இடுகைகள்

தேதியிடா குறிப்புகள் எக்ஸ்டென்சன் மின்னூல் வெளியீடு - கூகுள் பிளே புக்ஸ் வலைத்தளம்

படம்
  2018ஆம் ஆண்டில் எழுதப்பட்ட நாட்குறிப்புகளை அடிப்படையாகக் கொண்ட நூல். இதில், நாளிதழில் வேலை செய்யும் ஒருவனின் பல்வேறு அனுபவங்கள், அவனைச் சுற்றியுள்ளவர்கள், எழுத்து, வாசிப்பு அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒருவகையில் அந்த காலகட்ட பல்வேறு செய்திகள் கூறப்படுகின்றன. இதில் கூறப்படும் சில கடைகள்,மனிதர்கள் இன்று இருப்பது கடினம். காலசுழற்சியை நிலைப்படுத்தி வைக்கும் முயற்சிதான் இது.  தேதியிடா குறிப்புகள் மின்னூலை வாசிக்க..... https://play.google.com/store/books/details?id=WFiKEAAAQBAJ

பல் ஆளுமை பிறழ்வு வரலாறு

படம்
  இருப்பதிலேயே வரம் என்றும் சாபம் என்றும் மனிதர்கள் பெற்ற ஒரு அம்சத்தைச் சொல்லலாம். அதுதான் நினைவுகள். இவைதான் நமக்கு நல்ல விஷயங்களையும், தவறான விஷயங்களையும் கற்றுத் தருகிறது. அதுதான் நிறைய விஷயங்களைப் புரிந்துகொள்ளவும் நீதியை உணர்த்தவும் அறிவுச் சேகரமாகவும் உள்ளது. அவை சில காயங்களை கு்ணப்படுத்துகிறது. வரலாற்றில் கருப்பின அடிமைத்தனங்களைப் பற்றிய அறியவும் உதவுகிறது. பல தலைமுறைகளுக்கு நினைவுகளைக் கடத்தி கவனமாகவும் நாம் இருக்க உதவுகிறது.  சிறுவயதில் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல் அனுபவங்கள், ஆளுமை பிறழ்வு அனுபவங்களை மனங்களில் உருவாக்குகிறது என்ற கருத்து பொதுவாக உள்ளது.  இந்த ஆளுமை பிறழ்வு சிக்கலும் கூட வலியான நினைவுகளை திரும்ப திரும்ப நினைவுபடுத்திக்கொள்வதால்தான் நேருகிறது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸார்டர் என்ற பாதிப்பு அதிகம் வெளித்தெரியாத ஒன்று. இன்று இந்த பாதிப்பை நோயாளிகள் வெளிப்படையாக சொல்லுகிறார்கள். அதற்கான சிகிச்சையும் பெறுகிறார்கள். வலியும், வேதனையும் நினைவுகளாக மூளையில் பதிந்துவிடுகிறது. இதில்தான் அத்தனை நல்லவைகளும் அல்லவைகளும் உருவா

