இடுகைகள்

முத்தாரம் கட்டுரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அறிவியல் பிட்ஸ் - முத்தாரம் ஸ்பெஷல்

படம்
மரங்கள் சைவமா ? அசைவமா ? கற்பகம் மெஸ்ஸில் சைவ மனிதர்களையும் , ஹோட்டல் பாண்டியனில் அசைவ மனிதர்களையும் பார்க்கலாம் . ஆனால் மரங்கள் எதில் சேரும் ? " தாவரங்கள் உறுதியாக வெஜிடேரியன் கிடையாது " என உறுதியாக பேசுகிறார் ஓஹியோவிலுள்ள மியாமி பல்கலையின் தாவரவியல் பேராசிரியர் நிகோலஸ் மணி . தாவரங்கள் அசைவமா எப்படி ? " நேரடியாக சாப்பிடுவதில்லை ஆனால் பூஞ்சைகளின் மூலமாக அதை செய்கின்றன " என்கிறார் நிகோலஸ் . சூரியன் மூலம் கார்பன்டை ஆக்சைடும் , ஆக்சிஜனையும் பெறுகின்றன . கால்சியம் , பொட்டாசியம் , சோடியம் ஆகியவற்றை பெற மரங்கள் பூஞ்சைகளை நாடுகின்றன .  தமக்கான உணவை பூஞ்சைகள் இறந்த சிறிய புழுக்களின் வழியாக பெறுகின்றன . ( எ . கா : காளான் ) பூஞ்சைகள் சர்க்கரையை ஒளிச்சேர்க்கை மூலம் பெற முடியாது என்பதால் , மரங்களுடன் இணைகின்றன . மரங்களுக்கு பூஞ்சைகள் சில சத்துக்களை தந்து , ஒளிச்சேர்கை பலனான சர்க்கரையை மரங்களிடமிருந்து பரஸ்பர சகாயமாக பெறுகின்றன . இதில் யார் வெஜ் , யார் நான் வெஜ் நீங்களே சொல்லுங்கள் . 2 ஒளியை கன்ட்ரோல் செய்யும் Voicy! லைட்டுகளின் ஒளியைக் குறைக்க ஸ்வி

ரோனியிடம் கேளுங்கள் - ரோனி ப்ரௌன்

படம்
ஏன் ? எதற்கு ? எப்படி ? -Mr. ரோனி அதிர்ச்சி செய்திகளை கேட்கும்போது பலரும் வாயைப் பொத்திக்கொள்வது ஏன் ? உளறிவைத்தால் ஏதாவது வம்பு வந்துவிடுமே என்பதற்காக நிச்சயம் அல்ல . உண்மையிலேயே உங்களுக்கு ஷாக் ஏற்பட்டால் அங்கேயே பதறி அலறிவிடுவீர்கள் என்பதுதான் நிஜம் . அப்படி நடக்காமல் நாசூக்காக வாயை பொத்துகிறீர்கள் என்றால் , அதிர்ச்சியை பழகி அதனை ஏற்க துணிந்துவிட்டீர்கள் என்றே அர்த்தம் . மேலும் அதிக அபாயமில்லை , அலறி கூட இருப்பவர்களுக்கு வயிற்றில் புளி கரைக்ககூடாது என்ற லேட்டரல் திங்கிங் கூட காரணமாக இருக்கலாம் .    ஏன் ? எதற்கு ? எப்படி ? - Mr. ரோனி கண்ணாடியில் உருவங்கள் ஏன் மேல் கீழாக தெரியாமல் இடது வலதாக தெரிகிறது ? கண்ணாடிகள் உருவத்தை ரிவர்ஸாக்கி காட்டுவதில்லை . உங்களது பிம்பமாக தெரிவது முன்பின்னான உங்கள் உடலின் பிரதிபலிப்புதான் . முகத்தை கண்ணாடியில் இடதுபுறமாக திருப்பிக்காட்டினால் கண்ணாடியிலும் அது இடதுபுறமாகத்தான் தெரியும் . ஆனால் அதுவே மற்றவர்களை பார்க்கும்போது , 180 டிகிரியில் நம்மைப் பார்த்தபடி நிற்கிறார்கள் என்பதை நாம் முன்பே கவனித்துவிடுவோம

