இடுகைகள்

துரோகியை கண்டறியும் ஜாக்கி சான் - ஸ்பிரிச்சுவல் குங்பூ

படம்
ஸ்பிரிச்சுவல் குங்பூ இயக்கம், தயாரிப்பு  - லோ வெய் எழுத்து - பான் லெய் இசை - ஃபிராங்கி சான் ஒளிப்பதிவு - சான் விங் சூ 1978இல் வந்த படம். பொதுவாக இந்த படங்களின் கதை ஒன்றுதான். போட்டி தற்காப்புக்கலை பள்ளி, குறிப்பிட்ட பள்ளியை மூட வைக்க தகிடு த த்தங்களை செய்வார்கள். முடிந்தால் அப்பள்ளி தலைவரை போட்டுத்தள்ளுவார்கள். இங்கும் அதேபோல்தான். ஆனால் அந்த துரோகத்தை பள்ளியைச் சேர்ந்தவரே செய்கிறார். தனது சுயநலத்திற்காக, தலைவர் பதவிக்கு வரும் தகுதி கொண்டவர்களை கொல்கிறார்.  அவர் யார் என்று பள்ளி கண்டுபிடித்ததா, அவர்கள் ஜாக்கி வென்றாரா, இறந்தவர்களுக்காக எதிரியை பழிக்குப்பழி வாங்கினார்களா என்பதுதான் கதை. பெரிதாகச் சொல்லிக்கொள்ள ஏதுமில்லை. ஜாக்கிசான் மட்டுமே நம்மை காப்பாற்றுகிறார். கதை என்று உறுதியாக ஒன்றுமில்லை. பள்ளியில் இருந்து தற்காப்புக்கலை சார்ந்த சுவடி காணாமல் போகிறது. அதன்பின்னர், அப்பள்ளியில் உள்ள குருமார்கள் அடுத்தடுத்து கொடூரமான முறையில் அடித்து கொல்லப்படுகிறார்கள். நெஞ்சில் கைக்கட்சி சின்னம் இருக்கிறது. சீனாவில் எதற்கு காங்கிரஸ் கட்சி பிரசாரம்? அந்த வலுவான ஆளை தடுக்க

மேகம் திரண்டால் பூமி கூலிங் ஆகுமா? - மிஸ்டர் ரோனி

படம்
மிஸ்டர் ரோனி பருவநிலை மாற்றத்தால் மழை அதிகமாக பூமிக்கு கிடைக்கிறது. அதேசமயம் இப்படி திரளும் மேகங்களால் பூமியின் வெப்பம் குறையுமா? இப்படியெல்லாம் பாசிட்டிவ்வாக யோசிப்பதால் நீங்கள் விக்ரமன் பட ரசிகராக இருக்க வாய்ப்புள்ளது. பொதுவாக மேகங்களை நீங்கள் கூறுவதுபோல முடிவு செய்ய முடியாது. இதனால் அவை பூமியின் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை குறைக்கும் என்று எந்த நம்பிக்கையையும் கொள்ள முடியாது. பருவநிலை மாற்றத்தால் பெய்யும் மழை என்பது மேக உடைப்பு போல ஒரு மணிநேரத்தில் அந்த சீசனுக்கான ஒட்டுமொத்த மழையும் பெய்யும். இதனை நீங்கள் எப்படி நேர்மறையாக பார்க்க முடியும்? ஆய்வாளர்களும் மேகங்களை வைத்து எந்த முடிவுக்கும் வரமுடியாது. காரணம் நிலையின்றி பயணிக்கும் அதன் தன்மைதான். நன்றி - பிபிசி

சிறிய நாய்களுக்கு ஆக்ரோஷம் ஏற்படுவது ஏன்?

