இடுகைகள்

உருகும் ஆர்க்டிக் வெளியாகும் நச்சு!

படம்
ஆர்க்டிக் பகுதி, வெப்பமயமாதலால் உருகிவருவதை டிவியிலும் நாளிதழ்களிலும் பார்த்திருப்பீர்கள். இதன் விளைவாக, அணுக்கழிவுகள், பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றிலிருந்து நச்சுகள் வெளியாகி நீர்ப்பரப்பில் கலக்கத் தொடங்கியுள்ளன. 2100 ஆம் ஆண்டுக்குள் கரிம எரிபொருட்கள் விளைவாக ஆர்க்டிக் பகுதி பனிக்கட்டிகள் முழுவதும் கரையும் வாய்ப்பு உள்ளது. இதன் விளைவாக, அனைத்து இயற்கை நிகழ்ச்சிகளும் மாறி நிகழும் வாய்ப்புள்ளது. மேலும் பசுமை இல்ல வாயுக்களின் அளவும் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவது நம் கைகளில்தான் உள்ளது. உலகளாவிய ஆராய்ச்சிக்குழுக்கள் பனி உருகி வரும் வேகத்தை ஆராய்ந்து வருகின்றனர். விரைவில் வெளியாகும் கார்பன் அளவை கணித்து அதனைக் குறைக்க முடியும் என்கிறார் ஆராய்ச்சியாளர் வுட்ஸ் ஹோல் ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர் சூ நடாலி கூறியுள்ளார். நன்றி: ஃப்யூச்சரிசம்

ஹாங்காங்கில் நடப்பது என்ன?

இரண்டு மில்லியன் மக்களின் போராட்டம் 1997 ஆம் ஆண்டு வசம் வந்துவிட்ட ஹாங்காங் நாட்டை சீனா ஒரே நாடு இரண்டு சட்டம் என்று பராமரித்து வந்தது. அதாவது , நாம் ஜம்மு காஷ்மீரை 370 என்ற சட்டம் மூலம் தனி அந்தஸ்து அளித்து பராமரித்து வருகிறோமோ அதேபோல. ஆனால் ஜின்பிங் தன் பதவியை உறுதிப்படுத்தியவுடன் ஹாங்காங்கை சீனாவுடன் இணைப்பதற்கான வேலைகளைச் செய்யத் தொடங்கிவிட்டார். அதில் ஒன்றுதான், ஹாங்காங் நாட்டிற்கான சீன ஆதரவாளர் ஒருவரைத் தலைவராக்கியது. அவர் என்ன செய்வார்? அதேதான். சீனாவின் ஆணைகளுக்கு தலையசைத்தவர், சீனாவின் புதியசட்டத்திற்கும் கையொப்பமிட்டு சர்ச்சைக்குள்ளானார். இன்று பெரும் போராட்டத்திற்கும் அது காரணமாகியுள்ளது. ஹாங்காங்கில் பிடிபடும் குற்றவாளிகளுக்கு சீனாவில் தண்டனை என்பதுதான் சட்டத்தின் எளிமை வடிவம். சீனாவின் காலனி நாடு ஹாங்காங் என்பதை உறுதிபடுத்தும் சட்டம் என்பதற்காக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடி வருகிறார்கள். இந்த போராட்டம் வெல்லும், உலகை மாற்றும் என்று கூறுவது நம் நோக்கமல்ல. ஆனால் இது ஒரு முக்கியமான போராட்டம் என்று கூறவருகிறோம். போனி லியங் உள்ளிட்ட மனித உரிமை ஆர்வலர்கள் ஒன்றுதிர

