இடுகைகள்

தினமலர் பட்டம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நினைக்கும் இந்திய அரசு!

படம்
pixabay இந்திய அரசு, உயர்கல்வியில் மாணவர்களின் எண்ணிக்கையை 20 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக அதிகரிக்க முயற்சித்து வருகிறது. இந்திய அரசின் மனிதவளத்துறை அமைச்சகம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் உயர் கல்வித்துறைக்கு ரூ.30,383 கோடிகளைச் செலவிட இருக்கிறது. இத்தொகை மூலம், நாட்டின் பின்தங்கிய பகுதிகளிலுள்ள மாணவர்கள் உயர்கல்வி பெற வாய்ப்பு உள்ளது. இந்திய மாநிலங்களில் சில மாவட்டங்கள், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியே உள்ளன. உயர்கல்வியை எட்டும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 26 சதவீதமாக உள்ளது. 2024 ஆம் ஆண்டு ,மாணவர்களின் எண்ணிக்கையை 40 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது அரசு. தற்போது உயர்கல்வி படிப்புகளில் சேரும் மாணவர்களின் மொத்த அளவு 25.8 சதவீதம். அதில் ஆதி திராவிடர்கள் எண்ணிக்கை தோராயமாக 21.8%, பட்டியல் இனத்தவர் 15.9% க்கும் குறைவு. உயர்கல்வியில் இந்தியாவை பிரிக்ஸ் நாடுகளுடன் ஒப்பிடுகையில், தென் ஆப்பிரிக்காவைவிட(20.5%) மேலே உள்ளது. ஆனால் ரஷ்யா(81.8%), பிரேசில்(50.5%), சீனா(25.8%) ஆகிய நாடுகளை விட கீழே உள்ளது. மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, பின்தங்கிய பகுதிகளில் மாதிரி

விவசாயிகளுக்கான தகவல்தளம் உருவாகிறது!

படம்
pixabay விவசாயிகளுக்கான தகவல்தளம்! இந்திய அரசு, விவசாயத்துறையை நவீனமாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து  வருகிறது. தற்போது தமிழகத்திலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகளின் தகவல்களை, தமிழக  அரசு சேகரித்து வருகிறது. இத்தகவல்களை பெறும் மத்திய அரசு,  தேசிய  விவசாயிகள் தகவல்தளம் ஒன்றை உருவாக்கத் தொடங்கியுள்ளது. காஞ்சிபுரத்தில் நடைபெறும் ஆய்வு, இது பரிசோதனை முயற்சிதான். இந்த ஆய்வுகளை மத்திய அரசு தனது மானிய உதவிகள் சரியானபடி விவசாயிகளுக்கு சென்று சேர்கிறதா என்பதை அறியவே செய்கிறது.   இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்த பரிசோதனை முயற்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்திற்கு ஒரு மாவட்டம் என்று மத்திய அரசு தேர்ந்தெடுத்து தகவல்தளத்திற்கான தகவல்களை திரட்டி வருகிறது. பிஎம் கிசான் திட்டத்தின்படி, இந்திய விவசாயிகளுக்கு, ஆண்டிற்கு ஆறாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.  இந்த மானியம் விவசாயக் காப்பீடு,  மண்ணின் தரம், உரங்கள், மின்சாரம் ஆகியவற்றுக்காக வழங்கப்படுகிறது. ஆனால் இவை முறையானபடி விவசாயிகளுக்கு சென்று சேரவில்லை என அரசுக்கு புகார்கள் வந்தன. இதற்காக, விவசாயிகள் பற்றி

தாய்மொழியில் அறிவியலை ஊக்குவிக்கும் அமைப்புகள்!