படம்
மிஸ்டர் ரோனி பெரிய நாய்களை விட சிறிய நாய்கள் மிகவும் ஆக்ரோஷமாக நடந்துகொள்வது ஏன்? அக்கறைதான். நாய்களும் ஓர் உயிர் என்று நினைத்தால் பரவாயில்லை. அதனை ஒரு பொருளாக, தொந்தரவாக உரிமையாளர்கள் நினைத்தால் அதனை நாய்கள் உடனே உணர்ந்துகொள்ளும். இதனால்தான் கவனத்தை ஏற்படுத்த சைக்கிளில் வருபவரை கடிக்கப்போவது, வீட்டுக்கார ஆட்களை பிறர் தொட்டால் கூட மேலே விழுந்து பிறாண்டுவது, எப்போதும் ஷோல்டரை தூக்கிக்கொண்டு சண்டைக்கோழி விஷால் மாதிரியே திரிவது என இருக்கும். இதற்கு மரபணு ஒரு காரணம் என்றாலும், நாய்களின் குணம் இப்படி மாற்றுவழியில் போனால் நீங்கள் கவனமாக இருக்கவேண்டும். இல்லையெனில் அடுத்த பேண்ட் எய்ட் உங்களுக்குத்தான். நன்றி - பிபிசி 

வாவ் சொல்ல வைக்கும் ஆப்ஸ்கள் - 2019

படம்
ஸ்பெக்ட்ரா கேமரா இது ஐபோனுக்கான ஆப். அழுக்கான சூழலிலும் பளிச்சென புகைப்படம் எடுக்க உதவும் ஆப். ட்ரைபாட் இல்லாமல் சிறப்பான ஷேக்கிங் இல்லாத படங்களை எடுக்கலாம். மேலும் எந்த கூட்டத்திலும் உங்களுக்கு தேவையான ஆட்களை மட்டும் தனியாக பிரித்தெடுக்கும் ஏ.ஐ நுட்ப வசதி இந்த ஆப்பில் உண்டு. அதனால்தான் ஆப்பிள், இந்த ஆப்பிற்கு ஆப் ஆப் தி இயர் என்ற விருதைக் கொடுத்து கௌரவித்துள்ளது. மூன்று பௌண்டுகள் கொடுத்துத்தான் இதை நீங்கள் வாங்க வேண்டும். அஃபினிட்டி பப்ளிசர் அடோப் இன்டிசைனுக்கு நிகரான வேறு ஆப்களை தேடுகிறீர்களா? உங்களுக்காகத்தான இந்த ஆப் உதவுகிறது. ஏராளமான டூல்கள் உண்டு. உங்களுக்கு புத்தகங்களை வடிவமைப்பதில் ஆர்வம் உண்டா, சந்தேகமே வேண்டாம் உடனே இதனை காசு கொடுத்து வாங்கி பின்னி எடுங்கள். ஆப்பிள் நிறுவனம் இந்த ஆப்பிற்கும் விருது வழங்கி பாராட்டியுள்ளது. விலை - 48 பௌண்டுகள் ஜம்போ இலவச ஆப்தான். ஃபேஸ்புக், ட்விட்டர் என அனைத்திலும் கிடக்கும் குப்பைகளை நித்ய கர்மவாசியாக சுத்தம் செய்கிறது. தேவையில்லாத விளம்பரங்கள், உங்களை பின்தொடரும் ஆப்களை துடைத்தெறிய ஜம்போ உங்களுக்கு உதவும். புரோ

அமெரிக்கா உலகப் பிரச்னைகளில் தலையிடவேண்டும்!

படம்
அகதிகளை கௌரவமாக நடத்துவதில் கவனம் தேவை அயர்லாந்து அமெரிக்கரான சமந்தா பவர் எழுத்தாளர், மனித உரிமை ஆர்வலர். இவர், ஐ.நாவில் அமெரிக்காவுக்கான தூதராக பணியாற்றியவர். இவர் அயர்லாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு அகதியாக வந்தவர். அவரின் பயணம், பணிகள் பற்றிப் பேசினோம் உங்களது சிறுவயது வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்திருக்கிறது. உங்களது இன்றைய வாழ்க்கையில் அந்த அனுபவங்கள் செல்வாக்கு செலுத்துகிறதா? நாங்கள் அமெரிக்காவுக்கு வந்தபோது எனக்கு 9 வயது. எனது தம்பிக்கு வயது 5. என் அப்பா, தீவிரமான குடிநோய்க்கு அடிமையாகி இருந்தார். சூழல் எப்படியிருக்கும்? நான் அச்சூழலை மாற்ற நிறைய போராடினேன். குரல் இல்லாதவர்களுக்கு போராடும் எண்ணம் அன்றிலிருந்தே இருக்கிறது. நீங்கள் அமெரிக்க ராணுவத்தின் ஊடுருவல் முயற்சிகளை தீவிரமாக விமர்சித்திருக்கிறீர்கள். மனிதர்கள் தீவிரமாக பாதிக்கப்பட்ட பகுதிகள் என்று அதனைக் குறித்திருக்கிறீர்கள்.  நான் என் நூலில் எழுதியது நீங்கள் கேட்டதற்கு மாறானது. அமெரிக்கா உலகப்பிரச்னைகளில் தலையிடாமல் தள்ளியிருக்கக் கூடாது என்பதே என் எண்ணம். பாரிஸ் ஒப்பந்தம், அணு ஆயுத ஒப்பந்தம், எபோலா நோய்