ஒற்றைத் தலைவலிக்கான தீர்வுகள்

படம்
ஒற்றைத் தலைவலிக்கு இன்று விக்ஸ், அமிர்தாஞ்சன் ஸ்ட்ராங், ஜண்டு பாம் , டைகர் பாம் என விதவிதமான தீர்வுகள் உண்டு. ஆனால் அன்று ஒரே தீர்வு, பக்கத்து வீட்டுக்காரர் சொல்லும் கைமருந்துகள்தான். இல்லை ஆயா சொல்லும் பச்சிலை மருந்துகள்தான். ரத்தம் வெளியேறினால் தலைவலி நிற்கும் ஆம். நவீன மருத்துவம்  வரும் முன்பு உடலிலிருந்து  குறிப்பாக மூக்கிலிருந்து சிறிது ரத்த த்தை வெளியேற்றினால் தலைவலி குறையும் என ஊர் என்ன உலகமே நம்பியது. பின்னர் ஸ்விஸ் நாட்டு மருத்துவர், சாமுவேல் அகஸ்டே தலைவலிக்கான மருந்துகளை உருவாக்கி அவற்றைப் பயன்படுத்தினார். பூண்டு பேய் வந்தால் பூண்டைக் காட்டி தப்பிவிடலாம் என பேய் சீரியல்களை தூர்தர்ஷனில் பார்த்து நம்பிய அப்பாவி நான். ஆனாலும் பூண்டை தலைவலிக்கு பயன்படுத்தலாம் என்று கூறியபோது பெரிய ஆச்சரியமில்லை. வாயு சமாச்சாரத்திற்கு இதனைப் பயன்படுத்தும்போது வலி சமாச்சாரத்திற்கு பயன்படுத்த கூடாதா? என சமாதான சகாவு ஆனேன். 11 ஆம் நூற்றாண்டு அபு அல் காசிம் எனும் மருத்துவர் பூண்டை தலைவலிக்கான சூப்பர் மருந்தாக பரிந்துரைத்தார்.  கையில் காயம் செய்து அதில் பூண்டைப் புதைத்து விநோத வைத

கடலை சுத்தமாக்கி டைவர்கள்!

படம்
அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் கடலில் அறுநூறுக்கும் மேற்பட்ட டைவர்கள் குதித்து அதனை சுத்தமாக்கி கின்னஸ் சாதனை செய்துள்ளனர். இதற்கு முன்பு 614 பேர் கடலில் இதுபோல சுத்தம் செய்து சாதனை செய்துள்ளனர். தற்போது 633 பேர் செய்ததால் கின்னஸ் சாதனையாக இடம்பெற்றுள்ளது. சுத்தம் செய்யும் இப்பணி ஆண்டுதோறும் டிக்சி டைவர்ஸ் எனும் அமைப்பினரால் நடத்தப்படுகிறது. இவர்களுடன் டீர்ஃபீல்டு பீச் உமன் கிளப் ஆகியோரும் இணைந்துள்ளனர். இவர்கள் ஐரோப்பா, தென் அமெரிக்கா ஆகிய இடங்களிலிருந்து டைவர்களை அழைத்து இந்த விழாவை நடத்துகின்றனர். இவர்களின் உழைப்பால் 1,626 பௌண்டுகள் குப்பை நீக்கப்பட்டுள்ளது. இவற்றை மீன்பிடி பகுதியலிருந்து இந்த டைவர்கள் அகற்றியுள்ளது முக்கியமானது. இது மிகச்சிறப்பான நேரம் .. அனைவரும் ஒன்றாக கூடி குப்பைகளை அகற்றி கடலுக்கு நன்மை செய்தோம் என்கிறார் டைவரும் ஒருங்கிணைப்பாளருமான டைலர் பர்கைன். நன்றி: இகோ வாட்ச்

உலகில் அதிக மின்சாரம் தயாரிக்கப்பட்டுள்ளதா?

படம்
இதுரை உற்பத்தி செய்த மின்சாரத்தில் எது அதிக உயர் அழுத்த மின்சாரம்? வான் டி கிராஃப் ஜெனரேட்டர்கள் உற்பத்தி செய்த மின்சாரமே அதிக வால்டேஜ் கொண்டது.  இன்சுலேட்டிங் பெல்டில் மின்சாரம் பாயும். இதற்கடுத்து, நேஷனல் ஆய்வகம் 25.5 எம்வி  அளவுக்கு மின்சாரத்தை தயாரித்துள்ளது. நன்றி: பிபிசி

இனிப்பு சோளம் செரிமானம் ஆவதில்லை ஏன்

படம்
ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி இனிப்பு சோளத்தை சாப்பிட்டால் அது ஜீரணமாக தாமதம் ஆவது ஏன்? பீச்சில் சோளம் வாங்கித் தின்று செரிமானம் ஆகாமல் இப்படியொரு கேள்வியா? எதுவாக இருந்தாலும் சரி அறிவியலாக பார்ப்போம். சோளம் சிறந்த உணவு. எப்படி என்றால் அதில் மாவச்சத்து அதிகம். ஆனால் செரிமானத்திற்கு பிரச்னை வருவது அதிலுள்ள செல்லுலோஸால்தான். இதனை செரிமானத்திற்காக உடைப்பது மிக கடினம். சரி எதற்குங்க பிரச்னை முழுங்கிடுவோம் என்று முழுங்கினாலும் சில சோள பற்கள் வயிற்றுக்குள் கிடக்கும். அதாவது செரித்து வெளியே வர நேரம் எடுக்கும். நீங்கள் சாதாரணமாக சோளத்தை சாப்பிட்டாலும் அதில் செரிமானமாகி வருவது முழுக்க அரைபட்டு என்ற விதம் மிக குறைவுதான். நன்றி: பிபிசி

