இடுகைகள்

ஊட்டச்சத்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போதுமான ஊட்டச்சத்து என்பது உண்மையா?

படம்
pixabay உடல் சிறப்பாக இயங்க வைட்டமின்களும் மினரல்களும் தேவை. ஆனால் இவை உடலில் எந்தளவுக்கு இருக்கவேண்டும் என்பதற்கான தினசரி அளவுகோல் உள்ளது. அதிகமானால் பல்வேறு சிக்கல்களை உடல் சந்திக்கும். குறைவானால் உங்களுக்கே தெரியும், நோய்கள் உருவாகும். வைட்டமின்கள் பாதிப்பு உடலில் பல்வேறு உணவுப் பொருட்கள் மூலம் மெக்னீசியம் அதிகரித்தால் வயிற்றுப் போக்கு அதிகரிக்கும். கண்களுக்குத் தேவையான வைட்டமின் ஏ கூடுதலானால், எலும்புகள் அடர்த்தி குறையும். இந்த சத்து குறைந்தால் கண்களுக்கு லென்ஸ்கார்ட்டில் கண்ணாடி ஆர்டர் செய்யவேண்டியிருக்கும். விட்டமின் சி உடலில் குறைந்தால் மூக்கில் நிற்காமல் ரத்தம் கொட்டத் தொடங்கும். உலகளவில் 2.5 சதவீதம் பேர் அதிகளவு வைட்டமின்கள் உடலில் சேர்வதால் பல்வேறு பாதிப்புகளை அடைகின்றனர். என்ன செய்யலாம்? ஒட்டுமொத்த மக்களுக்கும் பொதுவான பாதுகாப்பான வைட்டமின்களின் அளவு என்று ஒன்று கிடையாது. எனவே, முடிந்தளவு அனைத்து சத்துகளும் கிடைக்கும் அளவு உணவுப்பொருட்களை சாப்பிடுவது அவசியம். பால், முட்டை, அரிசி, முட்டை, இறைச்சி என அனைத்து பொருட்களையும் சாப்பிடுவது அவசியம். இல்லையென

ஊட்டச்சத்துக்குறைவை இந்தியா தீர்க்குமா?

படம்
qrius 2022க்குள் இந்தியா ஊட்டச்சத்துக்குறைவு பாதிப்பை நீக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. தற்போது இந்திய அரசு போஷன் அபியான் எனும் திட்டத்தை ஊட்டச்சத்துக்குறைவைப் போக்க தேசிய அளவில் அமல்படுத்தி வருகிறது. ஆனால் இத்திட்டம் சிறப்பாக செயல்படவில்லை என்பதே யதார்த்த நிலைமை. இதுபற்றிய தகவல்களைப் பார்ப்போம். ஐ.நா அமைப்பின் சூழலியல் நோக்கங்கள் எனும் திட்ட அடிப்படையில்  குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து பாதிப்பு பற்றிய அறிக்கை கடந்த 9ஆம் தேதி ராஜஸ்தானில் வெளியிடப்பட்டது. இதனை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வெளியிட்டார். 1975ஆம் ஆண்டு ஐசிடிஎஸ் எனும் திட்டத்தை இந்தியா அமல்படுத்தியது. பின்னர், தொண்ணூறுகளில் இத்திட்டத்திற்கான நிதி அதிகரிக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் பத்து லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் இறந்தனர். இதில் 62 சதவீதம் பேர் ஊட்டச்சத்துக் குறைவால் இறந்தனர். உலகளவில் பசியால் அவதிப்படுவோரின் பட்டியலில் இந்தியா 102 வது இடத்தில் உள்ளது. அதாவது, 21.9 சதவீத முன்னேற்றம் மட்டுமே பெற்றுள்ளது. இந்தியாவை விட பிரேசில், நேபாளம், பாகிஸ்தான் ஆகியவை சிறப்பான முன்னேற்றத்தை க

ரத்தசோகையைப் போக்கும் பிஸ்கெட்!

