இடுகைகள்

விவசாயம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அத்தியாவசியப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட பொருட்கள் மூலம் விவசாயிகளுக்கு நன்மைதான்! - சஞ்சய் அகர்வால்

படம்
விவசாயத்துறை செயலாளர், சஞ்சய் அகர்வால் வணிகத்திற்கு உருவாக்கப்பட்டுள்ள விதிகள் விவசாயிகளுக்கு எப்படி உதவும்? நமது நாடு தற்சார்பு கொண்டதாக உருவாக விவசாயிகளின் பங்கு முக்கியமானது. விவசாயிகள் நிலப்பரப்பு சார்ந்த அறிவும், திறனும் கொண்டவர்கள். இவர்கள், நம் நாடு உணவு பாதுகாப்பும், தன்னிறைவும் பெற முக்கியமானவர்கள். தற்போதுள்ள சட்டங்கள் மூலம் தானியங்களை மாநிலத்திற்குள்ளும், வெளிமாநிலத்திற்கும் கூட அவர்கள் விற்கலாம். இதன் காரணமாக, பொருட்கள் வீணாகாது. ஏபிஎம்சி அமைப்பின் உதவியால் விவசாயிகளுக்கு சரியான விலையும் கிடைக்கும். இந்த சட்டம், மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்த விவசாயத்தை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருவதாக பஞ்சாப் அரசு கூறியிருந்ததே? மத்திய அரசு சட்டத்திற்கு உள்பட்டே இந்த உத்தரவை பிறப்பித்து இருந்தது. இதன்காரணமாக விவசாயத்தின் மீதுள்ள மாநிலங்களின் உரிமை பறிபோகாது. ஒப்பந்த முறையில் விவசாயம் செய்பவர்களுக்கு என்ன கிடைக்கும்? இதுநாள் வரை பணப்பயிர்களை பயிரிட்டு வந்தவர்களுக்கு அதில் நஷ்டம் ஏற்பட்டால் விவசாயிகள்தான் ஏற்று வந்தனர். அதனை நாங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கைமாற்றிய

உணவு வேட்டையர்கள்! - நாடுகளைச் சூறையாடும் வெட்டுக்கிளிகள்

படம்
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளை வெட்டுக்கிளிகளின் கூட்டம் சூறையாடி வருகிறது. கென்யா, எத்தியோப்பியா, சோமாலியா ஆகிய நாடுகளை தற்போது வெட்டுக்கிளிகள் தாக்கி அங்குள்ள உணவுப்பொருட்களை அழித்து வருகின்றன.ஏற்கெனவே கடுமையான பஞ்சத்திலும், பொருளாதார தடுமாற்றத்திலும் உள்ள இந்த நாடுகள் மேலும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளன. வறட்சி நிரம்பிய பருவகாலம் வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என ஐ.நா சபை எச்சரித்தது உண்மையாகிவிட்டது. ஒருநாளில் வெட்டுக்கிளிகள் பிரான்ஸ் நாட்டு மக்கள்தொகையின் அளவுக்கான உணவை தின்று தீர்க்கின்றன. வெட்டுக்கிளியின் ஆயுள் ஐந்து மாதங்கள் என்றாலும், அதற்குள் ஓவர்டைம் வேலை பார்த்து தன் இனத்தை பெருக்குவது இவற்றின் பலம். வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த கென்ய அரசிடம் காசு கிடையாது. இதற்காக ஐ.நா சபையிடம் நிதியுதவியாக 20 லட்ச ரூபாய் கேட்டது. தற்போது இத்தொகை அறுபது லட்சரூபாயாக உயர்ந்துள்ளது. காலம் அதிகமாகும்போது அதைக் கட்டுப்படுத்துவதற்கான தொகையும் அதிகரிக்கும். வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்துவது சாதாரண காரியமல்ல. மேலும் இவற்றை கண்காணிப்பதும் கடினம். தினசரி 150 கி.மீ தூரம் பயண

விவசாயத்திற்கு உதவும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் - ஒரு பார்வை!

