இடுகைகள்

கே டிராமா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு காபியை ஆர்டர் செய்தால் சட்ட ஆலோசனை கிடைக்கும்! லா கஃபே - கொரிய டிராமா

படம்
  லா கஃபே - கே டிராமா லா கஃபே கொரிய டிராமா பதினாறு எபிசோடுகள் ராக்குட்டன் விக்கி ஆப் பொதுமக்களின் பிரச்னைகளுக்காக போராட நினைக்கும் வழக்குரைஞர் கிம் யூ ரி, அதற்காக காபி விற்கும் கடை ஒன்றைத் திறக்கிறார். உங்களுக்கு சட்ட ஆலோசனை வேண்டுமென்றால், ஒரு காபியை ஆர்டர் செய்து வாங்கினால் போதும். டிவி தொடரில் நாயகனுக்கு இணையான முக்கியமான பாத்திரமே, கிம் யூரிதான். அவள் ஏன் வழக்குரைஞரானாள், அதன் பின்னணி என்ன என்பதை தொடர் பார்க்கும்போது பார்வையாளர்கள் உணர்ந்துகொள்ளலாம். கண்ணீர் விட்டு நெகிழலாம். கிம் யூரி தனது லா கஃபேயை, கிம் ஜியோங் ஜோ என்பவரது கட்டிடத்தில் தொடங்குகிறாள். அவர் வேறுயாருமல்ல. பள்ளி, கல்லூரியில் நெருக்கமான தோழனாக, காதலராக இருந்தவர்தான். அவருக்கோ கிம் யூரியைப் பார்த்தாலே எரிச்சலாகிறது. இவளுக்கு நான் இடத்தை வாடகைக்கு விடமாட்டேன் என அடம்பிடிக்கிறார். உண்மையில் கிம் யூரியை அவர் காதலித்தது, கல்யாணம் செய்து ரேஷன் கார்டுக்கு அப்ளை செய்ய நினைத்தது எல்லாம் உண்மைதான். ஆனால் அவர் கிம்யூரியை பிரேக் அப் செய்துவிட்டு, அரசு வழக்குரைஞர் வேலையையும் ராஜினாமா செய்துவிட்டு வேலை இல்லாமல் அவ்வப்போ

கொல்லப்பட்டவர்களின் வாயில் மின்ட் மிட்டாய்! - டெ மீ வாட் யூ சீ - கே டிராமா -2020

படம்
  டெல் மீ வாட் யூ சா கொரிய டிராமா பதினாறு எபிசோடுகள் ராக்குட்டன் விக்கி ஆப் பள்ளிச்சிறுமி சூ, பள்ளி முடிந்து வெளியே வருகிறாள். அவளைக் கூட்டிப்போக அவளது அம்மா வரவில்லை. சற்று வசதியான தோழி குடையுடன் அவளை கூட்டிக்கொண்டு போகிறாள். வழியில் வாய் பேச முடியாத சூவின் அம்மா, குடையுடன் சாலையைக் கடந்து மகளின் பெயரை அழைத்துக்கொண்டே வருகிறாள்.   சூவுக்கு தனது தோழியிடம் தனது தாய் வாய் பேச முடியாத   ஊமை என கூற வெட்கமாக இருக்கிறது. அவள் தன்னை அழைக்கும் அம்மாவை புறக்கணித்துவிட்டு செல்கிறாள். அவளது அம்மா, சாலையைக்கடக்கும்போது கார் ஒன்று அவளை மோதித் தூக்கியெறிந்துவிட்டு நிற்காமல் செல்கிறது. சூ அதிர்ச்சியடைந்து அம்மாவை நோக்கிப் போகிறாள். அம்மா, அங்கேயே அடிபட்டு இறந்துபோகிறாள். இறக்கும்போதும் கூட குடையை மகளுக்கு கைகாட்டிவிட்டு மரணிக்கிறாள். மழையிலும் கூட சூ, அம்மாவை மோதிய காரில் உள்ள இருவரைப் பார்த்துவிடுகிறாள். காரின் எண்ணையும் காவல்துறைக்கு கூறுகிறாள். போலீஸ்காரர்கள் அதை கண்டுபிடிக்க மெனக்கெடுவதில்லை. ஏழையின் குரல் என்றைக்கு கச்சேரி ஏறியிருக்கிறது? அதே கதைதான். ஆனால் சூ, தனது அம்மா இறந்துபோனதற்க