படம்
பெரு நாட்டைச் சேர்ந்த பொறியியலாளர் 30 நாட்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தசோகையை போக்கும் ஊட்டச்சத்து பிஸ்கெட்டை உருவாக்கி உள்ளார். அமெரிக்காவில் உள்ள ஹிஸ்டரி டிவி சேனலில் ஜனவரி மாதம் 29ஆம் தேதி, உலகை மாற்றிய ஐடியா என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் நியூட்ரி ஹெச் என்ற பிஸ்கெட்டை தயாரித்த விவசாய பொறியியலாளருக்கு விருது அறிவிக்கப்பட்டது. அது ரத்தசோகையை போக்கும் என்பதுதான் பிஸ்கெட்டின் விசேஷம். இதைக் கண்டுபிடித்தவர் ஜூலியோ கேரி பாரியோஸ். ”’மூன்று வயது முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகள் இந்த பிஸ்கெட்டை சாப்பிடலாம். முப்பது நாட்களில் இதிலுள்ள புரத சத்தும மூலம் அவர்களின் ரத்தசோகை பிரச்னை தீர்ந்துவிடும் ’ என நம்பிக்கை தெரிவித்துள்ளார். பெரு நாட்டில் பாரியோஸின் நியூட்ரி ஹெச் பிஸ்கெட் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் இருந்து குழந்தைகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள 50 சதவீத குழந்தைகளுக்கு ரத்தசோகை பாதிப்பு உள்ளது. ரத்தசோகையை போக்கும் இந்த பிஸ்கெட்டில் அப்படி என்ன விஷயம் உள்ளது. கீன்வா எனும் தானியம், கோகோ, பொவைன் ஹீமோகுளோபின் ஆகிய மூன்று சேர்மானங்களே இந்த பிஸ்கெட்டை உ

இந்திய அரசிடம் ஊட்டச்சத்து பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை!

படம்
ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதே எங்கள் லட்சியம்! டிஜிட்டல் இந்தியா என்ற நாளிதழ்களில் விளம்பரம் செய்தாலும், இந்தியா குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து விஷயங்களில் தடுமாறி வருகிறது. அண்மையில் வெளியான உலகளவிலான பட்டினி நாடுகளின் தொகுப்பு பட்டியலில் இந்தியா 102 வது இடத்தைப் பெற்றுள்ளது. மொத்தம் 112 நாடுகள் கொண்ட இப்பட்டியலில் இந்தியாவின் இடம் பரிதாபகரமானது. தெற்காசிய நாடுகளில் மிகவும் கீழே சரிந்துள்ளது இந்தியா. போஷன் அபியான் திட்டத்தைச் சேர்ந்த உறுப்பினர் சந்திரகாந்த் எஸ் பாண்டேவிடம் இதுபற்றி பேசினோம். உத்தரப்பிரதேசத்தில் உள்ள பத்து மாவட்டங்களில் ஆறு மாவட்டங்கள் தீவிரமான ஊட்டச்சத்து பற்றாக்குறையை வெளிப்படுத்தியுள்ளன. அதனைத் தீர்க்க என்ன முயற்சிகளை எடுத்துள்ளீர்கள்.  உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஊட்டச்சத்து பிரச்னை கொண்ட மாவட்டங்கள் நாங்கள், இதற்கான குழுக்களை அமைத்து இப்பிரச்னையை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளோம். இதற்கான களப்பணியில் என்னென்ன பிரச்னைகளை எதிர்கொண்டீர்கள்? நாங்கள் என்ஆர்சி எனும் மையங்களை அமைத்து ஊட்டச்சத்து பற்றாக்குறையான குழந்தைகளை பராமரித்து அவற்றை நீக

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துகள் தேவை- அரசு கவனிக்க வேண்டியது அவசியம்!

