இடுகைகள்

கலாசாரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கலாசாரத்தை காக்கும் மனவாடுகள் ஸ்ரீனிவாச கல்யாணம்

படம்
ஸ்ரீனிவாச கல்யாணம் இயக்கம் - சதீஸ் வகீஸ்னா ஒளிப்பதிவு - சமீர் ரெட்டி இசை - மிக்கி ஜே மேயர் கலாசாரம், பாரம்பரியம் என வாழும் ஒருவரின் வாழ்க்கை. ஷெட்யூல் போட்டு வாழும் தொழிலதிபரோடு முட்டிக்கொண்டால் என்னாகும்? இதுதான் கதை. ஆஹா தெலுங்கு கலாசாரம் விரும்புவர்களுக்கான படம் இது. அனைத்து பிரச்னைகளையும் ஸ்ரீனிவாசன் பேசியே சமாளிக்கிறார். இதுவே நாயகி ஸ்ரீக்கு பிடித்தமானதாக இருக்கிறது. மேலும் அவரின் பெரிய குடும்பத்தோடு அவருக்கு இருக்கும் அப்டேட், ஸ்ரீக்கு ஸ்ரீனிவாசனின் மீது பொறாமையை ஏற்படுத்துகிறது. ஏனெனில் அவரது குடும்பம் தொழில், வருமானம் ஆகியவற்றுக்கு மட்டும் கைதட்டி மகிழும். இந்த வேறுபாட்டை நன்றாக விளக்கி எது வாழ்க்கை என்று சொல்லி இருக்கிறார்கள். படத்தை உறுத்தலின்றி நிதானமாக பார்க்கலாம். நிதின், ராசி கண்ணா, பிரகாஷ்ராஜ், ராஜேந்திர பிரசாத் நன்றாக நடித்திருக்கிறார்கள். ஐயையோ படம் மெதுவாகவே நடக்கிறது. ஸ்ரீனிவாச கல்யாணம் என்பதால் சடங்கு நடைபெறும் வேகத்தில் படத்தை அழைத்து சென்றால் எப்படி? கிராமம் என்றால் சாணி தட்டுவதை ஏன் காட்டுகிறார்கள் என்று தெரியவில்லை. நந்தி

2019 டிரெண்ட்ஸ் தொடருமா? பகுதி 2

படம்
நடப்பு ஆண்டில் தொடரும் விஷயங்கள் அடுத்த ஆண்டும் தொடருமா என்று உறுதி கூற முடியாது. 2019 ஆம் ஆண்டு மக்களை வசீகரித்து கவனித்த வைத்த அவர்கள் பின்பற்றிய பேசிய, ரசித்த விஷயங்கள் இவை. புது மெட்ரோ ரயில் மோகம் டிக்கெட் விற்கிறதோ இல்லையோ, மக்கள் ஏறுகிறார்களோ இல்லையோ, மேம்பாலங்களில் மெட்ரோ தன் பாட்டுக்கு போய்க்கொண்டே இருந்தன. சாதாரண ஐந்து ரூபாய் டிரெயின்களை தடாலென நிறுத்தியதால், மெட்ரோ ரயிலில் மக்கள் பயணிக்கும்படி நிர்பந்திக்கப்பட்டனர். எனவே மெட்ரோ ரயில் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கான முயற்சியில் வென்றுவிட்டது.  முதலில் இலவசமாகவும் பின்னர் காசு கொடுத்தும் செல்ல தமிழர்கள் பழகினர். சென்னை, கொச்சி, லக்னோ, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் மெட்ரோ கொடி பறந்தது. மனநலம் முக்கியம் இந்த ஆண்டு மனநலம் பற்றி பேசத்தொடங்கி திரியை பற்ற வைத்தது திருமதி தீபிகா படுகோன்தான். பின் அதனை மற்றவர்களும் பின்பற்றி, பிரஷர் ஜாஸ்திங்க என கமெண்டுகளை அள்ளித் தெளித்து அனுதாப வாக்குகளை அள்ளினர். பிட்காயின் பரிதாபம் ஆர்பிஐ, பிட்காயின் யூஸ் பண்றதைப் பார்த்தேன். பத்து ஆண்டுகள் சிறை தண்டனை என மிரட்டினாலும் அரசின் பிள

