இடுகைகள்

வாசிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பொதுமுடக்கத்தில் மனதிற்கு நம்பிக்கையூட்டும் சில நூல்கள்... உங்களுக்காக....

படம்
                  பொதுமுடக்கத்தில் படிப்பதற்கான சில நூல்கள் தி ஹேப்பியஸ்ட் மேன் ஆப் தி எர்த் எடி ஜாகு எப்படி யூத இனத்தில் பிறந்து வதை முகாம்களிடையே தப்பித்து ஏழு ஆண்டு கள் வாழ்ந்தார் , இந்த நரகமான காலத்தில் வாழும் நம்பிக்கையை கைவிடாமல் இருக்கச் செய்தது எது , எப்படி தனது எண்ணத்தில் உறுதியாக இருந்தார் என்பதை புன்னகையுடன் நீங்கள் படித்து ஆறுதல் பெறலாம் . டீம் கைண்ட்னெஸ் - எ ரிவல்யூஷனரில் கைட் பார் தி வே பார் வீ திங்க் , டாக் அண்ட் ஆக்ட் இன் கைண்ட்னெஸ் உலகம் பல்வேறு சுயநலனுக்காக அரசியலுக்காக பிளவுபட்டு வருகிறது . இந்த இடைவெளியை எப்படி கருணை கொண்டு நிரப்புவது என ஆராய்கிறது இந்த நூல் . கருணையை தினசரி நாம் செய்யும் செயல்கள் மூலம் எப்படி நடைமுறைப்படுத்துவது , அன்பை பிறருக்கு வழங்குவது எப்படி என நூல் வழிகாட்டுகிறது . தி பாய் தி மோல் , தி பாக்ஸ் அண்ட் தி பாக்ஸ் நான்கு நண்பர்களின் வாழ்க்கை வழியாக நம்பிக்கையையும் , நட்பையும் பரப்பும் நூல் இது . 2019 இல் வெளியான நூல் இதுவரை பத்து லட்சம் பிரதிகள் விற்றுள்ளது . நூல் எளிமையாக படிக்கும்படியும் , இதிலுள்ள வசனங்

இயற்கையும் பழக்கத்தை தடுக்கும்! - இயற்கை பேரிடர்கள் மனிதர்களின் பழக்கவழக்கங்களை மாற்றுகின்றன

படம்
              இயற்கையும் பழக்கத்தை தடுக்கும் ! தினசரி செய்யும் உடற்பயிற்சி , வாசிப்பு , வேலை என பல்வேறு விஷயங்களை தடாலடியாக மாற்றுவதில் இயற்கைக்கு பெரும் பங்கு உண்டு . வெயில் , மழை , புயல் என வரும்போது ஒருவரின் தினசரி வாழ்க்கை பட்டியல் தடாலடியாக மாறிவிட வாய்ப்புள்ளது . அமெரிக்காவின் சாண்டி புயல் ஏற்பட்டபோது அங்கு வாழும் மக்களின் தினசரி வாழ்க்கை பெரும் மாறுதலை சந்தித்தது . அவர்களின் உடற்பயிற்சி இருமடங்கு சரிவைச் சந்தித்தது . 2012 ஆம் ஆண்டு நவம்பர் 1 முதல் 15 ஆம் தேதிவரை சாண்டி புயல் தாக்குதல் இருந்தது . அதற்குப்பிறகு நியூஜெர்சி , நியூயார்க் ஆகிய நகரங்களில் வாரத்திற்கு மூன்று நாட்கள் உடற்பயிற்சி செய்தவர்களின் எண்ணிக்கை 13 சதவீதமாக குறைந்துவிட்டது . அதேநேரம் புயல் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் வாழ்ந்த மக்கள் முன்பை விட ஆரோக்கியமான உணவுகளைத் தேடி சாப்பிடத் தொடங்கிவிட்டனர் . புகைப்பிடிப்பவர்களின் அளவு இப்பகுதிகளில் கூடியது . ஏறத்தாழ 17 சதவீதம் . இயற்கை பேரிடர்கள் பொதுவாக ஒருவரின் இயல்பான வாழ்க்கையை பெரிதும் மாற்றக்கூடியது .. தினசரி வாழ்க்கையை பல்வேறு மாற்றங்களு

வாசிப்பை நேசிக்க வைக்கும் லெட்ஸ் ரீட்ஸ் இந்தியா அமைப்பின் புதுமையான முயற்சி!