படம்
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துகள் தேவை! தேசிய குடும்ப நலத்துறை ஆய்வு, இந்தியாவில்  38 சதவீதக்குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறியுள்ளது. இந்தியா, பொருளாதார ரீதியாக வளர்ந்துவரும் நாடு. நம் நாட்டின் எதிர்காலமான அடுத்த தலைமுறைக் குழந்தைகளின் உடல்நலன் விவாதிக்கப்படவேண்டிய சூழலில் உள்ளது.  மத்திய அரசின் உதவியுடன் பல்வேறு மாநில அரசுகள் பள்ளியில் குழந்தைகளின் ஊட்டச்சத்திற்காக உணவு,முட்டை, பயறுவகைகளை வழங்கி வருகின்றன. ஆனாலும், ஊட்டச்சத்து பற்றாக்குறை இன்னும் நீங்கிய பாடில்லை. காரணம், இவை குடும்பம் சார்ந்தே ஏற்படுவதுதான்.  தாய் ஆரோக்கியமாக இல்லாதபோது, அவரின் குழந்தை சிறந்த உடல்திறனுடன் எப்படி பிறக்க முடியும்?  இதைத் தவிர்க்க ஒடிஷாவில் கர்ப்பிணிப் பெண்களுக்கு மாதம் 12 முட்டைகளை வழங்கிவருகிறது மாநில அரசு. இந்த முட்டை வழங்கும் ஊட்டச்சத்துத் திட்டம்,  கர்ப்பிணி குழந்தை பெற்று ஆறுமாதங்கள் வரை அமலில் இருக்கும். ஒடிஷாவின் அங்குல் மாவட்டத்தில் 31.8 சதவீத குழந்தைகள்  (5வயதிற்குட்பட்டவர்கள்) ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 37.4% பேர் ரத்தச

ஊட்டச்சத்துப் பற்றாக்குறை! - இந்தியா செய்ய வேண்டியது என்ன?

படம்
giphy.com ஊட்டச்சத்து பற்றாக்குறை! இந்தியாவில் தொற்றாநோய்களின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஐந்து வயது முதல் ஒன்பது வயது குழந்தைகள், இளம் வயதினர்களில் பத்து வயது முதல் பத்தொன்பது வயது கொண்டவர்களும் தொற்றாநோய்களில் அதிகம் பாதிக்கப்படுவதாக தேசிய ஊட்டச்சத்து ஆய்வு முடிவுகள் (CNNS) கூறுகின்றன. இந்த ஆய்வு, 2016 முதல் 2018 வரையில் நடந்த நுண்ணூட்டச்சத்து ஆய்வாகும். இதன் விளைவாக பள்ளி செல்லும் குழந்தைகளில் பத்தில் ஒருவருக்கு முன்கூட்டியே நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. இந்தியாவில் ஊட்டச்சத்து தொடர்பாக விரிவாக செய்த ஆய்வில், குழ்ந்தைகளுக்கு ஏற்படும் தொற்றாநோய்களின் பாதிப்பு முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 35 சதவீதம் பேரும்,  பள்ளி செல்லும் சிறுவர்களில் 22 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊட்டச்சத்துக் குறைவு பிரச்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக மக்கள்தொகை அதிகம் கொண்ட பீகார், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகியவை உள்ளன. ஜம்மு காஷ்மீர், கோவா மாநிலங்களில் ஊட்டச்சத்து பாதிப்பு குறைவாக காணப்பட்டது.  குழந்தைக

பசியில் தவிக்கும் இந்தியா- அவலமாகும் குழந்தைகளின் நிலைமை!

படம்
              2015 ஆம் ஆண்டு இந்தியா குளோபல் ஹங்கர் இண்டெக்ஸில் 93 ஆவது இடத்தில் இருந்தது. அன்றைக்கும் இன்றைக்கும் நிலைமை மாறியிருக்கிறது. பொது விநியோக முறையை உலக வர்த்தக கழகத்தின் ஒப்பந்தங்களுக்கு ஏற்ப இந்திய அரசு குறைத்து வருகிறது. அனைத்து வணிக நடவடிக்கைகளிலும் அரசின் பொறுப்பு குறைந்துகொண்டே வருகிறது. கல்வி, சுகாதாரம், உடல்நலம், வேலைவாய்ப்பு அனைத்திலும் அரசு மெல்ல தன் பொறுப்பை கைகழுவி சூப்பர்வைசர் பொறுப்பை மட்டுமே ஏற்கிறது. இதன்விளைவாக இந்தியாவில் பட்டினி கிடப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது வெளியான ஹங்கர் இண்டெக்ஸ் பட்டியலில் 30.3 புள்ளிகளை மட்டுமே இந்தியா பெற்றுள்ளது. இதன் விளைவாக 102 ஆவது இடத்தைப் பெற்று தெற்காசிய நாடுகளிலேயே, பிரிக்ஸ் நாடுகளிலேயே கீழே போய்விட்டது. அதேசமயம் இந்தியாவில் பசுமாடுகளின் பெருக்கம் பதினெட்டு சதவீதம் அதிகரித்துள்ளது. இதனை பெருமையாக கருதுவதா, இதையொட்டி அடித்துக்கொல்லப்படும் சிறுபான்மையினரை நினைத்து பீதி ஆவதா என்று தெரியவில்லை. ஆறு வயது முதல் 23 வயது வரையிலான குழந்தைகள் ஊட்டச்சத்துக்களின்றி பாதிக்கப்படுவத

ஊட்டச்சத்து பற்றிய கவனத்தை இந்திய அரசு கைவிட்டுவிட்டது! - சுமன்த்ரா ரே!

