இடுகைகள்

காங்கிரஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வேலைவாய்ப்பு, மேம்பாடு ஆகிய நேர்மறை விஷயங்களை தேஜஸ்வி யாதவ் பேசி வாக்குகளைப் பெற்றார்!

படம்
            சஞ்சய் குமார் பேராசிரியர் சென்டர் ஃபார் தி ஸ்டடி ஆஃப் டெவலப்பிங் சொசைட்டிஸ் காங்கிரஸ் கட்சி தான் நினைத்த இலக்கை எட்ட முடியவில்லை . கூட்டணிக் கட்சியாக இருந்தும் இந்த நிலை . மாநில கட்சிகள் வலுப்பெற்று வருவதை இந்த நகிழவுகள் காட்டுகின்ற்ன என்று கூறலாமா ? பீகாரில் 70 இடங்களை வாங்கி 19 இல் மட்டும் வென்ற காங்கிரஸ் , தனது அந்தஸ்தை இழந்துவிட்டது என்றுதான் கூறமுடியும் . மாநிலங்களில் வலுவாக உள்ள கட்சிகளோடு காங்கிரஸ் கூட்டணி வைத்துத்தான் சில மாநிலங்களை ஆண்டு வருகிறது . அந்த மாநில கட்சிகள் பலம் பொருந்தியவையாக மாறுகின்றன . காங்கிரஸ் அப்படி வலுவாக மாறவில்லை . இதனை பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசியல் நிலையைப் பார்த்தாலே புரிந்துகொள்ளமுடியும் . லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த சிராஜ் பாஸ்வான் மகாபந்தன் கூட்டணியை வெற்றிபெறச்செய்திருப்பாரா ? அப்படி முழுமையாக கூறிவிட முடியாது . நிதிஷூக்கு எதிரான ஓட்டுகளை சிராஜ் பாஸ்வான் பெற்றிருக்கிறார் . ஆனால் இது எப்படி ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சிக்கு உத வும் . அவர்கள் சிராஜின் வாக்குகளைப் பெற முடியாது . பாஜகவின

இந்திராகாந்தி போல துடிப்பாக செயல்படும் தலைவர் காங்கிரசுக்கு தேவை! - குலாம் நபி ஆசாத்

படம்
      குலாம் நபி ஆசாத்   குலாம் நபி ஆசாத் நீங்கள் நாற்பது ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராக இருந்துள்ளீர்கள். ஆனால் இப்போது அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளீர்கள். இதற்கு நீங்கள் கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியதுதான் காரணமா? நான் கட்சி தலைமையிடம் 2004லிருந்தே என்னை பதவியிலிருந்து விடுவிக்கச்சொல்லி கேட்டுவந்தேன். ராஜீவ்காந்தி தொடங்கி பல்வேறு தலைவர்களுடன் நான் பொது செயலாளராக பணியாற்றியுள்ளேன். இந்த பணியில் இந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றில் காங்கி ஸ் கட்சிக்காக பணியாற்றியுள்ளேன். ஆனால் இன்று எனக்கு வயதாகிறது. குடும்பம் சார்ந்த சில பொறுப்புகளும் உள்ளன.முன்னர் தீவீரமாக உழைத்தது போல இன்று என்னால் உழைக்கமுடியவில்லை. 2016இல் உத்தரப்பிரதேசம், 2019இல் ஹரியாணா ஆகிய மாநிலங்களில் கட்சி பொது செயலாளராக இருந்துள்ளேன். இதுபற்றித்தான் நான் கடிதம் எழுதி தலைமையிடம் தெரிவித்துள்ளேன். அவர்கள் என்னை பொறுப்பிலிருந்து விடுவித்தது என் மீதான கருணையாகவே பார்க்கிறேன். பழிவாங்கும் உணர்ச்சியாக அல்ல. சோனியா காந்தியின் குடும்பம் என்மீது மரியாதையுடன்தான் நடந்துகொண்டிருக்கிறார்கள் .அந்நிலை இன்றுவரை

குஜராத் மாடலை ராஜஸ்தான் அரசியலுக்கும் மடைமாற்றுகிறார்கள் மோடியும், அமித்ஷாவும்! - திக்விஜய் சிங்!