அரசியல் தெரியாது. மலையேற்றம்தான் தெரியும்!

படம்
உடலின் சக்தியை உலகிற்கு காட்ட நினைத்தேன் ஆறு மாதங்களில் பதினான்க ஆபத்தான மலைப்பகுதிகளில் ஏறி உலக சாதனை படைத்திருக்கிறார் நேபாளத்தின் கூர்கா இனத்தவரான நிர்மல் புர்ஜா. இந்த சாதனை படைத்தபின் அவர் தரும் நேர்காணல் இது. கடந்த எட்டு ஆண்டுகளை விட இந்த ஆண்டின் ஆறு மாதங்களில் நீங்கள் செய்த சாதனை முக்கியமானது. விரைவில் எவரெஸ்ட், லோட்சே ஆகிய மலைகளிலும் ஏறுவீர்கள் என நம்புகிறோம். 48 மணிநேரத்தில் மக்காலு மலைப்பகுதியில் ஏறினேன். பாகிஸ்தானிலுள்ள 8 ஆயிரம் மீட்டருக்கும் அதிகமான மலைப்பகுதிகளிபல் 23 நாட்களில் ஏறியுள்ளேன். என்னுடைய நோக்கம் உலக சாதனை படைப்பது அல்ல. மனிதனின் உடல் பல்வேறு சூழல்களுக்கும் தாக்குபிடிப்பது என்பதை உலகிற்கு காட்டவேண்டும் என்பதே. ரெய்ன்ஹோல்டு மெஸ்னர், 8 ஆயிரம் மீட்டர் உயரத்தை பதினாறு வயதில் அடைந்தார். அன்றைய காலத்தை ஒப்பிடும்போது இன்று தொழில்நுட்ப வசதிகள் முன்னேறியிருக்கிறதுதானே? தொழில்நுட்ப வசதிகள் முன்னேறியிருக்கிறது. அதேசமயம் மனிதர்களின் மனதில் எதிர்மறை எண்ணங்கள், விமர்சனங்கள் கூடியிருக்கின்றன. நான் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. மலையேற்றத்திற்கு நிறைய ப

மலையாள மொழியில் தெலுங்குப்படம் - கல்கி படம் எப்படி?

படம்
கல்கி  - மலையாளம் இயக்கம் பிரவீன் பிரபாராம் ஒளிப்பதிவு  கௌதம் சங்கர் இசை ஜேம்ஸ் பிஜய் ஆஹா மலையாளப் படமா அல்லது தெலுங்குப் படமா என திகைக்கும்படி சண்டைக்காட்சிகளில் அனல் தெறிக்கிறது. எஸ்.ஐ கே, நஞ்சன் கோட்டை எனும் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றலாகி வருகிறார்,. அந்த ஊரில் அமர்நாத் என்பவர், மக்களை ஊருக்கு வெளியே கொண்டுபோய் வைத்துவிட்டு அங்கு துப்பாக்கிகளை தயாரித்து வருகிறார். இருவருக்குமான டிஷ்யூம் டிஷ்யூம்தான் கதை. இதை எப்போதும் போல மலையாளப்படங்களின் வேகத்தில் சொல்லாமல் பரபரவென சொல்லியிருப்பதுதான் படத்தைப் பற்றிப் பேசக்காரணம். டோவினோ தாமஸ்தான் படத்தின் பெரும்பலம். அடுத்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் பிஜய். தன்னுடைய கடந்த காலத்தை நினைத்து பார்த்து எதிரிக்கு எதிராக நின்று போராடும் வேகம், போலீஸ் ஸ்டேஷனில் உள்ள ரவுடியை தீவைத்து எரிப்பது, ஊருக்குள் அமைதி கொண்டுவரை அசுரனாக நடந்துகொள்வது என காட்சிக்கு காட்சி பின்னி எடுக்கிறார். இவருக்கு நேர் எதிராக தில்லாக நிற்கிறார் சிவஜித் பத்மநாபன். நெஞ்சில் எப்போதும் எரியும் வன்மத்துடன் மீசையை முறுக்கியபடி நடக்கும்போது கத்தியை செருகி இழுத்த

