இடுகைகள்

மகிழ்ச்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தலித்துகளின் அரசியல் விடுதலை பற்றி பேசும் நூல்! - புத்தக அறிமுகம்

படம்
                  புத்தக அறிமுகம் 1232 கி . மீ வினோத் காப்ரி ஹார்பர் கோலின்ஸ் ரூ .295 இந்த நூலில் மத்திய அரசு செய்த முட்டாள்தனத்தால் அதன் இடம்பெயர் குடிமக்கள் எப்படி சாலையில் நடந்து வரும் அவலம் நடைபெற்றது என்பதை துல்லியமாக விவரிக்கிறது . திரைப்பட இயக்குநர் வினோத் காப்ரி இந்த நூலை எழுதியுள்ளார் . ரிச்சர் வைசர் ஹேப்பியர் வில்லியம் க்ரீன் ஹாச்செட் ரூ .599 அனைத்து நாடுகளிலும் பாராட்டப்படுபவர்களு்ம் , தூற்றப்படுபவர்களும் முதலீட்டாளர்கள்தான் . ஒருவகையில் சரியான முதலீட்டை செய்து லாபத்தை எடுத்துக்ளகொண்டு மாயமாகி பிற நாடுகளுக்கு ஓடும் இவர்கள் புத்திசாலிகள் . எழுத்தாளர் 25 ஆண்டுகளாக இத்துறையில் பணியாற்றியவர் . இவர் தனது அனுபவங்களையும் , எந்த விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்பதையும் எழுதியுள்ளார் . டாடா ஸ்டோரிஸ் ஹரீஷ் பட் பெங்குவின் ராண்டம் ஹவுஸ் டாடா குழுமத்தில் உள்ள தனிநபர்கள் , நிகழ்ச்சிகள் , இடங்கள் பற்றிய பல்வேறு சிறு கதைகளைக் கொண்ட நூல் இது . கெட் அவுட் ஆப் யுவர் ஓன் வே மார்க் கௌல்ஸ்டன் அண்ட் ப

குறுக்கெழுத்து புதிர்களும், சமூக பிரச்னைகளும் வேறுவிதமானவை! - வெய் ஹூவா ஹூவாங்

படம்
          வெய் ஹூவா ஹூவாங் முன்னாள் கூகுள் பொறியாளர், புகழ்பெற்ற குறுக்கெழுத்து திறனாளர், கணினி விளையாட்டு வடிவமைப்பாளர். புதிதாக கல்வி கற்க கல்லூரி செல்பவர்கள், தொழிலைத் தொடங்குபவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? நாம் எடுக்கும் சரியான முடிவு என்பது எப்போதும் சரியான விளைவை ஏற்படுத்தும் என்று கூறிவிட முடியாது. விளைவுகள் என்பது அதிர்ஷ்டம், சூழல், அப்போதைய வாய்ப்பு ஆகியவற்றைப் பொறுத்தது. நமக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் நாம் ஒரு முடிவை எடுப்போம். ஆனால் அதன் விளைவு என்பது நாம் யோசித்தாற்போல அமையாது. விளைவுகள் எப்படி இருந்தாலும் நாம் மனதில் நம்பிய விஷயங்களை பின்தொடர்ந்து செல்வதே சிறப்பானது. இன்று உலகம் நிறைய சவால்களை சந்தித்து வருகிறது. இதுபற்றி தங்களது கருத்து என்ன? புதிர்களையும், குறுக்கெழுத்துகளையும் உருவாக்குபவனான நான் இதைப்பற்றி என்ன சொல்லுவது?  புதிர்களை உருவாக்கி அதற்கான விடையை கண்டுபிடிப்பது வேறு. நிஜமான பிரச்னைகளுக்கான தீர்வுகளை தேடுவது வேறு. புதிர்கள், குறுக்கெழுத்துகள் என்பது மகிழ்ச்சிக்கானது. சமூக பிரச்னைகளுக்கான சரியான தீர்வு என்பது யாருக்குமே தெரியாது. க

நாம் மகிழ்ச்சியை இழக்கும் வயது!

