இடுகைகள்

ஜே கிருஷ்ணமூர்த்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நான், எனது என்ற சொற்களே வாழ்பனுவத்தை அழிப்பன - ஜே கிருஷ்ணமூர்த்தி

  சரியான கல்வி ஜே கிருஷ்ணமூர்த்தி நான், எனது என்ற சொற்களை ஒருவர் பயன்படுத்தும்போது அவர் சுயத்துடன் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொள்கிறார். இந்த நிலையில் ஒருவரின் மனம் சுதந்திரமாக இயங்குதில்லை. அவர் பெறும் அனுபவங்களும் கூட வாழ்க்கை சவால்களை எதிர்கொள்ள உதவுவதில்லை. தான், எனது எனும் தீவிர தன்முனைப்பு   முரண்பாடுகள், வேதனை, குழப்பங்களை ஏற்படுத்துகிறது.   இவர்களுக்கு அனுபவங்களும் மேற்சொன்ன பாதிப்புகளிலிருந்து தப்பியவையாக இருக்காது. குழந்தைகள் தங்கள் சுயத்திடமிருந்து தன்முனைப்பிடமிருந்து தப்பி விலகி இருக்க கற்றுக்கொடுப்பது சற்று வேதனை நிரம்பியதாகவே இருக்கும். பெற்றோர்கள், ஆசிரியர்கள் குழந்தைகளின் உறவுமுறைகள், நடவடிக்கை என பலவற்றையும் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும். பெற்றோர், கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் தங்களது தெளிவான கருத்துகளின் வழியே குழந்தைகளுக்கு உதவினால் அவர்களுக்குள் அன்பும் நல்ல விஷயங்களும் உருவாகும். கல்வி என்பது எப்போதும் நிகழ்காலத்திற்கானது. கற்றல் என்பது சூழல் தாக்கங்கள், வேறுவிதமான தன்மைகளைக் கொண்டிருக்காது. ஒருவரின் முரண்பாடுகள், துன்பங்களை நீக்கி அவரை கல்வியே முழுமையா

எந்திரம் போன்ற மனிதர்களை உருவாக்கும் அரசும், மத நிறுவனங்களும்! - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  2 சரியான கல்வி ஜே.கிருஷ்ணமூர்த்தி பள்ளியில் உள்ள கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் தங்கள் மனதில் ஏராளமான குறிக்கோள்களைக் கொண்டிருக்கிறார்கள். இப்படி அவர்களின் மனதிலுள்ள முன்மாதிரிகளை  குறிக்கோள்களை மாணவர்களுக்கு வலியுறுத்திக் கூறுவது அவர்களின் எதிர்காலத்திற்கு உதவுமா? நிச்சயமாக இல்லை. இது அவர்களின் எதிர்காலத்தை அழிக்கும் செயல்பாடாகும். நீங்கள் நேசிக்கும் குழந்தைகளை அன்பும் அக்கறையும் இல்லாத மனிதர்களிடம் ஒப்படைக்கிறீர்கள். அப்படி குழந்தைகள் ஒப்படைக்கப்படும் இடம்தான், பள்ளி. இதனால் கல்வி கற்கும் குழந்தைகளுக்கு மனதில் பயம், பதற்றம், குழப்பம் உண்டாகிறது. அவர்களுக்கு வீட்டிலும், பள்ளியிலும் கூட தேவையான அன்பு கிடைப்பதில்லை. இந்த முறையில்தான் மாணவர்கள் மந்தமாக, உணர்ச்சிகள் இல்லாத வணிகம் செய்பவர்களாக உருவாக்குகிறார்கள். இன்றைய பெற்றோர் லட்சியத்தில் உறுதியாக இருந்து தங்களது தேவைக்கு ஏற்ப குழந்தைகளைப் படிக்க வைத்து பட்டம் பெற வைக்கிறார்கள். குறிக்கோள்கள், முன்மாதிரிகள் என வடிவமைத்துக்கொள்ளாமல் மாணவர்கள் தமது எதிர்காலத்தை திட்டமிடுவது முக்கியம். அப்படி குறிப்பிட்ட முறைகள் நுட்பத்திற்குள் சிக்கினால்

