இடுகைகள்

சிஎஸ்ஆர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சட்டம் போட்டால் திருந்துவார்களா? சிஎஸ்ஆர் 5

படம்
 சமூக பொறுப்புணர்வுத் திட்டம் 5 சட்டங்களால் சமூகப் பொறுப்புணர்வு அதிகரிக்குமா? சட்டம் போட்டால் திருந்துவார்களா? இந்திய அரசு, அண்மையில் சமூக பொறுப்புணர்வுத் திட்டம் பற்றிய சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்துள்ளது. இதன்படி பெருநிறுவனம் சமூகப் பொறுப்புணர்வுக்காக ஒதுக்கிய 2 சதவீத நிதியைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலவழித்தே ஆகவேண்டும். மூன்று நிதியாண்டுகளுக்குள் நிதியை செலவழிக்காதபோது, அந்நிதியை அரசுக்கு வழங்கவேண்டும். மேலும் விதிமீறலுக்கு அபராதமாக 50 ஆயிரம் முதல் 25 இலட்சம் ரூபாய் விதிக்கப்படவிருக்கிறது. இதற்கு காரணமான அதிகாரிகளை மூன்று ஆண்டுகளுக்கு சிறையிலும் அடைக்க முடியும் எனக் கூறும் அரசு விதிகள் பயமுறுத்துகின்றன. சமூகநலநோக்கில் நிதி செலவழிக்கும் நிறுவனங்களைக் கூட காலக்கெடு விதித்து அரசு மிரட்டுகிறது என வணிக வட்டாரங்களில் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. 5 கோடி லாபம் சம்பாதிக்கும் அல்லது 500 கோடி முதல் 1000 கோடி மதிப்பிலான நிறுவனங்கள் கட்டாயமாக 2 சதவீத தொகையை சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்கு செலவிடுவதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. “2024 ஆம் ஆண்டுவரை பெருநிறுவனங்களுக்கு காலக

பொறுப்பை கைகழுவிய நிறுவனங்கள் - சிஎஸ்ஆர் 4

படம்
அன்லாக் இம்பேக்ட்  அத்தியாயம் 4 பெருநிறுவன சமூகப் பொறுப்பு!  குளறுபடி செய்த நிறுவனங்கள்! இந்திய அரசு, 1960களுக்குப் பிறகு கலப்பு பொருளாதாரத்தைப் பின்பற்றியது. மத்திய அரசு, சோசலிச கருத்தைப் பின்பற்றி பல்வேறு துறைகளிலும் பொதுநிறுவனங்களைத் தொடங்கியது. இதனால் தனியார் நிறுவனங்கள் தொடங்கப்பட வாய்ப்பு குறைவாக இருந்தது. அப்படித் தொடங்குவதற்கு அரசிடம் உரிமம் பெறுவது, இமயமலை ஏறுவது போன்ற செயல்முறையாக இருந்தது.  தொண்ணூறுகளுக்குப் பிறகு, இந்தியச்சந்தையின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் உள்ளிட்ட சீர்திருத்தங்கள் அமலாகின. இதன் விளைவாக, அரசின் கட்டுப்பாடு சந்தையில் தளர்ந்தது. தனியார் நிறுவனங்கள் சந்தையில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிகராக போட்டி போடத் தொடங்கின. இந்தியா தன் வளங்களைக் கொண்டு பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியது. கிளிப்ஆர்ட் லோகோ தனியார் நிறுவனங்களான டாடா, பிர்லா, பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் சமூக பொறுப்புணர்வுத் திட்டங்களை முன்பிருந்தே ஈடுபாடு காட்டி செய

