இடுகைகள்

பணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனிதர்கள் தங்களை மறக்க நினைப்பது ஏன்? ஜே கிருஷ்ணமூர்த்தி

  ஜே கிருஷ்ணமூர்த்தி உரையாடுகிறார் – விக்டர் காமெஸி இரவு கிளப்புகளில், பொழுதுபோக்கு பூங்காக்களில், பயணத்தில் செல்வச்செழிப்பானவர்கள் தங்களை மறக்க நினைக்கிறார்கள்.   சற்று தந்திரமானவர்கள், தங்களை மறக்க புதிய நம்பிக்கைகளை உருவாக்கிக் கொள்கிறார்கள்.   முட்டாள்கள், தங்களை மறக்க மக்கள் கூட்டத்தை பின்பற்றுகிறார்கள். அவர்களின் ஆன்மிக குரு, அவர்களுக்கு எப்படி, என்ன செய்யவேண்டுமென கூறுகிறார். பேராசை கொண்டவர்கள் தங்களை மறக்க ஏதாவது ஒரு செயலை செய்துகொண்டிருக்கிறார்கள்.   நாம் அனைவருமே முதிர்ச்சியானவர்களாக வயதானவர்களாக மாறிக்கொண்டே நம்மை நாமே மறக்க முயல்கிறோம். வாரணாசி 22 ஜனவரி 1954 லீவிங் ஸ்கூல்- என்டரிங் லைஃப்                அமைதியில்லாத மனம், தொடர்ச்சியாக தனது உணர்வு மற்றும் செயல்பாட்டை மாற்றிக்கொண்டே இருக்கும். இதனால், அது நிரம்பியதாக அல்லது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக தோன்றும். பல்வேறு உணர்ச்சிகள், கடந்து செல்லும் ஆர்வங்கள், கிசுகிசு ஆகியவை மனதை நிரப்புகின்றன. பிறர் சார்ந்த விஷயங்களே ஒருவரின் மனதை அதிகம் ஆக்கிரமிப்பு செய்துள்ளன. வார, மாதம இதழ்கள், நாளிதழ்களில் கிசுகிசு பத்திகள், கொ

புலனுணர்வு சார்ந்த வாழ்க்கை அர்த்தம் இல்லாதது, வெறுமையானது - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  மனிதர்கள் வாழ்வதற்கான பொருள்தான் என்ன? நீங்கள் இதற்கான பதிலைத் தேடாமல் இருக்கலாம். அதை புறக்கணிக்கலாம். இருபது அல்லது முப்பது ஆண்டுகளை செலவழித்து இயற்பியல், தத்துவம், சமூகவியல், உளவியல் என பலவேறு துறை சார்ந்த விஷயங்களைக் கற்கலாம். ஆனால், ஒருநாளை அல்லது ஒரு மணிநேரத்தைப் பயன்படுத்தி நீங்கள் யார், எதற்காக இங்கு வாழ்கிறீர்கள் என்று யோசித்துப் பார்க்க விரும்புவதில்லை. ஐஐடி பாம்பே 7 பிப்ரவரி 1984 வொய் ஆர் யூ பீயிங் எஜூகேட்டட்?   நாம் நமது வாழ்க்கையை வீணடித்துக்கொண்டு இருக்கிறோமா? பல்வேறு தொழில் சார்ந்த துறைகளில் ஒட்டுமொத்த ஆற்றலையும் சிதறடித்துக்கொண்டு இருக்கிறோம் என்ற அர்த்தத்தில் இதைக் கூறுகிறேன். நம் முழு இருப்பையும், வாழ்க்கையையும் வீணடிக்கிறோமா?   நான் நிறைய பணம் சம்பாதிக்கவேண்டும். அதுதான் பெரிய சந்தோஷம். அல்லது உங்களுக்கு உள்ள திறமை என்பது ஒரு பரிசு. அதை ஆன்மிக வாழ்க்கைக்கு பயன்படுத்துவது ஆபத்தானது. எனவே, அதை குறிப்பிட்ட துறையில் பயன்படுத்தலாம் என நினைக்கிறீர்கள்.   குறிப்பிட்ட துறையில் திறமையைப் பயன்படுத்துவது என்பது துண்டுகளாக ஒருவரின் ஆற்றலை சிதறடிப்பது. எனவே நீங்கள்

