இடுகைகள்

கடிதங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மூளையில் மின்னும் வலி!

படம்
  உணர்வெழுச்சி கொண்ட நாவல் ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . வீட்டில் அப்பாவும் அம்மாவும் நன்றாக இருக்கிறார்களா ? வேலை எப்படி போகிறது ? தாய் - என்ற ரஷ்ய எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கி எழுதிய நாவலைப் படித்தேன் . 1334 பக்கம் . தொழிலாளர்களின் போராட்டம்தான் கதையின் மையம் . பொதுமக்களிடம் புரட்சி பற்றி நீலவ்னா பாத்திரம் பேசுவது போல அமைந்த பகுதிகள் உணர்வெழுச்சியுடன் அமைந்துள்ளன . ஆகஸ்ட் மாதம் முதல் தினசரி இதழுக்கான வேலைகள் தொடங்கும் என நினைக்கிறேன் . அப்படித்தான் மேலிடம் கூறியிருக்கிறது . பார்ப்போம் . பதிப்பக வேலைகள் இழுத்துக்கொண்டே செல்கின்றன . இந்தளவு பதிப்பக வேலைகள் ஜவ்வாக இழுபடுவதை நான் எங்கும் பார்க்கவில்லை . அறையில் படுத்து தூங்க பாய் இன்னும் வாங்கவில்லை . பிளாஸ்டிக் பாய்தான் என்னுடைய விருப்பம் . சாதாரண பாய் வாங்கினால் , எளிதாக பூஞ்சைத் தாக்குதலுக்கு உள்ளாகிவிடுகிறது . தேவன் எழுதிய சின்னஞ்சிறு கதைகள் எனும் நூல் தொகுதியைப் படித்துக்கொண்டு இருக்கிறேன் . குறைவான விவரிப்புகளுடன் புன்னகையோடு படிக்கும் சிறுகதைத் தொகுதி இது . அன்பரசு 12.7.2021 மயிலாப்பூர் ------------------------------ மூ

கடித நூலை பதிவேற்ற செய்யமுடியாமல் தடுத்த அமேஸானின் அல்காரிதம்! - அமேஸான் அக்கப்போர் -1

படம்
  அமேஸானுடன் ஒரு அக்கப்போர்! அமேஸானில் இதுவரை பத்து மின்னூல்களை வெளியிட்டுள்ளேன். ஆனால் இதுவரை பெரிய பிரச்னை ஏதும் வந்தது கிடையாது. நூலில் பயன்படுத்துவது அனைத்தும் யுனிகோட் எழுத்துரு என்பதால் பிழைகளும் இருக்காது. அதாவது படிக்கும்போது பெட்டிபெட்டியாக வரும் பிரச்னையைச் சொல்லுகிறேன்.  இதுவரை அப்படி புகார் வந்ததில்லை. ஆனால் இப்போது அமேஸான் அப்படிப்பட்ட பிரச்னைகள் வருவதாக பயனர்கள் புகார் கொடுத்துள்ளனர். என பல பக்கங்களுக்கு ஒரு கோப்பைக் காட்டி அதிலுள்ள தவறுகளை திருத்துங்கள். பிறகு நூலை பதிவேற்றம் செய்யலாம் என நிபந்தனை விதிக்கிறது. இந்த சவாலைத் தாண்டுவதே கடினம். அப்படித் தாண்டினால் அடுத்துதான் அட்டைப்பட அக்கப்போர்கள் வரும். இதற்கு அடுத்ததாக உள்ளது, நூலின் அட்டைப்படம். பொதுவாக அட்டைப்படத்தை நான் ஜிம்பில் அல்லது போட்டோஷாப்பில் எல்லாம் செய்வது கிடையாது. அதற்கென கன்வா வலைத்தளம் உள்ளதே என ஒரு அசட்டு துணிச்சல். அதே துணிச்சல் தான் இதற்கு முன்னர் பயன்பட்டது. ஆனால் இந்த முறை டோல்கேட்டில் பணத்தை கேட்டு மிரட்டுவது போலாகி விட்டது நிலைமை. பத்தாயிரம் பிக்சல்களுக்குள் அட்டைப்படம் அடங்கவில்லை என அமேஸானின் அல

