இடுகைகள்

ரீசைக்கிள் சுகாதார புரட்சி -ச.அன்பரசு

படம்
ரீசைக்கிள் சுகாதார புரட்சி - ச . அன்பரசு இந்தூர் சுகாதாரத்தின் முதலிடம் பிடித்தது எப்படி ? கொண்டாடுகிற நிஜம்தான் . மத்திய பிரதேசத்தின் கமர்ஷியல் நகரங்கள் போபால் , இந்தூர் . இதில் இந்தூரில்தான் க்ளீன் அண்ட் கிளியர் மேஜிக் நடந்துள்ளது . நகரங்கள் பொதுவாக எப்படியிருக்கும் ? மிக்சர் பாக்கெட்டுகள் , வேர்க்கடலை பொட்டலங்கள் , மதுபாட்டில்கள் , பிளாஸ்டிக் டம்ளர்கள் , அழுகிய பழங்கள் , மீந்துபோன பிரியாணி , இறைச்சி கழிவுகளிலுள்ள எலும்புகளுக்கு போரிடும் தெருநாய்கள் , மொய்க்கும் ஈக்கள் படை என்பது அஷ்டலட்சணங்கள் கொண்ட மினி டூ மெகா நகரங்களில் நாம் காணும் ரெகுலர் காட்சி . ஆனால் இந்தூரில் இக்காட்சிகளை பைனாகுலர் வைத்து தேடினாலும் காணக்கிடைக்காது . தன் புல்லட் வேக அதிரடி பிளான்களால் , சுகாதாரத்தில் 86 இடத்திலிருந்த இந்தூரை இரண்டே ஆண்டுகளில் ஸ்வட்ச் பாரத் லிஸ்டில் நம்பர் 1 இடத்திற்கு கொண்டுவந்திருக்கிறார் முனிசிபாலிட்டி கமிஷனர் மனிஷ் சிங் . 2009 ஆம் ஆண்டு ஐஏஎஸ் ஆன மனிஷ்சிங் , மத்திய பிரதேசத்தின் போபால் , இந்தூர் இரண்டு நகரங்களுக்கும் 2015 ஆம் ஆண்டு முனிசிபல் கமிஷனரானதிலி

கேலக்ஸி உருவானது எப்படி? -ச.அன்பரசு

படம்
கேலக்ஸி உருவானது எப்படி ? - ச . அன்பரசு உங்கள் செல்லக்காதலிக்கு கோன் ஐஸை வாங்கி ஊட்டிவிட்டு காசு கொடுக்கும்போது , மனைவி உங்களை பர்சேஸிங்குக்காக சாலையில் இழுத்துப்பிடித்து சிக்னலில் க்ரீன் விழ காத்திருக்கும்போது ,  மன்த் எண்டில் நண்பணுக்கு இருபது ரூபாய் கடன் கொடுக்கலாம் என்று நினைக்கும்போது திடீரென உங்கள் உருவம் துகள்களாக மறைந்தால் எப்படியிருக்கும் ? சுஹானுபவம் என பதில் சொல்வீர்கள் . பாஸ் ! நாம் உருவானதே அப்படித்தான் என அதிரடிக்கிறார்கள் அமெரிக்க வானியல் ஆராய்ச்சியாளர்கள் . பால்வெளியில் தொலைதூர விண்மீன் கூட்டத்திலிருந்து பெருவெடிப்பு ஏற்பட்டதால் , காற்றுவழியாக பரவிய துகள்களின் வழியாக அகதிகளாக அல்லது பயணிகளாக வந்தவர்கள்தான் மனிதர்கள் என்று கூறுகிறது இந்த அதிரடி ஆய்வு . காற்று கடுகளவும் இல்லாத இடத்தில் எப்படி நிகழ்ந்திருக்கும் பெருவெளி வெடிப்பு ? பால்வெளியில் உள்ள வாயுத்துகள்கள் ஒரு நொடிக்கு பல கி . மீ வேகத்தில் வீண்மீன் கூட்டத்தின் மீது தடார் என்று ஹைஸ்பீடில் மோத , நட்சத்திரங்கள் அந்த வேகத்தால் பிளக்கப்பட்டு இதில் வெளியான போட்டான்கள் வாயுக்களோடு இணைந்து பல்வேறு

