இடுகைகள்

கலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கலைத்துறையில் சாதித்த இந்தியா! இந்தியா 75

படம்
  கலைகளில் சாதனை சாகித்திய அகாதெமி, இந்தியாவில் நூல்களை பல்வேறு மொழிகளில் வெளியிட்டு வரும் நிறுவனம். இந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக 1953ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களின் கலாசாரங்களை சாகித்திய அகாதெமி ஒன்றிணைக்கிறது. இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை பதிப்பித்திருக்கிறது. ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், இளைய எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்களை கௌரவித்து வருகிறது. போடோ, டோக்ரி, கொங்கணி போன்ற மொழிகளிலுள்ள இலக்கியப் பொக்கிஷங்களையும் அனைவரும் அறியும்படியாக மொழிபெயர்க்கும் பணியை சாகித்திய அகாதெமி செய்கிறது.  தூர்தர்ஷன் அறிமுகம் இன்று அனைவரும் ஓடிடியில் வெளியாகும் படங்களை பார்க்கவும், இணையத்தில் உள்ள வெப் சீரிஸ்களையும் பார்த்து வருகிறோம். ஆனால் இந்தியாவில் தொடக்கத்தில் தூர்தர்ஷன்தான் அனைவருக்கும் ஒரே டிவியாக இருந்தது. 1959ஆம்ஆண்டு தூர்தர்ஷன் தொடங்கப்பட்டது. பல்வேறு தொலைக்காட்சிகளை தொடங்கி மூடினாலும் கூட தூர்தர்ஷனிடன்  21 சேனல்கள் உள்ளன. இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. கிராமங்களில் தூர்தர்ஷன் மட்டுமே ஒரே டிவியாக முதலில்

கலையை முழுக்க அரசியலாக மாற்றுவது அனைத்து மக்களுக்கும் பிடித்தமானதாக இருக்காது! - ஆர்ஜித் சென், ஓவிக்கலைஞர்

படம்
              நான் உருவாக்குவதற்கு நான்தான் பொறுப்பு ! ஓவியர் ஆர்ஜித் சென் கோவாவைச் சேர்ந்த கலைஞர் ஆர்ஜித் சென் . இவர்தான் இந்தியாவில் முதல் கிராபிக் நாவலை 1994 இல் ரிவர் ஆப் ஸ்டோரிஸ் என்ற பெயரில் எழுதினார் . அரசின் சட்டங்கள் , கொள்கைகள் பற்றி கார்டூன்களை வரைவது இவருக்கு பிடித்தமானது . அடிக்கடி வைரலாகும் கார்ட்டூ்ன்களில் இப்போது காமிக்ஸ் சென்ஸ் என்ற பெயரில் பத்திரிகை ஒன்றைத் தொடங்கியுள்ளார் . சென்னும் அவரது மனைவியும் பீப்பிள் ட்ரீ என்ற வடிவமைப்பு மையம் ஒன்றைத் தொடங்கி செயல்பட்டு வருகின்றனர் . சென் , இந்தியாவில் நடைபெறும் அனைத்து கலை விழாக்களிலும் கலந்துகொண்டுள்ளார் . இதுபற்றி அவரிடம் பேசினோம் .      காமிக்ஸிற்கான இதழ் தொடங்கவேண்டுமென எப்படி தோன்றியது ? எனது எட்டு வயதிலிருந்து இப்படி காமிக்ஸ் இதழ் தொடங்கவேண்டுமென்று நினைத்து வருகிறேன் . இப்போது தொடங்கியுள்ள காமிக்ஸ் சென்ஸ் இதழ் , பதிமூன்று முதல் பதினெட்ட வயது வரையிலானவர்களுக்கு . இந்த வயதிலுள்ளவர்கள் பல்வேறு டிஜிட்டல் சாதனங்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள் . அவர்களை அதிலிருந்து மாற்றி வாசிப்பு பக்கள் கொண்ட

வேடிக்கையான சலிப்பூட்டாத டிஜிட்டல் அருங்காட்சியகம்!