படம்
pixabay தாய்மொழியில் அறிவியல் கற்கலாம்! இந்தியாவிலுள்ள பல்வேறு தன்னார்வலர்கள் ஆங்கிலம் தவிர்த்த உள்ளூர் மொழிகளில் அறிவியல் தகவல்களை ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.  ஆங்கில மொழி அறிந்தவர்கள் எளிமையாக உலகில் உள்ளவர்களோடு தொடர்புகொள்ள முடியும். ஆனால் அம்மொழியை அறியாதவர்களுக்கு அது கடினம். அறிவியல் விஷயங்களை, ஆங்கிலத்தில் கற்பதை விட தாய்மொழி வழியாக கற்பது இன்னும் எளிதாக இருக்குமே! இந்த எண்ணத்தில்தான் இந்தியாவில் உள்ள பல்வேறு தன்னார்வலர்கள் தனியாகவும், குழுவாகவும் இணைந்து அறிவியல் தகவல்களை உள்ளூர் மொழிகளில் பகிர்ந்து வருகின்றனர். பெரும்பாலும் இத்தகவல்கள் கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கானவை.  இம்முறையில் மன்றம் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இவர்கள் நடத்தும் கூட்டங்களில் பங்கேற்றும் அறிவியல் வல்லுநர்கள், அறிவியல் தொடர்பான செய்திகளை எளிமையாக விளக்குகிறார்கள். இந்த நிகழ்ச்சி முழுக்க இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.  இதேபோல கன்னடம், வங்காளம் என பல்வேறு மொழி சார்ந்த தன்னார்வலர்கள் அறிவியல் செய்திகளை தொழில்நுட்பம் சார்ந்த பகிர்ந்து வருகின்றனர். அறிவியல் செய்திக

கல்வியை மேம்படுத்தும் புதிய தொழில்நுட்பங்கள்! - செய்திக்கட்டுரை

படம்
கல்வியை சிறப்பாக்கும் தொழில்நுட்பங்கள்! இந்தியாவிலுள்ள பள்ளிகள், தொழில்நுட்ப நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் செய்து கல்வி தொடர்பான சேவைகளைப் பெற்று வருகின்றனர். கரும்பலகையில் சாக்பீஸ் வைத்து எழுதும் பழக்கம் ஒழிந்து,  அரசுப்பள்ளிகளில் கூட ஸ்மார்ட் வகுப்பறை சாதனங்கள் அறிமுகமாகி வருகின்றன. புரஜெக்டர் மூலம் வகுப்பு எடுக்கப்படுவது, பாடத்திட்டங்களை டிஜிட்டல் முறையில் படிக்க அளிப்பது என பல்வேறு கல்வி தொடர்பான புதிய முயற்சிகள் உருவாகி வருகின்றன. 1995 முதல் 2010 காலகட்டத்திற்குள் பிறந்தவர்களை ஜென் இசட் என்று அழைக்கின்றனர். இத்தலைமுறையினர், முழுக்க டிஜிட்டல் உலகில்தான் வாழ்கின்றனர். இவர்களின் கல்வியும் அதைச்சார்ந்தே அமைகிறது. இணைய வகுப்புகள், பாட்காஸ்ட்கள், வி.ஆர். கருவிகள் என இவர்களின் வாழ்க்கையில் கற்றல் முறைகள் மிகவும் நவீனமாகி உள்ளன. பள்ளிகளின் டெக் தேவைகளை தொழில்நுட்ப நிறுவனங்கள் தீர்த்து வைக்கின்றன. 2015 ஆம் ஆண்டு இந்தியாவில்  உள்ள வகுப்புகளில் 26 சதவீதம் மட்டுமே கணினிகள் இருந்தன. ஆனால் இன்று வகுப்பறை மட்டுமல்ல பள்ளிகளே  டிஜிட்டல் வடிவில் மாறியுள்ளன. 2013 ஆம் ஆண்டு மத்திய அரசின்

சிறைவாதிகளுக்கு பயிற்சி தரும் பின்லாந்து அரசு!