அற்புதமான விமானங்களை வடிவமைத்த ஜப்பானிய பொறியாளரின் கனவு - விண்ட் ரைசஸ் - anime

படம்
  விண்ட் ரைசஸ் அனிமேஷன்  ஜப்பான்  அடிப்படையில் தேசியவாதப் படம்தான். ஆனால் அதைத்தாண்டிய விமானங்களை கட்டமைக்கும் கனவு கொண்ட ஒருவனின் வாழ்க்கை தான் அனிமேஷன் படத்தை உயிரோட்டமாக்கியிருக்கிறது.  இந்த அனிமேஷன் படம், ஜெர்மனியில் உள்ளது போன்ற நவீனத்துவத்துடன் அதிவேகம் செல்லும் விமானங்களை கட்டமைக்கும் பொறியாளர் ஒருவரின் கதையைப் பேசுகிறது. சிறுவயதில் இருந்தே விமான பைலட்டாக மாறும் ஆசையுடன் ஜீரோ உள்ளான்,ஆனால் கண்பார்வை சற்று குறைவானதால், பொறியாளர் ஆகிறான். அப்போது உலகப்போர் காலகட்டம். எனவே, வேகமாக செல்லும் ஆயுதங்களை கொண்டு செல்லும் விமானங்களை தயாரிக்க வேண்டிய தேவை உள்ளது. அதைப் பயன்படுத்தி ஜீரோ தனது விமானத்தை எப்படி உருவாக்குகிறான் என்பதே படம்.  படம் நெடுக விண்ணில் பறக்கும்போது அல்லது வாகனத்தில் பைக்கில் போகும்போது நமது முகத்தில் காற்று அடிக்குமே, வேகமாக, மெதுவாக என பல்வேறு விதமாக.. .அப்படி காற்று வீசிக்கொண்டே இருக்கிறது. விமானத்தை உருவாக்குபவனான ஜீரோ, காற்றில் தனது கனவுகள் அலைபாய திட்டங்களை தீட்டுகிறான். பெரும்பாலானவை, எஞ்சின் கோளாறுகள், மோசமான எரிபொருள், ஜப்பானில் வீசும் காற்றுக்கு சமாளிக்க முடிய

அப்பாவின் முன்கோபத்தால் திருடனாக மாறும் மகன் - கூண்டா - சிரஞ்சீவி, ராவ் கோபால் ராவ், ராதா

படம்
  கூண்டா  சிரஞ்சீவி, ராதா, சைகலா நாராயணா  இயக்கம் - கோதண்டராமி ரெட்டி இசை கே சக்ரவர்த்தி கொல்கத்தாவில் தொடங்கும் கதை, ஆந்திரத்தின் ஹைதராபாத்தில் முடிவடைகிறது. கொல்கத்தாவில் காளிதாஸ் என புகழ்பெற்ற நகை கொள்ளையன் தனது வளர்ப்பு தந்தையோடு வாழ்கிறான். வளர்ப்புத்தந்தைக்கு திருட்டுதான் தொழில். அதில் சாதிக்கும்படி காளிதாசுக்கு பயிற்சி கொடுக்கிறார்.அ வனும் வளர்ந்து, வளர்ப்புத்தந்தையின் வணிகத்தை பெருமளவு வளர்த்துக்கொடுக்கிறான். இந்த நிலையில் வளர்ப்புத் தந்தையின் தொழிலை யார் தொடருவது என காளிதாசுக்கும், வளர்ப்புத்தந்தையின் மருமகன் காசிராமுக்கும் மோதல் ஏற்படுகிறது. இதில் தோற்றுப்போகும் காசிராம் காளிதாசை கொலைசெய்ய நேரம் பார்த்து காத்திருக்கிறான். இந்தநேரத்தில் வளர்ப்புத்தந்தை விபத்து ஒன்றில் இறக்க, அங்கிருந்து கிளம்பும் காளிதாஸ் ஹைதராபாத்திற்கு வேலை தேடி வருகிறான். அ்ங்கு எஸ் பி ஒருவரை ரயில் சந்திக்கிறான். அவரை கொல்ல முயல்பவர்களை விரட்டுகிறான். பிறகு அவர் வீட்டில் தங்கி வேலை தேடுகிறான். உண்மையில் அந்த எஸ்பி யார், காளிதாசின் சிறுவயது, அவனது பெற்றோர் யார் என்பதை படம் விவரிக்கிறது.  மேற்சொன்னபடியும் கதை

