இடுகைகள்

ரேடியோ அலைகளைப் பற்றி அறிய புதிய நூல்!

படம்
விண்வெளியில் உள்ள விஷயங்களை கண்டறிய நம் வாழ்நாள் போதாது. காரணம் அத்தனை மர்மங்களை நம் தலைக்கு மேலுள்ள உலகம் கொண்டுள்ளது. இந்த நூல் ரேடியோ அலைகளின் மூலம் நாம் அறிந்துள்ள விஷயங்களைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. ரேடியோ அலைகளை எப்படி நாம் பெறுகிறோம், அதற்கான ஆன்டெனாக்கள், அதன் சிக்னல்கள் என நூல் விரிவாக ஏராளமான தகவல்களோடு எழுதப்பட்டுள்ளது. வானியல் பற்றி ஆர்வம் உள்ளவர்கள் நிச்சயம் வாங்கிப் படிக்கலாம்.

விண்வெளிச்சட்டங்களை மதிக்க வேண்டுமா? - விண்வெளி கேள்வி பதில்கள்!

மிஸ்டர் ரோனி நியூட்ரான் நட்சத்திரமும் கருந்துளையும் ஒன்றா? ஒன்றுபோல இதன் உருவாக்க செயல்முறை உள்ளது. நியூட்ரான் எரிபொருள் தீர்ந்ததும் நட்சத்திரம் அதன் ஈர்ப்புவிசையால் உள்ளுக்குள் நொறுங்கி அழிகிறது. அதிலிருந்துதான் நியூட்ரான் நட்சத்திரமும், கருந்துளையும் தோன்றுகின்றன. முழுக்க அழியாத நட்சத்திரத்திலிருந்து நியூட்ரான் நட்சத்திரங்கள் உருவாகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கருந்துளையின் தோற்றத்தையும் இப்படி வரையறுக்கின்றனர். இதுபற்றி ஆராய்ச்சிகளின்படிதான் இவற்றைப் பார்க்கவேண்டும். அதுவரை கருந்துளையும் நியூட்ரான் நட்சத்திரமும் மர்மமாகவே இருக்கும். நட்சத்திர தூசுகள் என்பதை எப்படி அறிவது? அவை நட்சத்திரங்களின் அழிவு, மோதல் உள்ளிட்ட காரணங்களால் உருவாகி பால்வெளி முழுக்க சுற்றிக்கொண்டிருக்கின்றன. பூமியில் அதனை கடலின் அடுக்குகளில் காணலாம். இரும்பு -60 என்பது பூமியில் கிடைக்காத கனிமம். தற்போது இதனைக் கண்டெடுத்து ஜெர்மனியில் ஆராய்ந்து வருகிறார்கள். பெருவெடிப்புக்கு முன்னதாக பூமிக்கு வந்ததா என ஆராய்ந்து வருகிறார்கள். விண்வெளிக்காக நாம் உருவாக்கிய ஒப்பந்தங்கள் சட்டங்கள் எல்லாம் 19

ஆபத்தான உணவுக் கலாசாரம்! - நூடுல்ஸ் கலவரம்!

படம்
ஆம். படத்தில் இருப்பது உண்மை. என்ன உடனே நாம் ஒத்துக்கொள்ள மாட்டோம். இந்தியர்கள் பொதுவாக தின்பண்டப் பிரியர்கள். தின்பதில் வஞ்சனை இல்லாத ஆட்கள். நான் 2 ஸ்டேட்ஸ் நூலில் தமிழர்களின் அரசியலோடு பஞ்சாபியர்களின் பால் பொருட்களின் மீதான  பாசத்தையும் எழுதியிருப்பேன். காரணம், உணவுதானே நம் உடலாகிறது. அதனை எப்படி பேசாமல் இருப்பது எழுதாமல் இருப்பது? 2015 ஆம் ஆண்டு மே மாதம் சுவிட்சர்லாந்து நிறுவனமான மேகி நூடுல்ஸ் மீது கடும் குற்றச்சாட்டு ஏவப்பட்டது. அதில் நூடுல்ஸில் காரீயம் அதிகமாக இருப்பதாக கூறப்பட்டது. அப்புறம் என்ன? அதைப் பயன்படுத்திக்கொண்டது பதஞ்சலி நிறுவனம்.  இந்த நேரத்தில் ராம்தேவ் தொடங்கிய பதஞ்சலி நிறுவனம் பூதாகரமாக சுதேசி வியாபாரத்தை தொடங்கியது. தேசிய உணர்ச்சி பொங்கியவர்கள் பதஞ்சலியைப் பின்தொடர்ந்தனர். பின் அதன் தரத்தைப் பார்த்து திகைத்தவர்கள் தானாகவே பன்னாட்டு நிறுவனத்திற்கு திரும்பினர். பேச்சுலர்களின் முக்கியமான உணவான மேகி நூடுல்ஸ் இந்த இடைப்பட்ட காலத்தில் நிறைய வாடிக்கையாளர்களை இழந்தது.  சுதேசி நிறுவனமான பதஞ்சலி,  கோமாதா சோப் என பசுவின் கோமியத்தில்  சோப்பு தயாரித

