இடுகைகள்

நடிப்பு, ஓவியம், பாடல், இசைப்பாடல்கள், நடனம் ஆகியவற்றில் சாதித்த கிளாசிக் பெண்கள்

படம்
                திரைப்பட நடிகை மர்லின் டயட்ரிச்   ஜெர்மனி அமெரிக்காவைச் சேர்ந்த பாடகர் , நடிகராக புகழ்பெற்றவர் மர்லின் டயட்ரிச் . இவர் 1930 ஆம் ஆண்டு தி ப்ளூ ஏஞ்சல் என்ற படத்தில் தனது வெற்றிக்கணக்கைத் தொடங்கினார் . இதன்பிறகு ஆங்கிலத் திரைபடங்களில் நடித்தவர் , பாடல் , நடிப்புக்கென உலகமெங்கும் உள்ள தியேட்டர்களுக்கு பயணித்து வெற்றி கண்டார் . உலகப் போரின்போது ஜெர்மனியிலிருந்து வெளியேறிய மக்கள் அமெரிக்காவிற்கு வந்து குடியேற பல்வேறு உதவிகளைச் செய்தார் . மர்லின் மன்றோ திரைப்பட நடிகை   1926 ஆம் ஆண்டு பிறந்தவரின் இயற்பெயர் நார்மா ஜீன் மார்டென்சன் . இவர் காப்பகத்தில் வளர்ந்தவர் . 1950 களுக்குப் பிறகு படங்களில் நடித்து புகழ்பெற்றார் . தனது நடிப்பிற்காக கோல்டன் குளோப் விருது வென்றார் . தனது 36 வயதில் திடீரென இறந்துபோனாலும் சினிமா வரலாற்றில் இவரளவுக்கு கவர்ச்சியான பெண் என்று யாரையும் குறிப்பிட முடியாது . 1944 ஆம் ஆண்டு சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் மன்றோ ஆயுத தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தார் . ஜோசபின் பேக்கர் பாடகர் , நடிகர்   

மல்யுத்தக்களத்தை குலைக்க நினைக்கும் தொன்மை விலங்கு! ஸ்கூபி டூ குழுவினரின் வேட்டை

படம்
                  ரெசில்மேனியா ஸ்கூபி டூ அனிமேஷன் ஹன்னா பார்பரா வார்னர் பிரதர்ஸ் டபிள்யூடபிள்யூஈ நிகழ்ச்சியில் திடீரென அசம்பாவிதம் ஒன்று நடக்கிறது . அங்கு ஏதோ விலங்கு ஒன்று வந்து வீர ர்களை அடித்துப்போடுகிறது . பல்வேறு அறைகளை அடித்து நொறுக்கிறது . அங்கு மல்யுத்தப்போட்டி தொடர்பாக நடத்தப்பட்ட டிவி டான்ஸில் ஸ்கூபிடூ போட்டியிட்டு வெல்கிறது . எனவே அவர்களுக்கு முழுப்போட்டியை பார்ப்பதற்கான டிக்கெட் கிடைக்கிறது . சேகியும் ஸ்கூபிடூவும் தங்களது துப்பறியும் குழுவை சம்மதிக்க வைத்து போட்டி நடத்தும் இடத்திற்கு செல்கிறார்கள் . அங்கு இவர்கள் செல்வதற்கு முன்னரே வீரர் ஒருவர் படுகாயமுற்று இருக்கிறார் . தொன்மை விலங்கு உயிர்பெற்று வந்துவிட்டதா என வெல்மா தலைமையிலான துப்பறியும் குழு உண்மையைக் கண்டுபிடித்ததா , சாம்பியன் பெல்டை காப்பாற்ற முடிந்ததா என்பதையெல்லாம் மல்யுத்த களத்தில் பரபரப்புடன் சொல்லியிருக்கிறார்கள் .    இந்த தொடரில் ஸ்கூபிடூ மல்யுத்த வீரரின் யுக்தியைப் பயன்படுத்தி பெல்டை கடத்துகிறது . ஹிப்னாடிசம் மூலம் நடக்கும் இந்த திருட்டினால் ஸ்கூபிடுவும் அதன் தோழன் சே