வெளியே வெயில், உள்ளே புழுக்கம்! - கடிதங்கள் - கதிரவன்

படம்
        இயற்கை நேசனின் அற்புத காட்சி அனுபவம் ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? சில நாட்களுக்கு முன்னர் வெயில் குறைந்தது போல தெரிந்தது .. இப்போது வெயில் மீண்டும் தன் இயல்பான நிலையில் சுட்டெரித்தது . ஒருமுறை சட்டை போட்டு மதியம் சாப்பிட் அறைக்கு சென்றாலே எனக்கு வியர்வையால் குளித்தது போல ஆகிவிடுகிறது . குங்குமம் தோழியில் வேலை பார்த்த அன்னம் அரசு இப்போது ஜூனியர் விகடன் இதழுக்கு ப் போய்விட்டார் . இந்த தகவலை நான் தாமதமாகவே தெரிந்துகொண்டேன் . நான் இந்த வாரமும் குங்குமம் இதழை வாங்கவில்லை . முன்பு போல அதன் கட்டுரைகள் சிறப்பாக இல்லை . உள்ளடக்க விஷயங்களில் தடுமாறுவது போல தோன்றியது . எங்கள் நாளிதழ் வேலைகளை ஓரளவுக்கு நிறைவு செய்துவிட்டேன் . ஜூலை மாதம் வரை எழுதிவைத்தாயிற்று . ஆகஸ்ட் மாத கட்டுரைகளை இனிமேல்தான் எழுதி தயாரித்து வைக்க வேண்டும் . இன்ஃபோகிராபி வேலைதான் அதிக நாட்களை இழுத்துக்கொள்ளும் என நினைக்கிறேன் . அதையும் அவ்வப்போது தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும் . வனவாசி - விபூதிபூஷன் பந்தோபாத்யாய நாவலைப் படித்தேன் . கோவையிலுள்ள விடியல் பதிப்பக வெளியீடு . கல்கத்

குமுதத்தை விற்பனை சிகரத்தில் ஏற்றிய எடிட்டர் எஸ்ஏபி! கடிதங்கள்- கதிரவன்

படம்
            மொழி எனும் தீராந்தி அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? நேற்று அநதிமழை இதழ் படித்தேன் . அதில் உடல் எடை பற்றிய கட்டுரைகளை வெளியிட்டிருந்தனர் . உடல் பருமன் என்பதை நாம் எப்படி பார்க்கவேண்டும் , பிறர் அதை எப்படி பார்க்கிறார்கள் என எழுதியிருந்தனர் . இதழை முழுமையாகப் பார்க்கும்போது சுமார்தான் . கழுதை மருத்துவர் ஒருவரின் பணி சார்ந்த அனுபவங்கள் வாசிக்க நன்றாக இருந்தது . நேற்று தீராநதி இதழைப் படிக்க நினைத்தேன் . அருகிலிருந்த கடைகள் எங்கிலும் இதழ் தீர்ந்துவிட்டது அல்லது இல்லை என்றே சொன்னார்கள் . பிறகு அலுவலக சகாவிடம் சொல்லி வாங்கினேன் . லாக்டௌனில் நின்றுபோன பத்திரிகை இப்போது மீண்டும் வருகிறது . இந்தியாவில் நிலவும் மொழிப்பிரச்னை பற்றி காந்தி பேசிய உரைகளைக் கொண்ட நூலை படித்துக்கொண்டு இருக்கிறேன் . இந்து , முஸ்லீம் ஒற்றுமைக்காக தேவநாகரி லிபியில் இந்தி படிக்க வலியுறுத்துகிறார் காந்தி . 30 பக்கங்களை படித்திருக்கிறேன் . வெயில் தாக்கம் இன்று சற்று குறைந்து காணப்படுகிறது . உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுங்கள் . நன்றி ! அன்பரசு 8.6.2022 மயிலாப்பூர் -------------

சதியின் இறுதி முடிவு - கடிதங்கள் - கதிரவன்

படம்
            தின்பண்ட நிர்பந்தம் ! அன்பிற்கினிய நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . இன்றும் நான் அலுவலகம் சென்றேன் . சற்று ரிலாக்சாக வேலை செய்ய சனிக்கிழமை உதவுகிறது . ஆனால் என்ன நான் வாங்கும் சில தின்பண்டங்களை டெய்லி கதிர் செக்யூரிட்டிகளிடம் பகிர்ந்து சாப்பிடும் நிர்பந்தம் உள்ளது . அவ்வளவுதான் . வரும் வாரத்தில் தொடங்கும் நாளிதழ் வேலைகள் மெல்ல சுணங்குவது போல தோன்றுகிறது . எழுதும் ஆட்களை கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது . நானே எழுதினால் அதுவெறும் செய்திக்கட்டுரை என்கிறார்கள் . பிறகு என்னதான் செய்வது என்றால் நம்மைப் பார்த்து கையை விரிக்கிறார்கள் . பிழைப்பு இப்படித்தான் ஓடுகிறது . வேர்ட் ஆப் ஹானர் என்ற வெப் தொடரைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் . மாண்டரின் மொழி தொடர் . எம்எக்ஸ் பிளேயரின் தமிழ்மொழிபெயர்ப்பு . தொன்மையான தற்காப்புக்கலை வல்லுநர்கள் ஆயுதக்கிடங்கு ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் . அதை பல்வேறு தனி மனிதர்கள் , தற்காப்புக்கலை மடங்கள் அடைய ஆசைப்படுகின்றன . அதை அடைந்தால் அவர்கள்தான் சீன நாட்டையே ஆளும் சக்தி பெறுவார்கள் . ஆயுதக்கிடங்கை அடையும் பேராசை மனிதர்களை எப்படி பாதிக