இடுகைகள்

ஆணா, பெண்ணா?

படம்
வரலாற்று சுவாரசியங்கள் ! ஆணா ,  பெண்ணா ? ரா . வேங்கடசாமி ஜேம்ஸ் பேரி என்ற பெண் வாழ்ந்த காலம் 1799-1865 வரை . அயர்லாந்தில் ஆறுவயது குழந்தையாக லண்டனுக்கு தன் தாயுடன் வந்தவள , தாயை அத்தை என அறிமுகம் செய்வதே இவளின் வழக்கம் . ஐக்யூ அதிகம் கொண்ட பேரி , எடின்பர்க் பள்ளியில் சேர்ந்து படித்து பனிரெண்டு வயதில் மருத்துவப்பட்டம் பெற்றாள் . டாக்டர் பேரி என்ற சர்ஜனுக்கு உதவியாக பல நாட்கள் வேலை செய்தாள் . பின் பிரிட்டிஷ் ராணுவத்தில் டாக்டராக 1813 ஆம்ஆண்டு தன்னை பதிவு செய்துகொண்டாள் . ராணுவத்தில் அவளை தென்னாப்பிரிக்காவிற்கு பணிமாற்றம் செய்தனர் . ராணுவ மருத்துவமனைகளில் பல்வேறு மாறுதல்களை செய்து பெயர் பெற்றாள் . பின்னர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பின்தொடர்ந்தது பேரியின் பணிகளைத்தான் . குதிரை மீதமர்ந்து ராணுவ வீரர்களை ஆளுமை செய்த பேரி , விரைவில் பிரபலமானார் . 1822 ஆம் ஆண்டு பேரி , ராணுவ மெடிக்கல் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார் . அவர் தன் உடலை சரியாக மூடாமல் தூங்கியபோது இரண்டு ஆபீசர்கள் அவரை பெண் என அ

உலகமயமாக்கலை பேரரசு மூலம் சாதித்தவர்!

படம்
உலகமயமாக்கலின் தந்தை ! மங்கோலியாவில் எங்கு சுற்றினாலும் தேசிய பிம்பத்தை மட்டும் தவிர்க்கமுடியாது . உலகமயமாக்கலின் தந்தையாக கூறப்படும் செங்கிஸ்கான்தான்தான் அந்த அடையாளம் . தலைநகரம் , உலன்பாடரிலுள்ள ஏர்போர்ட் , வங்கி , தெரு , சதுக்கம் , ஏன் வோட்கா கூட செங்கிஸதான் பெயரில் உண்டு . நகருக்கு 30 கி . மீ வெளியே 130 அடியில் செங்கிஸ்தானின் சிலையும் கம்பீரமாக வீற்றிருக்கிறது . நவீனத்திற்கு பொருந்திப்போகும் செங்கிஸ்தான் தன் ஆட்சிக்காலத்தில் மதச்சுதந்திரம் , அரசு பள்ளிகள் , தாராள வர்த்தகம் ஆகியவற்றை பழங்குடிகளை ஒன்றாக்கி பேரரசாக மாற்றி தன் நண்பன் ஜமுக்காவின் கனவை சாதித்த வல்லவர் . ஆசியா , மத்திய கிழக்கு நாடுகள் , மைய ஐரோப்பா , இந்தோனேஷியா வரை கைப்பிடியில் வைத்திருந்த செங்கிஸ்கான் ( இயற்பெயர் டெமுஜின் ) தான் இறக்கும்வரை தன் வாழ்க்கை பற்றி எழுதவும் , தன் உருவங்களை வரையவும் அனுமதிக்கவில்லை . அச்சு எந்திரம் , துப்பாக்கி மருந்து , திசைகாட்டும் காம்பஸ் ஆகியவை ஐரோப்பாவுக்கு மங்கோலியர்களின் வணிகம் மூலம் கிடைத்த பொக்கிஷங்கள் . இப்போது தலைப்பை மீண்டும் படியுங்கள் ; உண்மையை உணருவீர்கள் .  

கல்வி போராளி!

