இடுகைகள்

வில்லனின் வீட்டிற்கு சென்று கடத்தி வரப்பட்ட காதலியை கல்யாணம் செய்யும் தைரிய நாயகன்!

படம்
                சீதாராமுலு கல்யாணம் லங்காலோ நிதின் , ஹன்சிகா , சுமன் , அலி , பிரம்மானந்தம் கல்லூரியில் படிக்கும் நிதின் , அவரை சிகரெட் பிடிக்காதே என்று சொல்லும் நாயகியால் ஈர்க்கப்பட்டு காதலிக்கிறார் . காதல் செய்தவுடனே கல்யாணம் நடந்துவிட்டால் படத்தை குறும்படமாகவே முடிக்கவேண்டியது வரும் என காதலியின் அப்பா கிராமத்தில் பெரிய ரவுடி , அவருக்கு எதிரியாக ஒரு ரவுடிக்கூட்டம் இதற்கு இடையில் மாட்டிக்கொள்ளும் காதலர்கள் என கதையைக் கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள் . படத்தில் உருப்படியான விஷயம் பிரம்மானந்தம் மட்டுமே . அவரின் காமெடி மட்டுமே சற்று ஆறுதலாக உள்ளது . சுமன் பெரிய ரவுடி . சுருட்டி பிடித்தபடி அவர் நிதினை கேட்பது , உன்னால் என் மகளை ஆபத்தில் இருந்து காப்பாற்ற முடியுமா , அப்படி முடிந்தால் பெண்ணைக் கட்டித்தருகிறேன் என்கிறார் . உடனே நிதினும் முதுகில் மாட்டியுள்ள ரோஷன் பேக்கோடு வருங்கால மாமனாரின் ஆட்கள் நால்வரை உதைத்து மலைப்பாதையில் உருட்டிவிடுகிறார் . பிறகுதான் சுமன் மனம் மாறி சூப்பர் செலக்‌ஷன் என தைரியம்கொள்கிறார் . ஆனால் கர்மா ஈஸ் பூமராங் அல்லவா ? எதிரிகள் மாப்பி

மனநலன் பிரச்னையை, குறைபாட்டை அடையாளம் காட்டி குற்றத்திலிருந்து தப்பிக்கும் குற்றவாளிகள்!

படம்
            பாலியல் தாக்குதல்களில் ஈடுபடுபவர்கள் , வல்லுறவு செய்பவர்கள் சமூகத்தில உயர்ந்த அடுக்கில் இருந்தால் அவர்களுக்காக நீதி வளையும் . ஒடுங்கி காலில் விழுந்து பணியும் . நீதிமன்றத்தில் இதுபோன்ற வழக்குகள் வரும்போது , குற்றவாளிகள் செய்த குற்றத்திற்கு வருந்தும் இயல்பில் இருக்கிறார்களா என நீதிமன்றம் கவனிக்கிறது . மனித தன்மையே இல்லாத நிலையில் உள்ளவர்களை தண்டித்து எந்த பிரயோஜனமும் இல்லை . ஒருவேளை தான் என்ன மனநிலையில் இருந்தேன் , எப்படி கொலை செய்தேன் என்று தெரியவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டவர் கூறினால் , மருத்துவசோதனை செய்து , மனநிலை குறைபாடு உடையவர் என நிரூபித்தால் அவருக்கு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்படும் . பதிலாக மனநல மையத்தில் ஒரு படுக்கை உறுதி செய்யப்படும் . சிறையில் இருப்பதை விட மனநல மருத்துவமனையில் இருப்பது பாதுகாப்பானது என பலரும் நம்புகிறார்கள் . ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த தண்டனை ஏமாற்றமளிக்கும் . ஆனால் சட்டம் இதை அனுமதிக்கிறது . ஒருவரின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அவராக வெளிப்படுத்துவது உண்டு . அதற்கு அவரின் செயல்களை கவனிக்க வேண்டும் . தன்னைப் பற்றி

சுயநலமான மனிதர்கள், சமூகம், அரசியல்வாதிகளால் சுரண்டப்படும் உள்நாட்டு அகதியின் வாழ்க்கை!