படம்
செல்வக்குமார் வரதராஜன்- இடதிலிருந்து இரண்டாவதாக.. விவசாயத்திற்கு உதவும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொன்மையான விதை, பூச்சிக்கொல்லி நிறுவனங்களிலிருந்து ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மாறுபடுவது, மக்களின் தேவைகளை எளிதாக தீர்த்து வைப்பதில்தான். இதனால் அவை வெற்றிகரமான நிறுவனங்களாக மாறுகின்றன.  பிரதமர் மோடி விவசாயிகளின் வருமானத்தை 2022க்குள் இரட்டிப்பாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். அவரின் நம்பிக்கைக்கு ஊக்கமூட்டும் விவசாய நிறுவனங்கள் இதோ... VilFresh 2016ஆம் ஆண்டு கோவையைச் சேர்ந்த செல்வக்குமார் வரதராஜன் தொடங்கிய ஸ்டார்ட்அப் நிறுவனம் இது. கிராம மக்களிடம் இருந்து பால் பொருட்களைப் பெற்று நகரங்களில் விற்று, அம்மக்களுக்கு உதவுகிறது. இம்முறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் இரண்டாயிரம் பேர்களுக்கு மேல் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. தனது சிறப்பான செயற்பாடு காரணமாக, அண்மையில் 1.15 கோடி ரூபாய் முதலீட்டைப் பெற்றுள்ளது.  விவசாயிகளை மேம்படுத்துவதும், கிராமத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதும், நகரத்தினரை எங்களது பொருட்களின் மூலம் ஆச்சரியப்படுத்துவதும்தான் எங்கள் நோக்கம் என்றார் செல்வக்குமார்.

சீனாவிடம் கற்போம் - விவசாயத்தில் சிறக்கும் டிராகன் தேசம்!

படம்
giphy.com விவசாயத்தில் சீனாவிடம் இருந்து என்ன கற்கலாம்? இனி இந்தியாவுக்கு பாகிஸ்தான் பொருட்டில்லை. பாகிஸ்தான் பொருளாதார சிக்கலில் மூழ்கிவிட்டது. அதன் பட்ஜெட்டை விட இந்தியாவின் பட்ஜெட் அதிகம், வளர்ச்சிக்கான வேகமும் அதிகம். சீனாவைப் பார்ப்போம். சீனா, இந்தியர்களை விட குறைவான நிலத்தில அதிகளவு விவசாயம் செய்து உற்பத்தியை பெருக்கியிருக்கிறார்கள். நாம் 407 பில்லியன் உற்பத்தி என்றால் சீனர்கள் 1367 பில்லியன் டாலர்கள் மதிப்பில் உற்பத்தி செய்து வருகிறார்கள். சீனர்கள் 41 சதவீத நிலத்திலும், இந்தியர்கள் 48 சதவீத நிலத்திலும் விவசாயம் செய்து வருகிறார்கள். காரணம் சீனர்கள் ஆராய்ச்சிக்கு மட்டும் 7.8 பில்லியன் டாலர்களை செலவு செய்கின்றனர்.இந்தியாவில் இதன் அளவு 1.4 பில்லியன் டாலர்களாக உள்ளது. அப்புறம் எப்படி முன்னேற்றம் சாத்தியமாகும்? இந்தியாவில் இதுதொடர்பாக நடந்த ஆய்வில் விவசாயத்துறையில் செய்யும் 11.2 ரூபாய், முன்னூறுக்கும் மேற்பட்டவர்களை வறுமையிலிருந்து வெளியே கொண்டு வரும் என்று கூறுகிறது. 1990களில் நடந்த தாராயமயமாக்கள் அந்நிய முதலீடுகளை அதிகரித்தது. வியட்நாம் ரேஷரை நாம் பயன்படுத்த வைத்தத

எரிமலை அருகே மக்கள் வாழ்வது ஏன்?

