இடுகைகள்

இந்தியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

12.மோசடி நிரந்தரம், முறைகேடு ஒரு சந்தர்ப்பம் - மோசடி மன்னன் அதானி

படம்
  ஆதி குழுமம், அதானி குழுமத்திற்கு நிலக்கரியை விநியோகம் செய்யும் நிறுவனமாகும். நீண்டகாலமாக அதானி குழுமத்தின் வாடிக்கையாளராக உள்ளது. ஆதி குழுமத்தின் முதலீட்டாளர் பெயர், உட்கர்ஷ் ஷா. இவர், கௌதம் அதானியின் முப்பதாண்டு கால நண்பர் என எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை கட்டுரை தகவல் கூறுகிறது. 2020ஆம் ஆண்டு கணக்குப்படி, ஆதி குழுமத்தின் வருவாய், 9 மில்லியன் டாலர்களாகும். மொத்த லாபம் 97 ஆயிரம் டாலர்கள் என்ற தகவல், நிதி தொடர்பான ஆவணங்களிலிருந்து தெரிய வருகிறது. அதானி குழுமத்தில் உள்ள நான்கு நிறுவனங்கள், ஆதி குழுமத்திற்கு 87.4 மில்லியன் டாலர்களை கடனாக வழங்கியுள்ளது. ஆனால் இதுபற்றி விசாரித்ததில் பணம் கடன் கொடுக்கப்பட்டதற்கான எந்த ஆவணங்களும் இல்லை. இத்தனைக்கும் கடன் கொடுத்த பல நிறுவனங்கள், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டவை. ஆதி குழுமத்தின் வருமானம், லாபம் அடிப்படையில் அந்த நிறுவனம், பிற நிறுவனத்திடமிருந்து கடனைப் பெற்றதே தவறான நடவடிக்கை. பொருளாதார ஆலோசகர் எவரும் கடன் வாங்கும் யோசனையை ஏற்கவே மாட்டார்கள்.   ஆதி குழுமம், வாங்கிய கடனைக் கட்ட900 ஆண்டுகள் தேவைப்படுகிறது. அப்படி கடினமாக உழைத்தாலும் கூட அச

வரலாற்றை உண்மைகளின் அடிப்படையில்தான் பார்க்கவேண்டும் - வரலாற்று ஆய்வாளர், எழுத்தாளர் வில்லியம் டால்ரிம்பிள்

படம்
  வரலாற்று ஆய்வாளர் வில்லியம் டால்ரிம்பிள் வில்லியம் டால்ரிம்பிள், டெல்லியைப் பற்றிய நிறைய நூல்களை எழுதியுள்ளார். டெல்லி பல்வேறு வம்ச மன்னர்களின் கதைகளைப் பேசிக்கொண்டே இருக்கும் நகரம். அங்கு எங்கு திரும்பினாலும் ஏதாவது ஒரு மன்னரின் கல்லறை, நினைவுத்தூண் இருக்கும். எழுத்தாளர் வில்லியம், டெல்லியில்   நிஜாமூதீன் கல்லறை அருகில் அறை எடுத்து தங்கியிருந்தார். சிலந்திவலைகள் கட்டிய மூலை, தூசி படிந்த ஜன்னல்கள், கசியும் நீர்க்குழாய்   என வசதிகள் நிறைந்த அறை அது. சிட்டி ஆஃப் ஜின் (1993), தி அனார்ச்சி, வொயிட் முகல்ஸ், ரிடர்ன் ஆப் எ கிங், தி லாஸ்ட் முகல் என தொடர்வரிசையாக நூல்களை எழுதியுள்ளார். 2021ஆம் ஆண்டு ‘கம்பெனி குவார்டர்’ என்ற நூலை எழுதினார். இப்போது இந்து நாளிதழின் இந்து லிட் ஃபார் லைஃப் நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருக்கிறார். அவரிடம் அவரின் அடுத்த நூல், பாட்காஸ்ட், வரலாறு பற்றியும் பேசினோம். நீங்கள் காலத்திற்கு ஏற்ப உங்களை புதுப்பித்துக்கொள்கிறீர்களா? நான் முதல் நூல் எழுதும்போது என்ன செய்தேனோ அதைத்தான் இப்போதும் செய்துகொண்டிருக்கிறேன். எனது பேச்சுகள் குறிப்பிட்ட காட்சிப்பரப்பை விளக்கி வரு

