இடுகைகள்

மனமறிந்து பழகு! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜப்பானியர்களை பாதிக்கும் தஜின் கியோஃபுசா மனநல குறைபாடு!

படம்
pixabay பிற குறைபாடுகள் மன அழுத்தம், பதற்றம் காரணமாக ஏராளமான மனநல குறைபாடுகள் ஏற்படுகின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம். சோமாட்டிக் சிம்ப்டம் டிஸ்ஆர்டர் உடலில் ஏற்படும் வலி அல்லது உடல் பருமன் ஏற்படுத்தும் பதற்றம் சார்ந்த குறைபாடு. வலி உணர்வால் தனக்கு பெரிய நோய் ஏற்பட்டுள்ளதாக நினைப்பார்கள். எதிர்மறை எண்ணங்களோடு இருப்பதால் சமூக அளவில் கடும் மன அழுத்தத்தைச் சந்திப்பார்கள். ஃபேக்டிஷியஸ் டிஸ்ஆர்டர் தன்னைத்தானே காயங்கள் செய்துகொண்டு, அல்லது பிறரது கை, கால்களை முறித்துப்போட்டு மருத்துவம் தேவை என்று சொல்லுவார்கள். தனக்கு அல்லது பிறருக்கு உள்ள உடல்நலக்குறைபாட்டை பிரமாண்ட பிரச்னையாக சொல்லி மருத்துவர்களுக்கு பீதி ஊட்டுவார்கள். சிறுவயதில் ஏற்பட்டு மோசமான அனுபவங்கள், மனச்சோர்வு சூழல் இந்த குறைபாட்டுக்கு முக்கியக் காரணம்.   டவுண் சிண்ட்ரோம் மூளையில் ஏற்படும் நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடு. இதனால் இவர்களது அறிவுத்திறன், சமூக உறவு, தினசரி செயல்பாடு என அனைத்துமே பாதிக்கப்படும். பதற்றக்குறைபாடு, கற்றலில் தடுமாற்றம், தகவல்தொடர்பில் பிரச்னை என அறிகுறிகள் தெரியும். மரபணுக்களின் சமச்சீரின

ஆளுமை குறைபாடுகளின் வகைகள், பிரிவுகள், அறிகுறிகள் - ஓர் அலசல்

படம்
pixabay ஆளுமை குறைபாடுகள் தனிநபர் நடந்துகொள்ளும் முறைகள், அவர்களின் பழக்க வழக்கங்கள், சமூகத்தோடு இணைந்து செயல்படும் செயல்பாடுகள் வேறுபட்டு இருக்கும். ஆளுமை குறைபாடு இருப்பவர்கள் தனக்கு அப்படி ஒரு பிரச்னை இருப்பதாகவே நம்ப மாட்டார்கள். இவர்களை பிறரால் புரிந்துகொள்ள முடியாது. எந்த மாதிரி யோசிப்பார்கள், பேசுவார்கள் என்று யாராலும் கூறமுடியாது. காரணம். அவர்களாலேயே இதனை முடிவு செய்ய முடியாத பரிதாப நிலை இருக்கும். இவர்கள் யாருடனும் நட்பு, காதல் கொள்ளாமலிருக்க மாட்டார்கள். ஆனால் அந்த உறவு என்பது புரிந்துகொள்ள முடியாததாக இருக்கும். சமூகத்தோடு எதையும் இணைந்து செய்ய மாட்டார்கள். இவர்களிடன் கேள்விகளைக் கேட்டு ஆளுமை குறைபாடுகளை அறிவதோடு, இவர்களின் குடும்ப வரலாற்றையும் உளவியல் வல்லுநர்களிடம் கூறவேண்டும். அப்போதுதான் சிகிச்சையை உறுதியாக செய்ய முடியும். குடும்பத்தில் யாரேனும் தீவிர மன அழுத்தம், பதற்றம் ஆகியவற்றுக்கு சிகிச்சை எடுத்தால், அது பிறருக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆளுமை குறைபாடு என்பதில் ஏறத்தாழ 10 வகைகள் உள்ளன. பாரனாய்டு பிடி இந்த வகை குறைபாடு உள்ளவர்கள் யாரையும் நம்ப மாட்டார்கள்.

