இடுகைகள்

தன் கௌரவத்திற்காக யாரையும் பலிகொடுக்கத் தயங்காத சினிமா இயக்குநர்! - ஆட்டகாலு

படம்
maryland ஆட்டகாலூ இயக்கம்: பச்சூரி முரளி இசை: சாய் கார்த்திக்   சித்தார்த் புகழ்பெற்ற சினிமா இயக்குநர். சாலை விபத்தில் அப்பா, அம்மா இருவரும் பலியாகிவிட அனாதையாகிறாள் சிறுமி ஒருத்தி. அவளை அவளது சொந்தங்களே விலக்கி வைக்க, சித்தார்த் அச்சிறுமியை தத்தெடுத்துக்கொள்கிறார். அட எப்படிப்பட்ட மனிதர் என நாம் வியக்கும்போது, அவரது வீட்டில் காதல் மனைவி அஞ்சலி கத்தியால் முதுகில் குத்தப்பட்டு பிணமாக கிடக்கிறார். ரத்தம் வடிந்து கதவுக்கு வெளியே குளமாக தேங்கிக் கிடக்கிறது. அவளது அம்மா இதைப்பார்த்து ஐயோ என வாயில் கைவைத்து அலற, போலீஸ் விசாரணை செய்து எளிமையாக சித்தார்த்தான் கொலையாளி என கூண்டில் நிறுத்துகிறது. ஆனால் சித்தார்த் நான் கொலை செய்யவில்லை. நியாயத்தின் பக்கம் நிற்பதாக சொல்லும் அரசு வழக்குரைஞரே இதுபற்றி முடிவு சொல்லட்டும் என்கிறார். இதனால் குழப்பத்திற்கு உள்ளாகும் அரசு வழக்குரைஞர் வீரேந்திரா, இதுபற்றி விசாரணையை முடுக்கிறார். அவருக்கு டிசிபியும் உதவுகிறார். அதன் முடிவில் கொலைக்கு அஞ்சலியின் காதலன் முன்னா காரணம் என முடிவாக, அவனுக்கு மரணதண்டனை வழங்கப்படுகிறது. சித்தார்த் விடுதலையாகி வெளியே வருகிற

நண்பனின் அறிவுரையால் படுகுழியில் விழும் காதல்! - கீதகோவிந்தம்

படம்
கீத கோவிந்தம் இயக்கம்: பரசுராம் இசை: கோபிசுந்தர் விஜய் கோவிந்த் ஹைதராபாத்தில் வசிக்கிறான். அங்கு கோவிலில் ஒரு பெண்ணைப் பார்க்கிறான். வாழ்க்கையை அவளோடு வாழ்ந்தால் எப்படியிருக்கும் என நினைக்கிறான். அப்போது அவனது தங்கைக்கு திருமண சம்பந்தம் கூடி வருகிறது. அதற்காக ஊருக்கு செல்கிறான். பஸ்ஸில் போகும்போது அவன் கோவிலில் சந்தித்த பெண் கீதாவைச் சந்திக்கிறான். ஆனால் அப்பயணத்தில் நேரும் சிறு தவறு அவனது தங்கையின் திருமணம், அவனது அப்பாவின் உயிர் ஆகிய இரண்டையும் ஆபத்துக்குள்ளாக்குகிறது. எப்படி அதிலிருந்து விஜய் கோவிந்த மீண்டான் என்பதே கதை. ஆஹா படம் முழுக்க நம்மை ஆச்சரியப்படுத்துவது விஜய் தேவரகொண்டாவின் நடிப்புதான். சிறப்பாக நடித்திருக்கிறார். தான் செய்த தவறு, காதலிக்கும் பெண்ணிடம் கூட காதலைச்சொல்ல முடியாதபடி எப்படி வாழ்க்கையை இடியாப்பச்சிக்கலாக்குகிறது என்பதை உடல்மொழியில் காட்டியிருக்கிறார். ராஷ்மி மந்தனா படம் முழுக்க வெறுப்பைக் காட்டும் கதாபாத்திரம். இவருக்கு பெரிய ஸ்கோப் ஒன்றுமில்லை. நண்பராக வரும் ராகுல் ராமகிருஷ்ணா சரக்கு அடித்துவிட்டு கொடுக்கும் யோசனைதான் படத்தின் முக்கிய திருப்புமுனை. இ