படம்
வலதுபுறம் சுமன்த்ரா ரே இந்தியாவில் ஊட்டச்சத்துப் பற்றாக்குறை பிரச்னை தொடர்கதையாகி வருகிறது. அதேசமயம் சில மாநிலங்கள் மத்திய அரசின் திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றி வருகின்றனர். அதில் தமிழ்நாடும் ஒன்று. போஷன் அபியான் எனும் ஊட்டச்சத்து திட்டத்தை நிறைவேற்றி அண்மையில் மத்திய அமைச்சரிடம் பரிசும் பெற்றாயிற்று. இதன் பொருள், இந்தியா இத்திட்டத்தில் வெற்றிபெற்றது என்பதல்ல. இதுபற்றி இங்கிலாந்திலுள்ள சுமன்த்ரா ரேயிடம் பேசினோம். இவர் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய மையம் எனும் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இந்தியாவில் மூன்றில் ஒருபங்கு குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தீர்வு என்ன? ஊட்டச்சத்துப் பற்றாக்குறை என்பது தனிப்பிரச்னையல்ல. நிறைய பிரச்னைகள் இதில் ஒன்றாக இழைகளாகப் பின்னிப்பிணைந்துள்ளன. பொதுவாக ஊட்டச்சத்துப் பற்றாக்குறை என்பதை புரதப்போதாமை என குறிப்பிடலாம். பல்வேறு வைட்டமின்கள் பற்றாக்குறை எனலாம். இதற்கு குழந்தைகள் பிறக்கும் குடும்பத்தின் வறுமையும் முக்கியக்காரணம். அங்கு சாப்பிட ஏதுமே கிடைப்பதில்லை. எனவேதான் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை ஒற்றைப் பிரச

பசி தீர்க்குமா மரபணு செம்மையாக்கல் நுட்பம்?

படம்
உணவுத்தேவைக்கு உதவும் மரபணு செம்மையாக்கல் நுட்பம்!  மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தை விட மரபணு செம்மையாக்கல் தொழில்நுட்பம் எதிர்கால உணவுத்தேவையை தீர்க்கும் என உயிரியல் ஆய்வாளர்கள் நம்பத் தொடங்கியுள்ளனர். சீனா, இந்தியா மட்டுமல்ல உலகமெங்கும் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக, சுகாதாரமான குடிநீர், உணவு ஆகியவற்றுக்கான பிரச்னைகளும் பற்றாக்குறையும் தொடங்கிவிட்டது.  இதற்கான தீர்வாக விவசாய நிலத்தை அதிகரிப்பது சாத்தியம் அல்ல.  பல்வேறு நாடுகளும் அறிவியல் முறையில் மரபணு மாற்ற பயிர்களை விளைவித்து உணவுத்தேவையைத் தீர்க்க முயன்று வருகின்றனர். இம்முறையில் கத்தரிக்காய், சோளம், பருத்தி ஆகிய பயிர்கள் விளைவிக்கப்பட்டாலும் மகசூல்  குறைவு, செலவு  ஆகியவற்றை முன்னிறுத்தி பல்வேறு சர்ச்சைகள் எழும்பி வருகின்றன. இந்த தொழில்நுட்பத்திற்கு மாற்றாக, மரபணு செம்மையாக்கல் நுட்பம் உதவும் வாய்ப்பு உள்ளது. மரபணு மாற்ற பயிர்களை அறிவியல் துறையில் ட்ரான்ஸ்ஜெனிக் க்ராப்ஸ்(Transgenic Crops) என்று அழைக்கின்றனர். நோய்தடுப்புக்காக தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றிலிருந்து மரபணுக்களை எடுத்து பயிர்களின் மரபண