படம்
        மனோரஞ்சன் பியாபாரி, எழுத்தாளர்     இன்ட்ரோகேட்டிங் மை சந்தால் லைஃப் மனோரஞ்சன் பியாபாரி சிறுவயதில் தான் பிறந்தவுடனே தனது நாக்கில் வைக்க வீட்டில் தேன் இல்லை என்று மனோரஞ்சன் கூறுகிறார் . அப்படி இனிப்பு வைக்கப்படும் குழந்தைக்கு வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று ஒரு நம்பிக்கை . நூலில் இந்த பகுதியை படிப்பவர்களுக்கு இது பெரிதானதாக தோன்றாது . ஆனால் மனோரஞ்சனின் வாழ்க்கை மோசமாகவே அமைகிறது . இனிப்பு என்ற சுவையே உண்ணாதவன் , அறியாதவன் வாழ்க்கை எப்படி இருக்கும் ? இவரது வாழ்க்கையும் அப்படித்தான் . இந்த சுயசரிதை பலரையும் அச்சப்படுத்தக்கூடியது . பீதியூட்டக்கூடியது . அந்தளவு சாதியால் , துரோகத்தால் வஞ்சிக்கப்பட்ட மனிதர் . மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எழுத்தாளர் மனோரஞ்சன் . இன்று அவர் புகழ்பெற்ற எழுத்தாளராக மாறிவிட்டார் . ஆனால் அவரது தொடக்க , மத்தியகால கட்ட வாழ்க்கை என்பது புழுத்த நாய் குறுக்கே போகாது என வசைபாடுவதைப் பற்றி தி . ஜா கூறுவார் . அதைப்போலத்தான் உள்ளது . அந்தளவு நெருக்கடிகள் . வறுமை , வேலை செய்து சம்பளம் கிடைக்காதது , ரயில்வே ஸ்டேஷனில் தூங்குவது , ரயிலில் டிக்கெ

இரக்கமில்லாத ரவுடியோடு தொழிலதிபர் மகன் ஆடும் போங்காட்டம்!

படம்
            ஆட்டாடிஸ்தா நிதின் , காஜல் அகர்வால் தொழிலதிபரின் மகனான நிதின் , தனது அப்பா பெயரை சொல்லாமல் அவர் பாட்டிற்கு கல்லூரிக்கு செல்வது , நண்பர்களோடு சுற்றுவது , வம்பு வழக்குகளை இழுத்து வருவது என குடும்பத்தின் கட்டுப்பாட்டிற்குள் கட்டுப்படாமல் வாழ்கிறார் . சுருக்கமாக அவரது குடும்பத்தில் அவர் படிக்காதவன் . பிறர் படித்தவர்கள் . இந்த நிலையில் நிதின் , ரவுடிகளை அடித்து உதைக்கும்போது , அந்த இடத்தில் காஜலின் தோழிக்கு பிறந்தநாள் பார்ட்டி நடைபெறுகிறது . அந்த விழாவே சண்டையால் களேபரமாகி சங்கடமாகிறது . இதைப்பற்றி காஜல் காவல்துறையில் புகார் செய்கிறார் . அங்குதான் நிதின் மிகப்பெரிய பணக்காரர் வீட்டு பிள்ளை என தெரிய வருகிறது . இன்ஸ்பெக்டர் அவரை விட்டுவிடுகிறார் . ஆனால் நிதின் காஜலை விடுவதாக இல்லை . அவரை பின்தொடர்ந்து செல்கிறார் . நிதினின் அப்பா நாக பாபு , மனிதர்களின் வாழ்வை கெடுக்காத தொழில் செய்ய நினைப்பவர் . இவரின் தொழில் போட்டியாளர் ரகுவரன் . அவருக்கு நாக பாபுவை எப்படியேனும் தோற்கடித்தால் போதும் என்ற வெறி . இப்படி போட்டி போட்டதில் இருவரின் நிறுவனங்களும் கீழேத