படம்
giphy.com சிறைவாசிகளுக்கு ஏ.ஐ. பயிற்சி! பின்லாந்து நாட்டிலுள்ள சிறைக்கைதிகளுக்கு அரசு, செயற்கை நுண்ணறிவு பற்றிய பயிற்சிகளை வழங்கி வேலைவாய்ப்புகளுக்கு தயார் செய்கிறது. பின்லாந்து நாட்டிலுள்ள ஹெல்சிங்கி பல்கலைக்கழகம் ஏ.ஐ. பற்றிய முன்மாதிரி பாடத்திட்டத்தை தயாரித்தது. இதன் நோக்கம், செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவை மக்களுக்கு ஏற்படுத்துவதே ஆகும். அம்முயற்சிக்காகத்தான் சிறைவாசிகளுக்கு டேப்லட், கணினிகளை கொடுத்து பயிற்சி அளித்து வருகின்றனர். தகவல் யுகத்தில் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கான கணினி திறன் திட்டமாக அமையவேண்டும் என்பது அரசின் எதிர்பார்ப்பு. இந்த நோக்கத்தின்படி மாணவர்களுக்கான திட்டமாகவே ஏ.ஐ.பயிற்சி முறை உருவானது. குற்றத்துறை மேலாளரான பியா புலாலகாவின் முயற்சியால் அரசு, ஏ.ஐ. பயிற்சிகளை சிறைக்கைதிகளுக்கு வழங்க இசைந்துள்ளது. “இப்பாடத்திட்டத்தை ரியாக்டர் என்ற நிறுவனம் செயல்படுத்தியது. கைதிகளின் முகவரிகளை கருப்பு பட்டியலில் வைத்திருப்பதால், இணைய இணைப்பு பெறுவதில் சிக்கல் இருந்தது. சிறை முகவரியில் அவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி வசதி உட்பட செய்துகொடுத்திருக்கிறோம். சிறையிலிருந்து வெளி

கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் வீடுகள் - இங்கிலாந்தில் புது ரூல்!

படம்
giphy.com மாற்றம் தரும் பசுமை வீடுகள் !   இங்கிலாந்தில் உள்ள வீடுகளில் வெளியாகும் கார்பன் வெளியீட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது. உலகம் முழுக்க கார்பன் வெளியீட்டுக்கு எதிரான மனநிலை உருவாகிவருகிறது. இதன்காரணமாக தனிநபரின் இயற்கைவள ஆதாரங்கள் செலவு, தொழிற்சாலைகளின் பங்கு, உணவுக்கு உதவும் பண்ணை விலங்குகள் என அனைத்தையும் சூழலியலாளர்கள் கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர். இங்கிலாந்தில் வெளியாகும் கார்பன் வெளியீட்டுக்கு, அங்கு வாழும் மக்களின் வீடுகளும் முக்கியக்காரணம் என அரசு கண்டறிந்துள்ளது. இதன்விளைவாக, 2022க்குள் கட்டப்படும் புதிய வீடுகள் கார்பன் வெளியீடு குறைந்த பசுமை வீடுகளாக்க முயன்று வருகிறது. இங்கிலாந்தில் ஆண்டுதோறும், 2 லட்சத்து 30 ஆயிரம் வீடுகள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன. இந்த வீடுகளில் அறைகளை சூடாக வைக்க கரிம எரிபொருட்களை பயன்படுத்துகின்றனர். அவற்றைத் தவிர்க்க வைக்கும் வழிகளை அரசு தேடிவருகிறது. ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகளிலும் பசுமை வீடுகளுக்கான விதிகள் அமலாக இருக்கின்றன. தற்போது வீடுகளுக்குத் தேவைப்படும் வெந்நீர் பொதுவா

ஊட்டச்சத்துப் பற்றாக்குறை! - இந்தியா செய்ய வேண்டியது என்ன?