படம்
      sample picture-pixabay         அபிஷேக் போடார் மியூசியம் ஆப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி நீங்கள் பல்வேறு பிரபலமான கலைஞர்களுடன் தொடர்புகளை வைத்துள்ளீர்கள் . அவர்களைப் பற்றிய சுவாரசியங்கள் ஏதேனும் பகிருங்கள் . கலைஞர் மீரா முகர்ஜியை எனது சகோதரி திருமணத்திற்கு அழைத்திருந்தேன் . வந்தவருக்கு அணிகலன் ஒன்றை பரிசாக கொடுத்தேன் . அடுத்தமுறை அவரது வீட்டுக்கு சென்றபோது , அப்பரிசு அவரது வீட்டு வேலையாளின் உடலில் இருந்தது . அதனை கவனித்தனவர் . நான் அதிகம் எங்கும் செல்வதில்லை . சிலமுறை போட்டுப் பார்த்தேன் . பிறகு அவளுக்கு கொடுத்துவிட்டேன் . நீ எனக்கு கொடுத்தபிறகு அது எனக்கு சொந்தம் . எனது விருப்பம் போல அவளுக்கு கொடுத்தேன் என்று சொன்னார் . ஓவியக்கலைஞர் எம்எஃப் ஹூசைன் வெளிநாட்டில் இருந்தபோது , அவரை நான் சந்தித்தேன் . நான் அவரிடம் எதை மிஸ் செய்கிறீர்கள் என்று கேட்டேன் . இந்திய மண்ணைத்தான் என்று சொன்னார் . இப்படி சொல்ல என்னிடம் நிறைய கதைகள் உண்டு . ஆனால் அவை அனைத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளை நினைவுகூரவைப்பவைதான் . கலை சார்ந்த விஷயத்தில் உங்களை ஈர்த்தது என்ன ? சில ஆண்ட

எதுவும் செய்யாமல் இருக்க ஆசைப்பட்டேன். பெருந்தொற்று காலம் தற்செயலாக கிடைத்தது! நவாசுதீன் சித்திக்

படம்
      நவாசுதீன் சித்திக்   நேர்காணல் நவாசுதீன் சித்திக் படப்பிடிப்பு இல்லாத காலம் எப்படி இருந்தது ? எனக்கு படப்பிடிப்பு இல்லாத காலம் தேவைப்பட்டது என்றுதான் சொல்லவேண்டும் . பெருந்தொற்று காலகட்டம் நான் எதிர்பாராமல் எனக்கு கிடைத்தது . உத்தரப்பிரதேசத்தில் உள்ள எனது புதானா கிராமத்தில் விவசாய வேலைகள் செய்தேன் . இக்காலகட்டத்தில் 250 படங்களை பார்த்தேன் . டென்ஷில் வாஷிங்டன் , டேனியல் டே லூயிஸ் , ஆன்டனி ஹாப்கின்ஸ் ஆகிய எனக்குப் பிடித்த நடிகர்களின் படங்களைப் பார்த்தேன் . இது எனது சினிமாக்களை மேம்படுத்த உதவும் என நம்புகிறேன் . சினிமாவில் இருபது ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறீர்கள் . உங்கள் பயணத்தை எப்படி பார்க்கிறீர்கள் . நான் இப்போதும் வேலை செய்துகொண்டிருக்கிறேன் . இனியும் பணியாற்றுவேன் என்று நினைக்கிறேன் . சிலசமயங்களில் நான் நடிக்கும் படம் வெற்றிபெறும் . அல்லது தோல்வியுறும் . இது எனது கையில் கிடையாது . கதாப்பாத்திரங்கள் எனக்கு பிடித்திருந்தால் நடிக்கிறேன் . அதில் உள்ள சவால்கள் என்னை மெருகேற்றுகின்றன . நாயகனாக நடிக்கும் படங்களில் என்ன எதிர்பார்க்கிறீர்கள் .

எதிர்கால நம்பிக்கை மனிதர்கள் 2019 - 2020

படம்
பபி தாஸ், எம்ப்ராய்டரி கலைஞர் காலம் எல்லோருக்கும் ஒரேவித வாய்ப்புகளைத்தான் வழங்குகிறது. நாம் அதில் டிவி பார்க்கிறோமோ, அல்லது டிவியில் நம்மை பிறர் பார்க்கும்படி வேலை பார்க்கிறோமா என்பது நம் கையில்தான் உள்ளது. யாராக இருந்தாலும் துறை சார்ந்தவர்கள் தங்கள் துறையில் இவர் ஊக்கமூட்டும்படி வளர்கிறார் என்று நம்புவார்கள். அதனை பிறருக்கும் கூறுவார்கள். அப்படி சிலர் சிலரை சிறப்பாக வருவார்கள் என்று கூறுகிறார்கள். அவர்களைப் பார்ப்போம். அமர் கௌசிக், - 36 சினிமா இயக்குநர் அமர் கௌசிக்கின் பாலா, ஸ்த்ரீ படங்களைப் பார்த்து வியந்தேன். அதில் நிறைய மேம்படுத்தல்களை என்னால பார்க்க முடிந்தது. குறிப்பிட்ட பட்ஜெட்டில் கதையும் நிறைவாக நட்சத்திரங்களையும் வைத்து படம் செய்வது கடினம். இதனை அமர் கௌசிக் எளிதாக செய்கிறார். இவரின் கதை சொல்லும் முறையும் ரசிக்கும்படி இருக்கிறது. - சுஜய் கோஷ் - திரைப்பட இயக்குநர் சாரா அலிகான் 24, விக்கி கௌசல் 31 திரைப்பட நடிகை, நடிகர் இந்த இரு நடிகர் நடிகையும் நட்சத்திரங்களாகும் அந்தஸ்து பெற்றவர்கள். கதையின் தேர்வு, அதை வைத்து மக்களை ஈர்ப்பது என்று தொடங்கி இவர்களின் ம

