இடுகைகள்

மலையாளம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பழமொழியைக்கூட கவனித்து எழுதி வருகிறேன்!

படம்
benyamin/indian express எனக்கு கிடைத்த விருது பிராந்திய எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பென்யாமின் , மலையாள எழுத்தாளர் . பென்யாமின் எழுதிய அல் அரேபியன் நாவல் ஃபேக்டரி , ஜாஸ்மின் டேஸ் ஆகிய இரு நாவல்களும் வாசகர்களுக்கு இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன . ஒன்றின் தொடர்ச்சியாக நீளும் இரு நாவல்களிலும் மத்திய கிழக்கில் ஏற்பட்ட அரேபிய வசந்தம் எனும் போராட்டம் பற்றிய மையத்தைக் கொண்டுள்ளன . 2014 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நூல் 2018 ஆம் ஆண்டு ஜேசிபி எனும் இலக்கிய விருதைப் பெற்றது . இதன் மையம் அரசுக்கு எதிரான கிளர்ச்சி , வன்முறை , மக்கள் போராட்டத்தைப் பற்றியது . இதனை இந்தியாவுக்கும் கூட நினைத்துப் பார்க்கமுடியும் . ஏனெனில் இங்கும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் கொரோனாவை விட தீவிரமாக நடைபெற்று வருகின்றன . இப்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் . தற்போதைய இந்திய அரசியல் பொருளாதார சூழல் உங்களுக்கு எழுதுவதற்கு உதவுகிறதா? இன்று இந்தியாவில் உள்ள அரசியல் நிலைமை பற்றிய நூல்கள் அடுத்த பத்தாண்டுகளில் அதிகம் வெளிவரும் . நான் தற்போது கேரளத்திலிருந்து மலேசியாவிற

மலையாள மொழியில் தெலுங்குப்படம் - கல்கி படம் எப்படி?

படம்
கல்கி  - மலையாளம் இயக்கம் பிரவீன் பிரபாராம் ஒளிப்பதிவு  கௌதம் சங்கர் இசை ஜேம்ஸ் பிஜய் ஆஹா மலையாளப் படமா அல்லது தெலுங்குப் படமா என திகைக்கும்படி சண்டைக்காட்சிகளில் அனல் தெறிக்கிறது. எஸ்.ஐ கே, நஞ்சன் கோட்டை எனும் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றலாகி வருகிறார்,. அந்த ஊரில் அமர்நாத் என்பவர், மக்களை ஊருக்கு வெளியே கொண்டுபோய் வைத்துவிட்டு அங்கு துப்பாக்கிகளை தயாரித்து வருகிறார். இருவருக்குமான டிஷ்யூம் டிஷ்யூம்தான் கதை. இதை எப்போதும் போல மலையாளப்படங்களின் வேகத்தில் சொல்லாமல் பரபரவென சொல்லியிருப்பதுதான் படத்தைப் பற்றிப் பேசக்காரணம். டோவினோ தாமஸ்தான் படத்தின் பெரும்பலம். அடுத்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் பிஜய். தன்னுடைய கடந்த காலத்தை நினைத்து பார்த்து எதிரிக்கு எதிராக நின்று போராடும் வேகம், போலீஸ் ஸ்டேஷனில் உள்ள ரவுடியை தீவைத்து எரிப்பது, ஊருக்குள் அமைதி கொண்டுவரை அசுரனாக நடந்துகொள்வது என காட்சிக்கு காட்சி பின்னி எடுக்கிறார். இவருக்கு நேர் எதிராக தில்லாக நிற்கிறார் சிவஜித் பத்மநாபன். நெஞ்சில் எப்போதும் எரியும் வன்மத்துடன் மீசையை முறுக்கியபடி நடக்கும்போது கத்தியை செருகி இழுத்த

பள்ளிகளுக்கு இடையே சண்டை - பாடம் எடுக்கும் பதினெட்டாம் படி!

