இடுகைகள்

ஆல் நியூ அறிவிய்ல - சைமன்ஸ்கி

படம்
ஆல் நியூ அறிவியல் - சைமன்ஸ்கி மின்சார உணவு சாப்பிட ரெடியா ? கரண்டைத் தொட்டால் சாவுதான் வரும் . சோறு வருமா ? ஏன் வராது என்கிறார்கள் பின்லாந்தைச் சேர்ந்த லாப்பீன்ரன்டா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் VTT தொழில்நுட்ப ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர்கள் . என்ன தேவை ? தேவையான அளவு மின்சாரம் , தேவையான அளவு நீர் , சிறிது கார்பன்டை ஆக்சைடு , கொஞ்சம் நுண்ணுயிரிகள் . பயோரியாக்டரில் மேற்சொன்ன பொருட்களை கொட்டினால் சில நிமிடங்களில் பவுடர் (50% புரதம் 25% கார்போஹைட்ரேட் ) கிடைக்கும் . அதில் நுண்ணுயிரிகள் இதன் தன்மையை மாற்றினால் உணவு ரெடி . " நாங்கள் தற்போது ரியாக்டர் , டெக்னாலஜி ஆகியவற்றை அப்டேட் செய்துவருகிறோம் " என பெருமிதமாகிறார் ஆராய்ச்சி தலைவரான ஜூகா பெக்கா பிட்கானன் (VTT). உடனே எங்கே எங்கே என பறக்காதீர்கள் . இந்த மின்சார உணவு விவசாயமே இல்லாத பாலைவனம் உள்ளிட்ட இடங்களில் மக்களுக்கு வழங்கப்படவிருக்கிறது . மூலப்பொருட்கள் அதிகளவு தேவஐ என்பதால் கமர்ஷியல் உணவாக பத்து ஆண்டுகள் தேவை . கிஸ்மோ ரவுண்ட் அப் ! Sen.se SleepPeanut 5 செ . மீ நீளமுள்ள ஸ்லீப்பீநட் என்ன

ஆல் நியூ அறிவியல் - தொகுப்பாசிரியர்: விக்டர் காமெஸி

படம்
ஆல் நியூ அறிவியல் - தொகுப்பாசிரியர்: விக்டர் காமெஸி ஒளியை கன்ட்ரோல் செய்யும் ப்ரீலைட் ! வீட்டில் ஒவ்வொரு லைட்டிற்கும் ஒவ்வொரு ஸ்விட்சை போட ஸ்பைடர் மேனாக தாவிக்கொண்டிருந்தால் மற்ற வேலைகளை எப்படி பார்ப்பது ? அனைத்து லைட்டுகளையும் ஒரே கன்ட்ரோலில் இணைத்தால் .. எப்படியிருக்கும் அதுதான் ப்ரீலைட் . பிளக் பாயிண்டில் ஃப்ரீலைட் ட்ரான்ஸ்மீட்டரைப் பொருத்தி , ரிசீவரை லைட்டுகளுள்ள இடத்தில் பொருத்தி இணைத்துவிட்டால் வேலை முடிந்தது . ஒரே ஸ்விட்சில் அறையிலுள்ள அனைத்து லைட்டுகளையும் சிம்பிளாக கன்ட்ரோல் செய்யலாம் . ப்ரீலைட் பயன்படுத்த எந்த மொபைல் ஆப்பும் பயன்படுத்த அவசியமில்லை . அதிக செலவு செய்து ஸ்மார்ட் டிவைஸ் வாங்கவேண்டியதில்லை . ஏன் இதனைப் பொருத்த எலக்ட்ரீஷியனைக் கூட அழைக்க அவசியமில்லை . எளிதாக எடுத்து பொருத்தி லைட்டோடு இணைத்தால் போதும் , ரிசீவரை மற்றொரு பிளக்கில் பொருத்தி லைட்டோடு இணைத்தால் சிம்பிளாக அனைத்து விளக்குகளையும் திருவண்ணாமலை ஜோதியாக ஜொலிக்க வைக்கலாம் ஒரே ஸ்விட்ச்சினால் . விலை ரூ . 2,573.   மனிதர்களுக்கு கழுகுப்பார்வை சாத்தியமா ? மனிதர்களைவிட கழுகுகள் மற்றும