சமூகத்திட்டங்களை எப்படி திட்டமிடுகிறார்கள்? சிஎஸ்ஆர் 3

படம்
அத்தியாயம் 3 பெருநிறுவன சமூகப் பொறுப்பு! திட்டமிடுவது எப்படி? சமூகப் பொறுப்புத் திட்டத்தில் திட்டங்கள் தீட்டுவது, அதற்கான நிதி ஒதுக்குவது ஆகியவற்றோடு சில முக்கிய அம்சங்களும் உண்டு.  சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதோடு நிறுவனங்களின் பொறுப்பு முடிந்துவிடாது. திட்டங்களை நிறைவேற்றுவதற்கான சரியான குழுக்களை உருவாக்க வேண்டும். இவர்கள்தான் நிறுவனங்களின் திட்டங்களை மக்களுக்கு ஏற்றபடி உருவாக்கி உதவுவார்கள். அடுத்து, ஊழியர்களுக்கான வேலை விதிமுறைகள், தீண்டாமை அகற்றுதல், சூழல் பாதுகாப்பு ஆகியவையும் இதில் உள் அடங்கலாக உள்ளன. உலக நாடுகளில் இந்தியாவில் மட்டும்தான் சமூக பொறுப்புணர்வுத் திட்டங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இதில் செலவழிக்கப்படாத நிதி, அரசு கணக்குக்கு மாற்றப்படுவதும் கூட ஒருவகை வரி என்றே நிறுவனங்கள் நினைக்கக்கூடும். பெருநிறுவனங்கள் அளவுக்கு சிறுகுறு நிறுவனங்களிடம் சமூக பொறுப்புணர்வுத் திட்டங்களை வலியுறுத்த முடியாது. காரணம், அவர்களின் தொழில்முதலீடு சிறியது என்பதால்தான். ஆனால் இன்று சிறு நிறுவனங்கள் உள்ளூர் மக்களிடம் சமூகத் திட்டங்களை செயற்படுத்துவதில்

சமூக பொறுப்புணர்வு திட்டத்திற்கான விதிகள் - சிஎஸ்ஆர் 2

படம்
அத்தியாயம் 2 பெரு நிறுவன சமூகப் பொறுப்பு! முக்கியமான விதிகள்! சமூக பொறுப்பு சார்ந்த விழிப்புணர்வை மேற்குலகில் எழுத்தாளர்கள் ஏற்படுத்தினர்.  இதனை ஒழுங்குமுறைப்படுத்த அரசுகளால் சட்டத்திருத்தங்களும் உருவாக்கப்பட்டன. பின்னர்தான், இதனை பெருநிறுவனங்கள் முறையாகக் கடைப்பிடிக்கத் தொடங்கினர். இந்தியாவில் சமூகப் பொறுப்புணர்வு என்பது தனிநபர் சார்ந்து இருந்தது. சமூக விஷயங்களுக்காக நன்கொடை தருவது என்பது இயல்பான ஒன்று. காலப்போக்கில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. அவை செய்யும் பல்வேறு அறச்செயற்பாடுகளுக்கு சட்டம் தேவைப்பட்டது. இதற்கான சட்டப்பூர்வ வரைவுகள்  2009 ஆம் ஆண்டு தொடங்கின.   பதினொன்றாவது ஐந்தாண்டு திட்டத்தில் பெருநிறுவன சமூகப் பொறுப்பு பற்றி கூறப்பட்டிருந்தது. வணிக நிறுவனங்களின் பொறுப்பு என்ற வகையில் இவை உருவாக்கப்பட்டன. பின்னர், 2011 ஆம் ஆண்டில், தேசிய தன்னார்வ சமூகப்பணிகளுக்கான விதிமுறைகள் (NVG) வகுக்கப்பட்டு வெளியிடப்பட்டன. இதில் சமூகம், பொருளாதாரம், சூழல் ஆகிய மூன்று அம்சங்களையும் வணிக நிறுவனங்கள் கவனிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தன. இதில் ஒன்பது விதிகள் உண்டு.  அதி

பெருநிறுவன சமூகப் பொறுப்பு!

