இடுகைகள்

ஸ்டார்டஅப் மந்திரம் 10-15 -

படம்
ஸ்டார்ட்அப் மந்திரம் 12!- கா.சி.வின்சென்ட்  10 நான் ஏன் தோற்றுப்போனேன் ? ஸ்டார்ட்அப்பின் ஃபார்முலா சரிதான் . வெற்றியில் கேட்காத காது , தோல்வியில் கேட் பது புதிய மாற்றம் . மும்பையில் சிறியதாக சோஷியல் மீடியா ஸ்டார்ட்அப் தொடங்கியவர் , வீட்டுத்தேவைகளுக்கான ஆப் ஒன்று மக்களுக்கு அவசியம் என்பதை உணர்ந்து நண்பர்க ளை இணைத்து ஸ்டார்ட்அப்பை தொடங்கினார் . இரண்டு தவறுக ள்தான் கம்பெனி யே காலி. " சேவை தொடங்கி 3 மாதத்தில் 5 மில்லியன் முதலீட்டைத் திரட்டினோம் . ஒரு வாடிக்கையாளருக்கு ரூ.700 செலவு செய்து அவரிடமிருந்து எழுபது ரூபாயை பெற்றது கம்பெனியை வீழ்த்திவிட்டது"   என்றார் அவர் . பிறகு அடுத்த 3 மாதங்களில் வாடிக்கையாளர்களுக்கு நிலையை க்கூறி மின்னஞ்சல் அனுப்பி கணக்கு வழக்கு பைசல் செய்திருக்கிறது இளைஞரின் 50 பேர் கொண்ட குழு . நிறுவனரின் அனுபவத்தை கேள்விப்பட்டு 400 பணியாளர்கள் கொண்ட கம்பெனிக்கு சிஇஓவாக செயல்படும் வாய்ப்பு தேடிவந்திருக்கிறது . தோல்விக்கு என்ன காரணம் ? " இந்தியர்கள் நம சூழலுக்கான ஐடியாவை உருவாக்குவதில்லை . ஃபிளிப்கார்ட் , ஓலா , ஸ்நாப்டீல் உ

டாய்லெட் தீக்குளிப்பு!

படம்
டாய்லெட்டிற்காக தீக்குளிப்பு! கடன்தொல்லை, காதல் நிறைவேறவில்லை என விரக்தியில் தீக்குளிப்பது சகஜமான செய்தி. ஆனால் டாய்லெட் இல்லை என்ற காரணத்திற்காக உ.பியைச் சேர்ந்த ஒருவர் தீக்குளித்திருக்கிறார் என்றால் நம்புவீர்களா? உத்தரப்பிரதேசத்தின் நக்லாகுலுரியா பகுதியைச் சேர்ந்த ராபிக்கு அண்மையில் பூனம் என்ற பெண்ணுடன் திருமணமானது. ராபியின் வீட்டில் கழிவறை இல்லாதது பூதாகர பிரச்னையாக எழ, பூனம் கழிவறையை கட்டினால்தான் புகுந்தவீட்டிற்கு வருவேன் என்று கூறிவிட்டு தன் பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். மனைவியை திரும்ப அழைத்துவர மாமியார் வீடு சென்றார் ராபி. ஆனால் மாமியார் வீட்டினரோடு விவாதம் சூடேற, உடனே சமையலறைக்கு ஓடி மண்ணெண்ணெய்யை தலையில் கவிழ்த்து தீக்குளித்துவிட்டார். தற்போது அரசு மருத்துவமனையில் 60 சதவிகித தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறார் ராபி. கழிவறைக்காக களப்பலியா?

ட்விட்டர் ராஜாங்கம்!

படம்
ட்விட்டர் எனும் நீதிமணி! தேர்தலில் ஜெயிக்கும்வரை மண்ணில் பார்த்த வேட்பாளர்கள், வெற்றிக்குப் பிறகு கார் அணிவகுப்பிலும் ஹெலிகாப்டரில்தான் தொகுதிக்கு விஜயம் செய்வார்கள். குறைகளை கேட்பதும் அப்படித்தான். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதல் இந்திய பிரதமர் மோடி வரை அனைவரும் சமூகவலைதளங்களையே அதிகாரப்பூர்வ ஊடகமாக்கி நீதிபரிபாலனம் செய்து வருகின்றனர். பிரதமர் மோடியின் அமைச்சரவை சகாக்களான வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், வணிகத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, தெலுங்கானாவின் ஐ.டி அமைச்சர் கே.டி. ராமாராவ் ஆகியோர் ட்விட்டர்களிலேயே மக்களின் குறைகளை தீர்த்து பிரபலமாகி வருகின்றனர். படிப்பு, ஆபரேஷன், சாலை, குடிநீர் என அத்தனை புகார்களையும் ஏற்று தெலுங்கானாவின் ஐ.டி அமைச்சர் ராமாராவ்(கே.டி.ஆர்) ட்விட்டரிலேயே தீர்வு தருகிறார். தனது ட்விட்டர் கணக்கில் “உங்கள் குறைகளை எனக்கு தெரியப்படுத்தினால் அதனை உரிய அமைச்சகத்துக்கு அனுப்புகிறேன்” என்று கொடுத்துள்ள வாக்குறுதி பொய்யல்ல. இவருக்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் உதவிகோரி ட்விட் மனுக்களை அனுப்புவது தீர்வு கிடைக்கும் நம்பிக்கையில்தான்.   ட்வ

கரன்சியை எண்ணியாச்சு!

படம்
சகியா? சகோதரியா? காதலி மூலம் கைகளில் ராக்கி கயிறு கட்ட பள்ளி நிர்வாகம் நிர்பந்தப்படுத்த விரக்தியான காதலன் தற்கொலைக்கு முயற்சித்து பரபரப்பை கிளப்பியுள்ளார். திரிபுரா தலைநகரமான அகர்தலாவிலுள்ள பள்ளியில் திலீப்குமார் சாகா படித்து வந்தார். படிப்புடன் காதல் துணையாக பெண்தோழியும் கிடைக்க வீக் எண்டுகள் விசாலமானது. இருவரின் டூயட் பள்ளி நிர்வாகத்தின் காதிற்கு போக, காதலியை சகோதரியாக்க நூதன திட்டத்தை ரக்‌ஷா பந்தனன்று அரங்கேற்றினர். பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் ஒன்றுதிரண்டு திலீப் மற்றும் அவரது பெண்தோழியின் பெற்றோர்களை அழைத்து அவர்களின் முன்னிலையில் பெண்தோழியை திலீப்புக்கு ராக்கி கட்ட டார்ச்சர் செய்தனர். இருவருமே முடியாது என மறுத்தாலும் மிரட்டல்கள் தொடர, அடுத்த நொடியே இரண்டாம் மாடியிலிருந்து திலீப் குதித்துவிட்டார். தோழி மட்டுமல்ல கூடியிருந்த ஆசிரியர் மாணவர் பரிவாரங்களே அரண்டுபோனது. தற்போது திலீப்புக்கு மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்று வருகிறது. சகிதான் கன்ஃபார்ம்! 2 சிறுவனைக் காப்பாற்றிய கஜினி!  மும்பையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுவனை கஜினி டாட்டூ காப்பாற்றியுள