படம்
கல்வி போராளி ! அமெரிக்காவின் ஓக்லஹாமாவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் . " கல்விக்கு அதிக செலவழிப்பதாக உணர்கிறீர்களா ? கல்வி கற்பதை புறக்கணிப்போம் " என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திப்போராடும் கூட்டத்தை தன் கூர்மையான பேச்சின் வழியே தீர்க்கமாக ஒழுங்குபடுத்துகிறார் ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவரான ராண்டி வெய்ன்கார்டன் .   கல்விக்கான நிதியை அதிகரிக்கவே இப்போராட்டம் .  மேற்கு வர்ஜீனியா , இலினாய்ஸ் , புவர்ட்டோ ரிகோ ஆகிய இடங்களிலும் போராட்டம் தொடங்கியுள்ளது . " பள்ளிகளின் சீரமைப்பு , வகுப்பறைகளில் இருக்கை , மேஜைகளுக்கான தேவை அதிகரிப்பு , பென்ஷன் , பொதுக்கல்விக்கான தொகை , காலாவதியான பாடத்திட்டம் ஆகியவற்றை வலியுறுத்தி போராடுகிறோம் " என்கிறார் ராண்டி . மாணவர்களின் நலன்களைவிட ஆசிரியர்கள் பயனடையவே மெனக்கெடுகிறார்  என்று புகார்கள் என்றாலும் ராண்டி எதையும் பொருட்படுத்துவதேயில்லை . ட்ரம்ப் அரசுக்கு எதிரான பல்வேறு பேரணிகளிலும் ராண்டியை நீங்கள் பார்க்கலாம் . ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் அவர்களுக்கான வழக்குரைஞராகவும் இரண்டு பணிகளையும் செய்து வருகிறா

ஐக்யூ அவசியமா?

படம்
ஏன் ? எதற்கு ? எப்படி ?- ரோனி மனிதர்கள் இவ்வுலகில் வாழ அவர்களின் ஐக்யூ எந்தளவு உதவுகிறது ? நீங்கள் அதனை எந்த சூழலில் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தது . வனமகனாக காட்டில் இருந்தால் , கணக்கில் மொழியில் சூரனாக இருப்பது அச்சூழலில்  வாழ உதவாது . அங்குள்ள தாவரங்கள் , விலங்குகளை வேட்டையாடும் திறன் , சூழலை ஆழமாக உள்வாங்குவது , தங்குமிடங்களை உருவாக்கி தன் இனத்தை பாதுகாப்பது ஆகியவையே அந்த இடத்தில் உதவும் . ஆனால் செயற்கை அறிவு கொண்ட கணினிகள் நிரம்பிய இவ்வுலகில் ஐக்யூ மட்டுமே உங்களின் வேலையைக் காப்பாற்றிக் கொடுத்து உங்களையும் உயிர்வாழவைப்பதோடு , பிறரின் வாழ்வைக்   காப்பாற்றவும் அறிவுத்திறன் கச்சிதமாக உதவும் . 

கொலைகார குடும்பம்!

படம்
கொலைகார குடும்பம் ! அமெரிக்காவின் கான்ஸாஸ் பகுதியிலுள்ள செர்ரிவேலே பகுதிக்கு புதிய குடும்பம் ஒன்று இடம்பெயர்ந்தது . பெண்டர் சீனியர் குடும்பத்தலைவர் . இவரின் நோய்களை குணமாக்கும் சக்தி கொண்ட மனைவி 'ma' என அழைக்கப்பட்டார் . இக்குடும்பம் தன் வீட்டை இரண்டாக பிரித்து ஒன்றை அங்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு அறை , உணவு கொடுத்தும் அதன் பின்புறத்தை தங்கள் வீடாகவும் மாற்றி வாழ்ந்து வந்தது . மூத்தவர்கள் ஜெர்மனும் இளையவர்கள் ஆங்கிலமும் பேசிய இவர்களின் இடத்தில் தங்கிச்சென்ற பலரும் காணாமல் போக தொடங்கினர் . தொற்றுநோய் என்ற சப்பைக்கட்டும் கூட காணாமல் போகிறவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்தொடங்க உதவவில்லை . மருத்துவர் வில்லியம் யார்க் காணாமல் போனபின்புதான் இந்த விவகாரம் சூடுபிடித்தது . அவரின் சகோதரர்களான கலோனல் எட்வர்ட் யார்க் , கான்ஸாஸ் செனட்டர் அலெக்ஸாண்டர் யார்க் ஆகிய இருவரும் வழக்கை துப்பறியத்தொடங்கினர் . பெண்டரின் வீட்டில் ரத்தக்கறைகள் இருந்தன . அதனைப் பின்பற்றி தோட்டத்திற்கு சென்று தோண்டியவுடன் வந்த முதல் பிணம் டாக்டருடையது . அடுத்தடுத்து 21 பிணங்கள் . அனைவரின் தலையு

காமெடி பிஸினஸ்!