சிறுமியைக் காக்க போராடும் முன்னாள் ராணுவ வீரர் - மை பிலவ்டு பாடிகார்டு

படம்
மைடிராமா லிஸ்ட் தி பாடிகார்டு - சீனா 2016 இயக்கம் - சாமோ ஹங்   மிஸ்டர் டிங் ஓய்வுபெற்ற ராணுவ ஆசாமி. அவர் மனதுக்குள் இருக்கும் வலி ஒன்றுதான். அவர் மகள் வயிற்றுப் பேத்தியை நகரில் தொலைத்துவிடுகிறார். இதனால் குடும்பத்தில் நேரும் பிரச்னைகளால் மகள், அவரை எப்போதும் உன்னைப் பார்க்கமாட்டேன். செத்தொழி என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். வயதான காலத்தில் வரும் பிரச்னையான டிமென்ஷியா அவரை மெல்ல தாக்கத்தொடங்குகிறது. ராணுவத்தில் வரும் பென்ஷன் பணத்தில் வாழ்ந்து வரும் அவருக்கு துணையாக பக்கத்துவீட்டு சிறுமி இருக்கிறாள். pinterest குடிநோய், சூ தாட்ட அடிமையான அப்பாவுக்கு பயந்து அந்த சிறுமி பெரும்பாலான நேரங்களில் டிங்கின் வீட்டில்தான் இருக்கிறாள். அங்குதான் டிங்கோடு சாப்பிடுகிறாள். இருவரும் சேர்ந்து மீன் பிடிக்க செல்கிறார்கள். ஐஸ்க்ரீம் சாப்பிடுகிறார்கள். உறவுகள் யாருமே இல்லாத நிலையில் அவர் குடியிருக்கும் வீட்டு ஓனரான பெண்ணும், பக்கத்து வீட்டுச் சிறுமியும் காட்டும் அன்பு மட்டுமே டிங்கிற்கு ஆறுதலாக இருக்கிறது. இந்த நேரத்தில் சூதாட்டத்தில் 20 லடசம் ரூபாய் கடன் ஏற்பட்டு விடுகிறது சிறுமியின் தந்தைக்கு. அ

அப்பாவை பழிவாங்கும் மகளின் கொலைவெறி தாண்டவம்- டாக்சிவாலா

படம்
டாக்சிவாலா தெலுங்கு 2018 இயக்கம் - ராகுல் சாங்கிருத்தியன் திரைக்கதை - சாய்குமார் ரெட்டி  இசை - ஜேக்ஸ் பிஜாய் ஒளிப்பதிவு - முட்டாலா மானசா விஜய் தேவரகொண்ட நடித்துள்ள திகில் திரைப்படம். வேலை அமையாமல் ஸ்விக்கி, உன்சோ என பல்வேறு வேலைகளைச் செய்துவருகிறார் விஜய். அப்போது தன் அக்காவிடம் தாலிக்கொடியை விற்று காசு பெற்று டாக்சி ஒன்றை செகண்ட்ஹேண்டாக வாங்குகிறார். உடனே ஓலாவில் இணைந்து வண்டி ஓட்டத் தொடங்குகிறார். அவருக்கு இருக்கும் லட்சியம், காருக்கு வாங்கிய கடன்தொகையை அடைத்து அக்காவின் தாலியை மீட்கவேண்டும் என்பதுதான். அவர் வாங்கும் வண்டி வின்டேஜ் லுக்கில் வினோதமாக இருக்கிறது. ஆனால் அந்த லுக் அவருக்கு பிடித்திருக்கிறது. இந்த கார் மூலமாக டாக்டர் காதலி வேறு விஜய்க்கு கிடைக்கிறார். சந்தோஷத்திற்கு கேட்கவா வேண்டும்? ஆனால் டாக்சி தன்னிச்சையாக சிலசமயங்களில் இயங்குகிறது. குறிப்பிட்ட பொம்மை மட்டுமே டாஷ்போர்டில் இருக்கிறது. அதனை விஜய் என்ன முயன்றும் மாற்ற முடியவில்லை. ஒருநாள் இரவில் டாக்டர் ஒருவரை ஏற்றிக்கொண்டு வரும்போது, அவர் காரில் வினோதமாக இறக்கிறார். அவரது உடலை கார் தானாகவே கொண்டுபோய் ரயில்வே பாதையில்