அந்த சமாச்சாரத்தைச் சொல்லும் அடல்ட் கரடி! - அம்பு படாத கரடிக்கதை!

படம்
TED 1, TED 2 மார்க் வால்பெர்க் இயக்கம் - சேத் மெக்ஃபார்லென் ஒளிப்பதிவு - மைக்கேல் பாரட் இசை - வால்டர் மர்பி இது வயது வந்தவர்களுக்கான காமெடி படம். அதனை மறக்காதீர்கள். அப்போதுதான் குங்குமம் விமர்சனக்குழு போன்ற லாஜிக் கேள்விகளை எழுப்பாமல் படத்தை ரசிக்க முடியும். அமெரிக்காவில் வாழும் தம்பதி. அவர்களுக்கு தனிமை விரும்பியான சிறுவன். அவனுக்கு பெற்றோர் கொடுக்கும் டெடி பியர் பொம்மை. இவைதான் தொடக்க காட்சிகள். இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? ஆம் மற்ற டெடிகளைப் போல அல்ல இந்த டெடி. இது பேட்டரியால் இயங்கும் என்றாலும், மனிதர்களோடு இயல்பாக பேசக்கூடிய திறன் பெற்றது. இதனால் பத்திரிகை,டிவி என அனைத்திலும் பிரபலம் ஆகிறது. ஆனால் அந்த சிறுவனை மறக்கவே இல்லை. அவனோடுதான் கடைசி வரை இருக்கிறது. எல்லோருக்கும் குறிப்பிட்ட வயது வந்தால் அடுத்த பாலினத்தவரை தேடுவோம். பார்ட்டி பண்ணுவோம். பெற்றோர் வீட்டில் இல்லை என்றால் கும்தலக்கடி குஜாலை நடத்துவோம் அல்லவா? அதேதான் இங்கு மார்க் வால்பெர்க்கு முன்னே டெடி செய்கிறது. டார்ச்சர் ஆகும் மார்க்கின் லிவிங் இன் பெண் தோழி மிலா குனிஸ், டெடியை அடித்

30 பிளஸ் ஆட்களுக்கான அரசில் பகடி அதிரடி - முத்தின கத்திரிக்கா

படம்
முத்தின கத்திரிக்கா இயக்கம் வேங்கட் ராகவன் ஒளிப்பதிவு - பானு முருகன் இசை - சித்தார்த் விபின் மூலப்படம் - வெள்ளி மூங்கா கதை - ஜோஜி தாமஸ் ஆஹா படம் உங்களை சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கும் என்பதுதான் கேரண்டி. சுந்தர்.சி, சதீஸ், ரவி மரியா, சிங்கம் புலி என அனைவருமே பிரமாதமாக நடித்திருக்கிறார்கள். மலையாளப்படத்தின் அங்கதத்தை அப்படியே கடத்தியிருக்கிறார்கள். அதனால் சிலநேரம் தீவிரமான அரசியல் பகடியோ என்று தோன்றுமளவு படம் செல்கிறது. இது தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவம்தான். காமெடி என்பதால் பாடல்களில் இசையமைப்பாளரும் மெனக்கெடவில்லை. கோவிலூர் நகராட்சியில் நின்று ஜெயிக்கும் லெட்டர்பேடு கட்சித்தலைவர் என்பதுதான் ஒன்லைன். இதில் நாற்பது வயது கடந்த அவருக்கு திருமணம் ஆகவில்லை என்பது முக்கியமான விஷயம். இதை வைத்தே படம் முழுக்க கலாய்த்து சிரிக்க வைத்திருக்கிறார்கள். ஐய்யய்யோ... சிங்கம்புலி சொல்வது போல ஐந்து தெருக்களை கொண்ட ஊர் என்பதால் பானு முருகனின் கேமரா தடுமாறி இருக்கிறது. எனவே இருக்கும் விஷயங்களை வைத்து பட்ஜெட்டிற்குள் பதவிசமாக பிரமாண்டமாக படம் எடுத்திருக்கிறார்கள். பா

பாகிஸ்தான் ராணுவம் பெண்களுக்கு இழைத்த அநீதி! - நீதி கேட்கும் ஆவணப்படம்!