படம்
giphy.com ஊட்டச்சத்து பற்றாக்குறை! இந்தியாவில் தொற்றாநோய்களின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஐந்து வயது முதல் ஒன்பது வயது குழந்தைகள், இளம் வயதினர்களில் பத்து வயது முதல் பத்தொன்பது வயது கொண்டவர்களும் தொற்றாநோய்களில் அதிகம் பாதிக்கப்படுவதாக தேசிய ஊட்டச்சத்து ஆய்வு முடிவுகள் (CNNS) கூறுகின்றன. இந்த ஆய்வு, 2016 முதல் 2018 வரையில் நடந்த நுண்ணூட்டச்சத்து ஆய்வாகும். இதன் விளைவாக பள்ளி செல்லும் குழந்தைகளில் பத்தில் ஒருவருக்கு முன்கூட்டியே நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. இந்தியாவில் ஊட்டச்சத்து தொடர்பாக விரிவாக செய்த ஆய்வில், குழ்ந்தைகளுக்கு ஏற்படும் தொற்றாநோய்களின் பாதிப்பு முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 35 சதவீதம் பேரும்,  பள்ளி செல்லும் சிறுவர்களில் 22 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊட்டச்சத்துக் குறைவு பிரச்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக மக்கள்தொகை அதிகம் கொண்ட பீகார், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகியவை உள்ளன. ஜம்மு காஷ்மீர், கோவா மாநிலங்களில் ஊட்டச்சத்து பாதிப்பு குறைவாக காணப்பட்டது.  குழந்தைக

ஹோம் ஸ்கூலிங்கை விட அன்ஸ்கூலிங்குக்கு கூடுது மவுசு!

படம்
இந்தியப் பெற்றோர்கள், பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புவதைவிட மாற்றுவழிக் கல்வி வாய்ப்புகளைத் தேர்ந்தெடுத்து வருகின்றனர். காலையில் பள்ளிக்குக் குழந்தைகளை அனுப்பி வைத்து, பின் மாலையில் டியூசன் முடித்து அவர்களை இரவில் வீட்டுக்கு கூட்டிவருவது  இனி தொடரப்போவதில்லை. தற்போது பள்ளிகளில் தகுதியான ஆசிரியர்கள் அமைந்தால் மட்டுமே மாணவர்கள் நல்ல கல்வி அறிவுடன் உருவாவது சாத்தியம். இந்தியாவிலுள்ள பெற்றோர்கள் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள்  மீதான நம்பிக்கையினமை அதிகரித்து வருகிறது. இதனால், வீட்டிலேயே பாடங்களைக் கற்பிப்பது (Homeschooling), அனுபவங்கள் மூலமாக குழந்தைகளை சுதந்திரமாக கற்க அனுமதிப்பது (unschooling) ஆகிய முறைகளைக் கையாளத் தொடங்கியுள்ளனர். வீட்டில் பெற்றோர்கள் ஆசிரியர்களாக மாறி பாடம் சொல்லித் தருவதிலும் பாடத்திட்டம் உண்டு. அதில் வேலைவாய்ப்புக்குத் தேவையான சான்றிதழ்களைப் பெற முடியும். அதேசமயம் அனுபவங்கள் மூலம் கல்வியைக் கற்றுவரும் குழந்தைகள் பெரும்பாலும் வேலைவாய்ப்பு என்ற நெருக்கடியைச் சந்திப்பதில்லை. இதற்கு காரணம் அவர்களின் பெற்றோரின் பொருளாதார பலம்தான்.  இவர்களும் விரும்பினால் தேர்வு

தண்ணீர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கலாம்?