நிறுவனத்தை, ஊழியர்களை உடைத்து நொறுக்கும் எதிர்மறை மனிதர்கள், அவர்களின் உளவியல்

படம்
ஒருவரின் உளவியல் சார்ந்த இயல்பை எப்படி கணக்கிடுவது எப்படி? மேலேயுள்ள அனைத்து அத்தியாயங்களிலும் ஒருவர் நடந்துகொள்வதைப் பார்த்து மற்றொருவர்தான் அவரை சிகிச்சைக்கு தயார்படுத்துவதைப் பற்றி பேசியிருந்தோம். ஆனால் இதெல்லாம் சரி என்றாலும் மருத்துவரே ஒருவருக்கு உளவியல் ரீதியாக பிறழ்வு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பார்? மையர்ஸ் பிரிக்ஸ் டைப் இண்டிகேட்டர் என்ற அளவீடு இதற்கென பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக இதை எம்பிடிஐ என குறிப்பிடுகிறார்கள். இதை வைத்துத்தான் ஒருவரின் பாதிப்பு, குண இயல்பு, வரம்பு, வலிமை, பலவீனம் எல்லாவற்றையும் அடையாளம் காண்கிறார்கள்.  எம்பிடிஐ அளவீட்டை மருத்துவர்கள் இசபெல் மையர்ஸ் மற்றும் கேத்தரின் பிரிக்ஸ் ஆகியோர் உருவாக்கினர். இதற்கு கோட்பாடு அடிப்படையில் உதவியது, கார்ல் ஜங் என்பவர். உளவியல் ரீதியாக சிக்மண்ட் பிராய்டிற்கு பிறகு, கவனிக்கப்படும் உளவியல் வல்லுநர், கார்ல் ஜங்.  பிறரது பாராட்டுகள், வாழ்த்துகள் மூலம் ஆற்றல் பெற்று தன்னை வடிவமைத்துக் கொள்பவர் என்றால் அவர் வெளிவயமானவர். சிந்தனைகளை தனக்குள்ளேய உருவாக்கி அதன் வெளிப்பாடுகளை மட்டும் தேவைக்கு ஏற்ப வெளியில் பகிர்ந்துகொள்ளும் மனித

நான் என்ன செய்யணும், நீங்களே சொல்லுங்க - டிபென்டண்ட் பர்சனாலிட்டி டிஸார்டர்

படம்
இந்தியர்களுக்கு முக்கியமான பிரச்னையே, முடிவு எடுப்பதுதான். சிலர் முடிவெடுப்பதில் மிக தீர்க்கமாக இருப்பார்கள். உணவகத்தில் சாப்பிடப் போகிறீர்கள். சாப்பிட்டு முடித்தபின் டெசர்ட் ஒன்றை ஆர்டர் செய்கிறீர்கள். ஆனால் சர்வர் அதை மாற்றிக் கொண்டுவந்துவிடுகிறார். உறுதியாக முடிவெடுப்பவர், நாங்கள் ஆர்டர் செய்தது இதுதான். மாற்றிக்கொண்டு வாருங்கள் என்பார். ஆனால் மறுப்பு சொன்னால்  சங்கடமாகுமோ என நினைக்கும் நபர், பரவாயில்லைங்க என இனிப்பை ஏற்றுக்கொள்வார். இதுதான் டிபென்டெண்ட் பர்சனாலிட்டி டிஸார்டரின் அடிப்படை அறிகுறி.  மற்ற அறிகுறிகளையும் பார்த்துவிடலாம்.  இந்த வகை ஆளுமை பிறழ்வு கொண்டவர்களை நண்பர்களோ பெற்றோர்களோ தான் வழிநடத்தவேண்டும். ஒருமுறை அல்ல. வாழ்க்கை முழுவதும். தனது கழுத்தில் பெல்ட்டை மாட்டி, அதன் மறுமுனையை இன்னொருவர் கையில் கொடுத்துவிட்டு சுதந்திரமாக வாழ்வேன் என சண்டை பிடிப்பார்கள். வாதம் செய்வார்கள்.  வாழ்க்கையில் அனைத்து நிலைகளிலும் பிறரைச் சார்ந்தே வாழ்வார்கள்.  சுயமாக முடிவெடுத்து டீ, காபி, கல்யாணம், சாந்தி முகூர்த்தம் என ஏதும் செய்யமாட்டார்கள். இயற்கையில் வரும் வெயில், மழை, பனி போல அதுவாக நட

