இடுகைகள்

காலநிலை மாற்றம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காலநிலை மாற்ற விளைவுகளை எதிர்கொள்வது எப்படி?

படம்
  சூரிய வெப்பம் அதிகரித்து வரும் மாதம் இது. அதிகரிக்கும் வெப்பம் எதிர்காலத்தில் குறைய வாய்ப்பில்லை. அந்தளவு உலகம் முழுக்க மாசுபாட்டை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் பெருகிவிட்டன. மாசுபாட்டைக் குறைப்பதாக பேசினாலும், அதன் பின்னணியில் மாசுபாட்டை ஏற்படுத்தும் தொழில்நிறுவனங்களை பாதுகாக்கும் முயற்சியே நடைபெற்று வருகிறது. இந்தியா மட்டுமல்ல, மேற்கு நாடுகளிலும் இதுதான் நிலைமை. 2021ஆம் ஆண்டு ஐ.நாவில் கார்பன் மாசுபாட்டை குறைக்கும் திட்டத்தில் 193 நாடுகளில்   24 நாடுகள் மட்டுமே தெளிவான மாசு கட்டுப்பாட்டுத் திட்டத்தை சமர்ப்பித்தன. இப்படி திட்டங்களை கூறிய நாடுகள் அதை சரியாக செயல்படுத்துமா, இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், இதுபற்றிய எண்ணமே இல்லாமல் உள்ள நாடுகள்தான் கவலையை அதிகரிக்கின்றன. காலநிலை மாற்றத்தின் காரணமாக வெப்ப அலை, மழைப்பொழிவு குறைதல் ஆகியவற்றை பிற நாடுகளை விட இந்தியா அதிகம் சந்திக்கப்போவதாக தட்பவெப்பநிலை ஆய்வாளர்கள் தகவல் கூறுகிறார்கள். அரசு, இதுதொடர்பாக செய்யும் விஷயங்களை விட தனியார் நிறுவனங்கள் பரவாயில்லை ரகத்தில் இயங்கி வருகிறார்கள்.   ரீநியூ என்ற மறுசுழற்சி நிறுவனம்   இந்தியாவில் ப

விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வருவதற்கான காரணங்கள், தீர்வுகள்!

படம்
  விவசாயிகளின் தற்கொலை, காரணங்கள், தீர்வுகள் இந்தியாவில், எழுபது சதவீத மக்கள் வேளாண்மையை நேரடியாக அல்லது மறைமுகமாக சார்ந்து உள்ளனர். ஆனால், அதிகரித்து வரும் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை கவலையளிக்கும்படி உள்ளது. 2013ஆம் ஆண்டு தொடங்கி 2021ஆம் ஆண்டு வரையில் ஆண்டுதோறும் 12 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்து வருகின்றனர். தற்கொலை மரணங்களில் விவசாயிகளின் அளவு 10 சதவீதமாக உள்ளது. வருவாய் மேம்பாடு, சமூக பாதுகாப்பு ஆகிய அம்சங்களை மத்திய அரசு ஏற்படுத்திக் கொடுத்தால் நிலைமை மாறலாம். (TOI) விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்து வருவது உண்மை. அவர்கள் இறப்பதற்கு என்ன காரணங்கள் என்று பார்ப்போம். இந்தியாவில் உள்ள ஏழு மாநிலங்களில் வேளாண்மைத்துறை, அத்துறை சார்ந்த விவசாய தொழிலாளர்கள் என 87.5 சதவீதம் பேர் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலை அதிகமாக உள்ளது. சிறு,குறு ஏழை விவசாயிகள் பெருமளவில் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். தற்கொலை செய்