செக்ஸ், குழந்தை எதுவும் வேண்டாம் - தென்கொரியாவில் மாறும் நிலைமை

படம்
தென்கொரியாவில் 4 பி என்ற அமைப்பு புதிதாக உருவாகியுள்ளது. பெண்களுக்கான உரிமை கோரல்களுக்காக என்று நினைப்பீர்கள். அதற்காகவெல்லாம் கிடையாது. காதல், கல்யாணம், குழந்தை, குடும்பம் இதெல்லாம் வேண்டாம் என பிரசாரம் செய்யும் அமைப்பு அது. தொழில்நுட்பம் அங்கு சிறப்பாக இருந்தாலும் கலாசார மதிப்பில் அவர்களும் இந்தியர்களைப் போலத்தான். குடும்பம், திருமணம், குழந்தைகளைப் பராமரிப்பது, மாமியார் - மாமனார் இத்தியாதி என நீண்டுகொண்டே செல்லும் லிஸ்டுகளை மருமகள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். தற்போது தென் கொரியர்கள் அதிலும் பெண்கள் இத்தனை பொறுப்புகளை நாங்கள் ஏற்கணுமா என கொடி பிடிக்கத் தொடங்கியுள்ளனர்.  “திருமண மார்க்கெட்டில் பெண்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. நன்றாக படித்த பெண்களுக்கு மைனஸ் மார்க்குகளை ஆண்கள் போடுகிறார்கள். அவர்களுக்கு தங்களையும், குழந்தைகளையும், அவர்களின் வயதான பெற்றோர்களையும் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று கூறுகின்றனர். இதனால்தான் பெண்கள் தற்போது திருமணத்தை தவிர்க்கத் தொடங்கியுள்ளனர்” என்கிறார் போனி லீ என்ற பெண்மணி. 4 பி எனும் இந்த இயக்கத்தை தற்போது 4 ஆயிரம் பேர் பின்பற்றி வருகின்றனர்

ஓகே பூமர் சொல்லலாமா? - பெருசுக்கும் சிறுசுக்கும் லடாய் மூளுகிறது!

படம்
தொண்ணூறுகளுக்குப்பிறகு பிறந்தவர்களுக்கும், அறுபதுகளில், எண்பதுகளில் பிறந்தவர்களுக்கும் சண்டை தொடங்கிவிட்டது. இப்பிரச்னை தலைமுறை சிக்கலாக குடும்பங்களில் முன்னர் இருந்து வந்தது. இன்று தெருவுக்கும் வந்துவிட்டது. சிறிய வார்த்தைதான். ஓகே பூமர் என்ற வார்த்தை நேரடியாக அனைத்து வயதானவர்களுக்கும் எதிராக சொல்லப்பட்டு வருகிறது. பேபி பூமர்கள் இப்படி வார்த்தை ஆயுதம் எடுத்ததால், வயதான ஆட்கள் என்ன சொல்வதென்று பதறி நழுவி வருகிறார்கள். உங்களுக்கு வயசாச்சு என்று கூறுவதை இப்படி சொல்லுகிறார்கள் என மூத்த தலைமுறைக்கும் , நவீன தலைமுறைக்கும் லடாய் நீடிக்கிறது. பொதுஇடங்களில் டிவிகளில் சொல்வது வேறு. அதுவும் ஆபீஸ்களில் சொல்லிவிட்டால் என்னாவது? அண்மையில் நியூசிலாந்து சட்ட வல்லுநர் சூழல் வெப்பமயமாதல் பற்றி மசோதா பற்றி பேசத் தொடங்கினார். ஆனால் அவரது வாதத்தை மூத்த அதிகாரி இடைமறித்து பேசினார். உடனே ஆவேசமான இளையவர் ஓகே பூமர் சொல்லிப்பேச சங்கடம் உருவானது. ஓகே பூமர் என்ற சொல்லைப் பேசினால் சட்டப்படி குற்றம் என்று இன்னும் அரசு கூறவில்லை. வயது ரீதியான தீண்டாமை என்பதைத் தடுக்க வெளிநாடுகளில் சட்டம் உள்ளது. இ

கலைச்செல்வத்தை அரசிடம் சேர்க்கும் ஜோன்ஸ் - இந்தியானா ஜோன்ஸ் 4!