ஊழல் அதிகாரிகளைக் கொல்லும் ரகசிய அமைப்பை களையெடுக்கும் போலீஸ் அதிகாரி! வாட்சர்

படம்
  வாட்சர் - கே டிராமா வாட்சர் கே டிராமா பதினாறு எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப்   உள்துறை விவகாரங்கள் துறையின் தலைவரான சீ டு க்வாங், வழக்குரைஞர் ஹன், இளம் போலீஸ் அதிகாரி யங் கூன். இவர்களது மூன்றுபேரின் வாழ்க்கையிலும் நடைபெறும் குற்றச்சம்பவம், அவர்களை நொறுக்கிப் போடுகிறது. அந்த கடந்த கால சம்பவத்தில் உள்ள மர்மங்களை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதே தொடரின் மையக்கதை. உள்துறை விவகாரங்கள் துறையில் வேலை செய்யும் சீ டு க்வாங், ஊழல் செய்யும் காவல்துறை அதிகாரிகளை பிடிப்பதே கடமை என இருக்கிறார். மனைவி, பிள்ளைகள் என இவருக்கு யாருமில்லை. உற்ற நண்பன் கிம் முயூங்கைக் கூட மனைவியைக் கொன்றதாக குற்றம்சாட்டி பதினைந்து ஆண்டுகளாக சிறையில் அடைக்கும் அளவு நேர்மையானவர். இவருக்கு ஜோ சூன் என்ற பெண்ணை உதவியாளராக கமிஷனர் நியமிக்கிறார். ஜோ முன்னர் தடய அறிவியலில் பணியாற்றியவர். இவர்கள் இருவரும் சேர்ந்து குற்றத்தடுப்பு பிரிவு ஜாங் ரியோங் தேடிக்கொண்டிருக்கும் ஆள் ஒருவரைக் காப்பாற்றி சிகிச்சை அளிக்கிறார்கள். சீ டு க்வாங்கிற்கு தான் காப்பாற்றிய ஆள் , குழந்தைகளை கடத்துபவன் என்று கூட தெரிவதில்லை. ஆனால், குற

சைக்கோபாத் கொலைகாரனுக்கு விபத்தில் நினைவுகள் அழிந்து, மீண்டும் நினைவுகள் திரும்பினால் - மவுஸ்

படம்
  மவுஸ் - கே டிராமா மவுஸ் கொரிய டிராமா பதினாறு எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப்   வன்மம் கொண்ட ஆபத்தான சீரியல் கொலைகாரனை கொரிய போலீஸ் தேடி வருகிறது. ஆனால், அவனோ அவர்களுக்கு ஒரு படி முன்னே சென்றுகொண்டே இருக்கிறான். அவனை பிடிக்கும் முயற்சியில் ஏராளமானோர் கொல்லப்படுகிறார்கள். அவர்களைச் சேர்ந்த குடும்பங்கள் ஆதரவற்றவையாக மாறுகின்றன. சீரியல் கொலைகாரர்களால் தனது ஒட்டுமொத்த குடும்பத்தை இழந்த போலீஸ்காரர்   துணிச்சலாக களமிறங்க, அவருக்கு சைக்கோபாத் கொலைகாரன் சவால் விட ஊடகங்கள் இடைத்தரகர்களாக மாற என்னவானது என்பதே கதை. மேலே சொன்னது கதையின் ஆதாரமான பகுதி அல்ல. பொதுவாக சைக்கோபாத்/ தொடர் கொலைகாரர்கள் கதையில் பூனை – எலி விளையாட்டு போல ஓடுதல், தப்பித்தல், வேட்டையாடுதல் எல்லாமே உண்டு. இந்த கதையிலும் அதெல்லாம் உண்டுதான். ஆனால், அதையெல்லாம் தாண்டி இந்த டிவி தொடர் பேசும் விஷயம் சற்று சர்ச்சையானது. இங்கிலாந்தில் படித்து ஆராய்ச்சி செய்யும் மருத்துவர், டேனியல் கொரியாவை பூர்விகமாக கொண்டவர். இவர். சியோ ஹன் என்ற மூளை அறுவை சிகிச்சை நிபுணர் மூலம் அடையாளம் காணப்பட்டு புகழ்பெறுகிறார். மூளை தொடர்பான ஆய்வ

