இடுகைகள்

நகரத்தின் மனநிலை மாற்றம்

படம்
                                                     நகரத்தின் மனநிலை மாற்றம்                 நேற்று எப்போதும் போல ரெவல்யூசன் செல்வி உணவகத்தில் சப்பாத்தி சாப்பிடலாம் என்று நினைத்தும் வேண்டாம் என்று ஐஸ்ஹவுஸ் கிளம்பினால், முன்னால் ஒரு பெண்கள் குழாம் வழியே விடவில்லை. அதுவும் ஷெனாய் சாலையில் எப்போது பாதளச்சாக்கடைக்கு சிமெண்ட் பூசுகிறார்கள் என்றே தெரியவில்லை. எப்போதும் ஏதாவது ஒன்றை உடைத்துவைத்துக்கொண்டு ஆட்கள் வருவதற்காக ஒருவர் கற்களை பாதுகாப்பாக மூடியைச்சுற்றி வைத்துக்கொண்டு நின்றுகொண்டே இருக்கிறார். மழை வேறு பொதுநலத்திற்காக பெய்கிறது அதை என்ன சொல்லி திட்டுவது? எனது கால்சட்டை முழுவதும் சேற்றுத்தடம். ரப்பர்செருப்புவேறு. ஆனால் சில கனவான்கள் வெகு எளிதில் சூழலைக் கணித்து குடைகொண்டுவந்துவிடுகிறார்கள். உண்மையில் தீர்க்க தரிசனம் என்றால் இதுதான் நண்பர்களே! வானிலை ஆராய்ச்சி மையத்தையும் மீறி நம்மால் சூழலைக் கணிக்க முடிகிறது என்றால் பாருங்கள் யார் உண்மையில் திறமைசாலி என்று.             ஆனால் நேற்று மனநிலை வேறுபட்டதாகவே இருந்தது. மேகமூட்டத்துடன் இருந்தது என்பதால் பலரும் அதை உணர்ந்

எழுதுபவரும், வாசகரும்

படம்
                                                        எழுதுபவரும், வாசகரும் இந்த இருவருக்குமான நேயமே சிறிது சிக்கலான ஒன்றுதான். வாசகரைப்பொறுத்தவரை அவர் தன் மனக்கண்ணில் எழுத்தினைப் பொறுத்து எழுத்தாளரை ஒரு மனதாக முடிவு செய்து வைத்திருப்பார். ஆனால் ஓரிடத்தில் வாசகர் சந்திப்பில் எழுத்தாளரை சந்திக்கும்போது அவர் மனதில் நினைத்ததற்கு மாறாகவே இருக்கும் அவரது உடல், குரல், கருத்தினைப் பகிரும் தன்மை. இதனாலேயே பெரும்பாலும் எழுத்தாளரும், வாசகரும் சந்திப்பதென்பது அவ்வளவு விரும்பத்தக்கதாக இருந்ததில்லை. அப்படி சந்திக்க வேண்டும் என்றால் எழுத்தாளரின் எழுத்தில் அவர் அடைந்த உணர்ந்து எழுதிய தன்மையை நாம் சிறிதேனும் தொட முயற்சித்திருந்தால் அதைப் புரிந்திருந்தால் சிறப்பானதாக இருக்கும். ஆனால் நம் சூழ்நிலையில் என்ன நிகழ்கிறது? பழனி முருகனுக்கு காவடி தூக்குவது போல எழுத்திற்கு காவடி தூக்குவது. இல்லையா? தூக்கி ஓரமாய் இறக்கி வைத்துவிட்டு சென்றுவிடுவது. எனது சகோதரரின் நண்பர் ஒருவர் வெகுஜன பத்திரிகை ஒன்றில் பயணக்கட்டுரை ஒன்றினை மனிதர்களின் அனுபவங்களோடு எழுதியிருந்த  ஒரு எழுத்தாளரை புத்தகத்திருவிழாவில் சந்த

KOMALIMEDAI: மேலோட்டமான ஊடகமனிதர்கள்

KOMALIMEDAI: மேலோட்டமான ஊடகமனிதர்கள் :                                               மேலோட்டமான  ஊடகமனிதர்கள்                    ஆய்வு செய்வது உள்ளிட்ட பணிகள் கடினமான உழ...