ஜோஃப்ரா ஆர்ச்சர்: இங்கிலாந்தின் ராஜதானி எக்ஸ்பிரஸ்

படம்
கரீபியன் காளை ஜோஃப்ரா ஆர்ச்சர் வலது கை வேகபந்துவீச்சாளர். மணிக்கு நூற்று நாப்பது கி.மீ வேகத்தில் புயலாய் தாக்கும் யார்க்கர்கள், பவுன்சர்களால் பல பேட்ஸ்மேன்களின் ஹெல்மெட் அடிக்கடி அடிபடுவது ஆர்ச்சரின் உபாயம்தான். பார்படாஸில் பிறந்து மேற்கிந்திய தீவுகளுக்காக 19 வயதுக்குட்பட்டோர் அணியில் விளையாடியவர், இப்போது இங்கிலாந்து அணி ஜெர்சி அணிந்துவிட்டார். உலகக் கோப்பை அணியில் இங்கிலாந்துக்காக பந்து வீசி எதிரணிகளை மிரட்டி வருகிறார். மூன்று ஸ்டம்புகள்தான் இவரது குறி. அதற்கு குறுக்கே வரும் எதனையும் இவரது பந்து தகர்க்கிறது. அது பேட்ஸ்மேனின் ஹெல்மெட்டோ, கையோ, காலோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே. ஹெல்மெட்டில் அடித்து ஸ்டம்புகளை தகர்த்து பந்துகளும் உண்டு. அப்படி ஒரு வேகம். வயது 24 அதற்கான வேகத்தில் பந்து ஸ்டம்புகளை நொறுக்குகிறது. இந்தியாவில் விராட் கோஹ்லி எப்படி எந்த பந்துகளைப் போட்டாலும் அடித்து நொறுக்கிறாரோ, அதேபோல்தான் ஜோஃப்ராவும். அடியேன் பார்க்கலாம் ப ந்துகளை ராக்கெட் வேகத்தில் வீசுகிறார். விளையாண்ட முதல் சர்வதேச போட்டி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரானது. ஹஸீம் ஆம்லாவுக்கு

டைம் - இளம் தலைவர்கள் 2019

படம்
டைம் இளம் தலைவர்கள் ஹாரி மியோ லின் மியான்மர் என்று சொன்னாலே உங்களுக்குப் புரிந்துவிடும். ராணுவ சர்வாதிகார நாடு, அங்கு மனித உரிமை மீறல்கள் நடக்காமல் இருந்தால்தானே அதிசயம். ஏறத்தாழ 50 ஆண்டுகள் ராணுவ சர்வாதிகாரம் செய்யப்பட்ட நாடு. மண்டாலே நாட்டைச் சேர்ந்த 28 வயது இளைஞரான மியோ லின், நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக நிலவும் வெறுப்பு பேச்சு, வன்முறை ஆகியவற்றுக்கு எதிராக போராடி வருகிறார். ரோஹிங்கயே முஸ்லீம்கள் வன்முறை வெறியாட்டத்தில், ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர். 2012 ஆம் ஆண்டு நிகழ்ந்த வேதனை நிகழ்வில், கூறப்பட்ட பொய் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக ஃபேஸ்புக்கில் போராடினார் மியோ லின். 2013 ஆம் ஆண்டு புத்த மத வெறியர்களால் மெய்கிட்டியலா எனும் நகரிலிருந்த மசூதி எரிக்கப்பட்டது. இக்கொலை வெறியாட்டத்தில் 43 பேர் கொல்லப்பட்டனர். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மியோ லின் தி சீகல் எனும் தன்னார்வ அமைப்பை நிறுவி உதவினார். இவரின் உதவிகள் மதவாத அமைப்புகளை கோப ப்படுத்த, மியோ லின்னுக்கு தொடர்ச்சியாக மிரட்டல்கள் வரத் தொடங்கின. 2017 ஆம் ஆண்டு சீகல் அமைப்பை விட்டு விலகியவர்,

சூதாடி டைகரின் சோம்பலான காமிக்ஸ்! - என் பெயர் டைகர்!