காலநிலையைக் கட்டுப்படுத்தும் மனித முயற்சிகள் - மேக விதைப்பு, மேக வெளுப்பு

படம்
    காலநிலையை மனிதர்களால் கட்டுப்படுத்த முடியுமா?   உலக நாடுகளில் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு 800 கோடியை உலகம் எட்டிவிட்டது. இதில் முதலிடம் சீனா, என்றால் அடுத்தது இந்தியாதான். ஒப்பீட்டளவில் சீனாவின் மனிதவளம் பெற்ற பொருளாதார வளர்ச்சியை இரண்டாவது இடத்தில் இருந்தால் இந்தியா பெற முடியவில்லை. இதற்கு தொலைநோக்கு இல்லாத தலைவர்கள் நாட்டை வழிநடத்துவதுதான் என்பதை தனியாக சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மக்களுக்கான இயற்கை வளங்கள் நீர், நிலம், உணவு என அனைத்துமே குறைந்து வருகிறது. இதை சரிசெய்ய இயற்கை நிகழ்வுகளை புரிந்துகொள்வது அல்லது அதை கட்டுப்படுத்துவது என இரு வழிகள் இருக்கின்றன. அதைப்பற்றித்தான் நாம் இப்போது படிக்கப் போகிறோம். இப்போது நிறைய மாநிலங்களில் அதிகமாக மழை பெய்வது, சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருந்தும் பருவமிருந்தும் கூட மழை பெய்வதே இல்லை. இந்த பிரச்னையை க்ளவுட் சீடிங் முறையில் தீர்க்க முடியும். இதற்கான சோதனை 1946ஆம் ஆண்டே நடைபெற்றது. செயற்கையாக மழை பொழிய வைக்கும் முயற்சி தேவையா என்றால், மழை பொழிவு மட்டுமே இயற்கையாக மண்ணில் உள்ள ஆற்றலை, விதைகளை முளைக்கும் திறன

உலக நாடுகளில் காலநிலை மாற்றத்தில் ஏற்படும் விளைவுகள்!

படம்
  உலகமெங்கும் மாறும் காலநிலை!  ஆண்டுதோறும் ஜப்பானின் ஒகினாவா நகரில், வசந்தகாலத்தின் போது செர்ரி மரங்கள் பூத்துக்குலுங்கும். பூக்கள் மெல்ல மலர்வது ஒகினாவாவில் தொடங்கி டோக்கியோ நகரம் வரை நீளும். அந்நாட்டில் மலர்ந்த பூக்களைக்  காண்பதை ஹனாமி (Hanami festival)என்ற பெயரில் விழாவாக கொண்டாடுகின்றனர். ஜப்பானில், மார்ச் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை  செர்ரி பூக்கள் மலர்ந்து வந்தன. ஆனால், கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதியே, ஜப்பானின் கியோட்டோ நகரில் செர்ரி பூக்கள் முழுமையாக மலர்ந்துவிட்டன. இப்படி பூக்கள் வேகமாக மலர, காலநிலை மாற்றமே காரணம். பருவகாலங்களில் மாற்றம் ஏற்படுவது, உயிரினங்களின் வாழ்விலும் பாதிப்பை ஏற்படுத்தும்.  “சூழலின் இசைவு நிலைக்கு, காலம் முக்கியமான காரணி” என்றார் கென்யாவிலுள்ள  ஐ.நா. சூழல் திட்டத்தைச் (UNEP) சேர்ந்த மார்டென் கப்பெல்லெ.   தாவரங்கள், பறவைகள் ஆகியவற்றின் சூழல் பங்களிப்பு பற்றிய அறிவியல் ஆய்வுகளுக்கு பினாலஜி (Phenology) என்று பெயர். 1853ஆம் ஆண்டு பெல்ஜியம் நாட்டு தாவரவியலாளர் சார்லஸ் மோரென் (Charles morren), பினாலஜி என்ற வார்த்தையை முதன்முறையாக அறிமுகம் செய்தார். பின்னாள

சூழல் பற்றிய விழிப்புணர்வால் மக்கள் பயன் பெறுவார்கள்! பிரபு பிங்காலி, பொருளாதார பேராசிரியர்