படம்
                  வாசிப்பை நேசிப்போம் ! சமூக வலைத்தளம் பெருகியுள்ள காலம் இது . இதன் காரணமாக , நூல்களைப் படிக்கம் பழக்கம் மெல்ல குறைந்து வருகிறது . நூல்களை விட அதன் சுருக்கங்களை சிலர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தாலே போதுமானதாக உள்ளது . பலரும் அதனை எளிதாக படித்துவிட்டு அடுத்தடுத்து விஷயங்களுக்கு சென்றுவிடுகின்றனர் . இதை தடுக்கவே மகாராஷ்டிரா மாநிலத்தில் லெட்ஸ் ரீட் இந்தியா எனும் திட்டத்தை தொடங்கியுள்ளனர் . இதில் தகவல்தொழில்நுட்ப நிறுவனப் பணியாளர்களும் , பொறியாளர்களும் இணைந்துள்ளனர் . சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய இப்பணி , தற்போது வேகம் பிடித்துள்ளது . தற்போது இந்த அமைப்பினர் பத்து லட்சம் நூல்களை மக்களுக்கு வாசிக்க வழங்கி வருகின்றனர் . எங்களது நோக்கம் , சமூக வலைத்தளங்களிலுள்ள இளைஞர்களை வாசிப்பு நோக்கி திருப்புவதுதான் . இதன்மூலம் நமது சமூகம் அறிவுள்ள சமூகமாகவும் , பொறுப்புள்ளதாவவும் வளரும் . நூல்களைப் படிக்க இலவசமாகவே இந்த அமைப்பு வழங்குகிறது . ஒரே ஒரு விதி உண்டு . மொபைல் வேன்களில் வரும் நூல்களை யார் வேண்டுமானாலும் எடுத்து படிக்கலாம் . ஒருவாரம் வைத்து படிக்

வாசிப்பை நேசிப்போம்!

படம்
  வாசிப்பை நேசிப்போம்! தினசரி வாசிப்பது என்பது அவ்வளவு எளிதாக நம் மனதில் படியாது. அதற்கு காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு ஆகிய நேரங்களில் நீங்கள் தனியாக சாப்பிடும்படி நேர்ந்தால் நூல்களை வாசிக்கலாம். நெருக்கடியான வேலைகளுக்கு இடையே பத்து நிமிடங்கள் பிரேக் எடுத்து வாசிப்பதைத் தொடர்ந்தால் விரைவில் நீங்கள் வேகமாக வாசிக்கத் தொடங்கிவிட முடியும்.  2. எங்கு போனாலும் புத்தகங்களை எடுத்துச்செல்லுங்கள். புத்தகம் என்றல்ல கிண்டில் போன்ற இபுக் ரீடர்களை கைவசம் எடுத்துச் செல்லுங்கள். யாரையேனும் சந்திக்க காத்திருக்கும்போது கூட வாசிக்கலாமே!.  3. புத்தகம் பற்றிய செய்திகளை வழியாக அறிகிறீர்களா? ஜிமெயில் கணக்கு ஒன்றைத் தொடங்கி அச்செய்தியை இம்முகவரிக்கு அனுப்புங்கள். இப்படி அனுப்பி வைத்தால் நீங்கள் அடுத்தடுத்து வாசிப்பதற்கான பட்டியல் தயார். பின்னர் படித்து முடித்த செய்தியையும் இதில் பதிவு செய்யலாம்.  4. முடிந்தளவு டிஜிட்டல் பொருட்களைத் தவிர்த்துவிட்டு படிக்கத் தொடங்குங்கள். அப்போதுதான் எந்த அலைபாய்தலுமின்றி புத்தகங்களை நிதானமாக வாசிக்க முடியும். குழந்தைகள் இருந்தால், அவர்களுடன் விளையாடியபடி வாசிக்கக் கற்றுக்கொட

தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள் பரிந்துரைக்கும் படிக்கவேண்டிய நாவல்கள்! - சோம வள்ளியப்பன், திருப்பூர் கிருஷ்ணன், இந்துமதி, முகில் சிவா