படம்
தண்ணீர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கலாம்? சென்னைக்கு நீர் வழங்கும் பல்வேறு ஏரிகள் மழை பொய்த்துப் போனதால் வறண்டுபோய்விட்டன. மக்கள் அரசு வழங்கும் குடிநீருக்காக குடங்களுடன் காத்திருக்கின்றனர். இந்தச்சூழலை எப்படி சமாளிக்கலாம் என கணினியும் கீபோர்டுமாக யோசித்தோம். 1.வாசல் தெளிக்க பக்கெட் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கவேண்டும. அதற்கு பதில் சுப நிகழ்வுகளில் இளம்பெண்கள் பன்னீர் தெளிக்கிறார்களே அதே பாட்டிலைப் பயன்படுத்தலாம். 2.ஹோட்டல்களில் சாப்பிடச்செல்லும்போதே, சாப்பாட்டை நெஞ்சுவரை சாப்பிடுங்கள். மீதி மூக்கு வரை உள்ள இடத்திற்கு நீரை தம் பிடித்து குடியுங்கள். சவாலில் ஜெயித்தால் கேன் வாட்டர் காசு மிச்சம். 3.அகன்ற வாய் கொண்ட தண்ணீர் பாட்டில்களில் குடித்தால்தானே நீர் அதிகம் செலவாகும்? வீட்டுக்கு வரும் விருந்தினருக்குக் கூட பக்கத்து பிளே ஸ்கூல் பாப்பாவிடம் அபேஸ் செய்த ஸ்ட்ரா போட்ட பாட்டில், ஃபீடிங் பாட்டிலில்  நீர் நிரப்பி கொடுத்து வரவேற்கலாம்.  4.தண்ணீர்க்குடம் வரிசையில் நின்று நீர்பிடித்து வருவது ஒலிம்பிக் பதக்கம் வெல்வதை விட கஷ்டம். எனவே, அதிக ஏசி மாட்டியுள்ள வீடுகளை குறி

அங்கதமான அறிவியல் படிக்க ரெடியா?

படம்
வாட் இஃப் - ராண்டல் மன்றோ விலை ரூ.499 இப்படி நடந்தால் என்ன? என்று சிலமுறை யோசித்திருப்போம். அதனாலேயே வகுப்பில் பல மாணவர்களை கிண்டல் செய்து சிரித்திருப்பார்கள். சிரித்திருப்பீர்கள். அப்படி பல கேள்விகளை வலைத்தளத்தில் கேட்டு அதற்கு கார்ட்டூனிஸ்ட் ராண்டல் மன்றோ பதில் சொல்லியதை நூலாக்கி யிருக்கிறார். அதற்காக, நூலை வலைத்தளத்திலேயே படிக்கலாமா என்று கேள்வி கேட்க கூடாது. நான் பிடிஎஃப் வடிவில் படித்தேன். என் அருகில் இருந்தவர், பிடிஎஃப் வேலைக்காகாது என நூலை ஆர்டர் செய்து வாங்கி விட்டார். லட்சியம் படிப்பதுதானே, எந்த வடிவத்தில் இருந்தால் என்ன? கோக்குமாக்கான கேள்விகள். அதனால் பதில் வேண்டுமே என்றெல்லாம் கேள்விகள் கிடையாது. கிடைச்சா சந்தோஷம் இல்லைனா அதைவிட சந்தோஷம் என்பதுதான் இந்த கேள்விதார ர்களின் நோக்கம். கார்ட்டூனிஸ்ட் தன் ஓவியங்களின் உதவியுடன் அதனை கர்ம சிரத்தையாக நிறைவேற்றி இருக்கிறார். அணுஆயுதக் கப்பல் போல விண்வெளியில் செய்ய முடியுமா? எவ்வளவு நேரம் அழுதால் நம் உடலிலுள்ள நீர் முழுக்க வற்றும்? நம் டெக்னாலஜியைப் பயன்படுத்தி புதிய கோளை உருவாக்க முடியுமா? தற்போதைய மக்கள் தொ

அபிநயக் கண்காட்சி: கதகளி கொண்டாட்டம்

படம்
அபிநயக்கண்காட்சி! எழுத்து: ச.அன்பரசு புகைப்படம்: சத்தியசீலன் நன்றி: தினமலர் பட்டம்

பேசும் புகைப்படங்கள்: ஆடும் கூத்து

படம்
ஆடும் கூத்து! எழுத்து: ச.அன்பரசு                       புகைப்படம்: சத்தியசீலன் நன்றி: தினமலர் பட்டம்

பேசும் புகைப்படங்கள்: விடுமுறை அமர்க்களம் ஆரம்பம்

படம்
எழுத்து: ச.அன்பரசு புகைப்படங்கள்: சத்தியசீலன் நன்றி: தினமலர் பட்டம்

யூட்யூபில் கலக்கும் ஜீனியஸ்கள்!