படம்
  சூழலில் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்குத் தேவை! பிரபு பிங்காலி, அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்துத் துறை மற்றும் பொருளாதாரத்துறை பேராசிரியராகப் பணியாற்றுகிறார். புது டில்லியில் இயங்கும் டாடா கார்னெல் வேளாண்மை மற்றும் ஊட்டச்சத்து ஆராய்ச்சிக்கழகத்தின் நிறுவனத் தலைவராக உள்ளார்.  உணவு அமைப்பு முறைகளைப் பற்றி ஆராய்ந்து வருகிறீர்கள். உங்களை ஆச்சரியப்படுத்தியது எது? வேளாண்மையில்  உணவு உற்பத்தி, விளைபொருளை விவசாயிகளிடமிருந்து பெறுவது, வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது பற்றியும் கவனம் செலுத்தவேண்டும். இதில், நாம்  போதிய கவனம் செலுத்துவதில்லை. விவசாயி, விளைபொருள், விற்கும் சந்தை, உணவுப்பொருட்களுக்கான தேவை, நகரங்களின் உணவு நுகர்வு, உணவின் தரம், ஊட்டச்சத்துகள் என உணவு அமைப்பு முறை, ஏராளமான அம்சங்களைக் கொண்டுள்ளது.  காலநிலை மாற்றங்களால் இந்தியா எப்படிப்பட்ட பாதிப்புகளை எதிர்கொள்ளவிருக்கிறது? வங்கம் - பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தான் நெல், கோதுமை ஆகிய பயிர்கள் அதிகளவு விளைவிக்கப்படுகின்றன. உத்தரப் பிரதேசம், பீகார் என சென்றால், அங்குள்ள கிராமங்களின் வறுமையையும் அறியலாம். வெப்பமயமாதல்

பழமரங்களைத் தேடி பசியில் அலைந்து தவிக்கும் யானைகள்! - ஆப்பிரிக்க சூழல் அவலக் கதை

படம்
  பசியோ பசி! - ஆப்பிரிக்க யானைகளின் அவலநிலை மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது, காபோன் நாடு. இங்குள்ள லோப் தேசியப்பூங்கா  4,921 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இப்பகுதி, 1946ஆம் ஆண்டு நாட்டின் முதல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. இப்பூங்காவிலுள்ள பருவ மழைக்காட்டில் அதிக எண்ணிக்கையிலான காட்டு யானைகள் வாழ்கின்றன.  காலநிலை மாற்றத்தால் வெப்பம் அதிகரித்து வருவதால், யானையின் முக்கிய உணவான பழங்கள் கிடைப்பது குறைந்துவிட்டது. இதனால், வேறுவழியில்லாத யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை சாப்பிட்டு பசியைத் தீர்த்துக்கொள்கின்றன.  உலகளவில், ஆப்பிரிக்காவில், மட்டுமே 70 சதவீத யானைகள் வாழ்கின்றன. ஆப்பிரிக்க சாவன்னா யானைகளை விட, காபோன் பருவ மழைக்காடுகளில் வாழும் யானைகள் அளவில் சிறியவை. இந்த யானைகளின் எண்ணிக்கையும் பத்தாண்டுகளுக்கு மேல் தொடரும் வேட்டைகளால் குறைந்து வருகிறது. இம்மழைக்காடுகளில் உள்ள பெரும்பாலான மரங்கள், யானைகளின் சாணத்தினால் முளைத்தவைதான். காடுகளிலுள்ள சிலவகை பழங்களை யானைகளை தவிர  பிற விலங்கினங்கள் உண்டு செரிமானம் செய்யமுடியாது. இயற்கையாகவே பழங்கள் அவ்வாறு அமைந்துள்ளன.