மெல்ல தற்கொலைக்கு தூண்டும் குறைபாடு - மேஜர் டிப்ரசிவ் டிஸார்டர் -எம்டிடி

படம்
  மேஜர் டிப்ரசிவ் டிஸார்டர் வேலை, குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு, எண்டோவ்மென்ட் பாலிசி கட்ட வேண்டிய காலம் என சம்பாதிப்பவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் சிக்கல்கள் உருவாகலாம். பொறுப்புகள் மனதிற்கு சுமையாகத் தோன்றும்போது மனச்சோர்வு உருவாகிறது. இதனை ஒருவர் எளிதில் கையாள முடிந்தால் வெளியே வந்துவிடலாம். ஆனால் மனச்சோர்வு புதிர்ப்பாதையாக தோன்றும்போது, அவர்களுக்கு திகைப்பாகிவிடும்.  மேஜர் டிப்ரசிவ் டிஸார்டரைப் பொறுத்தவரை ஒருவருக்கு முதலில் ஏற்படும் மனச்சோர்வுக்கு மட்டுமே காரணம் இருக்கு்ம். அதாவது சில வகை தூண்டுதல். அதற்குப் பிறகு ஏற்படும் மனச்சோர்வுக்கு எந்த காரணமும் இருக்காது. இந்த மனநல குறைபாடு உள்ளவர்களுக்கு சோகம் என்பதை விட அனைத்திலும் எரிச்சல் இருக்கும். தினசரி செய்யும் செயல்களிலும் அது தீவிரமாக வெளிப்படத் தொடங்கும்.  பொதுவான சமூக நிகழ்ச்சிகளில் மனச்சோர்வு குறைபாடு உள்ளவர்கள் பங்கேற்க மாட்டார்கள். சாப்பிடுவதைக் கூட ரசிக்க முடியாது. செய்கிமா 2 மெட்டல் இசையைக் கூட ரசிக்க மாட்டார்கள். சரியாக தூங்க முடியாது. உடலில் வலி இருப்பது போல தோன்றும். அவர்களுக்கு இந்த பிரச்னையிலிருந்து வெளிய

பழங்குடி மக்களைக் காக்க திருடனாக மாறும் இளைஞன் - கொண்டவீட்டி தொங்கா - சிரஞ்சீவி, விஜயசாந்தி, ராதா

படம்
  மாஸ் டயலாக் என நினைத்துக்கொள்ளலாம்.. இதுதான் ராஜாவின் மாஸ்க்.. சுபலேகா பாடல்...  கொண்டவீட்டி தொங்கா இயக்கம் கோதண்டராமி ரெட்டி கதை வசனம் பாருச்சி சகோதரர்கள் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ராஜா என்பவர், மக்களின் நலனுக்காக நிலக்கிழார்களின் நலனுக்கு எதிராக திருடனாகிறார். திருடி ஏழை மக்களுக்கு உதவுகிறார். இதைக் கண்டுபிடிக்க காவல்துறை முயல்கிறது. கூடவே தாந்திரீக மந்திரவாதியும் முயல்கிறார். அப்போது சிறையில் இருந்து தண்டனை முடிந்து வரும் பழங்குடி பெண் அந்த ஊரில் உள்ள பணக்காரரைக் கொல்ல முயல்கிறார். யார் அவர், எதற்கு அவர் பணக்காரரைக் கொல்ல முயல்கிறார் என்பதே கதையின் முக்கியப் பகுதி.  படத்திற்கு இளையராஜா இசை. அதுதான் படத்தின் முக்கியமான உயிரோட்டம்.    ஆங்கிலத்தில் ஜோரோ என்று படம் வருமே.. படத்தின் அடிப்படை கதை அதேதான்.  ஊழல், கனிமம் எடுக்கும் உள்ளூர் பணக்காரர்களை அடித்து உதைத்து பழங்குடிகளுக்கு உரிய கூலி, குடியிருக்கும் நிலம், வருமானம் ஆகியவற்றை கொண்டவீடி தொங்கா பெற்றுத் தருகிறார். இதை யார் செய்வது என அங்கேயுள்ள இன்ஸ்பெக்டருக்கு கூட தெரியாதாம். பழங்குடி மக்கள் அனைவரும் செய்யும் வேலைக்கு ஏற்ப உடை அணிய

ஏழைகளுக்கு வழங்கிய கோவில் தான நிலத்தை அபகரிக்க நினைக்கும் பணக்கார கூட்டம் - அல்லுடு மஜாக்கா - சிரஞ்சீவி