விநோதரச மஞ்சரி - ரோனி ப்ரௌன்

படம்
விநோதரச மஞ்சரி - ரோனி ப்ரௌன் நிறவெறி க்ளவுஸ் ! பட்டம் ஜெயித்தவுடன் உலக அழகிகள் என்ன செய்வார்கள் ? உலகில் தேடிப்பிடித்து ஏழையின் குடிசைக்குள் நுழைந்து குழந்தைகளின் வாயில் பாதாம்பாலை ஊற்றி அதை போட்டோவில் கவர் செய்து கருணைமாதா ஆவது வழக்கம் . இங்கும் அதே சீன்தான் . என்ன ? சாப்பாடு கொடுக்கும்போது க்ளவுஸ் கையில் ஏறியதால் உலக அழகியின் கௌரவம் கீழே விழுந்துவிட்டது . மிஸ் . தென் ஆப்பிரிக்கா பியூட்டியான நெல் பீட்டர்ஸ் , ஐகாகெங்க் என்ற ஹெச்ஐவி பாதிப்பு கொண்ட குழந்தைகள் மையத்திற்கு கருணை குபீரென பொங்க ஷேர் ஆட்டோ பிடித்து போனார் . பெருமிதமாக உணவை குழந்தைகளுக்கு வழங்கினார் . உணவுகளை பாதுகாப்பு க்ளவுஸ் அணிந்து வழங்கியதுதான் அகில உலகத்திலும் நிறவெறி சர்ச்சையாகிவிட்டது . உணவுகளை வழங்கும்போது க்ளவுஸ் அணிவது உலகவழக்கம்தானே என்ற நெல் பீட்டர்ஸின் விளக்கத்தைக் கேட்கவெல்லாம் யாரும் தயாராக இல்லை . ஏனெனில் அந்த மையத்தில் உணவு வழங்கியவர்கள் அனைவரும் அணிந்திருந்தது சாதாரண க்ளவுஸ் ; ஆனால் ஆப்பிரிக்க அழகி அணிந்திருந்தது லேடக்ஸ் க்ளவுஸ் என்பதோடு , முன்னர் வெள்ளையின குழந்தைகளோடு நெல்பீட்டர்ஸ் எ

விநோதரச மஞ்சரி - விக்டர் காமெஸி

படம்
விநோதரச மஞ்சரி - விக்டர் காமெஸி உலகம் சுற்றிய தம்பதி ! வேலையில் கான்சென்ட்ரேஷன் செய்து எங்காவது ஜாலி டூர் அடிக்கலாம் என யோசனை வரும்போதே தலையில் சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைல் வந்துவிடுகிறது . அந்த வயதிலும் வொஃய்ப்போடு பிளான்போட்டு ஊர் சுற்றுவது சாதனைதானே ! மும்பையைச் சேர்ந்த பல்தவா தம்பதியினரின் மும்பை டூ லண்டன் சாதனை இந்த கேட்டகிரிதான் . மும்பையைச் சேர்ந்த பல்தவா தம்பதிகள் , மார்ச் மாதம் 23 அன்று லெமன் நசுக்கி BMW காரில் கியர் போட்டு கிளம்பிய 72 நாள் டூர் இது . மும்பை டூ லண்டன் லட்சியத்தில் 19 நாடுகளை சாலைவழியாக கடந்து சென்று இறுதியாக லண்டன் சென்று சேர்ந்தபோது 22 ஆயிரத்து 200 கி . மீ தூரத்தை கடந்திருந்தனர் . கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட பல்தவா , சார்டண்ட் அக்கவுண்ட்டாக செட்டிலானது மும்பையில் . அட்வென்ச்சர் பயணங்கள் இவரது ஸ்பெஷல் ஹாபி . " கடந்த ஆண்டு போட்ட பிளான் இது . இம்பால் வழியாக லண்டன் சேர்வது சேஃப் என முடிவு செய்து சாதித்துவிட்டோம் " என புன்னகைக்கிறார் பல்தவா . அட்வென்ச்சர் தீராது !   அதிசய ட்வின்ஸ் ! மனித உயிரைக் காப்பாற்றுவது டாக்டர்களின

சயின்ஸ் பிட்ஸ்! - ஆலன் வான்கா& சைமன்ஸ்கி

படம்
சயின்ஸ் பிட்ஸ்! - ஆலன் வான்கா& சைமன்ஸ்கி பிட்ஸ் ஸ்பாட் ! 1912 ஆம் ஆண்டு பாரீசைச் சேர்ந்த ஆதரவற்றோர் இல்லம் நன்கொடையைப் பெற நடத்திய போட்டியில் பரிசு என்ன தெரியுமா ? குழந்தைகள்தான் . 2010 ஆம் ஆண்டு கொரிய மனிதர் ஒருவர் , தன் Dakimakura என பெயரிடப்பட்ட தலையணையை திருமணம் செய்துகொண்டார் . ஜப்பானின் பிரபல அனிமேஷன் கதாபாத்திரத்தின் படம் அதில் அச்சிடப்பட்டிருந்தது . தென்கொரியாவில் ஒற்றர்களைப் பற்றி தகவல்களைக் கூற உதவும் எண் 113 பசுவைப் போல தன்னைக் கருதிக்கொண்டு வாழும் மனநோய்க்கு Boanthropy என்று பெயர் . பிரான்சில் விற்கப்படும் கழிப்பறை தாளின் நிறம் பிங்க் .      பிட்ஸ் பாய்ண்ட் ! உலகில் 2% நபர்கள் ABCC11 என்னும் ஸ்பெஷல் ஜீனை பெற்றிருக்கிறார்கள் . என்ன பிரயோஜனம் ? அக்குள் வியர்வை மணம் வராதாம் . உலகில் மிக அமைதி நிலவும் அறையில் கேட்கும் ஒலி அளவு 9 டெசிபல் . இந்த அறையில் உங்கள் உடலில் பாயும் ரத்த ஓட்டத்தின் ஒலியையே கேட்கமுடியும் . பறக்கும் வேகத்தில் 12 நொடிகள் பிரேக் எடுத்து தூங்கும் Frigatebird இதன் மூலம் பல மாதங்களுக்கு தொடர்ந்து சோர்வின்ற