பூமிக்கு நுண்ணுயிரிகள் அவசியம்! - ராபர்ட்டோ கோல்ட்டர்

படம்
  நேர்காணல் ராபர்ட்டோ கோல்ட்டர் அமெரிக்காவிலுள்ள நுண்ணுயிரியல் துறையில் பேராசிரியராக பணிபுரிகிறார். மனிதர்களின் வாழ்க்கை, சூழலின் பல்லுயிர்த்தன்மைக்கு நுண்ணுயிரிகளின் பங்கு பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார்.  பூமியிலுள்ள உயிரினங்களுக்கு நுண்ணுயிரிகள் எதற்கு அத்தியாவசியம் என்று கூறுகிறீர்கள்? நமது பூமி இயங்கும் செயல்பாட்டிற்கு, நுண்ணுயிரிகள் பங்களிப்பு முக்கியம். நுண்ணுயிரிகள் இல்லாத சூழலில் தாவரங்கள், விலங்குகள், மனிதர்களின் பரிணாம வளர்ச்சியும் வாழ்கைகயும் பூமியில் சாத்தியமாகி இருக்காது. கடலில் ஆக்சிஜன் உற்பத்தியாக நுண்ணுயிரிகள் உதவுகின்றன. உயிரினங்களின் வாழ்வுக்கு முக்கியமான சல்பர், நைட்ரஜன் ஆகிய வேதிப்பொருட்களை நுண்ணுயிரிகள்தான் தயாரிக்கின்றன. தாவரங்களின் ஒளிச்சேர்க்கை, பயிர்கள் மண்ணில் விளைய என அனைத்து முக்கிய நடவடிக்கையிலும் நுண்ணுயிரிகளின் பங்கு உள்ளது.  மனிதர்களுக்கு நுண்ணுயிரிகளின் உதவி தேவையா? பூமியிலுள்ள பல்வேறு உயிரினங்கள் ஒன்றையொன்று சார்ந்தும் , தொடர்புகொண்டும் தான் இயங்குகின்றன. இந்த வகையில் நம் உடலிலுள்ள தோல், நுண்ணுயிரிகளோடு தொடர்புகொண்டுதான் உள்ளது. அதேபோல, வயிற்றின் குட

மக்கள் தொகைக்கும், காலநிலை மாற்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை! - டெட் நார்தஸ்

படம்
  மொழிபெயர்ப்பு நேர்காணல் டெட் நார்தஸ் ( Ted Nordhaus ) நிறுவனர் பிரேக்த்ரோ இன்ஸ்டிடியூட்  சூழலியலாளர்கள், காலநிலை மாற்ற அபாயத்தைத் தவிர்க்க மக்கள்தொகை கட்டுப்பாடு அவசியம் என்று கூறுகிறார்களே? மக்கள்தொகை அதிகரிப்பு என்பது மறைமுகமாக பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கிறது. அதனைக் குறைப்பது என்பது தவறானது. கிராமத்தில் வறுமையில் வாழ்ந்த மக்கள் இன்று நகருக்கு புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். இந்த மாற்றம் காலப்போக்கில் இயல்பாக நடந்தது. ஏழை மக்களின் பிள்ளைகளுக்கும் கல்வி கிடைக்கிறது. அவர்கள் வேலையைத் தேடிக்கொண்டு நலமாக வாழ்கிறார்கள். தேவையான உணவுகளைச் சாப்பிடுகிறார்கள். இது சமூக மேல்தட்டினருக்கு பிடிக்காமல், மக்கள்தொகை கட்டுப்பாடு, வெப்பம் அதிகரிப்பு என பேசிக்கொண்டிருக்கிறார்கள். சூழலியலாளர்களில் பெரும்பாலானோர் வசதியானர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.  சூழல் மாதிரிகள் பற்றிய உங்கள் கருத்து? சூழல் அறிவியலாளர்கள், சூழல் மாதிரிகளை தொடர்ச்சியாக உருவாக்கி வருகிறார்கள். ஆனால் அவை எவையும் துல்லியமாக வெப்பநிலை அதிகரிப்பதை நமக்கு காட்டவில்லை. அப்படி அவை காட்டினாலும், கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் பொருளாதார செ

காலநிலை மாற்றத்திற்கேற்ப பழக்கவழக்கங்கள் மாறும் விலங்குகள்!