இந்திய கல்விமுறையின் தோல்வி - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  எது கல்வி ? ஜே. கிருஷ்ணமூர்த்தி சரியான கல்வி என்பது முறையான திறனோடும் நுட்பங்களோடும் கற்பிக்கப்படுவது அவசியம். இப்படிப்பட்ட கல்வியை ஒருவர் கற்கும்போது தனது வாழ்க்கையை அவர் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். இன்று அறிவியல் தொழில்நுட்பம் பெரிதும் வளர்ச்சி பெற்றுள்ளது. இதன்மூலம் மக்களுக்கு அடிப்படை விஷயங்களான உணவு, உடை, வீடு ஆகியவை கிடைப்பது வேகமாகியுள்ளது. ஆனால் இன்னும் மக்களுக்கு அவை முழுமையாக கிடைத்துவிடவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். இன்று உலகிலுள்ள அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என்ன நினைக்கிறார்கள், அனைத்து மக்களும் கல்வியறிவு பெற்றுவிட்டதாகத்தானே. உண்மையில் மாணவர்கள் பட்டங்கள், பட்டயங்கள், சான்றிதழ்கள், உதவித்தொகைகள் என பெற்று வருகின்றனர். கல்வி முடிந்தபிறகு மாணவர்கள் மருத்துவர்களாக பொறியாளர்களாக பணியாற்றுகின்றனர். ஆனாலும் கூட இவர்களது பணிகளால், மக்கள் இந்த உலகில் அமைதியாக வாழ முடியவில்லை. இங்கு இன்னும் போர்களும் சண்டைகளும் வன்முறைகளும் குறையவில்லை. மகிழ்ச்சியாக வாழ முடியவில்லை. அப்படியெனில் நவீன கல்விமுறை தோல்வியடைந்துவிட்டதாகத்தானே அர்த்தம்? பழைய முறைப்படி கல்

சரியான கல்வியை பள்ளிகள் வழங்குகின்றனவா? - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  சரியான கல்வி எது? - ஜே கே 1 கல்வி கற்காத மனிதன் யார்? பள்ளி செல்லாதவன், தன்னை முழுக்க அறியாதவன்தான். பள்ளி சென்றாலும் நூல்களை மட்டும் படித்தவன் முட்டாளாக இருக்க வாய்ப்புண்டு. அவன் அரசு, அதிகார வர்க்கம் தரும் தகவல்களை மட்டுமே அறிந்திருப்பான். புரிந்துகொண்டிருப்பான்.  ஒன்றைப் புரிந்துகொள்ளுதல் என்பது சுயமாக கற்றல் என்பதன் வழியாக சாத்தியமாகிறது. இது ஒருவரின் மனதில் நடைபெறும் உளவியல் கற்றல் செயல்முறையைப் பொறுத்தது. இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்குள் தன்னை உணர்ந்துகொண்டு கற்பதுதான் கல்வி என்று கூறவேண்டும்.  புத்தகங்களைப் படித்து அதிலிருந்து நாம் பெறும் செய்திகள், தகவல்கள் ஆகியவற்றின் தொகுப்பைத்தான் கல்வி என்று சொல்லுகிறோம். இதை யார் வேண்டுமானாலும் பெறமுடியும். புத்தகங்களை வாசிக்கத் தெரிந்தால் போதுமானது. இப்படி பெறும் அறிவு மனிதர்களிடையே கொள்ளும் மோசமான உறவு, சிக்கல்கள், எடுக்கும் முடிவு ஆகியவற்றுக்கும் முக்கியமான காரணமாகிறது. ஏறத்தாழ ஒருவரை குழப்பத்திற்குள் ஆழ்த்தி அவரை மெல்ல அழிக்கிறது.  கல்வி கற்க ஒருவருக்கு உள்ள வாய்ப்பு பள்ளி மட்டுமேதானா? நமது சமூகம் ஒருங்கிணைக்கப்பட்டது. நாம் பிள்ளைகளை