படம்
குவாத்திமாலா, அகுவா எரிமலை ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி எரிமலையின் அருகே மக்கள் வாழ்வது எதற்காக? செல்ஃபீ எடுப்பதற்காக அல்ல மக்களே. அங்குதான் விவசாயம், சுற்றுலா என அனைத்து விஷயங்களும் எளிமையாக கிடைக்கிறது. ஜப்பான், இந்தோனேஷியா, ஃபிஜி ஆகிய தீவுகளில் எரிமலையின் பெருமையை நீங்கள் காணலாம். ம எரிமலைக்குழம்பு என்பதை காரம் அதிகமாக வைத்த காரக்குழம்புடன் ஒப்பிட்டு நாம் திகிலாகிறோம். ஆனால் ஐஸ்லாந்து காரர்கள் தங்கள் நாட்டிலுள்ள ஹெக்லா எரிமலையை தங்களது பாரம்பரிய பெருமையாக நினைக்கிறார்கள். இன்றும் உலகில் இயங்கி வரும் எரிமலைகள்    Fuji, Vesuvius, Mt. St. Helens, or even Iceland's infamous Eyjafjallajökull   இவைதான். இவை அனைத்தின் அருகிலும் கணிசமான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.  எரிமலைகள்தான் உலகின் நிறைய இடங்களில் புது குடியேற்றங்களை உருவாக்கின என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். சாகச வாழ்க்கை வாழ விரும்புபவர்கள் இதுபோன்ற வாழ்கையைத் தேர்ந்தெடுக்கலாம்.  நன்றி: க்யூரியாசிட்டி

பனைமரங்கள் விதைப்பு பெருநாட்டில் நிறுத்தப்படுகிறது!

படம்
காடுகள் அழிப்பில் பாமாயில் பங்கு! பெரு, கொலம்பியா நாட்டுக்கு அடுத்தபடியாக சூழல் கெடாமல் பனை மரங்கள் நடுவதாக ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய வைல்ட்லைஃப் ஃபெடரேஷன், உள்ளூர் அரசுகளோடு சேர்ந்து காடுகளைப் பாதுகாப்பதாக ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது. ஒப்பந்தம் அமலுக்கு வந்தால் 2021ஆம் ஆண்டு பெரு நாடு, பாமாயிலுக்காக காடுகள் அழிக்கப்படுவதிலிருந்து விடுதலை பெறும்.  இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முயற்சிப்போம் என ஜூன்பால்மா எனும் பாமாயில் விற்பனைச் சங்கத்தைச் சேர்ந்த கிரிகோரியோ சென்ஸ் கூறியுள்ளார். பெருவில் 86 ஆயிரம் ஹெக்டேர்களின் பனைமரங்கள் பாமாயிலுக்காக விதைக்கப்பட்டுள்ளன. தற்போது, 31500 ஹெக்டேர்கள் புதிய பனைமரங்கள் விதைக்கப்பட உள்ளன. “காடுகள் அழிப்பைத் தடுப்பதில் அரசு, தனியார் நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்கள் ஒன்றுபட்டால் மட்டுமே மாற்றங்கள் சாத்தியம். அந்த வகையில் இது ஒரு புது முயற்சி. மாற்றங்கள் நடக்கும் என நம்புகிறோம்” என்கிறார் தேசிய வைல்ட்லைஃப் ஃபெடரேஷனைச் சேர்ந்தவரான  சகோன். பெரு நாட்டில் ஆண்டுதோறும் 1100 சதுர மைல் காடுகள் அழிக்கப்பட்டு விவசாய நிலங்

பயிர்களை அழிக்கும் ஆர்மிபுழுக்கள்!

படம்
ஆர்மிவார்ம்ஸ் என்று அழைக்கப்படும் புழுக்கள் இவை. கம்பளிப்புழுக்களை விட அதிக பசி கொண்டவை.  Spodoptera frugiperda  எனும் பெயரைக் கொண்ட இவை, அர்ஜென்டினா முதல் புளோரிடா வரை ஏராளமான விவசாய நிலங்களை அழித்துள்ளன. ஒரேநாள் இரவு போதும், நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்களை அழிக்க. அப்படியொரு வேகமாக பயிர்களை சாப்பிட்டு வளரும் லார்வாக்களைக் கொண்ட புழுக்கள் இவை.  பதினான்கு நாட்கள் மட்டுமே இப்புழுக்கள் உயிர்வாழும்.  குறிப்பாக கோடையில் மட்டுமே தோன்றி வளர்ந்து அழியும்.  2. பெண் புழு, பத்து நாட்களில் 1500 முட்டைகளை இடுகிறது. ஒருநாளில் உணவுக்காக நூறு முதல் 500 கி.மீ. தூரம் வரை இந்த புழுக்கள் ஊர்ந்து செல்கின்றன.  3. ஆண்டுதோறும் இந்த புழுக்களிடமிருந்து பாதுகாக்க பிரேசில் அரசு 600 மில்லியன் டாலர்களை செலவு செய்கிறது.  4. ஆப்பிரிக்காவில் இந்த ஆர்மி புழுக்களால் 50 சதவீதம் வரை பயிர்கள் நாசமாவதாக கூறுகின்றனர். 5. 2018 ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில் இந்த புழுக்களால் ஏற்பட்ட நாசத்தின் மதிப்பு 6 பில்லியன் டாலர்கள்.  6. இப்புழுவின் நீளம் 2.5 செ.மீதான்.  இப்புழுக்களிடமிருந்தும் பூச்சிகளிடமிருந்தும் த