காந்தியின் ராமன் - புதிய மின்னூல் வெளியீடு

படம்
  காந்தி காந்தி பிறந்து 150 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. வாழும்போதும், மறைந்த பிறகும் கூட அவரளவுக்கு சர்ச்சையான மனிதர் இந்தியாவில் குறைவுதான். ஆன்மிக குருக்களை மறந்துவிடுங்கள். வாழ்க்கை, த த்துவம், பொருளாதாரம், தொழில், இயற்கைச் சூழல் என பல்வேறு தளங்களிலும் காந்தியின் செல்வாக்கு இன்றும் உள்ளது.  இதற்கு முக்கியமான காரணம், காந்தி என்ற மனிதரின் மூலமாக ஒருவர் பெறும் ஊக்கம் பல்வேறு செயல்களாக மாறியுள்ளது. இதற்கு நிறைய இயக்கங்களை அடையாளமாக கூறலாம்.  காந்தியை எப்படி புரிந்துகொள்வது என்பது இன்று நமக்கிருக்கும் சிக்கல். ஏனெனில் காலந்தோறும் காந்தியை எப்படி பார்ப்பது, கொள்கைகளை புரிந்துகொள்வது பற்றி நூல்கள் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. காந்தியின் ராமன் நூல், பல்வேறு ஆங்கில நாளிதழ்களில் வெளியான கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு. நூலில் எழுத்தாளர் ராமச்சந்திர குஹாவின் நேர்காணலும் உள்ளது. இவர் தனது நூலில் வரலாற்றில் காந்தியின் இடத்தை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். காந்தியின் போராட்டம் எப்படிப்பட்டது, தென்னாப்பிரிக்காவில் அவரின் போராட்டம், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு எப்படி உதவியது என்பதை நூலில் வாசி

காந்தியின் ராமன் - புதிய மின்னூல் அட்டைப்படம் வெளியீடு

படம்
  காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தையொட்டி ஆங்கில நாளிதழ்களில் சிறப்புக்கட்டுரைகள் வெளிவந்தன.அதனைத் தொகுத்து தமிழாக்கம் செய்துதான், காந்தியின் ராமன் நூல் வெளியாகியிருக்கிறது.  இந்த நூலின் தொடக்க வடிவம் பிரதிலிபி தமிழில் வெளியானது. ஆனால், அந்த கட்டுரைகள் எழுதப்பட்ட வேகத்தில் பதிவிடப்பட்டதால் அதில் ஒரு சீரற்ற தன்மை இருந்தது. காந்தியின் ராமன் நூல் வடிவத்தில் பிழைகள் நீக்கப்பட்டு சீர் செய்யப்பட்டுள்ளன.  நூலின் அட்டைப்படம் மட்டும் இப்போது.... பின்னாளில் நூலை தரவிறக்கி வாசிக்கும்படியான இணைய முகவரி வெளியிடப்படும். நன்றி! நன்றி அட்டைப்படம் - dough belshaw, creative commons பிரதிலிபி தமிழ் வலைத்தளம்   டைம்ஸ் ஆப் இந்தியா  நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 

மக்களின் மனதைப் புரிந்துகொள்ள முயலும் தொழிலதிபர் - ஆனந்த் மகிந்திரா

படம்
  இந்தியாவில் தற்போது பொதுமக்களோடு அதிகம் உரையாடிக் கொண்டிருக்கும் தலைவர் யாரென   நினைக்கிறீர்கள்? அமெரிக்காவில் இதுபோல இயங்கும் சர்ச்சை கிளப்பும் தலைவர் ஒருவருண்டு. அவர் எலன் ம|ஸ்க் என அனைரும் தெரிந்துகொண்டிருப்பீர்கள். இந்தியாவில் எலன் ம|ஸ்கையொத்த பல்வேறு பரிசோதனை முயற்சிகளை செய்துகொண்டிருப்பவர் இவர் ஒருவரே…. அவர்தான் ஆனந்த் மகிந்திரா. இந்தியாவைப் பொறுத்தவரை தொழிலதிபர்கள் யாரும் வெளிப்படையாக தங்கள் கருத்தை எங்கும் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். என்ன காரணம்? அரசியல் கட்சிகள் அதை வைத்து அவர்களது தொழிலை நசித்து விடுவார்கள் என்பதுதான்   முக்கியமான காரணம்.   ஆனந்த் மகிந்திரா இந்தவகையில் அரசியல் என்பதைப் பற்றி கவலைப்படாமல் நம்பிக்கையான மனிதர்கள், அவர்களைப் பற்றிய வீடியோ என பகிர்ந்துகொண்டு   ட்விட்டரில் இயங்கி வருகிறார்.   ஆனந்த்   நாள்தோறும் ட்விட்டரில் பகிரும் வீடியோக்களைப் பார்க்க பகிரவே நிறைய மனிதர்கள் ட்விட்டரில் அவரைப் பின்தொடர்கிறாரகள். மகிந்திரா நிறுவனம் 1945ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2022ஆம் ஆண்டோடு 77 ஆண்டுகளை   நிறைவு செய்துள்ளது. 2020ஆம் ஆண்டில் 75 ஆண்டுகளை நிறைவு செய்தது. மகிந்

இரண்டு இந்தியாக்களைப் பற்றி பேசும் தனிக்குரல் கலைஞன்!