படம்
  காலநிலை மாற்றத்திற்கேற்ப மாறும் விலங்குகள்! உலகமெங்கும் வெப்பநிலை அதிகரிப்பது,வறட்சி, மழைப்பொழிவு கூடி வெள்ள பாதிப்பு ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கேற்ப விலங்குகளும் தம்மை மாற்றிக்கொண்டு வருகின்றன. அப்படி மாறிய சில விலங்குகளைப் பார்ப்போம்.  சில்லென்ற பாறைக்குகை முயல் போன்ற தோற்றத்தில் பழுப்புநிறம் கொண்ட விலங்கு, பிகா (Pika). அமெரிக்காவின் பசிபிக் கடல்பகுதியின் மேற்குப்புறத்தில் உள்ள பாறைகளில் வாழ்கிறது. பிகா வசிக்கும் பாறைத்திட்டிற்கு டாலுசஸ் (Taluses)என்று பெயர். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள சற்று உயரமான பாறைப்பகுதிக்கு சென்றுவிட்டது என ஆராய்ச்சியாளர்கள் அறிந்துள்ளனர். இவை,  தனது வாழிடத்திலிருந்து வெளிவருவது உணவிற்கான புற்களையும், காட்டுப் பூக்களையும் சேகரிக்க மட்டுமே. பிகா, தனக்குத் தேவையான உணவுகளை முன்பே சேகரித்து குவித்து வைத்துக்கொள்கிறது. இதை சூழலியலாளர்கள் வைக்கோல் (Haystakes) என அழைக்கிறார்கள். வெளியில் உள்ளதை விட பிகாவின் குகை 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் கூடுதலாக உள்ளது. வாழுமிடத்தில்,  உணவு எளிதாக கிடைப்பதால் இதனையும் சமாளித்து வாழ்கிறது இச்சிறுவிலங்

அறிவியல் பிட்ஸ் - 2070ஆம் ஆண்டில் காணாமல் போகும் கள்ளி!

படம்
  2070ஆம் ஆண்டில் அழியும் கள்ளி! வெப்பம் அதிகமுள்ள நிலப்பரப்பில் கள்ளி வகை தாவரங்கள் வாழ்வது நாம் அறிந்ததுதான். அண்மையில், அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செய்த ஆய்வில், கள்ளிகள் கூட வெப்பம் அதிகரித்து வந்தால் அழிந்துவிடும் என கூறியுள்ளனர். உலகிலுள்ள 60 சதவீத கள்ளி இன தாவரங்கள் 2070ஆம் ஆண்டுக்குள் 90 சதவீதம் அழிந்துவிடும் என மதிப்பிட்டுள்ளனர். இதுபற்றிய ஆய்வு நேச்சர் பிளான்ட்ஸ் இதழில் வெளியாகியுள்ளது. இதுபற்றிய ஆராய்ச்சியில் 400க்கும் அதிகமான தாவர மாதிரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.  அமெரிக்கா, மெக்சிகோ, பிரேசில் அட்லாண்டிக் காடுகள் என பல்வேறு சூழல்களில் கள்ளி இன தாவரங்கள் வாழ்கின்றன. இப்பகுதிகளில் 1,500க்கும் மேற்பட்ட இனத்தைச் சேர்ந்த கள்ளிகள் காணப்படுகின்றன. விளைச்சல் நிலங்கள் அதிகரிப்பு, நிலத்தின் வளம் இழப்பு, பல்லுயிர்த்தன்மை இழப்பு ஆகியவை கள்ளி அழிவிற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.  “நாங்கள் செய்த ஆராய்ச்சியில் கள்ளி இன தாவரங்கள் 60 முதல் 90 சதவீதம் அழிய வாய்ப்புள்ளது. இதற்கு காலநிலை மாற்றம் முக்கியமான காரணமாக உள்ளது” என அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் மிச்செல் பைலட் க

ஆப்பிரிக்காவில் உருவாக்கப்பட்ட பசுமைச் சுவர்!

