவு உற்பத்தியை மேம்படுத்த உதவும் பல்வேறு ஏ.ஐ செயலிகள்

படம்
                  cc   ஏ . ஐ . விவசாயம் !   செயற்கை நுண்ணறிவு மூலம் வேளாண் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த , நீர் பாய்ச்ச , விலைகளை அறிய முடிகிறது . முன்னர் விவசாயப் பயிர்களை பூச்சிகள் தாக்கினால் , அவற்றைக் காப்பாற்ற அனுபவம் வாய்ந்த விவசாயி அல்லது வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உதவிகளை விவசாயிகளை நாடி வந்தனர் . இன்று ஸ்மார்ட்போனில் நிறுவும் ஆப் மூலம் பாதிக்கப்பட்ட பயிர்களை படமெடுத்து அனுப்பினாலே போதும் . பயிர் , எதனால் பாதிக்கப்பட்டுள்ளது , அதற்கான தீர்வு என அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்ள முடியும் . “ நான் எனது போனில் பிளான்ட்ரிக்ஸ் (plantrix) என்ற ஆப்பை நிறுவினேன் . இரண்டே நிமிடங்கள் பயிர்களில் ஏற்பட்டுள்ள நோய்த்தாக்குதலையும் , அதற்கான தீர்வையும் தெரிந்துகொண்டேன் . இதனால் விவசாயத்தில் நல்ல லாபம் கிடைத்து வருகிறது” என்கிறார் திருவாரூர் மாவட்ட விவசாயியான ரவிச்சந்திரன் . மகாராஷ்டிரத்தில் 2017 ஆம்ஆண்டு பருத்தி விவசாயிகளுக்கு பயிர்களில் ஏற்பட்ட புழுத்தாக்குதலால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது . ஏறத்தாழ 50 சதவீத விவசாயிகள் இதனால் பாதிக்கப்பட்டனர் . மகாராஷ்டிர அரசு

குரல் மூலம் முகம் வரையும் ஏஐ!

படம்
உண்மைதான். செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியும் வேகமும் இன்று அதிகமாகிவிட்டது. தற்போது ஒருவரின் குரலைக் கேட்டு யூகமாக அவரின் முகத்தை ஏஐ வரையத் தொடங்கியுள்ளது. நம் கண்களைப் பொத்தியபடி ஒருவர் வந்து பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்கிறார் எனில், டக்கென் மூளை தன் நினைவடுக்கில் தேடி ஹாய் குமார் என சொல்கிறோமே அதேதான். ஆனால் அதனை செயற்கை நுண்ணறிவு பழகிவிட்டது என்பதே ஆச்சரியம்தானே. ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட ஆடியோ கிளிப்புகளை வைத்து பயிற்சி கொடுத்து இதனை சாதித்திருக்கிறார்கள். ஸ்பீச் டு ஃபேஸ் எனும் வசதி தோராயமானதுதான். குரலை வைத்து ஆணா பெண்ணா என கணித்து தோராய அளவில் உருவத்தை வரைகிறது. செயற்கை நுண்ணறிவின் வசதியில் இது முக்கியமானது கூட. arxiv எனும் அறிவியல் இதழில் இந்த ஆராய்ச்சி குறித்து செய்தி வெளியாகியுள்ளது. எந்தளவு உண்மையான முகத்தோடு மேட்ச் ஆகிறது என நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். நன்றி: லிவ் சயின்ஸ்

செயற்கை நுண்ணறிவு கேள்விகள்! - பதில் சொல்லுங்க பார்ப்போம்

படம்
Pexels.com ரோபோ குறித்து மூன்று விதிகளை உருவாக்கி புகழ்பெற்றவர் இவர். இன்றுவரை இவரின் விதிகளை அடிப்படையாக வைத்து ரோபோக்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவரின் லையர் என்ற சிறுகதையில்(மே 1941) இந்த விதிகள் எழுதப்பட்டன. யார் இந்த ஆளுமை? 2012 ஆம் ஆண்டு அக்டோபரில் மனிதர்களுக்கு எதிராக ரோபோக்களை பயன்படுத்தக்கூடாது என்று 200 க்கும் மேற்பட்ட டெக் கம்பெனிகள் போராடினர். இந்த போராட்ட அமைப்பின் பெயர் என்ன? ஐபிஎம் செயற்கை நுண்ணறிவில் இயங்கும் சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கியது. இதன் சிறப்பு, நாம் கேட்கும் கேள்விக்கு உடனே டி.ஆர் போல பதில் சொல்லி அசத்தும். மனிதர்களுக்கு சமையல் சொல்லித் தருவதில் கூட திறன் காட்டி அசத்தியது. இந்த கம்ப்யூட்டரின் பெயர் தெரியுமா? சோனி தயாரித்த ரோபோ என்பதுதான் க்ளூ. உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறன் இதன் ஸ்பெஷாலிட்டி. தன் எஜமானருக்கு ஏற்படும் பதினான்கு நோய்களைக் கண்டறிந்து உதவும் தன்மை கொண்டது இந்த ரோபோ. இப்போது நீங்கள் பெயரைக் கண்டுபிடித்திருப்பீர்களே? ரஷ்ய பணக்காரர் 2045 இனிஷியேட்டிவ் என்ற திட்டத்தை உருவாக்கினார். மனிதர்களின் மூளையை ரோபோக்கள் கட்டுப்படுத்

செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம்- விக்டர் காமெஸி

படம்
AI: பயங்கள் ஏன் ? - விக்டர் காமெஸி செயற்கை நுண்ணறிவு என்பது எதிர்காலத்திற்கான டெக் நுட்பம் . ஏடிஎம்மில் பணம் ஒருவர் எடுத்தால் அதைக் கண்டறிவது , போக்குவரத்து நெரிசலை ஆப் மூலம் கண்டறிவது , இணையத்தில் வாங்கும் பொருட்களின் வரலாற்றைக் கொண்டு அடுத்து தேவையான பொருட்களை விளம்பரப்படுத்துவது , ரயில் பயணத்திற்கு புக் செய்தால் தாமதமாகும் ரயிலைக் குறிப்பிட்டு மெசேஜ் அனுப்புவது என தினசரி நாட்களை எளிமையாக்கும் தொழில்நுட்பம்தான் ஏஐ .  1950 ஆம் ஆண்டிலேயே கணினிகளால் யோசிக்க முடியுமா என்ற கேள்வியை ஆராய்ச்சியாளர் ஆலன் டூரிங் முன்வைத்தார் . பின்னர் 1956 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூ ஹாம்ஷையரில் ஆலன் நியூவெல் , ஹெர்மன் சைமன் , ஜான் மெக்கார்த்தி ஆகியோர் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆராய்ச்சியை தீவிரமாக தொடங்கிவைத்தனர் .  சைமன் மற்றும் நியூவெல் ஆகியோர் ஏஐ இயக்கத்திற்கான அடிப்படை தியரியை உருவாக்கினர் . இன்று ஐடி , வங்கி , சூப்பர் மார்க்கெட் , மருத்துவம் என பல்வேறு இடங்களிலும் ஏஐ செயல்பாட்டுக்கு வந்துள்ளது . எய்ம்ஸ் , ஐஐடி ஆகிய இடங்களில் நோயாளிகளின் டேட்டாவை சேகரிக்கும் வரை