ஹவாலா குற்றவாளியை திக்கு முக்காடச் செய்யும் அப்பாவி கணக்காளன்! பால தந்தானா - தெலுங்கு

படம்
  பால தந்தானா - தெலுங்கு பால தந்தனா தெலுங்கு ஶ்ரீவிஷ்ணு, கேத்தரின் தெரசா தமிழில் போடு தந்தானா தமிழ்ப்படம் யூட்யூப் சேனல் ‘’கெட்டது செய்றவங்களை கேட்வி கேட்கறதில்ல. ஆனா, நல்லது பண்றவங்கள கேள்வி கேட்கிறோம். இதுல என்ன நியாயம் இருக்கு. அதனால, சந்து மும்பைல என்ன பண்ணிட்டிருந்தான்னு நா கேட்கல’’ என படத்தின் இறுதியில் சசிரேகா மனதுக்குள் நினைத்தபடி சந்துவின் பின்னாலே நடந்த்து   வெளியே வருகிறார். உண்மையில் இது சுவாரசியமான இறுதிக்காட்சி. இதை வைத்து ஸ்பின்ஆஃப் படம் ஒன்றை எடுக்காம். சந்து மும்பையில் என்ன செய்துகொண்டிருந்தார் என … அதுவும் சுவாரசியமாகவே இருக்கும். தெலுங்கில பால தந்தானா, தமிழில் போடு தந்தானாவாகியிருக்கிறது. ஸ்லோபர்னர் படம். மெதுவாகத்தான் கதையில் என்ன நடந்திருக்கிறது என தெரிந்துகொள்கிறோம். அதுவரை, வெப்சைட் செய்தியாளரான சசிரேகா போலவேதான் நாமும் இருக்கிறோம். பிரபாநியூஸ்.காம் என வெப்சைட் ஒன்றில் செய்தியாளராக சசிரேகா வேலை செய்கிறார். இவருக்கு செய்தி என்றால், மக்களுக்கு பிரயோஜனமாக இருக்கவேண்டுமென நினைக்கிறார். அப்படி பாடுபட்டு எழுதும் செய்திகளால் நிறைய பிரச்னைகள, மிரட்டல்கள்

கான்ட்ராக்ட் கல்யாணத்தால் களேபரமாகும் வினோத தம்பதியினரின் வாழ்க்கை!

படம்
  பிகஸ் திஸ் இஸ் மை ஃபர்ஸ்ட் லைஃப் - கே டிராமா பிகஸ் திஸ் இஸ் மை ஃபர்ஸ்ட் லைஃப் கே டிராமா   -16 எபிசோடுகள் ராக்குட்டன் விக்கி ஆப்   எல்லாவற்றையும் பொருளியலாக, பணமாக, பரிவரத்தனையாக மாற்றும் ஒருவருக்கும், கல்யாணம் செய்யவேண்டுமென்றால் காதல் வேண்டும் என அடம்பிடிக்கும் பெண்ணுக்கும் நடக்கும் கான்ட்ராக்ட் கல்யாணத்தின் களேபர விளைவுகள்தான் கதை. இந்த கே டிராமா, பிற தொடர்களைப் போல காதலை மட்டும் உயர்வாக பேசவில்லை. காதல் அதைச்சார்ந்த இருவரின் பிரச்னைகள், காதலை சமூகம் எப்படி பார்க்கிறது, பெற்றோர் அதைப்பற்றி என்ன நினைக்கிறார்கள், காதல் இருவருக்கும் போதுமானது. ஆனால், திருமணம் என்பது எப்படிப்பட்ட பொறுப்புகளைக் கொண்டது என தொடர் நெடுக விவாதிக்கிறார்கள்.   இந்த கே டிராமா இயக்குநர், இறுதிப்பகுதியை மனப்பூர்வமாக எடுக்கவில்லை. அதைத்தவிர மற்ற எபிசோடுகள் பதினைந்தையும் நன்றாக எடுத்திருக்கிறார். டேட்டிங் ஆப் நிறுவனத்தில் திட்டத் தலைவராக உள்ள நாம் சே கி, டிவி தொடர்களுக்கு எழுத்தாளராக முயலும் ஜி ஹோ , தனி நிறுவனத்தைத் தொடங்கி நடத்த நினைக்கும் சூ ஜி, திருமணம் செய்து குழந்தை பெற்றாலே சாதனை என நினைக்கும் உண