மனதிற்கு பிடிக்காத சூழலை வெளிப்படுத்தும் உடல்மொழி - டிக் டிஸ்ஆர்டர்

படம்
pixabay டிக் குறைபாடுகள் நீங்கள் உங்கள் நண்பரை எப்படி அடையாளப்படுத்துவீர்கள்? அவரிடம் உங்களுக்கு பிடித்த அல்லது அவரை மட்டுமே அடையாளப்படுத்தும் தனி அடையாளங்கள் இருக்கும். அதாவது தலையை ஆட்டுவது, கண்களை சிமிட்டுவது, குறிப்பிட்ட வார்த்தைகளை அடிக்கடி சொல்வது, கையை சுழற்றுவது, தொண்டையைச் செருமுவது, எச்சிலைத் துப்புவது என கூறலாம். இவற்றில் பல்வேறு செய்கைகளை ஒருவர் செய்தால் அது டூரெட் சிண்ட்ரோம் என்று அழைக்கப்பட்டது. இக்குறைபாட்டை 1884ஆம் ஆண்டு ஜார்ஜ் டே டூரெட் என்ற ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்தார். இவற்றை செய்வது குழந்தையாக இருக்கும்போது பிரச்னையில்லை. ஆனால் பெரியவர்களான பிறகும் இதேபோன்ற செய்கைகளை செய்வது சிக்கலான குறைபாடு என்றே உளவியல் வல்லுநர்களால் அழைக்கப்படுகிறது. அம்மெடாபைன்ஸ், போதைப்பொருட்களின் பயன்பாடு டிக் குறைபாடுகளை அதிகரிக்கும். அறிகுறிகள் கண்களுக்கு பின்னே எரிச்சல் இருப்பது போல தோன்றும். குறிப்பிட்ட தசை உள்ள இடத்தில் அரிக்கும். தொண்டை வறளும் சில இடங்களில் அரிப்பு தோன்றும். பல்வேறு மனிதர்கள் இந்த அறிகுறிகள் தோன்றிய பிறகே கை கால்களை சுழற்றுவது, தலையை அசைப்பது, தோள்கள

உடலையும் உள்ளத்தையும் பாதிக்கும் தூக்க குறைபாட்டு நோய்கள் ஓர் பார்வை!

படம்
pixabay தூக்க குறைபாடு நோய்கள் நமது உடல் சூரிய வெளிச்சத்தின் அடிப்படையில் இயங்குகிறது. இதன் அடிப்படையில் உணவு உண்பதை நாம அமைத்துக்கொண்டுள்ளோம். காலையில் உற்சாக வேலை செய்யத் தொடங்குகிறோம். மாலையில் சூரியன் மறையும்போது உடல், மனம் இரண்டுமே ஓய்வுக்கு ஏங்கும் நிலையில் இருக்கும். பிறகு இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கிவிடுகிறோம். இந்த ஓய்வு செயல்பாடு தற்போது மாறி வருகிறது. காரணம், பல்வேறு ஐ.டி சார்ந்த வேலைகளால் பகலில் தூங்கிவிட்டு இரவில் ஆயிரக்கணக்கானோர் வேலை செய்ய கிளம்பி வருகின்றனர். இதன்விளைவாக முதலில் உடல் அளவிலும் பின்னர் உள்ள அளவிலும் பல்வேறு அழுத்தங்களை சந்திக்கே நேரிடுகிறது. உடலில் தூக்க அளவு, ஆரோக்கியம் ஆகியவற்றை உயிரியல் கடிகாரம் கண்காணிக்கிறது. இந்த அமைப்பு குழம்பும்போது நம் வாழ்க்கை இடியாப்ப சிக்கலில் சிக்குகிறது. இதனால் அலுவலக பணியில் கவனமின்மை, யோசிக்க முடியாமை, தெளிவான முடிவுகளை எடுக்க திணறுவது, பணியின்போது தூங்குவது, சோர்வாகவே நாள் முழுவதும் இருப்பது, மலம் கழிப்பதில் சிக்கல், பசி மந்தம் ஆகிய பிரச்னைகள் உருவாகின்றன. பின்னாளில், இப்பிரச்னை காரணமாக நோய்கள் உருவாகின்றன. அமெரிக்க