படம்
      காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்           மொழிபெயர்ப்பு நேர்காணல் திக்விஜய் சிங் , காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜஸ்தானில் உள்ள அரசியல் நிலையை எப்படி புரிந்துகொள்கிறீர்கள் ? இந்திய பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் தங்களது குஜராத் மாநில மாடல் அரசியலை உள்ளே கொண்டு வர முயல்கின்றனர் . வாஜ்பாய் , அத்வானி இருந்தபோது பாஜக இதுபோல விதிகளை மீறி செயல்படவில்லை . ஆனால் இன்று அனைத்து அடிப்படை அறங்களையும் மீறி எம்எல்ஏக்களை 25 கோடி வரை விலை பேசி வருகின்றனர் . உ்ங்கள் கட்சியில் ஏற்படும் குழப்பங்களை பாஜக சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதே ? அனைத்து கட்சிகளிலும் இதுபோல உட்கட்சி பிரச்னைகளை உண்டு . காங்கிரசில் சேர்ந்துள்ள இருபது சதவீதம் பேர் , அதிகாரத்தில் உள்ளவர்களைப் பார்த்து அவர்களை நோக்கி செல்கிறார்கள் இவர்களுக்கு கட்சி சார்ந்த கொள்கை , அதன் வழிமுறை எதிலும் பிடிப்பு இருப்பதில்லை . ஜோதிரா சிந்தியா உங்களை தாக்கிப் பேசியுள்ளாரே ? நான் அவருக்கு எதிராக எப்போதும் பேசியது கிடையாது . அவரது தந்தையை காங்கிரஸ் கட்சிக்கு நான்தான் அழைத்து வந்தேன் . ஜோதிராவு

காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு சாதனை செய்த தலைவர்கள்- சாதனை தலைவர்கள்

படம்
சிதைந்து வரும் காங்கிரஸ் கட்சி - சதீஸ் ஆச்சார்யா காங்கிரசிலிருந்து குதிரைபேரம் மூலம் வெளியே செல்பவர்கள் தவிர்த்து சிலர் தானாகவே மனம் கசந்து, விரக்தியுற்று வெளியேறி தனிக்கட்சி தொடங்கியுள்ளனர். அதில் சிலர் மாநிலத்தின் ஆட்சியையே பிடிக்குமளவு முன்னேறியுள்ளனர். பழம்பெரும் கட்சியான காங்கிரசில் இன்றுவரை வயதானவர்களுக்கே பதவி தரப்படுகிறது என புகார்கள் எழுந்து வருகின்றன. ஜோதிராதித்யா சிந்தியா, சச்சின் பைலட் ஆகியோர் இதில் அண்மைய வரவு. காங்கிரசில் கட்சியில் இருந்து விலகிய அரசியல்வாதிகளில் சிலரைப் பார்ப்போம். சரண்சிங் 1967 உ.பி 1959ஆம் ஆண்டு நேருவின் கொள்கைகளுக்கு எதிராக கொடி பிடித்தார். இதனால் கட்சியில் இருந்து ஒரம்கட்டப்பட்டு விலக்கப்பட்டார். பின்னர், அடுத்தவர்கள் கட்சி எதற்கு என்று யோசித்தார். பிறகு நல்ல ஒரு சுபதினத்தில் பாரதீய கிராந்தி தள் என்ற கட்சியைத் தொடங்கினார். 1977ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் அரசில் துணை பிரதமராக பதவி வகித்தார். பின்னர் 1979ஆம் ஆண்டில் 23 நாட்கள் பிரதமர் பதவியில் நீடித்து சாதனை செய்தார். மொரார்ஜி தேசாய் 1969 மகாராஷ்டிரம் இந்திராகாந்தியின் அரசில் துணை பிரதமராக

