இடுகைகள்

தொழில்நுட்பம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அடுத்து வரும் ஏ.ஐ. புரட்சி- அப்டேட்டாகும் துறைகள் ஓர் அலசல்!

படம்
ஏஐ புரட்சிக்கு ரெடியா?  அண்மையில் டெலாய்ட்(Deloitte) என்ற ஆய்வு நிறுவனம் செய்த ஆய்வில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் உலகளவில் பயன்படுத்தும் அளவு 42 சதவீதம் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை தொழில்துறை, பொழுதுபோக்கு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறையினர் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். தொழில்நுட்பத்தின் அடிப்படை என்ன? செய்யும் வேலைகளின் எளிமை. அதேதான். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தினால் மனிதவளத்துறை முதல் தொழில்துறை வரை வேலைநேரமும் செலவும் பெருமளவு குறைகிறது. மனிதவளத்துறை மனிதவளத்துறையில் செயற்கை நுண்ணறிவு என்பது புதுமையாக இருக்கலாம். பல்வேறு துறைகளில் மனிதர்களுக்கு இணையாக செயற்கை நுண்ணறிவு அல்காரிதங்களைப் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ரோபாட்டிக்ஸ் புரோசஸ் ஆட்டோமேஷன்(Robotics Process Automation RPA) எனும் முறையை மனிதவளத்துறையில் பயன்படுத்துகின்றனர். ஊழியர்களுக்கான சம்பளம், தகவல் மேலாண்மை, கடிதம் எழுதுவது ஆகியவற்றில் இவை உதவுகின்றன. நடப்பு முதல் எதிர்காலம் வரை வியாபார நிலைகளைக் கணித்து வளர்ச்சி எப்படியிருக்கும் என்பது வரை செ

5ஜிக்கும் புற்றுநோய்க்கும் எந்த தொடர்புமில்லை!

படம்
மினி பேட்டி! டாக்டர்  ராபர்ட் டேவிட் கிரைமெஸ், இயற்பியலாளர் 5 ஜி பயன்படுத்தினால் புற்றுநோய் வரும் என்கிறார்களே? ஐ.நாவின் புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பு கூறிய தகவல்களை வைத்து இக்கேள்வியைக் கேட்கிறீர்கள். ஆனால் அது 2பி எனும் குறிப்பிட்ட ரேடியோ அலை சார்ந்தது. இந்த அலை புற்றுநோயை உண்டாகும் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் கிடையாது. ஸ்மார்ட் போன்கள் புற்றுநோய்கட்டிகளை மூளையில் உண்டாக்கும் என்பது உண்மையா? உலக நாடுகளில் பயன்படுத்தும் அனைத்து போன்களும் குறிப்பிட்ட அலைவரிசை கொண்ட கதிர்வீச்சை வெளியிடுகின்றன. இந்த போன்களில்தான் நாம் நெடுநேரம் நண்பர்களிடம் உறவுகளிடம் பேசி வருகிறோம். மேலும் இதில் பயன்படும் ரேடியோ அலைகள் உங்களை பாதிக்கும் அளவு அயனிகள் கொண்டவை அல்ல. 5ஜி அலைவரிசையில் டிரான்ஸ்மிட்டர்கள் அதிகம் பயன்படுகின்றன. இது ஆபத்தில்லையா? ட்ரான்ஸ்மிட்டர்களைப் பயன்படுத்துவதால் கதிர்வீச்சு அதிகம் என்று கூற முடியாது. தகவல்களை வேகமாக பரிமாறிக்கொள்ளவே இதனைப் பயன்படுத்துகின்றனர். 5 ஜி பற்றி மட்டும் ஏன் இத்தனை வதந்திகள் பரவுகின்றன? பிற தொழில்நுட்ப வசதிகள் போன்றதல்ல 5ஜி. உலகில் பல்வ

முகமறியும் சோதனை - இந்திய அரசின் புதிய முயற்சி!

படம்
முகமறியும் சோதனையை ஆதரிக்கலாமா?  இந்தியாவில் முகமறியும் சோதனை ஆந்திரத்திலுள்ள ஹைதராபாத் நகரில் அறிமுகமாகி உள்ளது. விமானநிலைய பயணிகள் இந்த வசதியைப் பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜூலை 1 முதல் ராஜீவ்காந்தி சர்வதேச விமானநிலையத்தில் முகமறியும் சோதனை பரிசோதனை முறையில் தொடங்கியுள்ளது. இவ்வசதியைப் பயன்படுத்துவதில் தன்னார்வமாக 250 பேர் இணைந்துள்ளனர். பெங்களூருவிலுள்ள கெம்பகௌடா விமானநிலையம், போர்ச்சுகீசிய நிறுவனமான விஷன் பாக்ஸூடன் முகமறியும் சோதனை தொழில்நுட்பத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய அரசின் டிஜி யாத்ரா கொள்கைக்கேற்ப இப்புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகியுள்ளது. 2018ஆம் ஆண்டு உருவான இச்சட்டப்படி, இவ்வசதியைப் பயன்படுத்த பாஸ்போர்ட், பான் கார்டு அல்லது பயோமெட்ரிக் வசதிகளைக் கொண்ட ஆதார் இருந்தால் கூட போதும்.  காவல்துறை, தேசிய குற்றப்பதிவு ஆணையம்  முகமறியும் சோதனைகளைப் பயன்படுத்த ஒப்பந்தங்களைக் கோரியுள்ளது.  அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில், மக்களின் பாதுகாப்புக்காக முகமறியும் சோதனைகளை அங்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.  வேலை செய்யும் விதம்! பயணிகள் தம் விமான ந