யாவரும் ஏமாளி 2 நூலை வாசியுங்கள்- அமேஸான் வலைத்தளம் வழியாக .....

படம்
  யாவரும் ஏமாளி 2 அட்டைப்படம் ஒரு பொருளை வாங்குவதை எப்படி முடிவுசெய்கிறோம், விலை என்பதை விட அதைத் தாண்டிய நிறைய காரணங்கள் உள்ளன. இந்த வகையில் யாவரும் ஏமாளி 2, நமது மூளையில் உள்ள சில அம்சங்களை அடையாளம் கண்டு வாங்கும் பழக்கத்தைப் பற்றிய அறிவியல் அம்சங்களைக் கூறுகிறது. இந்த வகையில், உங்களால் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும். குறைந்தபட்சம் ஏன் பொருட்களை வாங்கினோம் என யோசிக்க முடியும். அந்த வகையில் இந்த நூல் ஒருவருக்கு சிக்கனமாக இருக்க கற்றுக்கொடுக்கிறது.  நூலை வாசிக்க.... https://www.amazon.in/dp/B0CB1S9R8Z

பணம் விரயமாகும் வழித்தடம்! - முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள்

படம்
  பணம் விரயமாகும் வழி 27.1.2022 அன்புள்ள நண்பர் முருகுவிற்கு, வணக்கம். நலமா? நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களைத் தொகுத்து ‘நீரெல்லாம் கங்கை’ என   பெயரிட்டு அமேஸான் தளத்தில் பதிப்பித்திருக்கிறேன். ஜானகிராமம் நூலை படிக்க நினைத்தேன். நூல் 806 பக்கம். போனில் படிக்க முடியாது. எனவே, அமீஷின் ராமாயண புனைவுக்கதையை படித்துக்கொண்டு இருக்கிறேன். பவித்ரா ஶ்ரீனிவாசனின் மொழிபெயர்ப்பில் நூல் நன்றாக உள்ளது. கவிதக்கா, அண்மையில் பெங்களூருவில் இருந்து ஈரோட்டுக்கு வந்துவிட்டார். ஈரோடு போகும் வேலை இருந்தால் சென்று பாருங்கள். நீங்கள் பேசவில்லை என வருத்தப்பட்டார். ‘சாங் ஷி’ என்ற ஆங்கிலப்படத்தைப் பார்த்தேன். பத்து வளையங்களின் சக்தி என படத்தின் கதையை விளக்கினால் சலவைத்தூள் விளம்பரம் போலவே இருக்கும்.   சீன கலாசாரம் சார்ந்து அமெரிக்க படத்தை எடுத்திருக்கிறார்கள். இவரின் பாத்திரத்தையும் அவெஞ்சரில் சேர்ப்பார்கள் என நினைக்கிறேன். பள்ளிகள் இனியும் திறக்கவில்லை என்றால், நான் துளிர் இதழுக்கு கட்டிய ஆண்டு சந்தா முழுக்க வீண்தான். பணம் வீணாவது ஏதோ ஒருவகையில் நடந்துகொண்டே இருக்கிறது. வினோத் மேத்தா பற்றிய நூலை இன்னு