பசுமைப் பேச்சாளர் 22 கரோலின் லூகாஸ்

படம்
பசுமைப் பேச்சாளர் 22 கரோலின் லூகாஸ் ச . அன்பரசு இங்கிலாந்தைச் சேர்ந்த கரோலின் லூகாஸ் , பசுமைக்கட்சியின் துணை தலைவர் , நாடாளுமன்ற உறுப்பினராக பல்வேறு சூழலுக்கு கேடான தொழில்மய திட்டங்களுக்கு எதிரான தொடர்ந்து போராடிவரும் பெண்மணி . 1960 ஆம் ஆண்ட இங்கிலாந்தில் வோர்செஸ்டர்ஷையரில் மால்வெர்னில் பிறந்த கரோலின் , 1989 ஆம் ஆண்டு எக்சிடர் பல்கலையில் முதுகலைப்பட்டம் பெற்றார் . இதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே பசுமைக்கட்சியில் செயல்படத் தொடங்கிவிட்டார் . 2008 ஆம் ஆண்டு பசுமைக் கட்சியில் முதல் பெண் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கரோலின் . பசுமை பொருளாதாரம் , உள்நாட்டு தொழில்கள் , விலங்குகள் நலம் , உலகமயத்துக்கு மாற்று ஆகியவற்றுக்கான தேடல்களில் மக்களுக்கான நலன்களை பெற்றுத்தர முயலும் பசுமை உள்ளம் இவருடையது . Seeing Green -Jonathon Porritt என்ற புத்தகம்தான் கரோலின் பசுமைக்கட்சியில் சேர்ந்து போராட்டங்களை நடத்த சூப்பர் இன்ஸ்பிரேஷன் . இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதி சார்ந்த பசுமைக்கட்சியின் பிரதிநிதியான கரோலின்

அன்லிமிடெட் அறிவியல் -தொகுப்பு -ச.அன்பரசு

படம்
வியப்பூட்டும் லண்டன் விமான கண்காட்சி விமானங்களும் ரயில்களும் என்றுமே பார்க்க பார்க்க சலிக்காதவை . இவற்றை பார்வையிட்டு ரசிக்க உலகம் முழுக்க ரசிகர்கள் உண்டு . இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை லண்டன் மேற்கு பகுதியில் நடைபெறும் ஃபார்ன்போரப் விமான கண்காட்சி இந்த ஆண்டும் கோலகலமாக தொடங்கிவிட்டது . ஜூலை 11 -17 தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியை பார்வையிட மக்களுக்கு 2 நாட்கள் அனுமதி உண்டு . இக்கண்காட்சியில் விமானநிறுவனங்கள் புதிய கான்செப்ட் பிடித்து உருவாக்கிய தமது விமானங்களை காட்சிக்கு வைக்கின்றனர் . ராணுவம் , தனிப்பட்ட பயன்பாடு உள்ளிட்டவற்றுக்காக பலரும் இக்கண்காட்சியை தவறவிடுவதில்லை . இதில் பலரையும் திரும்பி பார்க்க வைத்த முக்கியமான விமானங்கள் மூன்றை இப்போது காண்போம் . போயிங் 737 மேக்ஸ் 8 100 ஆண்டை நிறைவு செய்திருக்கும் சிகாகோவைச் சேர்ந்த விமான நிறுவனமான போயிங் தயாரித்துள்ள பயணிகள் விமானமே 737 மேக்ஸ் 8 ஆகும் . விரைவிலேயே இந்த போயிங் 737 மேக்ஸ் 8 மூலம் அமெரிக்காவில் பறக்கமுடியும் . எப்படி ? டெக்சாஸின் டல்லாஸ் நகரில் உள்ள சவுத்வெஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் ,  போயிங் நிறுவனத்தின