படம்
              சென்னை புத்தக திருவிழா பக்கத்தில் வந்துவிட்டது . இந்த நிலையில் எழுத்தாளர்கள் சொல்லும் பல்வேறு நூல்பட்டியல் கவனம் பெறும் . ஆனால் இதனையே முழுக்க பின்பற்றுவது என்பது சரியானதாக இருக்கும் என்று கூறமுடியாது . எழுத்தாளர்களுக்கு அவர்களது கண்ணோட்டத்தில் சில நூல்கள் சரியான அரசியல் பார்வை கொண்டிருக்கும் . சிலருக்கு அது பிடிக்காமலும் இருக்கலாம் . இங்கு கூறப்படும் நூல்களையும் அப்படியே பார்ப்பது நல்லது . மிஸ் ஜானகி அண்ட் கல்யாணி எனக்கு தேவனோட நாவல்கள் தெய்வ வார்த்தைகள் போல . எழுத்து என்பதை யாராவது தொழிலாக எடுத்து செய்ய நினைத்தால் அவர்களுக்கு இந்த இரு நூல்கள் உதவும் . எனக்கு எழுத வராது வாசிக்க மட்டும்தான் என்றாலும் கூட அற்புதமான வாசிப்பு அனுபவத்தை தேவன் எழுத்துகள் தரும் . வி . திவாகர் , பத்திரிகையாளர் , வரலாற்று புதின எழுத்தாளர் . ரங்கநாயகி - பாரதி 1955 தொடங்கி நடைபெறும் கதையில் முக்கிய பாத்திரம் மணலூர் மணியம்மாள் . வரலாற்று பின்னணியில் சமூக பிரச்னைகளை பேசியிருக்கிறார்கள் . இந்த நூல் எனக்கு பிடித்துள்ளது . வரலாற்று நாவல்களில் இந்த நூல் முக்கிய இடம்

மக்களுக்கான உரிமைகளைக் கோரும் சுதந்திர புரட்சி நூலகங்கள்!

படம்
ozy சர்வாதிகாரத்தை எதிர்க்கும் நூலகங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியத் தலைநகர் டில்லியில் புரட்சி நூலகங்கள் தொடங்கப்பட்டன. இவை தமிழகத்தில் உள்ள அண்ணா நூலகம் போன்ற பிரமாண்டத்தைக் கொண்டவை அல்ல. ஆனால் சர்வாதிகாரத்தை எதிர்க்கும் சுதந்திர மனநிலை கொண்ட மனிதர்களுக்கானவை. இந்த நூலகங்களை ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் தொடங்கினர். கொரோனா பீதிக்கும் முன்புவரை இவை சுதந்திர மனநிலை கட்டற்ற பேச்சுரிமை ஆகியவற்றை வலியுறுத்தும் மனிதர்கள் வந்து செல்லும் இடங்களாக இருந்தன. அச்சமயத்தில்தான் காவல்துறை டாக்டர். ஜாகீர் உசேன் நூலகத்தில் உள்ளே நுழைந்து கண்ணீர் புகை குண்டுகளை வீசியது. மாணவர்களின் மீது அநீதியான முறையில் தடியடி நடத்தியது. இந்திய அரசின் பாரபட்சமான குடியுரிமை சட்டதிற்கு எதிரான போராட்டங்கள் நாட்டில் எங்கெங்கு நடந்தனவோ, அங்கு போராட்டத்தின் ஒரு பகுதியாக புரட்சிகர நூலகங்கள் தொடங்கப்பட்டன. இப்படி கான்பூர், நாக்பூர், சம்பால், உதயகிரி உள்ளிட்ட பல்வேறு சிறு நகரங்களில் புரட்சிகர நூலகங்கள் உருவாக்கப்பட்டடன. நாங்கள் எங்களது நூலகங்களை அரசியல

வாசிக்கவேண்டிய சாகச நூல்கள்!