உணவு உற்பத்தி சரியக் காரணம் என்ன?

படம்
Sadhguru உணவு உற்பத்தி குறைகிறதா? பல்லுயிர்த்தன்மை கொண்ட காடுகள் அழிவால், உணவு உற்பத்தி சரிவைச் சந்தித்துள்ளதாக ஐ.நா அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது.  உலகிலுள்ள பல்லுயிர்த்தன்மையை பாதுகாக்கும் காடுகள் அழிந்துவருவதால், ஆண்டுதோறும் உற்பத்தியாகும் உணவின் அளவு குறைந்து வருவதாக ஐ.நா அறிக்கை சுட்டிக்காட்டி எச்சரித்துள்ளது.  தற்போது, பயிர்கள் பயிரிடும் பரப்பு 20 சதவீதம் அழிவைச் சந்தித்துள்ளது. இருபதே ஆண்டுகளில் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது என்று அறிக்கை அழுத்தமாக கூறியுள்ளதை நாம் கவனிக்கவேண்டும். காடுகள், பவளப்பாறைகள், சதுப்புநிலக்காடுகள், புல்வெளி நிலங்கள் ஆகியவை அழிவையும் ஐ.நா அறிக்கை கவனத்தில் கொண்டுள்ளது. உணவுச்சங்கிலியில் எவையும் விதிவிலக்கானவை அல்ல. பறவைகள் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை உண்கின்றன. சதுப்புநிலக் காடுகள் நீரினை சுத்திகரிக்கின்றன.  உலகிலுள்ள 91 நாடுகள் இணைந்து செய்த ஆராய்ச்சி அறிக்கைகள் மூலம் இயற்கைச்சூழலின் பாதிப்புகள் மக்களுக்கு தெரிய வந்துள்ளன. அழிந்த பரப்பில் 63 சதவீத தாவரங்கள், 11 சதவீத பறவைகள், 5% சதவீத மீன்கள் மற்றும் பூஞ்சைகள் ஆகியவை உள்ளடங்கும்.  இதில்

அன்டார்டிகாவில் விளைகிறது வெள்ளரிக்காய்!

படம்
அன்டார்டிகா சாலட் ! அன்டார்டிகாவில் விளைவித்த வெள்ளரிக்காய் , கீரைகளை ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் பறித்து வந்து உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர் . " தோட்டத்திலிருந்து பறித்து வந்தது போல புத்துணர்ச்சியான சுவை " என்கிறார் ஆராய்ச்சியாளர் பெர்ன்ஹார்ட் கிராப் . அன்டார்டிக்காவில் அமைக்கப்பட்டுள்ள நியூமேயர் ஸ்டேஷனில்தான் கீரைகளை விளைவித்திருக்கிறார்கள் . நானூறு மீட்டரில் அமைக்கப்பட்டுள்ள EDEB ISS என்ற பசுமைவீட்டில் காய்கறிகளை நுட்பதாக விதைத்து அறுவடை செய்திருக்கிறது ஆராய்ச்சியாளர்கள் குழு . எதற்கு இந்த ஆராய்ச்சி , எதிர்காலத்தில் செவ்வாய் உள்ளிட்ட கோள்களுக்கு சென்றால் விவசாயம் செய்தால்தானே உயிர்பிழைக்க முடியும் ? அதற்கான ஒத்திகைதான் இது .