பகடிக்கலைஞர்- கேரள கார்ட்டூனிஸ்ட் சுதீர் நாத்

படம்
கேரளத்திலுள்ள திரிக்காகரா எனும் கிராமத்தில் பிறந்த சிறுவனுக்கு  வரைவது என்றால் அவ்வளவு இஷ்டம். ஆனால் அதற்கான தூண்டுதல் வேண்டுமே? 1986 ஆம் ஆண்டு புகழ்பெற்ற மலையாள கேலிச்சித்திரக் கலைஞர் நாதம் உரையாற்றியதைக் கேட்டதும் சிறுவன் மனதில் இத்துறைதான் தனது எதிர்காலம் என்பது முடிவாகத் தோன்றியது. நாதன்,  முதல்வர் கே.கருணாகரன் வரைந்த கேலிச்சித்திரத்தை எடுத்துச்சென்று அவரிடம் காட்டி கையெழுத்து வாங்கினார். அதனை தன் வகுப்பில் காட்டி பெருமை கொண்டார். ஆனால் வகுப்பில் அச்சிறுவனே அதனை வரைந்ததாக நினைத்துக்கொண்டு பாராட்டினர். சரியோ தவறோ அந்த பாராட்டு அவரை நிறைய வரைய வைத்தது. இன்று சுதீர் நாத், நிறைய கேலிச்சித்திரங்களை வரைவதோடு அதனைப் பற்றி பிறருக்கு வகுப்புகள் எடுக்கிறார். அடுத்து வரும் தலைமுறையினருக்கும் வழிகாட்டுகிறார். சுதீர் நாத் என்று பெயரும் புகழும் பெற்றவருக்கு பதினைந்து வயதானபோது, அவரின் அம்மா, அவரை கார்ட்டூனிஸ்டான யேசுதாசனிடம் அழைத்துச்சென்றார். அவர்தான் சுதீருக்கு அனைத்து அடிப்படை விஷயங்களையும் கற்பித்தார். 1987 ஆம் ஆண்டு சுதீர் வரைந்த அரசுக்கு எதிரான கார்ட்டூன்கள் மாநிலமெங்க

புகைப்படம் மூலம் மாற்றம் வரும் - ஜனேலா முகோலி

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள் ஜனேலா முகோலி தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கலைஞர். புகைப்படம்  எடுப்பதே இவரது வாழ்க்கை. அதற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். இதற்காகவே பல்வேறு உதவித்தொகைகளையும், பரிசுகளையும் பெற்றுள்ளார். 1972 ஆம் ஆண்டு டர்பனில் பிறந்தவருக்கு, ஐந்து சகோதர சகோதரிகள் உண்டு. பெற்றோர் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். 2003 ஆம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் புகைப்படம் தொடர்பான படிப்பையும், ஓவியக்கலை படிப்பை டொரண்டோவிலும் முடித்தார். ஆப்பிரிக்கர்கள், இனபாகுபாடு தொடர்பான ஓவியங்கள், கலைப்படைப்புகள் ஜனேலாவின் பெயரை உலகிற்கு அறிவித்தன. 2009 ஆம் ஆண்டு Inkanyiso எனும் அமைப்பை நிறுவி மாற்றுப்பாலினத்தவர்களின் உலகை ஆவணப்படுத்த முயன்றது இவரது மகத்தான பங்களிப்பு, புகைப்படம் வழியாக மக்களுக்கு தமது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை ஜனேலா உருவாக்கினார். இவரது பணியை டபிள்யூ இபி டுபோய்ஸூடன் ஒப்பிடுவது இவருக்கு கிடைத்த பெருமை. 2012 ஆம் ஆண்டு ஜெனேலா ஜெர்மனியில் உருவாக்கிய டாக்குமெண்டா எனும் கண்காட்சியில் பெரும் புகழ் பெற்றார். ஃப்யூ(FEW)  எனும் அமைப்பை உருவாக்கி மாற்றுப