நாங்கள் மக்களிடம் முதலீடு செய்கிறோம்! - ஶ்ரீதர் வேம்பு, இயக்குநர், ஜோஹோ

படம்
  ஶ்ரீதர்வேம்பு, ஜோஹோ நிறுவன இயக்குநர் ஶ்ரீதர் வேம்பு படம் - மனிகண்ட்ரோல் ஶ்ரீதர் வேம்பு நேர்காணல்   உங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் பலரும் புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் பட்டங்களைப் பெற்றவர்கள் அல்ல. தொழில்நுட்பத் துறையில் வேலை இல்லாமல் தவிக்கும் பட்டதாரிகளைப் பார்க்க முடிகிறது. ஒருவர், இரண்டு வேலைகள் செய்து வாழவேண்டியிருக்கிறது. திறமையானவர்களுக்கு தட்டுப்பாடு ஏறபட்டிருக்கிறதா? இந்த பிரச்னையை எப்படி பார்க்கிறீர்கள்? சந்தையில் நிறைய நிறுவனங்கள் திறமைசாலிகளை தேடுகிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை திறமைசாலிகள் இருந்தாலும் அவர்களை வழிகாட்டி வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல யாரும் முயல்வது இல்லை. நாங்கள் அந்த பணியை செய்கிறோம். இதன் மூலம் ஊழியர்களின் திறன் உயர்கிறது. அவர்கள் எங்களோடு விசுவாசமாக பணியாற்றுகிறார்கள். இவர்கள் மூலமே எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியும் உயர்கிறது. நாங்கள் தொழிலில் முதலீடு செய்வதை விட மக்களின் மீது முதலீடு   செய்கிறோம். மூன்லைட்டிங் (இரு நிறுவனங்களில் பணிகளை செய்வது) பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பொறியாளர் ஒருவர் ஒரு நிறுவனத்தில் இருந்துகொண்டு

தனது பெற்றோரின் இறப்புக்கு காரணமானவர்களை பழிவாங்கத் துடிக்கும் மாவீரனின் வலிமிகுந்த பயணம்- மார்ஷியல் ரெய்ன்ஸ்

படம்
  மார்ஷியல் ரெய்ன்ஸ் மங்கா காமிக்ஸ் 550 (ஆன் கோயிங்) ரீட்எம்.ஆர்க் யே மிங், சூ லான் என்ற ஜோடிதான் இந்த காமிக்ஸின் அட்டகாசமான ஜோடி. இதைப் பார்க்கும் முன்னர் யே மிங்கின் வாழ்க்கையைப் பார்த்துவிடுவோம். யே மிங்கின் அப்பா, ஐந்து அரசுகளாலும் எதிரியாக பார்க்கப்பட்ட ஹவோசியன் செக்ட் எனும் அமைப்பில் இணைந்தவர் என வதந்தி பரப்பப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார். அம்மா, யே குடும்பத்தைச் சேர்ந்தவரால் வல்லுறவு செய்யப்பட்டு இறந்துபோகிறார். தேசதுரோகி என்ற பெயரால் யே மிங்கின் அப்பா கொல்லப்படுவதில் யே குடும்பத்தில் சிலர் பயன் அடைகிறார்கள். அதேநேரம் யே மிங், தற்காப்புக் கலை கற்றால் நம்மை பழிவாங்குவான் என நினைத்து அவனது தற்காப்பு கலைத் திறன்களை முழுக்க ஊனமாக்குகிறார்கள் சக்தி வாய்ந்த யே குடும்ப உறுப்பினர்கள் சிலர். பெற்றோர் இல்லை. கற்ற தற்காப்புக் கலையும் அழிந்துவிட்டது. உண்ண ஒரு பருக்கை அரிசி கூட இல்லை. இந்த நிலையில் யே மிங் ஒரு பிச்சைக்காரரை சந்திக்கிறார். அவர் அவனுக்கு   உடலில் ஊனமாகிப் போன தற்காப்புக்கலை சக்தியை மீண்டும் உருவாக்கித் தருவதாக சொல்கிறார். ஆனால், அவனைக் கொன்று அவனது உடலில் தனது ஆன