படம்
giphy மிஸ்டர் ரோனி நாம் மகிழ்ச்சியை இழக்கும் வயது எது? கல்யாணம் செய்துகொள்ளும் வயது என சீரியசாக காமெடி செய்யக்கூடாது. பொதுவாக நிறைய பொறுப்புகள் இந்தியர்கள் ஏற்கிறார்கள். இதனால் சொல்ல முடியாத கஷ்டங்களுக்கு ஆளாகி அறுபது வயதிலேயே இதயம் வெடித்து சாகிறார்கள். ஒகே இதனை மாரடைப்பு என வைத்துக்கொள்ளுங்கள். அதற்கு காரணம் மன அழுத்தம். இந்த பிரச்னைகள் தொடங்கும் வயது 47. வளர்ந்த நாடுகளில் 48 என்கிறது ஆய்வு. இந்த வயது தொடங்கி ஐம்பது, அறுபதுகளில் மெல்ல தூக்கமும் குறையத்தொடங்கும். உங்கள் வாயில் நிறைய புலம்பல்களும் கேட்கத் தொடங்கும். இதுபற்றி ஆராய்ந்த மருத்துவர் டெரங்க் செங், மகிழ்ச்சி என்பது யு வடிவத்தை ஒத்தது என்கிறார். இதுபற்றி 2015ஆம் ஆண்டு ஒரே வயது கொண்டவர்களை ஆராய்ந்தார். ஆராய்ச்சிக்கு உட்பட்டவர்கள் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். இதுபற்றி மருத்துவர் டீன் பர்னட், “மனதில் மகிழ்ச்சி இல்லாதவர்கள் இளமையில் இறந்துவிடுகிறார்கள். காரணம், இளம் வயதில்  நிறைய பொறுப்புகள் கிடையாது. நாற்பது மற்றும் ஐம்பது வயதுகளில் நிறைய பொறுப்புகள் இருக்கிறது. இளம்வயது பிள

பிறந்தநாள் வாழ்த்துப் பாடலின் வரலாறு! - தெரிஞ்சுக்கோ!

படம்
தெரிஞ்சுக்கோ! ஹேப்பி பர்த்டே டூ யூ! பீட்டில்ஸ் பிரிட்டிஷ் பேண்ட்டின் பாடல்களை விட பிரபலமான பாடல்கள் உலகில் உண்டு. அதில் ஒன்றுதான், பிறந்தநாள் வாழ்த்துப் பாடல். இப்பாடலை 1889 ஆம் ஆண்டு பார்ட்டி ஹில் மற்றும் அவரது சகோதரியான மில்ட்ரெட் ஆகியோர் சேர்ந்து உருவாக்கினர். இன்று உலகம் முழுவதும் இப்பாடல் பாடப்பெற்று வருகிறது. கேக்கைத் தின்னும் வெறியில் பாடலைக் கூட பாடாமல் சிலர் இருப்பார்கள். ஆனால் பாடலின் வரிகள் மனதில் வராமல் இருக்காது. அதுபற்றிய  தகவல்கள்: 1893 ஆம் ஆண்டு இப்பாடல் ஹில் சகோதரிகளால் பதிப்பிக்கப்பட்டது. இதில் ஹேப்பி பர்த்டே டூ யூ என்பது மாற்று வார்த்தையாக சேர்க்கப்பட்டிருந்தது. 1912 ஆம் ஆண்டு குட்மார்னிங் டு ஆல் எனத் தொடங்கும் பாடலில் ஹேப்பி பர்த்டே டூ யூ என்ற வார்த்தையும் முதன்முதலாக இடம்பெற்றது. 1933 ஆம் ஆண்டில் தந்தியில் செய்தியாக அனுப்ப ப்பட்ட முதல் பாடல், இதுதான். 1935 ஆம் ஆண்டு இப்பாடலுக்கான காப்புரிமை ஹில் சகோதரிகளுக்கு கிடைத்தது. 1955 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் பியர் மான்ட்யூக்ஸ் என்பவரின் 80 வது பிறந்த நாளில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லுக்கு ட

புத்தர் என்பவர் யார்? - குதிரைச்சாணம் என்கிறார் ஹான்

அமைதி என்பது நாமே திக் ஹியட் ஹான் தமிழில்: ஆசைத்தம்பி க்ரியா அமைதி, மகிழ்ச்சி இவை கிடைக்க என்ன செய்யவேண்டும் என்பதை எளிமையான வார்த்தைகள், கதைகளுடன் கூறியிருக்கிறார் ஹான். புத்தர் என்பது சிலையா, அல்லது தத்துவமா, மந்திரங்களா என்பது பற்றிய தத்துவப்பகுதி அசரவைக்கிறது. நம்பவே முடியாத எளிமையுடன் இந்நூலை தமிழாக்கம் செய்திருக்கிறார் ஆசைத்தம்பி. உலகத்தோடு ஒத்துவாழ்வதற்கான பயிற்சிகளும் நூலின் பின்னால் கொடுக்கப்பட்டுள்ளன. தியானம், யோகம் என்பது தனிப்பட்ட ஆன்மிக வளர்ச்சி என்பதோடு நிறுத்தாமல் அநீதி என்றால் தயங்காமல் நீங்கள் குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தும் இடத்தில் ஹான் வேறுபடுகிறார். நூல், தியானம், மோட்சம் உள்ளிட்ட விஷயங்களைப் பேசினாலும் பேசுகின்ற மொழி மிக இனிமையானதாக இருப்பதால் நம்மால் இடறல் இன்றி வாசிக்க முடிகிறது. நிதானமாக அசைபோட்டு நூலை படியுங்கள். திபெத்தில் பயணிக்கும் வெண்மேகங்களின் வாசனையை நுகரலாம். பனியின் சில்லிப்பு மனதிலும் படரக்கூடும். - கோமாளிமேடை நன்றி: த.சக்திவேல்.