படம்
பதினெட்டாம் படி - மலையாளம் இயக்குநர் - சங்கர் ராமகிருஷ்ணன் அரசு மாதிரிப்பள்ளி, காசு கொடுத்து படிக்கும் கிறிஸ்தவப் பள்ளி என வர்க்க வேறுபாடுகளைக் கொண்ட இரு தரப்புக்கும் இடையே நடக்கும் சண்டை, காதல், மோதல் அனைத்தும்தான் படம். மம்மூக்கா படிப்பை தினசரி வாழ்க்கையில் செய்யும் விஷயங்களாக சொல்லித் தந்து அரசுப்பள்ளி மாணவர்களை கரையேற்றுகிறார். படம் சுபம். இதை எதுக்குங்க நான் 2.30 மணிநேரம் பார்க்கணும்னு கேட்டா, அவங்களை ஞான் கொன்னு களையும். பின்ன நாங்க பாத்தோமுல்ல நீங்களும் பார்க்கணும் தம்பி. கதையை அஷ்வின் என்ற பாதிரியார் - யெஸ் பிரிதிவி ராஜ் சொல்லத் தொடங்குகிறார். அவருக்கு ஊக்கமூட்டிய ஆசிரியர் ஒருவர் பள்ளியில் இருக்கிறார். ஆனால் அங்கு பணக்கார மாணவர்கள் செய்யும் பிரச்னையில் பெண் மாணவி சிக்க, அதன் மூலம் மாணவர் தலைவரான அஷ்வின் நல்ல பெயரும் நாசமாகப்போகிறது. அதோடு ஜாய் என்ற ஆசிரியரின் உயிரும் விபத்தில் பலியாகிறது. இதன் விளைவாக அரசுப்பள்ளியில் அஷ்வின் சேர, முன்னமே பழிவாங்கும் வெறியில் உள்ள அம்மாணவர்கள் அவரை அடி பின்னி எடுக்கின்றனர். பின் ஒழுங்காக படித்து முன்னேறி சாதிப்பதுதான் கதை.

அசத்தும் ஜப்பான் மலையாள அகராதி! - அரசு அதிகாரி சாதனை

படம்
Add caption பெருமை பேசும் உழைப்பு -  ஜப்பான் மலையாள அகராதி கொச்சியைச் சேர்ந்த கேபிபி நம்பியார், அரிய சாதனை ஒன்றை செய்துள்ளார். ஏறத்தாழ 1500 பக்கங்களுக்கு ஜப்பான் மலையாள அகராதியை தொகுத்துள்ளார். ஆறு லட்சம் வார்த்தைகளைக் கொண்ட இந்த அகராதி, பதினைந்து ஆண்டுகள் உழைப்பில் தயாரானது. இதிலுள்ள மலையாள வார்த்தைகளின் எண்ணிக்கை 53000. அனைத்து வார்த்தைகளையும் கையில் எழுதியிருக்கிறார் மனிதர். மொத்தம் கையெழுத்தி பிரதியாக 3 ஆயிரம் பக்கங்கள் வந்திருக்கிறது. எழுதியவுடன் அதனைப் பதிப்பிக்க பல்வேறு பதிப்பகங்களை நாடியுள்ளார். ஆனால் ஜப்பான் எழுத்துரு யாரிடமும் இல்லை என்பதால் உடனே நிராகரித்துள்ளனர். உடனே ஜப்பானின் டோக்கியோவுக்கு சென்றவர், டோக்கியோ அயல் உறவுகள் பல்கலைக்கழகத்தின் உதவியை நாடினார். அங்கு மொழி சார்ந்த மென்பொருளை பேராசிரியர்கள் ஜூன் தகாசிமா, மகாடோ மினேகிஷி ஆகியோர் உருவாக்கி உதவினர். அப்போதுதான் நம்பியார் செய்த தவறு ஒன்று தெரிய வந்திருக்கிறது. ஜப்பான் - மலையாள அகராதிக்கு அவர் பயன்படுத்திய ஜப்பான் அகராதி அறுபது ஆண்டுகள் பழமையானது. உடனே தினசரி ஏழு மணிநேரம் உழைத்து, அக