முழுமையானவராக வாழ்ந்தால் புறவயமான பாதுகாப்பைத் தேடவேண்டியதில்லை - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  கே.நீங்கள் ஒருபோதும் ஏழையின் வாழ்க்கையை வாழ்ந்தவரில்லை. மறைமுகமாக பணக்கார நண்பர்களின் ஆதரவு, இருந்து வந்துள்ளது. ஆனால் மக்கள் தம் வாழ்க்கையில் அனைத்து வித பாதுகாப்புகளையும் விட்டு விட வேண்டுமென்று பேசி வருகிறீர்கள். ஏற்கெனவே இங்கு பலகோடி மக்கள் அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாமல்தான் வாழ்ந்து வருகிறார்கள். நீங்கள் வறுமையான சூழலை அனுபவிக்காதவர், அதேநேரம் , புறவயமான பாதுகாப்பின்மையை அனுபவிக்காதவர். எப்படி இதுபோல பாதுகாப்பை கைவிடவேண்டுமென கூறுகிறீர்கள்? பதில். இந்த கேள்வி தொடர்ச்சியாக என்னிடம் கேட்கப்பட்டு வருவதுதான். நான் இதற்கு முன்னமே பதில் அளித்திருந்தாலும், மீண்டும் பதில் கூறுகிறேன். நான் இங்கு பாதுகாப்பு என்று கூறுவது, மனம் உருவாக்கும்   இசைவான சொகுசான சூழல்களைத்தான். புறவயமான பாதுகாப்பு என்பது, மனிதர்கள் உயிரோடு வாழ ஓரளவுக்கு உதவுகிறது. அதை நான் மறுக்கவில்லை. இந்த இடத்தில் இரண்டையும் ஒன்றாக்கி குழப்பிக்கொள்ளவில்லை. நீங்கள், இப்போது உடல் மட்டுமல்லாமல் மனம் பற்றிய பாதுகாப்பையும் பேசுகிறீர்கள். இதன் வழியாக உறுதியான தன்மை உருவாகிறது. பாதுகாப்பு பற்றி தவறாக புரிந்துகொண்டால், அதைப்

பணத்திற்காக வயதானவர்களை அடித்துக் கொல்லவும் தயங்காத கொடூரன் - ஆலன்

படம்
  ஆலன், ஆப்பிரிக்க அமெரிக்க தொடர் கொலைகாரர்களில் ஒருவர். இந்தியன் போலிஸ் பகுதியில் கொலைகளை செய்து பழகியவர் சும்மா இருப்பாரா? தனக்கான பலவீனமான இரையைத் தேடிக்கொண்டிருந்தார். 1974ஆம் ஆண்டு, ஓபல் கூப்பர் என்ற 85 வயது பெண்மணியின் வீட்டில் கொள்ளையடிக்கப் புகுந்தார். ஓபல் என்ற அந்தப் பெண்மணியை அடித்துக் கொன்றார். இதற்காக   குற்றம்சாட்டப்பட்டவரின் குற்றத்திற்கு தண்டனை 21 ஆண்டுகள். இந்த குற்றத்தை ஆலன் செய்தபோது அவரின் வயது 24. பிறகு பிணை கிடைக்க 1985ஆம் ஆண்டு வெளியே வந்தார். வந்தவர் இந்தியன் பொலிஸ் பகுதியில் இருந்த கார்களை சுத்தம் செய்யும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அமைதியாக இருந்தார் என்றால் வருந்தி திருந்தியதாக அர்த்தமில்லை. 1987ஆம் ஆண்டு, மேமாதம் 18 அன்று, 73 வயது பெண்மணி வீடு புகுந்து தாக்கப்பட்டார். இறப்பில் இருந்து சற்றே அதிர்ஷ்டம் இருந்து பிழைத்தார் என்றுதான் கூறவேண்டும். இரண்டு நாட்கள்தான். அடுத்த குற்றம் நடைபெற்றது. அதில் லாவர்னே ஹாலே என்ற பெண்மணி மாட்டினார். ஆனால் குற்றச்சம்பவத்தில் இவருக்கு கிடைத்த அடிகளும் குத்துக்களும் அவரை உயிரோடு வாழ விடவில்லை. 87 வயதான பெண்மணி சித்த

வன்முறைச் சம்பவங்களை எழுதுவது எப்படி?