படம்
optimy wiki அத்தியாயம் 1 பெருநிறுவன சமூகப் பொறுப்பு! தற்போது உலகம் முழுக்க இயங்கி வரும் பெருநிறுவனங்கள், அங்கு பல்வேறு சமூகத்திட்டங்களைச் செய்து வருகின்றன. இதற்கென தங்களது நிகர லாபத்தில் குறிப்பிட்ட அளவை ஒதுக்கி வருகின்றன. இந்தியாவில் சமூகப் பொறுப்புத் திட்டங்களுக்கான நிதியை வரையறை செய்து, அதனைச் செலவழிக்க அரசு விதிமுறைகளை வகுத்துள்ளது. சமூகப்பொறுப்பு பற்றிய சிந்தனை 1930 ஆண்டு முதலாக தொடங்கிவிட்டது. அக்காலகட்டத்தில் செஸ்டர் பர்னார்டு எழுதிய, தி பங்க்ஷன் ஆஃப் தி எக்சிகியூட்டிவ் (1938), தியோடர் கிரெப் எழுதிய மெசர்மென்ட் ஆஃப் தி சோசியல் பர்ஃபாமன்ஸ் ஆஃப் பிசினஸ் (1940) ஆகிய நூல்கள் இந்த சிந்தனையை மக்களுக்குத் தூண்டின. பின்னர் 1950 இல், சமூக பொறுப்புணர்வு என்று இந்த நோக்கம் சுருக்கமாக குறிப்பிடப்பட்டது.  1953 ஆம்ஆண்டு ஹோவர்ட் போவன்  என்ற எழுத்தாளர் ஒரு நூலைப் பிரசுரித்தார். சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டிஸ் ஆஃப் தி பிசினஸ்மேன்  எனும் அந்த நூல்தான், பெருநிறுவன சமூகப் பொறுப்பு என்ற வார்த்தையை உலகிற்கு முதன்முதலாக அறிமுகப்படுத்தியது. இதனால்  ஹோவர்ட் போவன் சமூக பொறுப்புணர்வின் தந்த

என்ஜிஓக்களின் வளர்ச்சி எப்படி இருக்கிறது? ஒரு அலசல்

படம்
தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வளர்ச்சி! தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செயலாற்றத் தொடங்கியபின் அரசின் பெரும் பாரம் குறைந்துவிட்டது. அரசு செய்யவேண்டிய பல விஷயங்களை தன்னார்வ நிறுவனங்கள் செய்து அதற்கு சிறிய தொகையை பெறுவதோடு, சமூகத்தின் நல்ல பெயரையும் பெறுகிறார்கள். ஏறத்தாழ அரசு மீதான கோபத்தை தீர்ப்பவர்கள் என்று கூட இவர்களைச் சொல்ல முடியும். இவர்களால் அரசு அமைக்க முடியுமா என்றால், டில்லியை ஆளும் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கைகாட்டலாம். ஊழலுக்கான மசோதா, போராட்டம் எனத் தொடங்கி மக்களின் மீதான கோபத்தை சரியாக அறுவடை செய்து ஆட்சிக்கட்டிலில் ஏறினார் அரவிந்த் கெஜ்ரிவால். அவருக்கு ஓட்டுபோட்டது முழுக்க மத்திய நடுத்தர வர்க்கத்தினர்தான். அவர்களின் வளர்ச்சியை டேட்டாவாக பார்ப்போம். 2014- 18 வரை தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வளர்ச்சி 11 சதவீதமாக உயர்ந்துள்ளது. சமூகச் செயற்பாடுகளுக்கு கிடைக்கும் தனியார் நிறுவன நிதி 15 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த நிதி மேற்சொன்ன காலகட்டத்தில் கிடைத்ததுதான். மத்திய அரசின் பல்வேறு சுரங்கம் உள்ளிட்ட திட்டங்களை க்ரீன்பீஸ் உள்ளிட்ட அமைப்புகள் எதிர்த்து போராடின. உ