மேலோட்டமான ஊடகமனிதர்கள்

படம்
                                              மேலோட்டமான  ஊடகமனிதர்கள்                    ஆய்வு செய்வது உள்ளிட்ட பணிகள் கடினமான உழைப்பையும், தளராத முயற்சியையும் கோருவன. இன்றைய தினத்தைப் பொறுத்தவரை தகவல்களை இளைஞர்கள் பெறுவது மிக எளிது.  ஆனால் குறிப்பிட்ட செய்திகளின் தாக்கம் அவர்களின் மனதை சென்றடைகிறதா என்பதே சந்தேகம்தான். ஆனால் அவர்களின் வேகத்திற்கு ஏற்ப அவர்களின் உழைப்பு இருக்கிறதா என்று என்னால் அறியமுடியவில்லை. அவர்கள் மெல்ல ஏழைமக்களுக்கு எதிராக திரும்புவதும் போல் தெரிகிறது. இவர்களின் கல்வித்தகுதி என்பது பெரியதாக இருக்கிறது. எனக்கு அண்மைய நாட்களில்  சுந்தர் என்பவர் அறிமுகமானார். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர். முதல் சந்திப்புகளிலேயே நான் நினைத்தது பட்டினத்தாரின் மறுபிறப்போ என்றுதான். ஆனால் அவருக்குள்ளேயே பெண்களின் உடை, சுதந்திரம் குறித்து ஆதிக்க மரபான மனிதன் இடையறாது உரையாடி வந்தான் என்பதை நான் பேச்சினூடே எளிதில் உணர முடிந்தது. இணைய வீடியோக்கள், செய்திகள் என சிந்திக்காது அவற்றின் பார்வைக்கோணத்தை,  அரசியலை சந்தேகிக்காமல், புரிந்துகொள்ளாமல் அவற்றை நம்பும் மனங்களினால் விளையும்

லட்சியவாதங்களின் நொறுங்கல்

படம்
                                           லட்சியவாதங்களின் நொறுங்கல்   சில நாட்களுக்கு முன் ஒரு முன்னாள் லட்சியவாதி ஆசிரியர் ஒருவரைச் சந்தித்தேன். சந்தித்து நான் பேசியதை விட அவர் பேசிய பொருமலைத்தான் அதிகம் கேட்க வேண்டியிருந்தது. ஏறத்தாழ காந்தியின் லட்சியங்களுக்கும் அவரது குடும்பத்திற்கும் ஏற்பட்ட அதே உரசலைத்தான் இன்னொரு நிகழ்கால அப்டேட் வர்ஷனில் கூறிக்கொண்டிருந்தார். முன்பு லட்சியவெறி எல்லை தாண்டி இருந்த போது தன் மூத்த மகளையும், இரு மகளையும் தமிழ் வழியில் படிக்கவைத்திருந்தார் ஆனால் இன்றைய காலநிலையில் தமிழுக்கான கௌரவத்தை இந்த வலைப்பூ நிறுவனரின் நிலையைப் பார்த்தாலே தெரிந்திருக்கும். முதுகெலும்பு நொறுங்க வேலை செய்து நகரத்தில் என்ன செய்கிறார் என்பதை அவரது புலம்பலான எழுத்துக்களிலிருந்து அறிந்துவருகிறோம். அதே கதைதான். ஆனால் பயம் தொடர்பான அவரது இளைய மகளுக்கல்ல.  ஆசிரியர் மற்றும் முக்கியமான அந்த எழுத்தாளப்பெருந்தகைக்குத்தான்.             ஒவ்வொரு நண்பராக அழைத்து என்ன படிப்பிற்கு வருங்காலத்தில் வரவேற்பு இருக்கும்? என்று அழைத்து கேட்டுக்கொண்டிருந்தார். ஏறத்தாழ ஆறு அழைப்புகளுக்கும் ம

