இடுகைகள்

அறிவியல் கதம்பம் - ச.அன்பரசு

படம்
  மகளுக்காக கட்டிய தீம்பார்க் !- அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்த தந்தை ஒருவர் தன் மகளுக்காக என்ன செய்திருக்கிறார் தெரியுமா ? பிரமாண்ட தீம் பார்க்கையே உருவாக்கியிருக்கிறார் . தன் மகள் மோர்கனை லீவில் தீம்பார்க் ஒன்றுக்கு கார்டன் ஹர்ட்மன் அழைத்துச் சென்றார் . அங்குள்ள குழந்தைகளுடன் நீந்தி விளையாட மோர்கன் விரும்பினாலும் , அவளது ஆட்டிச இயல்பினால் பலரும் விலகிச்செல்ல தவித்துப்போனார் கார்டன் . 2010 ஆண்டு தன் செல்லமகளுக்காக அவர் உருவாக்கியதுதான் கார்டன் வொண்டர்லா தீம்பார்க் . செலவு 34 மில்லியன் டாலர்கள் . உடல் குறைபாடுள்ளவர்களுக்கான விசேஷ வசதிகள் இதன் ஸ்பெஷல் . மாற்றுத்திறனாளிகளுக்கு தீம்பார்க்கில் இலவச என்ட்ரி உண்டு . ஆண்டுதோறும் இந்த தீம்பார்க்கால் 1 மில்லியன் டாலர்கள் நஷ்டம்தான் . எனினும் அதனை சமாளிக்க நண்பர்கள் , அமைப்புகள் உதவுகின்றனர் என்கிறார் கார்டன் . 67 நாடுகளிலிருந்தும் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இதனை சுற்றிப்பார்த்துள்ளனர் .   மிரட்டும் நாஸி சோதனைகள் ! - ப . அனுஷா உயிர்களைக் கொன்ற ரஷ்யபனி ! நெப்போலியனை ரஷ்யா மண்ணை கவ்வ வைத்தது அதன

இது மன்னர்களுக்கான காலமல்ல'

படம்
                கதிரவன் ' இது மன்னர்களுக்கான காலமல்ல '   நேர்காணல் : ஐரோப்பிய யூனியனின் பாதுகாப்புத்துறை தலைவர் ஃபெடரிகா மொஹெரினி தமிழில் : ச . அன்பரசு ஆங்கிலத்தில்: சைமன் சஸ்டர் ( டைம் ) அண்மையில் நீங்கள் உலகமே குழப்பத்தில் சிக்கியுள்ளது என்று கூறினீர்கள் . அதற்கு என்ன அர்த்தம் ? அமெரிக்கா உலகநாடுகளை கட்டுப்படுத்தும் போலீஸ் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும் . நாம் அனைவரும் ஒரேதிசையில் நிற்க விரும்பவில்லை என்பது சரிதான் . ஆனால் நாம் பன்முனைப்பட்ட நாடு என்று யார் குறிப்பிடுவார்கள் ? ரஷ்யா , அமெரிக்கா , இந்தியா , சீனா உள்ளிட்ட நாடுகளா ? அதிகாரம் கொண்ட உலகளாவிய விதிமுறைகளில் ஆதிக்கம் செலுத்தும் பிற நாடுகளா ?                                உலகமே இன்று ஆதிக்கத்தினால் பல்வேறு பகுதிகளாக பிரிந்து வருகிறது என்பதை குறிப்பிடுகிறீர்களா ? மக்களிடம் அதிகாரம் உள்ளது . அதிகாரம் என்பது இன்று ஒருவரின் கையில் ஏன் அரசின் கையில் கூட இல்லை . அது நிலப்பரப்பு சார்ந்து சமூகம் , தனியார் நிறுவனங்களுக்கும் கூட மாறுகிறது . இது மன்னர்களுக்கான காலமல்ல . கடந்தாண்டு ஜ

ரோனியிடம் கேளுங்கள் - ரோனி ப்ரௌன்

படம்
ஏன் ? எதற்கு ? எப்படி ? -Mr. ரோனி அதிர்ச்சி செய்திகளை கேட்கும்போது பலரும் வாயைப் பொத்திக்கொள்வது ஏன் ? உளறிவைத்தால் ஏதாவது வம்பு வந்துவிடுமே என்பதற்காக நிச்சயம் அல்ல . உண்மையிலேயே உங்களுக்கு ஷாக் ஏற்பட்டால் அங்கேயே பதறி அலறிவிடுவீர்கள் என்பதுதான் நிஜம் . அப்படி நடக்காமல் நாசூக்காக வாயை பொத்துகிறீர்கள் என்றால் , அதிர்ச்சியை பழகி அதனை ஏற்க துணிந்துவிட்டீர்கள் என்றே அர்த்தம் . மேலும் அதிக அபாயமில்லை , அலறி கூட இருப்பவர்களுக்கு வயிற்றில் புளி கரைக்ககூடாது என்ற லேட்டரல் திங்கிங் கூட காரணமாக இருக்கலாம் .    ஏன் ? எதற்கு ? எப்படி ? - Mr. ரோனி கண்ணாடியில் உருவங்கள் ஏன் மேல் கீழாக தெரியாமல் இடது வலதாக தெரிகிறது ? கண்ணாடிகள் உருவத்தை ரிவர்ஸாக்கி காட்டுவதில்லை . உங்களது பிம்பமாக தெரிவது முன்பின்னான உங்கள் உடலின் பிரதிபலிப்புதான் . முகத்தை கண்ணாடியில் இடதுபுறமாக திருப்பிக்காட்டினால் கண்ணாடியிலும் அது இடதுபுறமாகத்தான் தெரியும் . ஆனால் அதுவே மற்றவர்களை பார்க்கும்போது , 180 டிகிரியில் நம்மைப் பார்த்தபடி நிற்கிறார்கள் என்பதை நாம் முன்பே கவனித்துவிடுவோம