அகற்ற முடியாத கறையை ஊழல்கள் ஏற்படுத்தின - மான்டேக் சிங் அலுவாலியா

படம்
நேர்காணல்  மான்டேக் சிங் அலுவாலியா நலின் மேத்தா, சஞ்சீவ் சங்கரன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் முதல் ஏழு ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி 8.4 சதவீதம் என்கிறீர்கள். அப்புறம் ஏன் வளர்ச்சி வீழ்ந்தது? முதல் ஏழு ஆண்டுகளில் வளர்ச்சி நாங்களே நினைத்துப் பார்க்க முடியாதபடி இருந்தது உண்மைதான். ஆனால் அதற்குப்பிறகு அதாவது 2011இல் ஐரோப்பாவில் பொருளாதாரப் பிரச்னைகள் ஏற்பட்டன. அந்த பாதிப்பினால் அந்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொடங்கவிருந்த திட்டங்கள் தள்ளிப்போயின. அச்சூழலிலும் காங்கிரஸ் உள்நாட்டு உற்பத்தியை வைத்து சமாளித்தது. ஆனால் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் ஏற்பட்ட ஊழல்கள், ஆட்சிக்கு அகற்றமுடியாத களங்கத்தை ஏற்படுத்தின.  2014 தேர்தல் காலத்தில் இந்த விஷயங்கள் அனைத்தும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு எதிராக மாறிவிட்டன. பொருளாதார வளர்ச்சி, ஏற்றம், இறக்கம். வீழ்ச்சி என்பது தொடர்ச்சியான விளைவுதான். தொலைத்தொடர்புத்துறையில் கிடைத்திருக்க வேண்டிய அதீத லாபம் பற்றி தணிக்கைத்துறை சொன்னது மிகப்பெரிய சர்ச்சையானது. உலகில் அலைக்கற்றை விவகாரத்தில் தீர்க்கமான விதிகளைக் கொண்டு ஏலம் எங்கு

வங்கிகள் தேசியமயம் - 50 ஆண்டுகள்- என்ன நடந்தது?

படம்
வங்கிகள் தேசியமயம்: 50 ஆண்டுகள் நிறைவு! வங்கிகள் தேசியமயமாகி இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு, 1969 ஆம் ஆண்டு ஜூலை 20 அன்று 14 வங்கிகளை அரசு வங்கிகளாக மாற்றியது. ரிசர்வ் வங்கி வரலாற்றில் 1947க்குப் பிறகு அமலான முக்கியமான நிதிச் சீர்த்திருத்தம் இதுவே. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதை தொண்ணூறுகளில் நடைபெற்ற தாராளமயமாக்கலோடு பொருளாதார வல்லுநர்கள் ஒப்பிடுகின்றனர். வங்கிகள் தேசியமயமானது காங்கிரசுக்கு அன்று ஆதாயம் அளித்தது. ஆனால், பின்னாளில் அரசுகளுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தின.  அன்றைய இந்தியாவில்  தனியார் வங்கிகள் செயற்பட்டு வந்தாலும், அவற்றின் மீது பெரியளவு நம்பிக்கை உருவாகவில்லை. மக்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றுவது தினசரி செய்தியாக மாறி வந்தன. 1951-68 வரையிலான காலத்தில் தனியார் வங்கிகள் தொழில்துறைக்கு 68 சதவீத கடன் தொகைகளையும், விவசாயத்திற்கு 2 சதவீத கடன்களையும் அளித்தன. அக்காலகட்டத்தில்தான் கிராமங்களிலுள்ள விவசாயத்துறைக்கு உதவுவது போல வங்கிகள் தேசியமயம் என்ற இந்திய அரசின் உத்தரவு வெளியிடப்பட்டது.

2019 தேர்தலில் பெண் எம்.பிக்கள் சாதித்தது எப்படி?

படம்
ரம்யா ஹரிதாஸ்  32 வயதில் எம்.பியாகியிருக்கிறார். காங்கிரஸ் கட்சி சார்பாக வென்றவர் நாட்டுப்புற பாடல்களைப் பாடுவதன் வழியாக மக்களை அணுகினார். கேரளாவிலிருந்து நாடாளுமன்றம் செல்லும் பழங்குடி இன எம்.பி இவரே. இதற்கு 48 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் பல சொதப்பல் பிளான்களை இந்த தேர்தலில் செய்தாலும், செய்த உருப்படியான விஷயம் நிறைய பெண் வேட்பாளர்களை தொகுதிகளில் நிறுத்த முயற்சித்த துதான். வென்ற பெண் வேட்பாளர்களில் ரம்யா ஹரிதாசும் ஒருவர். அம்மா, தையல் கலைஞர், அப்பா தினக்கூலி செய்துவருகிறவர். 2011 ஆம் ஆண்டு ராகுல் காந்தியால் அடையாளம் காணப்பட்டவர், தற்போது எம்.பியாகி உள்ளார். இதற்கு முன்பு பஞ்சாயத்து தலைவியாக செயல்பட்டிருக்கிறார். தேர்தல் செலவுகளுக்கு க்ரௌடு ஃபண்டிங் மூலம் பத்து லட்சம் நிதிதிரட்டி செலவு செய்த தைரியம் பாராட்டத்தக்கது. அம்மா மகிளா காங்கிரஸ் கட்சி உறுப்பினர் என்றாலும் திறமை மூலமே அடையாளம் காணப்பட்டிருக்கிறார் ரம்யா. கேரளாவின் ஒரே பெண் எம்.பி இவர்தான். மக்களின் குடிநீர் மற்றும் விவசாயம் சார்ந்த பிரச்னைகளுக்காக பாடுபடுவேன் என்று கூ