தொழிலாளர் சட்டங்களை மாற்றுவது மனிதநேயமற்ற செயல்! - ரெனானா ஜாப்வாலா

ரெனானா ஜாப்வாலா , பொருளாதார வல்லுநர் சேவா எனும் பெண்கள் அமைப்பை ஒருங்கிணைத்து வருகிறார் . இந்தியாவிலுள்ள பதினான்கு மாநிலங்களில் 1.7 மில்லியன் மக்கள் இதில் இணைந்துள்ளனர் . ரெனானா பொது முடக்க காலம் பற்றியும் , தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளைப் பற்றியும் பேசினார் . தொழிலாளர் சட்டங்கள் நெகிழ்வுத்தன்மை கொண்டதாக இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது . புதிய தொழில்களைத் தொடங்க இது தடையாக உள்ளதா ? நான் அப்படி நினைக்கவில்லை . இந்தியாவில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான , லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகிறார்கள் . இதனால் அவர்களுக்கு தொழிலாளர் சட்டங்களின் அனுகூலம் கிடைப்பதில்லை . குறைந்தபட்ச சம்பளம் என்ற உரிமை கூட அவர்களுக்கு நிறைய மாநிலங்களில் கிடைப்பதில்லை என்பதே உண்மை . சீனாவில் உள்ள தொழிலாளர்களுக்கு தொழில் சார்ந்த பாதுகாப்பு அதிகம் . இந்தியாவில் அதுபோல கிடையாது . தொழில்களை எளிமையாக தொடங்க முடியாததற்கு அரசு அமைப்புகள் , போதாமை கொண்ட அடிப்படைக் கட்டமைப்புகளும்தான் காரணம் . பொதுமுடக்க காலம் தொழிலாளர்களைப் பற்றி எந்த விஷயங்களை வெளியே கொண்

மக்களுக்கு நேரடியாக பணம் வழங்குவது மட்டும் ஒரே வழி அல்ல! - நிர்மலா சீதாராமன்

படம்
நிர்மலா சீதாராமன் , நிதி அமைச்சர் இந்திய அரசு அறிவித்து ள்ள இருபது லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி இதுவரை இல்லாத அளவு மக்களிடம் கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது . அரசு இதனை எப்படி மக்களுக்கு அளிக்கவிருக்கிறது என்பது பற்றி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேட்டோம் . இந்திய அரசு அளித்துள்ள நிதியுதவியை என்னென்ன அம்சங்களை பரிசீலனை செய்து அறிவித்துள்ளது ? இந்திய அரசு , பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டதிலிருந்து இதனால் ஏழைகள் , இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கருதியது . பல்வேறு மாநிலங்களிலுள்ள நிதி அமைச்சர்கள் , அதிகாரிகள் , முதல்வர்கள் ஆகியோரின் பல்வேறு கருத்துகளைக் கேட்டு நாங்கள் இத்தொகையை அறிவித்துள்ளோம் . பிஎம் காரிப் கல்யாண் நிதியுதவி வேகமாக பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு பாதிப்பைக் குறைத்தோம் . பிரதமர் அலுவலகம் , நிதியமைச்சக அலுவலகம் மற்றும் பிற துறைகள் அனைத்தும் ஒருங்கிணைவாக செயல்பட்டுத்தான் இந்த நிதி திட்டத்தை மக்களுக்கு கொண்டுபோய் சேர்த்துள்ளோம் . மக்களின் வங்கிக்கணக்குக்கு நேரடியாக பணம் அனுப்புவதை நீங்கள் ஏற்கவில்லையா ? அது வேலைவாய்ப்ப