இந்தியாவின் அசாதாரண மனிதர்கள்!- ச.அன்பரசு

படம்
இந்தியாவின் அசாதாரண மனிதர்கள் !- ச . அன்பரசு கல்வி தரும் ஒளிவிளக்கு ! - ரமேஷ் ஹரி ஹரால்கர் மும்பையின் பரேல் மற்றும் சியோன் பகுதியில் 1000 தலித் குழந்தைகளை ஒன்று திரட்டி கல்வி அமுதூட்டும் மும்பை கார்ப்பரேஷனில் பெயிண்டரான ரமேஷ் ஹரி ஹரால்கரின் முயற்சி , சமூக சமத்துவத்துக்கான கல்வி வேள்வி . " ஆய்வக டெஸ்டில் இறந்த ஏராளமான எலிகளை அள்ளும் வேலைதான் முதலில் எனக்கு கிடைத்தது " என்று தன் இளமையை நினைவுகூர்ந்து பேசும் ரமேஷின் பூர்வீகம் பாகிஸ்தான் . " துப்புரவு வேலையில் மட்டும் 80% நபர்கள் தலித்துகள்தான் " என கசப்பாய் புன்னகைக்கிறார் ரமேஷ் . 1972 ஆம் ஆண்டு கல்வியே , சமூகத்தை மாற்றும் என குடிசைப்பகுதி தலித் மாணவர்களுக்கு கல்வி வகுப்புகளை 'Jhadu Virudh Khadu'  என்ற அமைப்பு மூலம் நடத்த தொடங்கினார் . அரசு பள்ளிகளில் கல்வி மற்றும் அறிவியல் , கலை வகுப்புகளோடு கைவினைப்பொருட்கள் தயாரிப்பு   உள்ளிட்டவற்றையும் நண்பர்களோடு இணைந்து நடத்த தொடங்கியது புதிய நம்பிக்கை வெளிச்சம் . இன்று இவரிடம் கல்வி பயின்ற 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜாதி இழிவை தகர்த்து

விவசாயிகளின் கடன் தள்ளுபடியை எதிர்த்தேன் - ஒய்.வி.ரெட்டி சுயசரிதை

படம்
விவசாயிகளின் கடன் தள்ளுபடியை எதிர்த்தேன் - ஒய் . வி . ரெட்டி சுயசரிதை ச . அன்பரசு இந்தியாவின் 21 ஆவது ரிசர்வ் வங்கி கவர்னராக (2003-2008) பதவியேற்ற ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட ஒய் . வி . ரெட்டி , ஜஸ்வந்த்சிங் , ப . சிதம்பரம் என இரு நிதியமைச்சர்களோடு பணியாற்றியவர் . 1991 ஆம் ஆண்டு ஏற்பட்ட உலக பொருளாதார மந்தநிலையிலும் இந்தியாவின் ரூபாய் மதிப்பு சரியாமல் பணவீக்கத்தை குறைத்து பொருளாதாரத்தை மீட்ட பெருமைக்குரியவர் . " ஒவ்வொரு ஆட்சியிலும் மாறும் அரசுகள் ரிசர்வ் வங்கியை கையாள்வதில் மாறுபட்ட அணுகுமுறை கொண்டவை " என Advice and Dissent: My Life in Public Service   என அண்மையில் வெளியாகியுள்ள தன்னுடைய நூலின் முன்னுரையில் ஒய் . வி . ரெட்டி எழுதியிருப்பது பல்வேறு தரப்பினரையும் கவனிக்க வைத்துள்ளது . வெளியாகியுள்ள  அவரின் நூலிலிருந்து சில பகுதிகள் :   பிப்ரவரி மாதம் . ஆண்டு 2008. நான் அலுவலகத்திலிருந்தபோது திடீரென நிதியமைச்சரிடமிருந்து அழைப்பு . அரசு , விவசாயிகளின் கடன்தொகை 60 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ய முடிவெடுத்துள்ளது என நிதியமைச்சர் ப . சிதம்பரம் கூறியபோ