விபத்தால் இந்து - நேருவின் கதை- சசி தரூர்

படம்
நேரு: தி இன்வென்ஷன் ஆஃப் இந்தியா சசி தரூர் பெங்குயின் புக்ஸ் ரூ.299 (அமேஸானில் 270) கல்வியால் ஆங்கிலேயர் கலாசாரத்தால் முஸ்லீம் விபத்தால் இந்து 1889 ஆம் ஆண்டு நேரு பிறப்பு முதல் 1964 ஆம் ஆண்டுவரை நீளும் நூல் இது. சசி தரூரின் பார்வையில் நீளும் சுயசரிதை, பிற சுய சரிதைநூல்களிலிருந்து எங்கு வேறுபடுகிறது. நேருவின் அரசியல் வாழ்க்கை, அதன் பிரச்னைகளைப் பற்றி பலரும் விவாதித்து உள்ளனர். அதேயளவு அவரின் தனிப்பட்ட வாழ்க்கை, எங்கேயும் விட்டுக்கொடுக்காத சோசலிச கொள்கை, பொருளாதாரக் கொள்கைகளில் அதன் விளைவு, தனிப்பட்ட அவரது குணம், போஸ், காந்தி, படேல், தாண்டன் ஆகியோரிடம் அவரின் உறவு ஆகியவற்றை வரலாற்று நிகழ்ச்சிகளோடு, விமர்சனங்களையும் கலந்து எழுதியுள்ளார் சசி தரூர். நேரு செய்த அடிப்படைக் கட்டமைப்பு சார்ந்த பணிகளைக் கூறும்போது உடனே எட்வினா மவுன்ட்பேட்டன், பத்மஜா நாயுடு ஆகியோருக்கு அவர் எழுதிய காதல் கடிதங்கள், உறவு ஆகியவற்றை எதிர்கட்சிகள் உள்ளிட்ட பலரும் பேசுவார்கள். அதையும் தரூர் விட்டு வைக்காமல் எடுத்து எழுதியிருக்கிறார். அதோடு முக்கியமான பார்வை, நூல் 2003 ஆம் ஆண்டு வெளியா

பாஜக அரசு தன் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை

படம்
kaleej times நேர்காணல் நவ்ஜோத்சிங் சித்து தமிழில்: ச.அன்பரசு இப்போதுள்ள மக்களின் மனநிலை என்னவென்று நினைக்கிறீர்கள்? பிரதமர் மோடி தன்னை எப்படி காவலாளி என்று கூறிக்கொள்கிறார் என்றே எனக்குப் புரியவில்லை. நான் அதுபோல ஒரு சூழ்நிலையைக் காணவில்லை. ஏழையின் வீட்டு வாசலில் நீங்கள் காவலாளியைப் பார்த்திருக்கிறீர்களா? பிரதமர் 0.1% சதவீத மக்களுக்கான தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்ய ஆர்வமாக உள்ளார். பிரதமர் ஆர்வம் காட்டிய கங்கை தூய்மைத் திட்டம் என்னவானது? விவசாயிகளின் கடன் தள்ளுபடியின் நிலை என்ன? புல்லட் ரயில் கனவு நனவானதா? இன்று தேர்தல் பிரசாரத்தின் இறுதி நிலையில் பாஜக தலைவர்கள் ஒருவர் கூட மேம்பாடு குறித்து பேசவில்லை. இது மிகவும் வேதனை தரும் நிகழ்வு. வேலை இழப்பு, விவசாயிகள் தற்கொலை, ரஃபேல் ஒப்பந்த மோசடி என மக்களை வருத்தும் பல நிகழ்ச்சிகள் நடந்துவிட்டன. தேர்தல் பேரணியில் பிரசாரம் செய்து வருகிறீர்கள். இதில் என்ன மாற்றத்தை உணர்ந்துள்ளீர்கள். மக்கள் நிறைய மாறியுள்ளனர். நான் பேசும் பிரசார கூட்டங்களில் பகடி, அங்கதம் கூடியுள்ளதாக நினைக்கிறேன். முதலில் ரஞ்சித் சிங் உள்ளிட்ட ராஜ