சீரியல் கொலைகாரனால் கொல்லப்பட்ட சகோதரியின் உடலைத் தேடி அலையும் காவல்துறை அதிகாரி! பியாண்ட் ஈவில்

படம்
  பியாண்ட் ஈவில் - கே டிராமா பியாண்ட் ஈவில் கொரிய டிவி தொடர் பதினாறு எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப்   2020ஆம் ஆண்டு லீ டாங் சிக் என்பவரின் சகோதரி, காணாமல் போகிறார். அவரது வெட்டப்பட்ட கைவிரல்கள் மட்டும் வீட்டின் முன் கிடைக்கின்றன. சம்பவ இடத்தில் லீ டாங் சிக்கின் கிடார் மீட்டும் கருவி கிடைக்க, அவரை வழக்கில் குற்றவாளியாக சந்தேகப்படுகிறார்கள். அதனால், அவர் வாழும் ஊர் அவரை அக்காவைக் கொன்ற தம்பி என முன்முடிவு செய்துவிடுகிறது. ஊடகங்கள் அதை சிறப்பு செய்தியாக்குகின்றன. ஆனால் அக்காவின் உடல் கிடைக்காத காரணத்தால் தம்பி குற்றவாளி அல்ல என விடுவிக்கப்படுகிறார். அவரை கைது செய்த காவல்நிலைய தலைவர், லீ டாங் சிக் விரும்பியபடி காவல்துறை செர்ஜென்ட் ஆக உதவுகிறார். பெண் பிள்ளை இறந்த துக்கத்தால் லீ டாங் சிக்கின் அப்பா, பனியில் பிள்ளைக்காக காத்திருந்து மனம் சிதைந்து போய் உறைந்து இறக்கிறார். அதைப்பார்த்த அவரது மனைவிக்கு புத்தி பேதலித்துவிடுகிறது. லீ டாங் சிக்கை ஊர் முழுக்க தூற்றுகிறது. ஏறத்தாழ அவரது நெருங்கிய நண்பர்களே ஒருவேளை கொலை செய்திருப்பானோ, சைக்கோ பயலோ என சந்தேகப்படுகிறார்கள். ஆனால் லீ மனம்

வணிக வளாக விபத்தால் உருக்குலைந்து போகும் மனிதர்களின் வாழ்க்கை - ஜஸ்ட் பெட்வீன் லவ்வர்ஸ்

படம்
  ஜஸ்ட் பெட்வீன் லவ்வர்ஸ் கொரிய டிவி தொடர் பதினாறு எபிசோடுகள் ராக்குட்டன் விக்கி   ஹன் மூன் சூ, தனது குழந்தை நட்சத்திர தங்கையை எஸ் மால் என்ற இடத்திற்கு படப்பிடிப்பு ஒன்றுக்கு கூட்டிப்போகிறாள். அவளது அம்மா அழகுக்கலை செய்யும் பார்லர் வைத்திருக்கிறார். அப்பா, சரக்கு வண்டி ஓட்டுபவர். தனது சிறிய மகள் டிவி, சினிமா என நடித்தால் குடும்பத்தை சிரமம் இல்லாமல் நடத்தலாம் என ஹன் சூகியின் அம்மா நினைக்கிறார். ஹன் மூன் சூ தங்கையை எஸ் மால் என்ற வணிக வளாகத்திற்கு கூட்டிப்போகிறாள். அங்கு, தங்கையை கீழ்தளத்தில் விட்டுவிட்டு தனது பள்ளியில் படிக்கும் காதலனைப் பார்க்கப் போகிறாள் ஹன் சூகி. அவனை எஸ் மாலுக்கு வரும்படி அவள்தான் அழைத்திருக்கிறாள். அப்படி போகும் நேரத்தில் அந்த மால் கட்டிடம் எதிர்பாராதவிதமாக உடைந்து நொறுங்கி வீழ்கிறது. விபத்தில் ஹன் சூகியின் தங்கை உள்பட 48 பேர் இறந்துபோகிறார்கள். விபத்து காரணமாக தலையில் அடிபடும் ஹன் சூகிக்கு பழைய நினைவுகள் அழிந்துபோகின்றன. இந்த நிலையில் விபத்து நடந்து பத்தாண்டுகளுக்கு மேலான நிலையில், எஸ் மால் இடித்து தள்ளப்பட்டு அங்கு இறந்த மக்களுக்கான நினைவிடம் அமைக்கப