படம்
பலரும் கொரோனா பாதிப்பால் தனிமையாக இருக்கும்படி நேரலாம். மேற்குலகில் தனியறையில் என்றால் இந்தியாவில் இங்கு குடும்பமே ஒன்றாக உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டிருக்கும். டிவியில் படங்கள் சுவாரசியமாக இருந்தாலும் நூல்களைப் போன்ற அனுபவங்களை திரைப்படங்கள் தருவது இல்லை. சில சுவாரசியமான திரில் தரும் நூல்களைப் பார்ப்போம். லத்தீன் குடும்பத்தில் பிறந்த அமெரிக்காவைச் சேர்ந்தவர் நோ ஆல்வாரெஸ். இவரது குடும்பத்தில் கல்லூரி படிக்கட்டில் கால் வைத்த முதல் ஆள் இவர். கனடா தொடங்கி குவாத்திமாலா வரை ஓடத்தொடங்கினார். இதன்பிறகுதான் அல்ட்ரா மாரத்தான்கள் பிரபலமாயின. இதுதொடர்பான அனுபவங்களை இந்த நூல் பேசுகிறது. அமெரிக்காவில் உள்ள தேசியப் பூங்காக்களுக்கு இப்போது போக முடியாது. அதற்காக அப்படியே விட்டுவிட முடியுமா? அதற்குத்தான் அந்த பூங்காக்களின் சிறப்பு என்ன, அங்குள்ள தாவர வகைகள் ஆகியவற்றைப் பற்றி அறிய இந்த நூல் உதவும். மியாமியிலுள்ள வின்வுட் வால்ஸ் என்ற இடம் பிரபலமானது. இந்த இடத்தில் பல்வேறு கலைஞர்கள் சுவர் ஓவியங்களை வரைந்திருப்பார்கள். அதனை படம் எடுக்க இளைஞர்கள் அலைமோதுகின்றனர். இங்கு சுவரோ

பில்கேட்ஸிற்கு பிடித்த புத்தகங்கள்!

படம்
ஆளுமைகள் என்ன படித்தார்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ள நினைப்போம். சிலர், அவர்கள் என்ன படித்தார்களோ அதை அப்படியே படித்து டெவலப் ஆவோம் என நினைப்பார்கள். சரியோ, தவறோ நூலில் படித்து தெரிந்துகொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்பது உண்மை. ஆண்டுதோறும் பில்கேட்ஸ் தான் படித்த நூல்களை மக்களிடம், ஊடகங்களிடம் பகிர்ந்துகொள்வார். அப்படி சில நூல்களை இந்த ஆண்டும் படித்ததாக கூறினார். An American Marriage , Tayari Jones அமெரிக்காவின் மேற்கு பகுதியில் வாழும் கருப்பின தம்பதிகளின் காதல் வாழ்க்கையை பேசும் நாவல். பெரிதாக எதிர்பார்க்க ஏதுமில்லை. ஆனால் கருப்பினத்தவர் ஒருவருக்கு அவர் செய்யாத குற்றத்திற்கு விதிக்கப்படும் தண்டனை அவர் வாழ்க்கையை எப்படி சிதைக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். பெரிய நூல்களைப் படிக்கும்போது கூடவே இது போன்ற மென்மையான நாவல்களை படிக்கவேண்டும் என்கிறார் கேட்ஸ். These Truths: A History of the United States , Jill Lepore அமெரிக்காவின் வரலாற்றில் அந்நாட்டை அசைத்துப் பார்த்த வரலாற்று நிகழ்வுகளை நியூயார்க்கர் பத்திரிக்கையின் பத்திரிகையாளர் ஜில் தொகுத்துள்

வேகமாக வாசிப்பது என்பது உண்மையா?

படம்
தெரிஞ்சுக்கோ! எனக்குத் தெரிந்த நண்பர் இதழியில் துறையில் பணியாற்றுகிறார். மாதம் அறுபது எழுபது நூல்களை படித்து முடிப்பவர். அவர் எப்படி படிக்கிறார் என்பதை நான் எவ்வளவு முயன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அப்படி வாசிப்பது பற்றியும், அவரது அறிவுத்திறன் பற்றியும் எனக்கு எந்த சந்தேகமுமில்லை. அவர் படித்த விஷயங்களை நிறைய முறை அவரது நிறுவனத்தில் அமல்படுத்தி சாதித்திருக்கிறார். எப்படி இப்படி சிலரால் மட்டும்  வேகமாக படிக்க முடிகிறது. இயல்பிலேயே வாசிக்கும் பழக்கம் கொண்டவர்கள் நிறைய படிக்கும் முடிவெடுப்பது முக்கியம். அப்போதுதான் படிக்கும் வேகம் கைகூடும். அதற்காக மூளை இயல்பாக குறிப்பிட்ட வார்த்தைகளை நினைவகத்தில் பதிவு செய்து வைத்திருக்கும். இதனால் குறிப்பிட்ட வார்த்தைகளை முழுமையாக படிக்காமலேயே உங்களுக்கு அதுதான் என தெரிந்துவிடும். பின் எதற்கு, அதனைப் படிக்கவேண்டும்? இதனை சில ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். சிலர் இப்படி வேகமாக படிப்பவர்கள் ஒன்றும் விவேகானந்தர் போல கிடையாது என்று வாதிடுகிறார்கள். உலகளவில் கல்லூரி படிக்கும் மாணவர்கள் நிமிடத்திற்கு 200 முதல் 400 வரையிலான வார்த்தை