ஒரு கோடி பெண்களுக்கு 2020 ஆம் ஆண்டுக்குள் வேலை என்பதே லட்சியம்!

படம்
ஒரு கோடி பெண்களுக்கு 2020 ஆம் ஆண்டுக்குள் வேலை என்பதே லட்சியம் ! நேர்காணல் : சேட்னா கலா சின்கா தமிழில் : ச . அன்பரசு நன்றி :Anupama katakam, Frontline மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்திலுள்ள ஹாஸ்வாட் கிராமத்தில் பெண்களுக்காக அயராது உழைத்து வருகிறார் சமூகசெயல்பாட்டாளரான சேட்னா கலா சின்கா . இவர் 1997 ஆம் ஆண்டே பெண்களை ஒன்றிணைத்து Mann Deshi Mahila Sahakari Bank என்ற கூட்டுறவு வங்கியை தொடங்கி பிரமிக்க வைத்தவர் . சிறு தொழில்முனைவோர்களுக்கான முன்னோடி வாய்ப்புகள் அதன்பின்னர்தான் கிராமத்துப் பெண்களுக்கு கிடைக்கத் தொடங்கின . சேட்னா சின்காவிடம் அவரது பணிகளைக் குறித்து உரையாடினோம் . ஹாஸ்வாட் சிறிய கிராமம் . எப்படி அங்கு முதன்முதலில் பணியாற்றும் ஆர்வம் தோன்றியது ? 1970 ஆம் ஆண்டு ஜெயபிரகாஷ் நாராயணனிஇன் இயக்கத்தில் பங்கேற்றிருந்தேன் . முதலிலேயே மும்பையின் குடிசைப்பகுதி மக்களிடையே பணியாற்றியிருந்த அனுபவம் இருந்தது . ஆனால் இயக்கத்தின் பணிகளால் நகரத்தை விட்டு வெளியேறவேண்டியிருந்தது . சேட்கரி சங்காதனா அமைப்பின் சரத் ஜோஷியுடன் ஹாஸ்வட் பகுதியில் பஞ்ச காலங்களில் பணியாற்றியிருக்

ஆல் நியூ அறிவியல் - மங்கள்தாஸ் சுதர்சன்

படம்
ஆல் நியூ அறிவியல் - மங்கள்தாஸ் சுதர்சன் நினைவுகளை எடிட் செய்யலாம் ! நம் மூளையிலுள்ள மோசமான நினைவுகளை அகற்றினால் நம் சோகம் குறையும் என நம்புகிறீர்களா ? PTSD எனும் மன அழுத்தம் குறைக்கச்செய்யும் புதிய மருத்துவசிகிச்சையை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் . கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவ மையம் மற்றும் மெக்கில் பல்கலைக்கழகம் இணைந்து அப்லைசியா எனும் கடல் நத்தையின் நியூரானை ஆராய்ந்தபோது , பதட்டம் ஏற்படுத்தும் நினைவுகளை அழிக்க முடியும் என கண்டறிந்துள்ளனர் . ஒரு நாய் குரைப்பது , சூடான பொருளை தொடுவது , வன்முறை ஆகிய சம்பவங்களை நரம்பணுக்கள் தாமாகவே ரெக்கார்ட் செய்கின்றன .     " நீங்கள் அதிக க்ரைம் சம்பவங்கள் நிகழும் ஓரிடத்தில் நடந்து செல்கிறீர்கள் என்றால் அங்குள்ள தபால் பெட்டியை பார்க்கும்போது உங்களுடைய உறவினர்களுக்கு அச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்க நினைப்பீர்கள் . எதிர்காலத்தில் நமக்கு பாதிப்பு ஏற்படுத்தாத , பாதிப்பை தவிர்க்கும் முடிவுகளை எடுக்கவைக்கும் நினைவுகளைத் தவிர பிறவற்றை இனி நம் மூளையிலிருந்து நீக்க விட முடியும் " என்கிறார் ஆராய்ச்சியாளரான சாமுவேல் சாச்சா