டீப் நியூட் ஆப்புக்கு என்ன இன்ஸ்பிரேஷன்?

படம்
எழுபது எண்பதுகளில் கண்ணாடி மூலம் பிறரின் ஆடை தாண்டி பார்க்குற கலாசாரம் இருந்துச்சு. டீப் நியூட் லோகோ கூட அதைத்தான் சொல்லுது. நான் பல பத்திரிகைகள், இதழ்கள் பார்த்துத்தான் இதை டிசைன் பண்ணினேன். இரண்டு, மூணு ஸ்டார்ட் அப் பண்ணினேன். எல்லாமே தோல்வி. அந்த நஷ்டத்தை இதில் ஈடுகட்ட முடியும்னு நம்பினேன். இந்த ஆப்பை செஞ்சதால நான் வாயேரிச ஆள்னு நினைச்சுராதீங்க. ஜஸ்ட் எனக்கு டெக்னாலஜின்னா புடிக்கும். அவ்வளவுதான். இப்போ நீங்க பார்த்த து பெண்களுக்கானது. அடுத்த ஆண்களுக்கானதை ரெடி செஞ்சு வருவேன். நீங்க பாத்த இந்த ஆப் ரெண்டு வருஷ உழைப்பில் ரெடியானது. பகல்ல பாக்குற போட்டோவை இரவுக்கு மாத்தும் டெக்னிக் பத்தி நிறைய படித்து கான் நெட்வொர்க்ஸ் மூலம் இதை செஞ்சேன். நிறையப் பேரு என்கிட்ட கேக்குறாங்க. இது தப்பில்லையா? பெண்களை நிர்வாணமாக காட்டுறதுன்னு... இதை நான் செய்யலீன்னா இன்னொருத்தர் செய்வார். இதை நீங்க தொழில்நுட்பமா பாக்கணும். டீப் நியூட் மட்டுமல்ல இதில் செய்யுறத நீங்க 30 நிமிஷ டுட்டோரியலைப் படிச்சா போட்டோஷாப் மூலமாக செய்யலாமே? Add caption நீங்க எந்த எண்ணத்துல இதில் இணைஞ்சிருக்கீங்களோ அது

பதப்படுத்தப்பட்ட உணவின் வரலாறு!

படம்
பதப்படுத்தப்பட்ட உணவின் வரலாறு ! பதப்படுத்தப்பட்ட உணவுத்துறையின் தந்தை Birdseye. இன்று உலகளவில் இதன் மார்க்கெட் மதிப்பு 240 பில்லியன் டாலர்கள் . மனிதர்கள் பல்வேறு பூமிப்பரப்புக்கு இடம்பெயர தொடங்கியவுடன் பதப்படுத்த உணவுகள் உருவாகத்தொடங்கின . அதோடு கெடாமல் உணவுப்பொருட்களை பாதுகாக்கும் தொழிலும் வளரத்தொடங்கின . " பேர்ட்செயே , உணவு பதப்படுத்துதல் துறையை நவீனமாக்கியதோடு உலகளவிலும் அதனை மேம்படுத்தினார் " என்கிறார் மார்க் குர்லான்ஸ்கி . பேர்ட்செயே தன் இளமையில் லேப்ராடர் என்ற மிஷனரி மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்தார் . அங்கு கடல் உயிரிகள் , விலங்குகள் ஆகியவற்றை கெடாமல் பாதுகாக்கும் டெக்னிக்கை அறிந்துகொண்டார் . அறை வெப்பநிலை 30 டிகிரிக்கும் குறைவு என்பதால் உப்பிடுவது , காயவைப்பது . உறைதல் ஆகிய முறைகளை நன்கு கற்றார் . ஐஸ் கிரிஸ்டல்களின் சைஸ்களை மாற்றி இறைச்சியை கெட்டுவிடாமல் பக்குவப்படுத்துவதை அரிச்சுவடியாக படித்தார் . பின் உணவுகளை பேக்கேஜ் செய்தாலும் உணவு உறைதல் குறைந்தவுடன் கசிவது குறையவில்லை . 1923 ஆம் ஆண்டு ஐஸ்க்ரீம் கம்பெனியை தாஜா செய்து அங்கு சோதனை செ