இந்திய அரசு அடையாள அரசியலை கைவிட்டு மக்களுக்கு உதவவேண்டும்! - பொருளாதார அறிஞர் தாமஸ் பிக்கெட்டி

படம்
அமேஸான்    இந்தியாவிடம் மேற்குலகு கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன பிரான்ஸைச் சேர்ந்த தாமஸ் பிக்கெட்டி, கேப்பிடல் அண்ட் ஐடியாலஜி என்ற நூலை எழுதியுள்ளார். இந்நூலைப் பற்றி அவரிடம் பேசினோம். இந்த நூலை எழுத உங்களைத் தூண்டியது எது? நான் பல்வேறு நாடுகளில் நிலவும் சமூக பாகுபாடு, பணக்காரர்கள், ஏழைகள் ஆகியவற்றோருக்கு இடையிலுள்ள வேறுபாடுகள், இடைவெளி ஆகியவற்றை கவனித்து வருகிறேன். இந்த வகையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், மத்திய கிழக்கு நாடுகளின் பொருளாதாரங்கள் நான் தீவிரமாக கவனித்து வருகிறேன். இங்கு 2002இல் பொருளாதார இடைவெளி குறைந்து பின்னர் 2015-16 ஆண்டுகளில் மீண்டும் தோன்றியுள்ளது. இதைப்பற்றி ஆராயும் விதமாகவே நான் இந்த நூலை எழுதியுள்ளேன். பொருளாதார சமச்சீரின்மை, இடைவெளிகள்தான் பொருளாதாரத்தை வளர்க்கிறது என்று சிலர் கூறுகிறார்களே? அது தவறான கருத்து. ஓர் நாடு வளர்வதற்கான முக்கியக்காரணம், அந்நாடு கல்வி அறிவைப் பெறுவதுதான். அமெரிக்கா மிகப்பெரிய வல்லரசு நாடாக வளர்ந்து உருவானதற்கு காரணம், அங்குள்ள கல்வி அமைப்புகள்தான். இன்று அந்த தகுதியை அந்நாடு இழந்துவிட்டது. அனைத்து மக்

இடம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கையாள்வதில் மத்திய அரசு தவறு செய்துவிட்டது! - சின்மயி தும்பே

படம்
  சின்மயி தும்பே, பொருளாதார பேராசிரியர் , ஐஐஎம்   ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஊரை நோக்கி நடந்துசென்றுகொண்டிருக்கின்றனர். எப்படி இந்த சூழ்நிலையை சமாளிப்பது? மத்திய அரசு இந்த சூழ்நிலையைக் கணிக்காமல் பெரிய தவறு செய்துவிட்டது. முதலிலேயே தொழிலாளர்கள் கிளம்புவதற்கு தயாராக சில ஏற்பாடுகளை செய்துகொடுத்திருந்தால் நடந்தே தங்கள் வீட்டுக்குச் செல்லும் அவலநிலைமை ஏற்பட்டிருக்காது. இனி அரசு என்ன உதவிகளை அறிவித்தாலும் அது தொழிலாளர்களுக்கு சேர்வது கடினம்தான். நாம் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றி தகவல்களை சேகரித்து வைத்தால் என்ன?   2016-17 ஆண்டு பொருளாதார அறிக்கையில் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றன. இவர்களின் எண்ணிக்கை 55 மில்லியன் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் இது உண்மையல்ல. இடம்பெயர்ந்த தொழிலாளர்களில் பலர் கட்டுமான தொழிலாளர்களாக தாங்கள் வேலை பார்க்கும் இடங்களிலேயே தங்கியிருந்தனர். இதனால் அவர்கள் இந்த கணக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதனால் பொருளாதார அறிக்கை மிகவும் குத்துமதிப்பாகத்தான அமைந்து இருந்தது. குழந்தை தொழிலாளர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள

ஒரு துளி மணலில் ஓர் உலகு! மின்னூல் விரைவில்......