படம்
இந்தியானா ஜோன்ஸ்! 1981 ஆம் ஆண்டு வெளியான தி ரெய்டர்ஸ் ஆப் தி லாஸ்ட் ஆர்க், இந்தியானா ஜோன்ஸ் பிரிவில் வந்த முதல் படம். ஜார்ஜ் லூகாஸ் எழுதிய கதையை ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கினார்.   Raiders of the Lost Ark   இந்த படம் அமெரிக்கா, நேபாளம் தொடங்கி எகிப்துக்குச் சென்று முடிகிறது. நேபாளத்தில் மதுபானக்கடை வைத்திருப்பவர், ஜோன்ஸின் முன்னாள் காதலி. அவரிடம் ஒரு பதக்கம் இருக்கிறது. அவர் தந்தையிடமிருந்து மகளுக்கு வந்த அகழாய்வு சேமிப்பு.  அதை ஜோன்ஸ் கேட்கிறார். காதலி அதை தரமாட்டேன் என்று கூறி அதனோடு தானும் ஜோன்சுடன் புறப்படுகிறார். இவருக்கு 2008 ஆம் ஆண்டு கிரிஸ்டல் ஸ்கல் படத்தில் ஜோன்சுடன் திருமணம் நடைபெறுகிற தகவல் கொசுறாக சொல்லி விடுகிறோம். லாஸ்ட் ஆர்க் என்பது ஒரு சவப்பெட்டி. அதிலுள்ள பொக்கிஷங்களை அடைவதே நாசி ஆட்களின் லட்சியம். ஆனால் அது எப்படி விபரீத விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதுதான் கதை. ஏறத்தாழ இந்த படம் தொடங்கி அனைத்து படங்களிலும் நாசிக்கள்தான் வில்லன்கள். எப்படி? படத்தின் கதை 1931 ஆம் ஆண்டு நடக்கிறது என்பதுதான் காரணம். படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்ற காரணத்திற்

ஆபத்தான உணவுக் கலாசாரம்! - நூடுல்ஸ் கலவரம்!

படம்
ஆம். படத்தில் இருப்பது உண்மை. என்ன உடனே நாம் ஒத்துக்கொள்ள மாட்டோம். இந்தியர்கள் பொதுவாக தின்பண்டப் பிரியர்கள். தின்பதில் வஞ்சனை இல்லாத ஆட்கள். நான் 2 ஸ்டேட்ஸ் நூலில் தமிழர்களின் அரசியலோடு பஞ்சாபியர்களின் பால் பொருட்களின் மீதான  பாசத்தையும் எழுதியிருப்பேன். காரணம், உணவுதானே நம் உடலாகிறது. அதனை எப்படி பேசாமல் இருப்பது எழுதாமல் இருப்பது? 2015 ஆம் ஆண்டு மே மாதம் சுவிட்சர்லாந்து நிறுவனமான மேகி நூடுல்ஸ் மீது கடும் குற்றச்சாட்டு ஏவப்பட்டது. அதில் நூடுல்ஸில் காரீயம் அதிகமாக இருப்பதாக கூறப்பட்டது. அப்புறம் என்ன? அதைப் பயன்படுத்திக்கொண்டது பதஞ்சலி நிறுவனம்.  இந்த நேரத்தில் ராம்தேவ் தொடங்கிய பதஞ்சலி நிறுவனம் பூதாகரமாக சுதேசி வியாபாரத்தை தொடங்கியது. தேசிய உணர்ச்சி பொங்கியவர்கள் பதஞ்சலியைப் பின்தொடர்ந்தனர். பின் அதன் தரத்தைப் பார்த்து திகைத்தவர்கள் தானாகவே பன்னாட்டு நிறுவனத்திற்கு திரும்பினர். பேச்சுலர்களின் முக்கியமான உணவான மேகி நூடுல்ஸ் இந்த இடைப்பட்ட காலத்தில் நிறைய வாடிக்கையாளர்களை இழந்தது.  சுதேசி நிறுவனமான பதஞ்சலி,  கோமாதா சோப் என பசுவின் கோமியத்தில்  சோப்பு தயாரித

காமிக்ஸ் எழுத்தாளர் ஆலன் மூர் ஓய்வு - டிசி காமிக்ஸ் சாதனையாளர்.