காதலியைக் காப்பாற்ற தனது ஆன்மாவையே தியாகம் செய்யும் காதலன்! சீக்ரெட் கார்டன்

படம்
                        காதலர்களின் ஆன்மா இடம்மாறினால்…… . கிளாட்ஸ்ரோபோகிக் உள்ள தொழிலதிபருக்கு சினிமாவில் சண்டைபோடும் ஸ்டண்ட்கலைஞர்க்கு வரும் காதல்தான் மையக்கதை . கிம் ஜூ போன் , வம்சாவளியாக நிறுவனத்தை நிர்வகிக்க வந்தவர் . இவரது நிர்வாகத்தில் வணிக மால் ஒன்று உள்ளது . இவரது அலுவலகத்தில் இவருக்கு உள்ள உளவியல் பிரச்னையைக் கண்டுபிடித்து ஊர்ஜிதம் செய்து அதை வைத்து நிறுவன இயக்குநர் பொறுப்பிலிருந்து நீக்க சதி நடக்கிறது . இதனை நிறுவனத்தில் முப்பது ஆண்டுகளாக வேலை செய்துவரும் அவருடைய மாமாவே செய்கிறார் . கிம்மைப் பொறுத்தவரை தினசரி வேலைக்கு போவதில் ஆர்வம் கிடையாது . வாரத்திற்கு மூன்று முறை அலுவலகம் வருபவர் மீது நேரம் எல்லாம் , ஏராளமான நூல்களைப் படிப்பதற்கு நேரம் செலவிடுகிறார் . அதுபோக நேரம் கிடைத்தால் இவரது குடும்பம் ஏற்பாடு செய்யும் பெண்களுடன் டேட்டிங் எனும் பெண் பார்க்கும் படலம் நடைபெறுகிறது . இப்படி வரும் பெண்களை முரட்டுத்தனமாக கேள்வி கேட்டு அவர்களை பீதியாக்கி ஓடவிடுவது கிம்முக்கு முக்கியமான ஹாபி .    கிம்முக்கு தன்னை ஆச்சரியப்படுத்தும் பெண்களே கிடைக்கவில்லை என்ற

தீவு மக்கள் மீது திடீரென கோபம் கொண்டு வேட்டையாடும் தொன்மை கடவுள்! - அலோகா ஸ்கூபி டூ

படம்
                அலோகா ஸ்கூபி டூ ஹவாயிலுள்ள அழகான தீவுதான் அலோகா . அங்கு அரசுக்கு முக்கியமான வருமானம் சுற்றுலா பயணிகளும் , கடலில் மீன் பிடித்து விற்பதும்தான் . இப்படி இருக்கையில் திடீரென அ்ங்குள்ள தொன்மையான கடவுளின் ஆன்மா அம்மக்களை தாக்க தொடங்குகிறது . விரைவில் அங்கு கடலில் அலைச்சறுக்கு போட்டி நடக்கவுள்ளது . இதனால் அந்த நகரின் மேயர் பதறுகிறார் . அங்கு நிலங்களை விற்று கட்டிடங்களை கட்டி எழுப்ப நினைத்தவர்களும் தொழிலை இழக்கின்றனர் . உண்மையில் திடீரென நடக்கும் அந்த தாக்குதலின் பின்னணி என்ன ? சிறு மனிதர்களை அனுப்பி சுற்றுலா பயணிகளை அடித்து உதைத்து விரட்டும் நோக்கம் என்ன ? வெளியாட்களை மெல்ல உள்ளூர் மக்கள் வெறுக்கும் அளவுக்கு சூழல் மாறுகிறது . இந்த சூழ்நிலையை எப்படி மிஸ்ட்ரி மெஷின் குழு கண்டுபிடிக்கிறது என்பதுதான் கதை .    ஹவாய் மக்களின் கலாசாரம் , அவர்களின் நம்பிக்கை , உணவு என நிறைய விஷயங்களை அனிமேஷன் படத்தில் பதிவு செய்திருக்கிறார்கள் . மக்களிடையே உள்ள நம்பிக்கையை வைத்து எப்படி சிலர் அவர்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கின்றனர் என்பதை ஃபிரெட் , டெப்னி , வெல்மா , சே

உலகை மாற்றிய பெண்கள் - கவிஞர் சாபோ, எமிலி டிக்கின்சன்

படம்
                    பெண் கவிஞர் சாபோ தொன்மைக்கால புகழ்பெற்ற பெண் கவிஞர் தொன்மைக்காலத்தில் தனது ஆழ்மன உணர்ச்சிகள் , கருத்துகள் பற்றி பாடல்களை எழுதிய பெண்மணி . அந்த காலத்திலேயே இந்த வகையில் ஒன்பது பாகங்களாக கவிதை நூல்களை எழுதி குவித்தார் . இன்று சாபோ எழுதியவற்றில் 650 வரி கவிதைகள் மட்டுமே மிச்சம் .    சாபோ அன்றைய காலத்தில் டிரெண்டிங்கை பின்பற்றாமல் அதனை உருவாக்கியவராக இருந்தார் . இவர் எந்த ரிதத்தில் , எந்த பாணியில் கவிதையை எழுதினாரே அதே போல நகலெடுத்து ஏராளமான கவிஞர்கள் கவிதைகளை பின்னாளில் எழுதினர் . லையர் எனும் இசைக்கருவியை இசைக்க அதற்கு கவிதையைப் பாடுவது சாபோவின் திறமை . சாபோவின் காலம் 630 முதல் 612 வரை இருக்கலாம் . இவரது சொந்த வாழ்க்கை பற்றி நமக்கு குறைவான தகவல்களை கிடைக்கின்றன . கிரேக்க தீவான லெஸ்போஸில் பிறந்த பெண் கவிஞருக்கு மணமாகி பெண் குழந்தை இருந்திருக்கிறது . கடல் பயணி மீது காதல் கொண்டு அக்காதல் நிறைவேறாத தால் மலை உச்சியில் இருநது கீழே குதித்து உயிரை விட்டார் என்று தகவல்கள் சொல்லுகின்றன . தொன்மை நாணயங்களில் சாபோவின் உருவம் பொறிக்கப்பட்ட