படம்
என் பெயர் டைகர் லயன் காமிக்ஸ் ஜீன் கிராட் ரூ.250 1881 ஆம் ஆண்டு நடைபெறும் சம்பவங்களைக் கொண்ட டைகர் காமிக்ஸ். இதில் டைகர் பெரும்பாலும் எந்த சண்டைகளிலும் ஈடுபடவில்லை. மொத்த விஷயங்களையும் செய்வது, அபாச்சே ஜெரோனிமா, பிடாரி மா க்ளண்டன், ஸ்ட்ராபீல்டு ஆகிய துணை கதாபாத்திரங்கள்தான். அதிலும் டைகரின் கதை எழுதவரும் கேம்ப்பெல் கூட இருவரைக் கொல்கிறார் என்றால் பாருங்களேன். காமிக்ஸ் படிக்கும்போது, டி.ஆர் படம்போல ஜூனியர் கேரக்டர் எல்லாம் பன்ச் பேசுதே என எண்ணுவீர்கள். அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார் ஆசிரியர் என நினைத்துக்கொள்ளுங்கள் அவ்வளவுதான். இதில் பின் யார்தான் நாயகர் என்கிறீர்களா? ஏர்ப் சகோதர ர்கள்தான். டூம்ப்ஸ்டோன் நகர மார்ஷல்களுக்கும், க்ளண்டன் மற்றும் மெக்லெரி குழுக்களுக்கும் நடக்கும் உள்முக, மறைமுக பழிவாங்கல்தான் கதை. இதில் டைகர் தன் காதலியும் பாடகியுமான டோரிக்காக சீட்டுக்கட்டை கடாசிவிட்டு உள்ளே வருகிறார். வில்லன்களை காயம்பட்டாலும் போட்டுத்தள்ளி இறுதியில் சீட்டு விளையாடுகிறார். முக்கியமான பகுதி, கேம்ப்பெல்லுக்கு சொல்லும் தனது வாழ்வு குறித்த பகுதிகள்தான். செவ்வ

நிறம் மாறும் பல்புகள்!

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி நிறம் மாறும் பல்புகள் எப்படி நிறத்தை மாற்றிக்கொள்கின்றன? நிறம் மாறும் பல்புகளுக்கு நீலம் , சிவப்பு, பச்சை ஆகிய முதன்மை நிறங்களே அடிப்படை. நம் கண்களிலுள்ள கோன்கள் நிறத்தை எளிதாக பயன்படுத்தும் திறன் கொண்டவை. மூன்று அலைநீளம் கொண்ட முதன்மை நிறங்களை வைத்து பல்வேறு நிறங்களை உருவாக்குகின்றனர். எல்இடி பல்புகள் இதனை எளிதாகப் பயன்படுத்தி பல்வேறு நிறங்களில் ஒளியை உருவாக்குகின்றன. நன்றி: பிபிசி

காற்றில் பார்க்க முடியாதது ஏன்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி காற்றில் நம்மால் பார்க்க முடியாதது ஏன்? காற்று என்பது வெறும் காற்று மட்டுமல்ல. அதனுடன் குறிப்பிட்ட அழுத்தமும் உண்டு. இதனால், கண்ணின் ரெட்டினா அதனை எதிர்கொள்ள முடியாமல்  கண்களை மூடிக்கொள்கிறோம். குறைந்த அழுத்தம் கொண்ட காற்று, அதிக அழுத்தம் கொண்ட காற்றை விட குறைவான அடர்த்தி கொண்டது. இதனால் ஒளிக்கற்றைகளை காற்று பாதிக்கிறது. வானில் நட்சத்திரங்களை பார்க்கிறீர்கள். அவை தூரத்தில் இருந்தாலும் அவற்றைப் பார்க்க உங்களுக்கு அதிக தடைகள் இல்லை. அவை நிலையானவையாக மூளை உணர்ந்து படமாக கண்களில் காட்டுகிறது. ஆனால் காற்று வீசும்போது உங்களால் பொருட்களில் பட்டும் எதிரொலிக்கும் ஒளியை உள்வாங்க முடியாது. இதனால் உங்களால் அந்த சமயங்களில் கண்ணில் தென்படும் பொருட்களை பார்க்க முடியாது. நன்றி: பிபிசி