அமானுஷ்யத்தை அள்ளிவழங்கும் தேவமோகினி!- கோட்டயம் புஷ்பநாத் ஸ்பெஷல்

படம்
தேவமோகினி கோட்டயம் புஷ்பநாத் தமிழில் சிவன் கேரளத்தின் பழமையான கோவிலகம் அது. நம்பூதிரிகள் வாழ்ந்த இடம். பாழ்பட்டு கிடக்கிறது. அதனை சந்திரமோகன் என்பவர் காசுகொடுத்து வாங்குகிறார். பல்வேறு இடங்களிலுள்ள கோவிலக சிலைகளை கொண்டு வந்து வீட்டில் கண்காட்சி போல அடுக்குகிறார். அப்போது அதன் கொடுமையான விளைவுகள் அவருக்கு தெரியவில்லை. ஆனால் பின்னர், தெரியவரும்போது அவற்றைக் காக்கும் பெரும் பொறுப்பு வந்து சேருகிறது. அவர் என்ன முடிவெடுக்கிறார் என்பதுதான் கதை. முதல் அத்தியாயம் முதலே பரபரப்பு தொடங்கிவிடுகிறது. சந்திரமோகன், அமைதியாக வாழ விரும்புபவர். ஆனால் அங்குள்ள ராஜசேகரன் உள்ளிட்டோருக்கு அவர் புகழ்பெறுவது பிடிக்கவில்லை. எனவே, கிரகப்பிரவேசத்திற்கு அழைப்பிதழ் வழங்காத அவரை அங்கேயே கொல்ல நினைக்கிறார்கள். அந்த திட்டத்தை எளிமையாக தடுக்கிறாள் அங்கு வசிக்கும் தேவ மோகினி. இவள் மட்டுமல்ல அங்கு வசிப்பது. சந்திரமோகனின் உயிரைப் பறிக்கும் வேகம் கொண்ட பைசாச சக்திகளை மிக எளிதாக விலக்கிக் காக்கிறது அங்குள்ள சில சக்திகள். அவை ஏன் அப்படிச் செய்கின்றன? அதன் பின்னாலுள்ள ரகசியங்கள் என படித்தால் கதை முடிந்துவ

வாசிப்பை மேம்படுத்தலாம் ஈசியாக. ...

படம்
வாசிப்பை மேம்படுத்துவோம்! வாசிப்பை மேம்படுத்த மாதம் ஒரு புத்தகம் என படித்தால் ஆண்டுக்கு பனிரெண்டு புத்தகங்களை உங்களால் படிக்க முடியும். தினசரி நூலில் பத்து முதல் 20 பக்கங்கள் வரை  படிப்பதை இயல்பாக்கிக் கொண்டால் இது சாத்தியமாகும்.  மாதம்தோறும் சந்தையில் நூற்றுக்கணக்கான நூல்கள் வெளியாகின்றன. அத்தனை நூல்களையும் படிப்பது சாத்தியம் கிடையாது.  மாதம்தோறும் படிப்பதற்கான நூல்களைத் தேர்ந்தெடுத்து பட்டியலிட்டு படியுங்கள். நூல்களைப் பற்றிய கருத்துகளை எழுதி வையுங்கள். இதன் மூலம் திரும்ப நூல்களைப் படிக்காமல் இந்த குறிப்புகளை படித்தாலே நூல் நினைவுக்கு வந்துவிடும்.  தினசரி அலுவலகம் வரும் வழியில் படிப்பதற்கு ஏதுவான இபுக் ரீடர், மொபைல் ஆப்களைப் பயன்படுத்தலாம். இதன்மூலம் புத்தகங்களை சுமக்கும் தேவை குறைகிறது.  இலட்சக்கணக்கான நூல்களை ஸ்மார்ட்போனில், டேபில் தரவிறக்கி படிக்க முடியும்.  புத்தகங்களை இலக்கு வைத்து படிப்பதோடு, அதனை பிறரிடம் பகிர்ந்துகொள்வதும் அவசியம். அப்போதுதான் வாசிப்பில் ஊக்கம் பெறமுடியும். இதற்காக புத்தக கிளப், நூலக வாசகர் வட்டம் என பல்வேறு இடங்களிலும் கலந

வாசிப்பு மற்றும் பொருளாதாரம் பிட்ஸ்!