படம்
  உண்மை ஏற்படுத்தும் உறுத்தல் ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? அலர்ஜிக்கான மருந்துகளை தொடர்ச்சியாக சாப்பிட்டு வருகிறேன் . ஃபிரன்ட்லைன் சந்தா முடிந்துவிட்டது . இதுவரை வந்த இதழ்களை முழுமையாக படிக்க முடியவில்லை . நிதானமாகத்தான் படித்து வருகிறேன் . இரண்டு இந்தியா பற்றிய மீம்களைப் பார்த்து இருப்பீர்கள் . வீர்தாஸ் என்ற தனிக்குரல் கலைஞர் அமெரிக்காவில் பேசியது சர்ச்சையாகி இருக்கிறது . தீக்கதிர் நாளிதழிலும் அதை செய்தியாக்கியிருந்தார்கள் . சமகால உண்மையைத்தான் பேசியிருந்தார் . வீர்தாஸ் பெண்கள் , சிறுபான்மையினர் மீதான தாக்குதலைப் பற்றி பேசி இருந்தார் . உண்மையைச் சொன்னால் பலரின் மனதுக்கு உறுத்துமே ? சங்கிகள் உடனே வரிந்துகட்டி கிளம்பிவிட்டனர் . இவர்களால் தேவையில்லாமல் கோர்ட்டின் நேரம் வீணாகிறது . வெட்டியாக ஒரு குற்றச்சாட்டு சொல்லி வழக்குகளை போட்டு வருகிறார்கள் . கடந்த 16 ஆம் தேதி பணமதிப்பு நீக்கம் செயல்படுத்தப்பட்டதை நினைவுகூரும் விதமாக தீக்கதிர் நாளிதழில் கட்டுரைகள் வெளியாகியிருந்தது . அதைப் படித்தேன் . இந்த செய்தியில் கார்ட்டூன் கதிரவனின் பிரமாதமான கார்ட்டூனும் இடம்பெற்றிருந்தது .

காந்தியின் பேச்சால் ஊக்கம் பெற்று உருவான தற்சார்பு பேனா மற்றும் இங்க்!

படம்
  காந்தி தன் வாழ்நாளில் எழுதியுள்ள கடிதங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா ? மொத்தம் 31 ஆயிரம் கடிதங்கள் . தினசரி உலக நாடுகளில் இருந்து வெளிவரும் கடிதங்களுக்கு பதில் அளிப்பது காந்தியின் வழக்கம் . அவர் வார நாட்களில் திங்கள்கிழமை மட்டும் மௌனவிரதம் இருப்பது வழக்கம் . ஆனால் வார நாட்களில் எப்போதும் எழுத்துக்கு விடுமுறை கிடையாது . இப்படி எழுதித்தான் நூறு நூல்களுக்கு மேல் காந்தி எழுதிய கட்டுரைகள் , பேச்சுகள் தொகுக்கப்பட்டு உள்ளன . இந்திய சுயராஜ்யம் பற்றி பேசிய காந்தி , இந்தியாவின் உள்நாட்டுத் தேவை போகவே பொருட்களை ஏற்றுமதி செய்யவேண்டும் என்று கூறிவந்தார் . இவரது கருத்தால் ஊக்கம் பெற்றவர்கள் தான் நாட்டின் தனித்துவமான பேனா மற்றும் பேனாவிற்கான மையைத் தயாரித்தனர் . காந்தியின் சுய ராஜ்ய கனவால் உந்தப்பட்டவர்களில் ஒருவர்தான் ராஜ முந்திரியைச் சேர்ந்த கே வி ரத்னம் . இவர் , 1921 ஆம் ஆண்டு காந்தியை சந்தித்து சுயராஜ்ய லட்சியப்படி என்ன பொருளை உருவாக்க வேண்டுமென கேட்டார் . அதற்கு , காந்தி பின் முதல் பேனா வரையில் நிறைய பொருட்களை நாம் தயாரிக்கலாமே என்று சொன்னார் . இதன்படி , 1932 ஆம் ஆண்டு ரத்னம் பென் வொர்க்ஸ்