சிறிதேனும் கடவுளாகலாம்

படம்
                                            சிறிதேனும் கடவுளாகலாம்               இந்தியாவில் கடவுளாவது பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை. மிக எளிதுதான். ஏதேனும் எளியவர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தால் போதுமானது. இங்கே பெரும்பாலும் தீர்வுகளை எதற்கும் நினைவுகூருவதே இல்லை. ஏனெனில் பிரச்சனைகள்தான் தீர்ந்துவிடுமே. ஒரட்டாங்கைபோல் எப்போதும் ஒரே புலம்பல், அழுகை. அதுவும் ஒரு அரசியல் வழிதான். பலரும் கடவுளைத் தொழுகிறார்கள். பிரச்சனைகள் தீர, தேவைகள் நிறைவேற, வணிகக்கூட்டிற்காக, சுமையை சுமத்துவதற்காக, பிரச்சனையிலிருந்து மீளுவதற்காகவும் கூடத்தான். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் 'ஞா' என்று கொள்வோம். இருவரும் திருமண விழாவில் சந்தித்துகொள்வதாக ஏற்பாடு. சந்தித்தோம். பேசினோம். இடையில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஏறத்தாழ இரண்டு மணிநேரங்கள் பேசினார் நண்பர். பிறகு, அவர் அழைத்தது ஒரு பெண்தோழி என்றார். ''அவுங்க வீட்டுல ஏதோ பிரச்சனையாட்ட, ஈஷாவுக்கு போயிரலாம்னு இருக்கறங்கறாங்க, நாஞ் சொன்னன் இங்க பிரச்சனைன்னு அங்க போனா அங்க ஏதாவது சிக்கல் இருந்தா எங்க போவீங்கன்னு கேட்டா எதுவும் ப

தேதியிடா குறிப்புகள்

படம்
தேதியிடா குறிப்புகள் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நாம் சந்திக்க இந்நூல் ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியிருக்கிறது. தேதியிடா குறிப்புகள் பல எழுத்துக்களின் சங்கமாக இருக்கும். அன்பு, இரக்கம், கோபம், பகடி, கோபம், கொண்டாட்டம், வலி, வேதனை, துயரம், விரக்தி என அனைவரின் வாழ்விலிருக்கும் விஷயங்கள் இங்கு ஒரு கோணத்தில் சொல்லப்படுகிறது. ஒரு தனிமனிதனின் உடல் பலவீனம், அவனை ஒரு இடத்திலே முடக்கிவிட புத்தகங்களிலான உலகம் அவனை எப்படி உருவாக்குகிறது என்பது நான் எழுதும் நூல்கள் அனைத்திற்கான தேடல். இந்த சமுதாயம் தன் மையப்படுத்தலால் எத்தனை இதயங்களை சிதைக்கிறது, மீள முடியாத துயரத்தில் தள்ளுகிறது! உறவுகளின் பயன்படுத்திக்கொள்ளும் துயரம், உலகமயமாதல் சூழ்நிலையில் ஏற்படும் பெரும் பண்பாட்டு நுகர்வு ஒவ்வொரு மனிதவாழ்க்கையையும் எத்தனை பெரிய துயரில் தள்ளுகிறது! பலவற்றை நான் சொல்ல முடியவில்லை என்றாலும் தனிமனிதனின் நாட்குறிப்பு போல் நீளும் இப்பதிவுகள் ஏதோ ஒன்றை சொல்ல முயலுகின்றன. ஒவ்வொருவரிடமும் உள்ள கதைகளினால் உலகம் முழுவதும் எத்தனை கதைகள் சொல்லியும், சொல்லாமலும் இருக்கின்றன? ப்ரான்ஸ் காப்கா கிழித்தெறியச்சொன்ன கதைகளைப்