படம்
  ஆப்பிரிக்காவின் பசுமைச்சுவர்!  ஆப்பிரிக்காவில் கிரேட் கிரீன் வால் (Great green wall) என்ற திட்டத்தின்படி மரக்கன்றுகளை நட்டுள்ளனர். இத்திட்டப்படி, 8 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு மரக்கன்றுகளை நட்டு சகாரா பாலைவனம் அதிகரிப்பதை தடுக்கத் தொடங்கியுள்ளனர். இதன்மூலம் வடக்குப்பகுதி ஆப்பிரிக்காவின் தன்மையை மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.  2030க்குள் மரக்கன்றுகளை முழுமையாக நடுவது திட்டம். இதன்மூலம், சாஹேல் எனும் அப்பகுதியில் மழைபொழிவு கூடி, வெப்பம் குறையும் என சூழலியலாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். கடந்த ஆண்டு, டிசம்பரில் அமெரிக்க புவி இயற்பியல் மாநாடு நடைபெற்றது.  இதில், எதிர்காலத்தில் பாலைவனங்களில் வெப்பம் அதிகரிக்கும் என கூறப்பட்டது. பசுமை சுவர் திட்டம், வெப்பத்தை எளிதில் எதிர்கொள்ள உதவும்.   சகாராவை பசுமையாக்கும் திட்டம், மேற்கு ஆப்பிரிக்க பருவகாலங்களில் மாறுதல்களை ஏற்படுத்தும் என சூழல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். வடக்கு ஆப்பிரிக்காவில் குளிர் தொடங்கும் மாதங்களில் வெப்பமான வறண்ட காற்று வீசுகிறது. வடகிழக்கு  பகுதியில் இக்காலத்தில் ஈரப்பதமான காற்று வீசுகிறது. ”சூரியனின் கதிர்வீச்சு இந்த நிலப்பரப்பை தீவி

வினோதரச மஞ்சரி - சிவப்புநிற பனி, டைனோசர் தூக்கம்

படம்
  தெரியுமா? சிவப்புநிற பனி! துருவப்பகுதிகளில் உள்ள மலைகளில் சிவப்பு நிற பனியைப் பார்க்கலாம். இதற்கு வாட்டர்மெலன் ஸ்னோ (Watermelon snow) என்று பெயர். இந்த பனி உள்ள இடத்தில் பழவாசனையை உணரலாம். வாசனையை உணர்ந்து, ஆவலோடு உடனே பனியை எடுத்து சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு ஏற்படும்.  பனியின் சிவப்பு நிறத்திற்கு காரணம், அதிலுள்ள க்ளாமிடோமோனாஸ் நிவாலிஸ் (Chlamydomonas nivalis) என்ற பாசிதான். கோடைக்காலத்தில் பாசி தன்னை வெப்பத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள சிவப்பு நிறத்தை உற்பத்தி செய்கிறது. சிவப்புநிறத்திற்கு கரோட்டினாய்ட் வேதிப்பொருளே காரணம்.  க்ளாமிடோமோனாஸ் நிவாலிஸ் பாசி உருவாக்கும்  சிவப்பு நிறம் சூரிய ஒளியை பிரதிபலிக்கும் திறன் கொண்டதல்ல. இதன் காரணமாக, வெப்பத்திலிருந்து பாசி தன்னைக்காத்துக் கொண்டாலும் அங்குள்ள பனி உருகுவதை தடுக்க முடிவதில்லை.  டைனோசர் தூக்கம் டைனோசர் எப்படி தூங்கியிருக்கும்? தரையில்  அல்லது உட்கார்ந்தபடியே தூங்குமா என யோசித்தால் வினோதமாக இருக்கிறது. இதற்கு உறுதியான பதில்களை சொல்லுவது கடினம்.  12 கோடியே 50 லட்சம் ஆண்டுகள் தொன்மையான பறவைகளுக்கு நெருங்கிய தொடர்புகொண்ட உயிரின படிமம

மனிதர்களுக்கு தீங்கிழைக்கும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை சிறியது! - ராபர்டோ கோல்டர், பேராசிரியர்