படம்

மனிதர்கள் இருக்கும் இடத்தில் அரசியல் இல்லாமலா இருக்கும்? ஒ ரு துளி மணலில் ஓர் உலகு!

இனிய தோழர் ராமுவுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? கடிதம் எழுதுவதற்கு சற்று நிதானமான நேரம் கிடைக்கவில்லை . அதனால்தான் அடுத்தடுத்த கடிதங்களுக்கு இடையில் ஏகப்பட்ட நாட்கள் இடைவெளி . பொய் அல்ல உண்மை . நாங்கள் அடுத்து வரும் வாரம் வேறு அலுவலகத்திற்கு மாறுகிறோம் . ராயப்பேட்டை அஜந்தாவில் இனி ஜாகை . இங்குள்ள வயதான ஆட்களுக்கு இசைந்து சொல்ல முடிவது கடினமாக உள்ளது . இங்குள்ள சீனியர்களுக்கு இடமாற்றல் முடிவு பிடிக்கவில்லை . அவர்களுடைய நெடுநாள் நண்பர்கள் பழைய அலுவலகத்தில் இருக்கிறார்கள் . அங்கு போய் என்ன செய்வத ? என விவாதித்து வருகிறார்கள் . நிர்வாகம் எடுக்கும் முடிவு பத்திரிகையின் எதிர்காலத்திற்காகவே என்று நம்புகிறேன் . எனக்கு வேலை சார்ந்துதான் அனைத்து உறவுகளுமே என்று நம்புகிறேன் . அதைத்தாண்டிய உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள பெரியளவு முயற்சிகளை நான் எடுத்துக்கொள்ளவில்லை . அது அப்படியே இயல்பாக நடப்பதுதான் . வலிந்து எதைச் செய்தாலும் எனக்கு ஒத்துவருவதில்லை . இந்த வார திரைப்படமாக நான் செக்ஸ் அண்ட் ஜென் என்ற படத்தைப் பார்த்தேன் . எரோடிக் வகையைச் சேர்ந்த படம் இது . அஜால் குஜலாக இரு

வாழ்க்கையை நடத்திச்செல்வதற்கான கல்வி நமக்கு கிடைப்பதில்லை! ஒரு துளி மணலில் ஓர் உலகு!

அன்புள்ள நண்பர் ராமுவுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன் . இரண்டே நாட்களில் பொங்கல் . டிக்கெட் , புக்கிங் என எங்கள் இதழுக்கான ஆசிரியர் குழு முழுவதும் ஊருக்கு கிளம்ப ஆயத்தமாகிவிட்டது . நீங்கள் பெரும் பணத்தை பங்குச்சந்தையில் விட்டது எனக்கு பெரிய அதிர்ச்சி . உங்களது புதிய முயற்சி , பரிசோதனைகளை நான் எப்போதும் ஆதரித்து வந்திருக்கிறேன் . நீங்கள் இதுபற்றி என்னிடம் ஆலோசனையாவது கேட்டிருக்கலாம் . சரி எதுவாக இருந்தாலும் உங்கள் அம்மாவிடம் இதுபற்றி விளக்கினீர்களா ? துறைசார்ந்தவர்களிடம் இதுபற்றி இன்னும் தீர விசாரித்திருக்கலாம் . இனி நான் என்ன சொன்னாலும பிரயோஜனமில்லை . காலம் கைமீறிவிட்டது . பணத்தை திரும்ப பெறுவது உங்களது சாமர்த்தியத்தில்தான் உள்ளது . நண்பர் கார்ட்டூன் கதிரின் வீட்டுக்கு இன்று சென்றேன் . தி இந்து தமிழில் வேலை கிடைத்திருக்கிறது . எனவே ஒண்டு குடித்தனவீடு , பொது கழிப்பறை அவதியிலிருந்து விடுதலையாகி இருக்கிறார் . புதிய வீடு கிடைத்த கையோடு அவருக்கு பெண் பார்த்திருக்கிறார்கள் . விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார் . அவருக்கு கல்யாணம் செய்த கையோடு அவரது பெற்