கோமாளிமேடை ஸ்பெஷல்ஸ்!- ரோனி

படம்
இது ஜிஎஸ்டி பேபி !  இன்று ஊரின் வாய்க்கு கிடைத்த கிலோ கணக்கிலான அவல்   ஜிஎஸ்டி மேட்டர்தான் . கடந்த 30 ஆம் தேதி நள்ளிரவில் அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை பின்னாளில் மக்கள் மறந்தாலும் ஜிஎஸ்டி என்ற பெயரை யாரும் மறக்கமுடியாதபடி ராஜஸ்தான் பெண்மணி செய்துவிட்டார் . அப்படி என்ன செய்தார் ? மாநிலத்திலேயே முதல் ஆளாக ஜிஎஸ்டி கட்டிவிட்டாரா ? இல்லை இது அதுக்கும் மேல் வேற லெவல் !   ராஜஸ்தானின் பேவா கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு ஜூலை 1 அன்று நள்ளிரவு 12.02 மணிக்கு மிகச்சரியாக குழந்தை பிறந்தது . அதேசமயம் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியும் அதிரடியாக அமலாகி ஊரே அதைப்பற்றி பேசத்தொடங்க , ஜிஎஸ்டியை விட ஃபேமஸாக வேறு பெயர் எதற்கு ? என தன் குழந்தைக்கும் ஜிஎஸ்டி என சிம்பிளாக பெயர் வைத்துவிட்டார் இந்த ராஜஸ்தான் தாய் . தகவல் கசிந்தால் விடுவார்களா காவி பாய்ஸ் ? உடனே ட்விட்டரில் வாழ்த்துகளை குவித்ததோடு , ஜிஎஸ்டியின் சக்திக்கு இதுவே சாட்சி என இக்குழந்தையின் பிறப்பையும் ராஜஸ்தான் மாநிலமே கொண்டாடத் தொடங்கிவிட்டதுதான் மிரட்டல் . தெறி பேபி !    இந்தியன்போலீசின் வீரச்செயல் ! மத்தியப்பிரதேசத

பிட்ஸ்! - கா.சி.வின்சென்ட்

படம்
பிட்ஸ் எக்ஸ்பிரஸ் ! ரொம்ப யோசிப்பவர்களுக்கு பெரிய மூளை இருக்கவேண்டுமா ? நீரில் ராஜாங்கம் நடத்தும் முதலைகளின் மூளை எடை 8.4 கி . கி . இதனோடு ஒப்பிட்டால் மனிதர்களுடைய மூளை எடை சராசரியாக 1.3 கி . கி . ஜெல்லி மீன்களின் உடலில் இதயம் , எலும்புகளை தேடினாலும் கிடைக்காது . 95% நீரினால் ஆனது இம்மீன் . சுறாக்கள் வாரத்திற்கு ஒரு பல்லை இழக்கிறது ஏன் தெரியுமா ? பல்லை இறுக்கமாக பிடிக்க அவற்றுக்கு ஈறுகள் கிடையாது . விழுந்தாலும் நோ பிராப்ளம் , அடுத்தநாளே பல் முளைக்கத்தொடங்கிவிடும் . விண்வெளிக்கு பறவைகளை கொண்டுசெல்லும் சிம்பிள் சூப்பர் பிளானை நாசா முயற்சித்து தோற்றுப்போனது . என்னாச்சு ? பறவைகள் உணவை விழுங்க பூமியில் ஈர்ப்புவிசை இருக்கும் . விண்வெளியில் என்ன செய்வது ? நரி தன் சகோதரர்களான நாய் , ஓநாய்கள் போல ஏராளமான உறுப்பினர்களை கொண்டதல்ல .  முடிந்தவரை தனியாகவே வாழ விரும்பும் பிரைவசி விலங்கு நரி .    நன்றி: முத்தாரம் வார இதழ்