மதுத்தடை வளர்ச்சியை குலைக்கும் - சேட்டன் பகத்!

படம்
giphy.com நான் மதுத்தடை தவறு என்று சொல்வதற்காக வருத்தப்படவில்லை. முக்கியமான குறிப்பு, நான் மது அருந்துபவனல்ல. குஜராத்தில் இன்றும் மதுவுக்கு தடை உள்ளது. காந்தி போர்பந்தரில் பிறந்ததால் அரசு அவருக்கு மரியாதை செய்வதற்காக இத்தடையை நீக்காமல் அப்படியே பெயரளவுக்கு காப்பாற்றி வருகிறது. மணிப்பூர், மிசோரம், ஏன் கேரளத்தில் கூட மது தடை அமலாகி பின் கைவிடப்பட்டது. இந்தியர்கள் பொதுவாக சிக்கலான பிரச்னைகளைப் பற்றி பேச மறுக்கின்றனர். யாருக்கும் எந்த பாதிப்பும் வராத சினிமாவை கையில் எடுத்துக்கொண்டு நட்பை வளர்க்கிறார்கள். நான் அதைக் குறையாக கூறவில்லை. முக்கிய விவகாரங்களில்  அவர்கள் சரியான அதிரடி முடிவுகளை எடுத்தே ஆகவேண்டும். மது தடை என்ற முடிவை நான் எதிர்க்கிறேன். அது இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரானது என்று உறுதியாக நம்புகிறேன். உண்பது, உடுப்பது, வணங்குவது போன்ற விவகாரங்களில் அரசு தலையிடக்கூடாது என்பது என் கருத்து. மது தடையால் குஜராத் அரசு கோடிக்கணக்கான ரூபாய்களை இழக்கிறது. இதற்காக மக்களின் தினசரி பயன்பாட்டுப் பொருட்களின் விலையை உயர்த்தி வருகிறது. இது தவறான முறைதானே? மது விற்பது என்பதும், அதன

காசைத் திருப்பிக் கொடுங்க ப்ரோ! - மேட்ரிமோனியல் காமெடி

படம்
டைம்ஸ்! திருமணங்களுக்கான சரியான வரன்களைத் தேடிக் கொடுப்பது முக்கியமான பணி. அதேசமயம் சரியாக அமைந்தால் மட்டுமே காசு  கிடைக்கும். இல்லையென்றால் அவமானமும், வசைபாடலும்தான் மிச்சம். பஞ்சாபின் மொகாலியில் சரியான வரன் பார்த்துக்கொடுக்காத கல்யாண ஏஜன்சி இழப்பீடு தரும் அவலத்துக்கு உள்ளாகியிருக்கிறது. என்ன ஆச்சு.... நொரைன் என்ற டாக்டர் பெண்ணுக்கு வரன் பார்க்க வேண்டியதுதான் புராஜெக்ட். அதில்தான் ஏஜன்சி சறுக்கியிருக்கிறது. 2017இல் இருந்து வரன் தேடி ஓய்ந்திருக்கிறது ஏஜென்சி. பணக்கார ர்கள் இல்லையா? 50 ஆயிரம் கட்டி ப்ரீமியமாக வரன் தேடியிருக்கிறார்கள். குறிப்பிட்ட நகரில் இருப்பவராக, ஜாட் சாதியைச் சேர்ந்தவராக, டாக்டராக இருக்கவேண்டும்  என்பதுதான் விதி. ஏஜன்சி கொடுத்த வரன்களை எல்லாம் ஊதித்தள்ளியிருக்கிறது பெண் தரப்பு. காரணங்களுக்கா பஞ்சம்? அப்புறம் பணத்தைக் கேட்டிருக்கிறது பெண் தரப்பு. பின்னே வேலை ஆகவில்லையே... பணம் தர முடியாது என நிறுவனம் சொல்ல நுகர்வோர் கோர்ட்டுக்கு படி ஏறியிருக்கிறது மருத்துவர் தரப்பு. கோர்ட் மனுவை பரிசீலித்து 62 ஆயிரம் ரூபாயை அபராதமாக விதித்திருக்கிறது. இதெல்லாம்

வியாபார மனிதர்களும் - மாறி வரும் காலமும்- மயிலாப்பூர் டைம்ஸ்!