படம்
போரின் கொடுமை நினைத்துப் பார்க்க முடியாதது 1971ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைக்காக நடந்த போர் அங்கு பெரும் சோகங்களையும், வேதனைகளையும் ஏற்படுத்தியது. காரணம், இந்த பிரிவினைக்காக அங்கு ஏராளமான உயிர்பலிகள், வல்லுறவுகள் நடைபெற்றன. இதுபற்றி எழுத்தாளர் லெஸ்ஸா காசி ஆவணப்படம் எடுத்துள்ளார். இவர் வங்கதேசத்தில் பிறந்து வளர்ந்து இங்கிலாந்து நாட்டிற்கு இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார். அவரிடம் அவரின் ஆவணப்படமான ரைசிங் சைலன்ஸ் பற்றி பேசினோம். இந்த ஆவணப்படும் தனிப்பட்ட விதத்தில் உங்களுக்கு வாழ்க்கை தொடர்பானது. எப்படி இந்த மையத்தை ஆவணப்படமாக எடுக்கவேண்டும்  என்று தோன்றியது? என்னுடைய தந்தை விடுதலைப் போராட்ட வீரர். அவர் விடுதலையில் ஈடுபட்ட பிரங்கானா என்ற பெண்களைப் பற்றிய கதைகளை கூறுவார். அவர்கள் விடுதலைப்போரில் தங்கள் இன்னுயிரை ஈந்து சுதந்திரத்தைப் பெற்றுத் தந்ததாக கூறுவார். எனக்கு அந்த சிறுவயதில் அவர்களைப் பார்த்தபோதும், அவர்களின் முகங்களை நினைவுகொள்ள முடியவில்லை. பின்னர் அவர்களை தேடியபோது பலரும் காற்றில் கற்பூரம் போல மறைந்துவிட்டனர். காரணம், அப்போது வங்கதேசத்தை உருவாக்கிய தேசத்தந்தையான முஜிப

பிற மாநிலங்களை விட பஞ்சாப் வெளியிடும் மாசு குறைவுதான்!

படம்
நெற்கழிவுகளை எரிக்காமல் இருக்க விவசாயிகளுக்கு மானியங்களை வழங்குவோம்.  பஞ்சாப்பில் அறுவடை முடிந்ததும் நெற்கழிவுகளை எரிப்பது வழக்கம். மாறிவரும் சூழலில், இந்தப் பழக்கம் சூழல்கேடுகளை உருவாக்கி வருகிறது. இதனைக் குறைக்க பஞ்சாப் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பயிர்களை எரிக்கும் நிகழ்வு போன ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக நடந்துள்ளது. இதைத்தடுக்க அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது? இந்த பிரச்னைக்கு நீண்டகால நோக்கில் யோசித்துத்தான் தீர்வுகளைக் காண முடியும். நாங்கள் விவசாயிகளுக்கான எந்திரங்களை தற்போது மானிய விலையில் வழங்கி வருகிறோம். கடந்த ஆண்டில் 28 ஆயிரம் இயந்திரங்களை வழங்கி உள்ளோம். இந்த ஆண்டில் 22 ஆயிரம் இயந்திரங்களை வழங்கி உள்ளோம். மேலும் விவசாயிகளுக்கு நெல் குவிண்டாலுக்கு நூறு ரூபாயை மானியமாக வழங்கிவருகிறோம். இது மத்திய அரசு வழங்கும் பொருட்களுக்கான குறைந்த விலையை விட அதிகமாகும். மாநில அரசாக எங்களிடம் உள்ள ஆதாரங்களை வைத்துத்தான் நாங்கள் செயல்பட முடியும். மத்திய அரசு இந்த விவகாரத்தில் எங்களுக்கு உதவினால் மட்டுமே மாசுபாடுகளை குறைக்க முடியும். விவசாயிகளு