படம்
யூட்யூப் ஸ்டார்ஸ்! உங்கள் கையில் ஹெச்டி தரத்தில் ஒரே ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும். உங்களுக்குப் பிடித்த விஷயங்களைப் பதிவு செய்து இணையத்தில் பகிரலாம். இணையத்தில் அப்படி பதிந்து யூட்யூபில் சாதனையாளர்களாக வளர்ந்தவர்களைப் பார்ப்போம். மேட்டி பிராப்ஸ் (Matty Braps) 2003 ஆம் ஆண்டு பிறந்து, யூட்யூப் தளத்தில் ஆறு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களைச் சம்பாதித்த, அமெரிக்க ராப் பாடகர். 2010 ஆம் ஆண்டு 'ஜஸ்ட் தி வே யூ ஆர் ' என்ற பாடலை வெளியிட்டார். 2014 ஆம் ஆண்டு பில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களின் மனங்களை வென்றார். இவரின் ஸ்பெஷல், புகழ்பெற்ற பாடல்களுக்கான கவர் பாடல்கள். இன்று யூட்யூப், ஃபேஸ்புக், ட்விட்டர் என பல்வேறு சமூக வலைத்தளங்களிலும் இவருக்கு ரசிகர்கள் உண்டு. http://mattybraps.com/ ஈவன் (Evan) ஈவன் தன்னுடைய யூட்யூப் சேனல் (Evantube) மூலம் தன் வயதுக்கார பையன்களுக்கு நாயகனாகி இருக்கிறார்.  எப்படி? சந்தைக்கு வந்த புதிய பொம்மைகளை விமர்சிப்பது,  ஏன்? எதற்கு? எப்படி? வகையறா  வீடியோக்களை  பதிவிட்டு 60 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை ஈர்த்துள்ளார்.  ஈவனின் தந்தை திரைப்ப

'படி' க்க கதைகள்

படம்
படி ! டேய்  ராம், பாத்து போ, நிலைப்படி முட்டிடப் போகுது என எச்சரித்தாள் கனகம். இன்று மட்டும் இப்படி எச்சரிப்பது, இதோடு நான்காவது முறை. புதிதாக வீடு மாறியதில் நிலைப்படியை மட்டும் சரியாக கணிக்கமுடியவில்லை. காலையில் யாரோ வாசலில் கூப்பிட்டார்கள் என வேகமாக வந்ததில், கனகத்திற்கு இருமுறை தலை இடித்துவிட்டது. அந்த வலிதான் எச்சரிக்கைக்குக் காரணம். எச்சரித்த 30 நிமிடங்களில் கதவருகில் ராமின் அலறல் கேட்டது. ”குனிஞ்சு வா ன்னு சொன்னா கேட்கிறானா?” என்று அலுத்துக்கொண்டு எழுந்து சென்றாள். 2 வெங்கட் எங்கே? இன்னைக்கு அவனோட ரூமை காலி பண்றேன்னு சொன்னானே? என்று லஷ்மியம்மா, பாலாஜியைக் கேட்டார். பாலாஜி, அதைக் கவனிக்காமல், பப்ஜி ஜூரத்தில் "உன் பக்கத்துல வந்துட்டான், சுடு என கத்திக்கொண்டிருந்தான். அப்போது வெளியே இருந்து கார்த்தி படிக்கட்டில் ஏறி உள்ளே நுழைந்தான். லஷ்மியம்மாவைப் பார்த்ததும், ”கொஞ்சம் திங்க்ஸ்தான் இருக்கு, எடுத்துக்கிறேன். நியூஸ்பேப்பரை எடைக்குப்  போட்டுட்டு வர்றேன். அதான் லேட்” என்றான்.  ”அதுக்கு இவ்வளவு நேரமா?” என்றவரை எரிச்சலாகப் பார்த்தான். ”கிலோவுக்கு 8 ரூபான்னு சொல