படம்
  அல்லுடா மஜாகா சிரஞ்சீவி, ரம்பா, ரம்யா கிருஷ்ணன் கிராமத்தில் உள்ள கோயில் நிலங்களை தேட்டை போட முயலும் பெரும் பணக்காரர்களுக்கு இடையில் கிராம பஞ்சாயத்து தலைவரின் மகள் மாட்டிக்கொள்கிறாள். அவளது வாழ்க்கையைக் காப்பாற்றி, மணம் செய்துவைக்க அண்ணன் திட்டமிடுகிறான். அவனது முயற்சி சாத்தியமானதா என்பதே கதை.  படத்தின் கதைதான் சீரியசாக இருக்கும். ஆனால் காட்சிகள் எதிலும் எந்த சீரியஸ் தனமும் இருக்காது. படத்தில் சண்டைக்காட்சி நடைபெற்று முடிந்ததும், வில்லனின் ஆள் இப்போதே ஹீரோவைக் கொன்னுட்டா அப்புறம் கதையில் என்ன சுவாரசியம் இருக்கும் என்கிறார். இறுதிக்காட்சியில் அடிபட்டு உதைபடும் நாயகனின் தங்கையை மணக்கும் மாப்பிள்ளை கேமராவைப் பார்த்து இன்னும் நாயகனின் சாந்தி முகூர்த்தம் இருக்கு.. அதையும் பாருங்க என்கிறார். இறுதிக்காட்சியில் மட்டும்தான் சிரஞ்சீவி தன்னை மணக்க கொழுந்தியாளும் தயாராக இருப்பதைப் பார்த்து மிரண்டு என்ன செய்ய என்று கேமராவைப் பார்த்து பேசுகிறார். முடியலடா சாமி.  படத்தில் தொடக்க காட்சிகள் மட்டுமே சற்று ஆறுதலாக இருக்கின்றன. படத்தில் லட்சுமியின் மகள்கள் ரம்பா, ரம்யா கி வந்தபிறகு படம் எந்த திசையில் போக

புதிர்ப்பாதையிலிருந்து நம்பிக்கை பெற்று தப்பி வாழ்க்கையை அடைய கற்றுத்தரும் நூல்! - ஸ்பென்சர் ஜான்சன் (தமிழில் நாகலட்சுமி சண்முகம்)

படம்
  புதிர்ப்பாதையிலிருந்து தப்பித்து வெளியேறுதல்  ஸ்பென்சர் ஜான்சன் தமிழில் நாகலட்சுமி சண்முகம்  மின்னூல்  என் சீஸை நகர்த்தியது யார் என்ற நூலின் இரண்டாம் பகுதி. நூல் சிறியதுதான். வேகமாக படித்துவிடலாம்.  நாம் நம்புகின்ற நம்பிக்கை தவறாக இருக்கும்போது, அது நம்மை தொழில் வாழ்க்கையில் தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்து துன்பத்திற்குள்ளாக்குவதை எழுத்தாளர் வலுவாக சொல்ல நினைத்துள்ளார். அதற்குத்தான் புதிர்ப்பாதையில் சீஸ் தேடும் கதை கூறப்படுகிறது. இதில் ஜெம், ஜா, ஹோம் மற்றும் இரு சுண்டெலிகள் உள்ளன.  சுண்டெலிகளும், ஜாவும் புதிர்ப்பாதையில் இருந்த சீஸ்களைத் தேடி கண்டுபிடிக்க கிளம்புகின்றனர். ஆனால் ஜெம், இன்று இல்லாவிட்டால் என்ன நாளை இதே இடத்தில் சீஸ் கிடைக்கும் என காத்திருக்கிறான். பாறையின் புதிர்ப்பாதையில் யார் சீஸை வைப்பது, அதற்கான ஆதாரம் பற்றி அவன் ஏதும் கவலைப்படுவதில்லை. இதனால் நாளுக்குநாள் அவனுக்கு உணவு கிடைக்கவில்லை. ஆளும் மெலிய நம்பிக்கையும் மெலிகிறது. அப்போது ஹோம் என்ற சிறு குள்ளப் பெண் அவனுக்கு ஆப்பிள் தந்து உதவுகிறாள். ஜெம்முக்கு அது ஆப்பிள் என்பது கூட தெரிவதில்லை. சீஸ் தவிர ஏதும் சாப்பிடமாட்டேன்