படம்
மயிலாப்பூர் டைம்ஸ்! சென்னைக்கு வந்த நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்தால் நம்பவே முடியவில்லை. அப்போது இங்கே எனது சகோதரர் பணிசெய்துகொண்டிருந்தார். குறைந்த சம்பளம்தான் வாங்கிக்கொண்டிருந்தார். ஆனாலும் கம்பெனி பெத்த கம்பெனி. அவர் கொடுத்த குருட்டு தைரியத்தில் நான் இங்கே வந்தேன். அதிலும் முடிவெடுப்பது என்பதில் இந்தியர்கள் பெரும்பாலும் மட்டம்தான். நான் பெரும்பாலும் முடிவெடுப்பது வரும்போது அந்த வாய்ப்பை பிறருக்கு வழங்கி கௌரவப்படுத்துவது வழக்கம். இதனை கையில் எடுத்துக்கொண்ட சகோதரர் அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார். அவருக்கு கிடைத்த சம்பளம் போதவில்லை. நான் கூட வந்தால் வீட்டிலிருந்து பணம் அனுப்புவார்கள் இல்லையா அதனை பயன்படுத்தி சொகுசாக இருக்க நினைத்தார். அப்படித்தான் இருந்தார். அப்போது மயிலாப்பூரில் கோலவழி அம்மன் கோவில் அருகே தூத்துக்குடிகாரர்  வைத்திருந்த கடை இருந்தது. இன்று அவர் சில மோசடி ஆட்களால் ஏமாற்றப்பட்டு, சிரமப்பட்டு  கடையை மாற்றிக்கொண்டு வேறுபக்கம் சென்றுவிட்டார். ஆனால் அன்று இருந்த இறுமாப்பு அந்தப்பக்கம் இருந்த கடைக்கார ர்களிடம் இன்று வெகுவாக குறைந்துவிட்டது. பின்ன

பசியில் தவிக்கும் இந்தியா- அவலமாகும் குழந்தைகளின் நிலைமை!

படம்
              2015 ஆம் ஆண்டு இந்தியா குளோபல் ஹங்கர் இண்டெக்ஸில் 93 ஆவது இடத்தில் இருந்தது. அன்றைக்கும் இன்றைக்கும் நிலைமை மாறியிருக்கிறது. பொது விநியோக முறையை உலக வர்த்தக கழகத்தின் ஒப்பந்தங்களுக்கு ஏற்ப இந்திய அரசு குறைத்து வருகிறது. அனைத்து வணிக நடவடிக்கைகளிலும் அரசின் பொறுப்பு குறைந்துகொண்டே வருகிறது. கல்வி, சுகாதாரம், உடல்நலம், வேலைவாய்ப்பு அனைத்திலும் அரசு மெல்ல தன் பொறுப்பை கைகழுவி சூப்பர்வைசர் பொறுப்பை மட்டுமே ஏற்கிறது. இதன்விளைவாக இந்தியாவில் பட்டினி கிடப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது வெளியான ஹங்கர் இண்டெக்ஸ் பட்டியலில் 30.3 புள்ளிகளை மட்டுமே இந்தியா பெற்றுள்ளது. இதன் விளைவாக 102 ஆவது இடத்தைப் பெற்று தெற்காசிய நாடுகளிலேயே, பிரிக்ஸ் நாடுகளிலேயே கீழே போய்விட்டது. அதேசமயம் இந்தியாவில் பசுமாடுகளின் பெருக்கம் பதினெட்டு சதவீதம் அதிகரித்துள்ளது. இதனை பெருமையாக கருதுவதா, இதையொட்டி அடித்துக்கொல்லப்படும் சிறுபான்மையினரை நினைத்து பீதி ஆவதா என்று தெரியவில்லை. ஆறு வயது முதல் 23 வயது வரையிலான குழந்தைகள் ஊட்டச்சத்துக்களின்றி பாதிக்கப்படுவத