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: ஒரு அலசல்

படம்
தி எகனாமிஸ்ட் தேர்தல் 2019 பாஜக, நமோ டிவி, டிவி 9 பாரத் வர்ஷ் என பல்வேறு ஊடகங்களின் பலம் கொண்டு தேர்தலை சந்திக்கவிருக்கிறது. ராகுல், வேலைவாய்ப்புகள், பெண்களுக்கு அங்கீகாரம் உள்ளிட்ட விஷயங்களைப் பேசி களமிறங்குகிறார். இதில் மோடியின் 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்தை உடைக்கும் விதமாக, குறைந்தபட்ச ஊதிய திட்டத்தை ராகுல் அறிவித்தார். NYAY எனப்படும் இத்திட்டத்தை மோடி குழுவினர், மறைக்க என்னென்னவோ முயற்சித்தும் முடியவில்லை. தற்போது காங்கிரஸ் தேர்தல் அறிவிக்கையை வெளியிட்டு விட்டது. பாஜக, அரசுக்கு நிகராக பல்வேறு அன்பளிப்பு ரக அறிவிப்புகள் இதிலும் உண்டு. புதியவை என்ன? தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்புத்துறை உருவாக்கம். அரசு தேர்வுகளுக்கான கட்டணம் நீக்கப்படும். தொழில்துறையினருக்கு அனுசரணையான வகையில் அரசு செயல்படும். மூன்று ஆண்டுகளுக்கு அரசு, தொழில் நிறுவனங்களின் நடவடிக்கையில் தலையிடாது என்ற ராகுலின் அறிவிப்பை பொருத்திப் பார்த்துக்கொள்ளுங்கள். குறுந்தொழில்துறைக்கு வருமான வரிவிலக்கு உண்டு. அனைவருக்கும் வீடு என்பதில் நகர்ப்புற ஏழைகளும் இணைக்கப்படுவர்.

பெண்களை உயர்த்தும் கட்சிகள் எவை?

படம்
indianexpress பணிகளைச் செய்வதில் ஆண்களை விட பெண்களே சிறந்தவர்கள்.  தேர்தலில் கட்சிகள் பெண்களை உயர்த்துவது பற்றி வாய்கிழிய பேசினாலும், செயல்பாடு என வரும்போது அந்த வாக்குறுதியை மிக கவனமாக மறந்துவிடுவார்கள். 33 சதவீத இட ஒதுக்கீடும் அப்படியே கிடப்பில் கிடக்கிறது. அதெல்லாம் விடுங்கள். விரைவில் தேர்தல் வரப்போகிறது அதில் பெண்களுக்கான இடம் உண்டா? இதில் முதலிடத்தில் நிற்பது மேற்கு வங்கத்தின் தீதிதான். மம்தா பானர்ஜி, தன் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகளின் சீட்டில் 40 சதவீதத்தை பெண்களுக்காக அளித்துவிட்டார். அடுத்து ஒடிசாவின் பிஜூ பட்நாயக். தேர்தலில் மத்திய அரசு அளிக்கத்தவறிய 33 சதவீத இடங்களை பெண்களுக்கு அளித்து கௌரவம் சேர்த்திருக்கிறார்.  பெண்களுக்கு இடமில்லை! 7 தேசியக்கட்சிகள், 51 மாநிலக்கட்சிகள் உள்ள நாட்டில் பெண்களுக்கு இது எப்படி போதுமானதாக அமையும் சொல்லுங்கள்? இது குறித்த சர்வே ஒன்றை செய்தபோது 1996 - 2014 வரையிலான தேர்தல்களில் பெண்களுக்கான இடங்கள் பத்து சதவீதத்தைக்கூட தாண்டவில்லை. உள்ளூர் தேர்தல்களில் மட்டும் விதிவிலக்காக பத்து சதவீதத்தை பெண்கள் தாண்டியுள்ளனர். இதில் காங்