படம்
காமெடி பிஸினஸ் ! ஆங்கிலம் மட்டுமல்ல தமிழிலும் ஸ்டாண்ட்அப் காமெடியன்கள் உருவாகி வளரத்தொடங்கிவிட்டனர் . அதில் புகழ்பெற்றவர் பிரவீன்குமார் , கடந்த ஆகஸ்டில் சென்னை , பெங்களூரு , புதுச்சேரி , புனே , சிங்கப்பூர் என பறந்து போய் காமெடி செய்து சிரிக்க வைக்கிறார் . " என்னுடைய ஷோக்களுக்கு பலர் குடும்பத்துடன் வருவதற்கு காரணம் , ஏடாகூடமாக பேசாமல் க்ளீன் காமெடியாக பேசுவதுதான் " என்கிறார் பெங்களூருவாசியான பிரவீன்குமார் . தற்போது ஆங்கில ஸ்டாண்ட்அப் காமெடி அதிகம் செய்தாலும் , தாய்மொழியான தமிழில் நிகழ்ச்சிகள் செய்ய தயாராக இருக்கிறார் .   இந்தியாவில் ஸ்டாண்ட்அப் காமெடி பிஸினஸ் ( மார்ச் 2018) - 30 கோடி இந்தியமொழிகளில் வணிகம் ( தோராயமாக ) - 10 கோடி ஆண்டுதோறும் வளர்ச்சி விகிதம் - 25% 2 ' வாட்டர்கேட் ' நிக்ஸன் ! அமெரிக்காவின் 37 ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிக்காலம் முடியும் முன்னரே வாட்டர்கேட் ஊழல் குற்றச்சாட்டினால் ராஜினாமா செய்யும் அவலத்திற்கு உள்ளான ஒரே அதிபர் . 1650 ஆம் ஆண்டு ஜார்ஜ் ஃபாக்ஸ் என்பவர் தொடங்கிய மத அமைப்பில் இணைந்த

ரிக்‌ஷா ஓட்டியே பள்ளி கட்டிய அசாம் மனிதர்!

படம்
கல்வித்தந்தையான ரிக்சாக்காரர்! அசாமின் பதர்கண்டி கிராமத்தில்தான் அந்த சாதனை மனிதர் வாழ்கிறார் . ஜீவனத்திற்காக ரிக்சா ஓட்டும் அஹ்மது அலி , தன் செலவு போக , சேர்த்து வைத்த காசில் ஒன்பது பள்ளிகளை உருவாக்கியிருக்கிறார் . பிரதமர் மோடி தன் ரேடியோ நிகழ்ச்சியான ' மனதின் குரலில் ' அஹ்மது அலியைப் பாராட்டி பேசியது இந்தியா முழுக்க அவரை புகழ்பெறச்செய்திருக்கிறது .  " உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பிலும் , இறைவனின் கருணையிலும்தான் பள்ளிகள் உருவாயின " என அடக்கமாக பேசுகிறார் அலி . தனக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தை விற்று , ஊராரிடம் சிறிது தொகையைப் பெற்று தொடக்கபள்ளியைத் தொடங்கினார் அலி . இவரின் ஊக்கமான பணியால்  மூன்று தொடக்கபள்ளிகள் , ஐந்து ஆரம்ப பள்ளிகள் , ஒரு மேல்நிலைப்பள்ளி என  ஆலமரமாய் விரிந்திருக்கிறது . ஊராரின் வற்புறுத்தலால் தொடங்கிய பள்ளிகளில் ஒன்றுக்கு மட்டும் அலியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது . " வறுமையால் என்னால் படிக்க முடியவில்லை . எங்கள் அனைவரின் முயற்சியால் இன்று பள்ளி செல்லும் குழந்தைகளைப் பார்ப்பது மகிழ்ச்சி " என்கிறார் அசல் கல்வித்தந்தை அஹ்மது