படம்
டிசி காமிக்ஸ் மேட் இதழை நிறுத்துவது பற்றிய செய்தியைப் படித்திருப்பீர்கள். அதோடு வரவேற்பு குறைந்த தால் வயது வந்தோருக்கான வெர்டிகோ எனும் காமிக்சையும் அடுத்து டிசி காமிக்ஸ் நிறுத்தவிருக்கிறது. முக்கியமானது காமிக்ஸ் இல்லாமல் போவது அல்ல. வாட்ச்மேன்(1987), வி ஃபார் வென்டெட்டா(1989) உள்ளிட்ட காமிக்ஸ்களை எழுதிய எழுத்தாளர் ஆலன் மூர் விரைவில் ஓய்வு பெறவிருக்கிறார். 2016 ஆம் ஆண்டு லீக் ஆப் தி எக்ஸ்ட்ராடினரி ஜென்டில்மேன் எனும் காமிக்ஸின் நான்காவது பாகத்தை எழுதியவர், இனி எழுதுவதற்கு எனக்கு ஏதுமில்லை. ஏறத்தாழ என்னால் என்ன செய்ய முடியுமோ அந்த விஷயங்களை நான் செய்துவிட்டேன் என்று தி கார்டியன் பத்திரிகையில் கூறியிருந்தார். டிசி நாயகர்கள் சற்று மனிதர்களோடு புழங்கும்படி மனித த்தன்மையோடு இருந்தனர். மேலும் இவரது படத்தின் எதிர் நாயகர்களும் அப்படியே. இந்த வேறுபாட்டை தொண்ணூறுகளிலிருந்து மூரின் படைப்புகளில் உணரலாம். இவர் காலத்தில் எழுதி வந்த கைமன், மோரிசன் ஆகியோரோடு ஒப்பிடும் போது வேறுபாட்டை எளிதாக உணர முடியும்.   1982 - 85 இல் மிராக்கிள்மேன் என்ற காமிக்ஸ் கதைத் தொகுதியைத் தொடங்கினார் மூர். இதில்

பரவும் 3டி துப்பாக்கி!

படம்
இணையத்தில் 3டி துப்பாக்கியின் ப்ளூபிரிண்ட் கிடைப்பது உங்களுக்குத் தெரியும். தற்போது இணையத்தில் துப்பாக்கிகளை உருவாக்குவது, அதற்கான உதவிகளை வழங்குவது வரையில் தனித்தனி குழுவாக  இயங்கி வருகின்றனர். அரசு எங்களைப் பிடிக்க முடியாது. எங்கள் பெயரை நாங்கள் வெளியிடமாட்டோம். இங்கே பாருங்கள். துப்பாக்கி வைத்துக்கொள்வது தனிநபர் உரிமை. நீங்கள் எப்படி இதில் தலையிட முடியும்? என்கிறார் இவான் எனகிற இணையப்போராளி. அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருப்பதை அரசு கண்டுகொள்ளாது. காரணம், சட்டப்படி அது தவறு கிடையாது. எனவே, வீட்டுக்கு ஒரு ரைபிளேனும் வைத்திருப்பார்கள். ஆனால் 3 டி துப்பாக்கிகளை வாங்குவது அப்படியல்ல. மேலும் துப்பாக்கிக்கான உரிமை என்பது உண்டு. 3டி துப்பாக்கிகளை யார் வேண்டுமானாலும் எடுத்து புழங்கலாம் என்பது ஆபத்துதானே? இணையத்தில் 3டி துப்பாக்கி என்று தேடினால் ஐந்து நொடிகளில் உங்களுக்கு துப்பாக்கியின் கேட் கோப்பு கையில் கிடைக்கும். உடனே, சூதானமாக 3டி பிரிண்டரை ஆர்டர் செய்தால் நீங்கள் துப்பாக்கியை உங்கள் கண்முன்னே தயார் செய்துகொள்ளலாம். நன்றி: ஃப்யூச்சரிசம்