படம்
  இன்று உலகம் முழுக்க பத்திரிகையாளர்கள் பல்வேறு செய்திகளை எழுதுகிறார்கள். அதில் அதிகம் கவனம் பெறுவது மனிதர்களைப் பற்றிய செய்திகள்தான். வெற்றி, தோல்வி, மீண்டு வந்த கதைகள் என வைத்துக் கொள்ளலாம். இவற்றை எப்படி எழுதுவது என பார்ப்போம். ஜாதி, மதம், இனக்குழு, நிறம், பாலியல் என பல்வேறு வகையாக குறிப்பிடப்பட்டு மனிதர்கள் தாக்கப்படுகிறார்கள். இப்படி தாக்கப்பட்டவர்களைப் பற்றிய செய்திகளை எழுதும்போது, பெயர்களை வெளியிடவேண்டாம் என தொடர்புடையவர் கூறினால் அதன்படியே செய்தியை எழுத வேண்டும். ஏனெனில் செய்தி வெளியாகி அவரின் மீதமுள்ள வாழ்க்கை, மரியாதை பாதிக்கப்படக்கூடாது. முற்றிலும் அழிந்துவிடக்கூடாது.   பாலியல் வல்லுறவு, சீண்டல் காரணமாக குழந்தைகள் பாதிக்கப்பட்டால் முடிந்தளவு அவர்களின் பெயர், புகைப்படத்தை வெளியிடக்கூடாது. அப்படி வெளியிட நினைத்தால் பாதிக்கப்பட தரப்பிடம் உரிய அனுமதி வாங்கவேண்டும். இல்லையெனில் இந்த சம்பவம், பத்திரிகையாளருக்கு தண்டனை அளிக்கும் குற்றமாகவும் மாறலாம். வன்முறை சம்பவத்தை பதிவு செய்யும்போது எழுதும் மொழி, நடை என்பது சற்று மத்திய நிலையில் இருக்கவேண்டும். எந்த தரப்பிற்கும் ஆதரவாக அம

அல வைகுந்தபுரத்தின் தொடர்ச்சியாக கதையை உருவாக்கினால்... தமாக்கா - ரவிதேஜா, ஶ்ரீலீலா

படம்
  தமாக்கா ரவிதேஜா, ஶ்ரீலீலா, தணிகெலா பரணி பின்னணி இசை, பாடல்கள் – பீம்ஸ் சிசிரிரோலியோ பீப்பிள்ஸ் மார்ட் எனும் நிறுவனத்தின் தலைவர் இயக்குநர், புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார். அப்போது, அவர் கலந்துகொள்ளும் நிறுவன சந்திப்பில் தான் இரண்டு மாதங்கள்தான் உயிருடன் இருப்பேன் என கூறிவிடுகிறார். இதனால் அவரது நிறுவனத்தை வாங்க ரௌடி தொழிலதிபர் முயல்கிறார். அவரது முயற்சியை பீப்பிள்ஸ் மார்ட் நிறுவனத்தின் தலைவரின் மகன், ஆனந்த் சக்ரவர்த்தி தடுக்க நினைக்கிறார்.   இவரைப் போலவே உருவத்தில் உள்ளவர் ஸ்வாமி. இவர் டயப்பர் நிறுவனத்தில் வேலையிலிருந்து நீக்கப்பட்டு வேலை தேடி வருகிறார். ஸ்வாமிக்கும், ஆனந்திற்கும் உள்ள தொடர்பு என்ன என்பதே கதை. அல வைகுந்தபுரம்லோ படத்தில் வரும் பண்டு எனும் அல்லு அர்ஜூன் பாத்திரத்தை யோசித்துக் கொள்ளுங்கள். அவர் பிறந்த இடம் வேறு. ஆனால் வாழும் இடம் வேறு. இரண்டு இடங்களிலும் அவருக்கு பாசம் வேண்டும். அவர் யாரையும் விட்டுக்கொடுக்க முடியாது. அதே பாத்திரத்தைத்தான் ரவிதேஜா எடுத்துக்கொண்டு நடித்திருக்கிறார். அதிலும் அல வைகுந்தபுரத்தில் வரும் நடிகர்களையே திரும்ப நடிக்க வைத்து அதே அதிர்வை ம