கன்சர்வேஷன் இந்தியா! - இணைந்த கைகள்- ச.அன்பரசு

படம்
இணைந்த கைகள் - கன்சர்வேஷன் இந்தியா உருவாக்கிய இரு நண்பர்களின் கதை . சேகர் தத்தாரியா இன்றைய ட்ரெண்டிங்கில் வீக் எண்ட் பிளானில் இரு நண்பர்கள் ஒன்றாக சந்தித்தால் என்ன நடக்கும் ? விக்ரமன் படம் போல ஈஸியாக யூகிக்க கூடியதுதான் . கத்தரிக்காய் சட்னியோடு பிரியாணி சாப்பிட்டு பாட்டில் எடுத்து கொண்டாடுவார்கள் . சிச்சுவேஷன் அதேதான் . ஆனால் ஸ்டோரிதான் வேறு மாதிரி . இரு நண்பர்களின் சந்திப்பில் வனங்களை பாதுகாக்கும் ஆக்கப்பூர்வ அமைப்பு உருவாகியிருப்பது என்பது புதுசுதானே ! ஸ்பெஷல் ? இருவருக்கும் அதுதான் முதல் சந்திப்பு . சென்னைக்காரரான சேகர் தத்தாரியா பாம்புகளின் காதலர் என்றால் , பெங்களூர்வாசியான ராம்கி  னிவாசன் தீராத பறவைகளின் காதலர் . இன்ட்ரஸ்ட் வெவ்வேறு என்றாலும் காட்டின் மீதான காதல் ஒரே புள்ளியில் இருவரையும் ஒன்றிணைத்துள்ளது . பிபிசி , நேஷனல் ஜியோகிராபி என புகழ்பெற்ற டிவி சேனல்களுக்காக ஆவணப்படங்களை எடுத்துள்ள காட்டுயிர் திரைப்பட இயக்குநரான சேகர் , தன் பணிக்காக ஸ்வீடனின் ரோலக்ஸ் , எட்பெர்க் ஆகிய உயரிய விருது அங்கீகாரங்களை பெற்றவர் . தொடக்கத்தில் ப்ராக்டர் அண்ட் கேம்பிள் ந

டீக்கடை ரைட்டர் -ச.அன்பரசு

படம்
டீக்கடை ரைட்டர் - ச . அன்பரசு புது டெல்லியின்   விஷூ திகம்பர் மார்க் ரோட்டிலுள்ள ஹிந்தி பவன் பிளாட்பார்ம் . ப்ரீயாக இருந்தால் ரிலாக்ஸாக லக் ‌ ஷ்மண்ராவிடம் ஒரு டீ வாங்கி அருந்துங்கள் . டீ குடிக்கும்போது பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் பற்றி பேச தோன்றுகிறதா ? யோசிக்கவே வேண்டாம் . டீக்கடைக்காரர் லக் ‌ ஷ்மணிடம் புத்தகம் குறித்து தாராளமாக பேசலாம் .  டீக்கடைக்காரருக்கும் புத்தகத்திற்கும் என்ன லிங்க் ? இருக்கிறது ! மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் பிறந்த லக் ‌ ஷ்மணுக்கு மூன்று சகோதரர்கள் . கிராமத்திலுள்ள டாக்டரின் வீட்டில் வேலை செய்து வந்த லக் ‌ ஷ்மண் , பின்னர் 1970 ஆம் ஆண்டு மில்லில் பணிசேர்ந்து சில ஆண்டுகளிலேயே மில் திடீரென மூடப்பட , பேக் டூ பெவிலியனாக விவசாய வேலைக்கு திரும்பினார் . " என் அப்பாவிடம் 40 ரூபாய் வாங்கிக்கொண்டு போபாலில் வேலை தேடி கிளம்பினேன் . அப்போது என் மனதில் இருந்த ஆசை இரண்டு , ஒன்று உலகை பார்க்கவேண்டும் . நிறைய படிக்கவேண்டும் என்பதுதான் ." என ஆர்வமாக பேசும்