போர்டு விளையாட்டு கலாசாரம்- சூடுபிடிப்பதன் காரணம்

படம்
போர்டு கேம் விளையாட்டில் கற்றுக்கொள்ளவேண்டியது என்ன? இன்டோர் விளையாட்டுதான். ஆனால் அதிலும் பல்வேறு திறன்களைச் சொல்லித்தரத்தொடங்கியுள்ளன போர்டு கேம் விளையாட்டுகளுக்கான கஃபேக்கள். இதில் என்ன கற்றுக்கொள்ளலாம்? டெப்ட்ஸில்லா என்ற விளையாட்டு கடன் எப்படி வளருகிறது என்பதை விளையாடுபவர்களுக்கு விளக்குகிறது. கடன், வட்டி ஆகியவற்றினையும் தெளிவாக காட்டுகிறது. வட்டி எப்படி வளர்ந்து சிக்கலாக மாறுகிறது என்பதைக் காட்டுகிறது. டிவியில் கேம் ஆப் த்ரோன்ஸ் பீக்கில் இருக்கும்போது மயிலாப்பூரில் போர்ட் கேம்களுக்கான கபேயை மென்பொருள் பொறியாளர்கள் மூவர் இணைந்து தொடங்கியிருக்கின்றனர். வருண் தேவநாதன், ஸ்ரீராம் மகாலிங்கம், ஷ்ரவண் சந்தோஷ் ஆகியோர்தான் இந்த டிரெண்டை மயிலாப்பூரில் அமுல்படுத்தியிருப்பவர்கள். தொண்ணூறுகளில் உலகில் போர்டு கேம்களில் மாற்றம் தொடங்கியது. இதில் பல்வேறு ஐடியாக்களுடன் போர்டு கேம்கள் புதிதாக ஐரோப்பாவில் ரீஎன்ட்ரியாகி மக்களைக் கவர்ந்தன. வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் இந்தியாவுக்கு வரும்போது கொண்டு வந்த போர்டு கேம்களில் செட்லர்ஸ் ஆப் கேட்டன், சிட்டாடெல், புவர்ட்டோ ரிகோ ஆகியவை முக்கியமான

ஹை ஃபைவ் வரலாறு அறிவோமா?

படம்
ஹை ஃபைவ் செய்யுங்க ! 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்றாவது வியாழக்கிழமை தேசிய ஹை ஃபைவ் தினமாக கொண்டாடப்படுகிறது . 24 மணிநேரம் பிறருக்கு உதவிகளை செய்வதுதான் இத்தினத்தின் நோக்கம் . வர்ஜீனியா பல்கலைக்கழக மாணவர்கள் இத்தினத்தில் நன்கொடை சேகரித்து நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறார்கள் . கையை பிறரின் கையோடு உற்சாகமாக தட்டிக்கொடுப்பது தனிப்பட்ட சாதனைக்கான பாராட்டு . விளையாட்டு வழியே இது உலகெங்கும் பரவலானது . ஹை ஃபைவ் கலாசாரத்தை 1977 ஆம் ஆண்டு கிளென் புர்கே என்ற என்ற பேஸ்பால் வீரர் தொடங்கி வைத்தார் என்றும் , லூயிஸ்வில்லே பேஸ்பால் டீம் தொடங்கியதாகவும் கூறுகிறார்கள் . இதனை ஜாஸ் இசைக்கலைஞர்கள் அல் ஜோல்சன் , கேப் கலோவே , ஆண்ட்ரூ சிஸ்டர்ஸ் ஆகியோர் பிரபலப்படுத்தினர் .