படம்
  ராபர்ட்டோ கோல்ட்டர் நுண்ணுயிரியல் துறை, ஹார்வர்ட் பல்கலைக்கழகம் உங்களது ஆராய்ச்சியின் அடிப்படை எது? நான் பாக்டீரியா பற்றி 35 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறேன். அதாவது நான் ஓய்வு பெறுவதற்கு முன்பு வரை. மூலக்கூறுகளை ஆராய்ந்து எப்படி பல்வேறு அழுத்தங்களுக்கு எதிர்வினைகளை அளிக்கிறது என ஆய்வு செய்தோம். பாக்டீரியா பாசிகளோடு புரியும் வினைகள் பற்றிய எனது ஆர்வம் அதிகரித்து வந்தது. பூமியின் சல்பர் சுழற்சி மற்றும் காலநிலை மாற்றம், மேகம் உருவாகும் விதம் ஆகியவற்றில் பாக்டீரியாவின் பங்களிப்பு அதிகம்.  பூமியின் செயல்பாட்டிற்கு நுண்ணுயிரிகள் முக்கியமெனில் அதனை எப்படி காப்பாற்றுவது? நுண்ணுயிரிகளை தனியாக காப்பாற்றுவது என்பது எளிதல்ல. அதனை தனியாக சூழலில் விட்டாலே போதும். அதுவே சுயமாக வளர்ந்துகொள்ளும். நுண்ணுயிரிகளின் மீதான மனிதர்களின் செயல்பாடு, தாக்கம் குறைந்தாலே அவை பூமியில் சிறப்பாக இயங்கும்.  காலநிலை மாற்றம் நுண்ணுயிரிகளை பாதிக்கிறதா? ஆமாம். காலநிலை மாற்றத்தால் நுண்ணுயிரிகள் பாதிக்கப்படுவதை அறிவியல் ஆய்வுகள் ஆதாரத்தோடு விளக்கியுள்ளன. கடல் மற்றும் நிலப்பரப்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் நாம

காலநிலை மாற்றத்தை பற்றி புரிந்துகொள்ள வேண்டுமா? உங்களுக்காகவே இந்த நூல்கள் இதோ!

படம்
  காலநிலை மாற்றம் பற்றி வாசிக்க வேண்டிய நூல்கள் தி நியூ க்ளைமேட் வார் - தி ஃபைட் டு டேக் பேக் அவர் பிளானட் மைக்கேல் இ மன் காலநிலை மாற்ற வல்லுநர் மைக்கேல் இ மன், டோன்ட் லுக் அப் என்ற டிகாப்ரியோவின் பட பாத்திரம் போலவே இருக்கிறார். அதாவது நாயகனாக இருக்கிறார் என சொல்ல வருகிறோம். மைக்கேல், நடப்பு கால காலநிலை மாற்ற செயல்பாடுகள் எதை செய்தன எதை தவறவிட்டன என்பதை தெளிவாக விளக்குகிறார்.  தி அன் இன்ஹேபிட்டபிள் எர்த் டேவிட் வாலஸ் வெல்ஸ்  காலநிலை மாற்றம் பற்றிய பயத்தை ஏற்படுத்துகிற நூல் என இதனை தாராளமாக கூறலாம். இரண்டு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்தால் என்னவாகும் என்பதை துல்லியமாக விளக்கியிருக்கிறார் டேவிட். பயம்தானே நம்மை முன்கூட்டியே செயல்படத்தூண்டும். அந்த வகையில் காலநிலை மாற்றத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு செயல்பட டேவிட்டின் இந்த நூல் ஊக்கமாக அமையலாம்.  தி நட்மெக்ஸ் கர்ஸ் - பாரபிள்ஸ் ஃபார் எ பிளானட் இன் கிரிசிஸ்  அமிதவ் கோஷ் காலனிய காலம் தொடங்கி இன்றுவரை முதலாளித்துவ பொருளாதாரம் எப்படி இயற்கையை அழிக்கிறது என அமிதவ் கோஷ் விலாவாரியாக தகவல்களை சேகரித்து எழுதியிருக்கிறார். இதேபோல அமிதவ் எழுதிய தி