படம்
பிட்ஸ்! வாசிப்பு நவீன தலைமுறை இளைஞர்கள்  92% சதவீதம் பேர் தங்களுக்குப் பிடித்த விஷயங்களைக் குறித்து இணையத்தில் தேடிப் படிக்கின்றனர். இவர்களின் இணைய வாசிப்பு என்பது இவர்களின் பெற்றோர்களை விட அதிகம். பதிப்பகத்துறை சரிவடைந்து வருவதாக பலர் கூறுகின்றனர். ஆனால், புதிய தலைமுறை வாசகர்களால் கடந்த ஐந்து ஆண்டுகளில் 1 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது உண்மை. அமெரிக்கர்கள் தனிநபராக நூலுக்குச் செலவிடும் தொகை 110 டாலர்கள். படிக்கச் செலவிடும் தோராய நேரம் 15.6 நிமிடங்கள். ஆண்டுக்கு ஒரேயொரு புத்தகம் படித்த அமெரிக்கர்களின் சதவீதம் 74. பொருளாதாரம் ஆர்பிஐ யின் இலச்சினை, கிழக்கிந்திய கம்பெனியின் இலச்சினையான Double Mohur ஐ முன்மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. ஆர்பிஐயின் நிதி ஆண்டு என்பது நடப்பு ஆண்டின் ஜூலை 1 முதல் அடுத்த ஆண்டு ஜூன் 30 வரை ஆகும். ரிசர்வ் வங்கியின் முதல் துணை ஆளுநராக(2003) நியமிக்கப்பட்ட பெண்மணி, கே.ஜே. உதேசி(KJ Udeshi). 1938 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி, 5 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பணமதிப்பு நீக்கம் செய்தது. நன்றி: பிரின்ச்.காம், ஸ்டேட்ஸ்டா.காம்

டிஜிட்டலில் வாசிப்பு பழக்கம் வீழ்கிறதா?

படம்
வாசிப்பு வீழ்கிறதா? ஜீன்ஸ் பாக்கெட்டுகளில் வைக்கமுடியாத சைசிலுள்ள ஸ்மார்ட்போன்கள்தான் யூத்களின் ஒரே ஆயுதம். வாசிப்புக்கு இபுக் முதல் வைரல் வீடியோக்கள் வரை போன்களை உதவும் போது தனியே புத்தகங்கள் எதற்கு? 2006-2016 காலகட்டம் வரை இளைஞர்கள் டிஜிட்டல் ஊடகங்களில் செலவிடும் நேரம் அதிகரித்துவருகிறது. பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களிடம் நடத்திய சர்வேயில் பத்தில் ஒன்பதுபேர் தினசரி சமூகவலைதளங்களை பார்க்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. எட்டாம் வகுப்பு மாணவர்களில் பத்தில் ஒருவர் வாரத்திற்கு 40 மணிநேரங்கள் வீடியோ கேம்களை விளையாடியுள்ளனர். பொதுவாக ஐஜென் எனும் 1995 ஆம் ஆண்டுக்குப் பின் பிறந்தவர்கள் பால்யத்தை ஆக்கிரமிப்பு ஸ்மார்ட்போன்களின் திரைகள்தான். 1980 களில் 60 சதவிகிதமாக இருந்த வாசிப்பு பழக்கம், இன்று 16 சதவிகிதமாக மாறியுள்ளது. சமூகத்தோடு இளைஞர்கள் தொடர்புகொள்ளும் இடைமுகமாக போன்களே உள்ளன. தினசரி இரண்டு மணிநேரம் என போன்களை பயன்படுத்துவது தவறல்ல; மனதை ரிலாக்ஸ் செய்ய பாடல்களோ அல்லது நூல்களை நாடுவது மனதின் பிரச்னைகளையும் சரிசெய்யும்.