இடுகைகள்

பாம்பின் விஷத்திற்கு சவால்!

படம்
பிட்ஸ் ! கொசுக்களின் பறக்கும் வேகம் 1Mph. சிறிய மின்விசிறி ஒன்றே இதனை விரட்டிவிட போதுமானது . இரண்டாம் உலகப்போரில் ஆங்கிலேயர்கள் , பிரெஞ்சு வீரர்களை விட அதிகம் பலியானது இந்திய வீரர்கள்தான் . அமெரிக்காவில் நடந்த முதல் வங்கிக்கொள்ளையில் பறிபோன தொகை 1,62,821 டாலர்கள் . கொள்ளையர் அதே வங்கியில் அப்பணத்தை முதலீடு செய்து மாட்டிக்கொண்டார் . காற்றில் பரவி ஒரு கி . மீ தூரத்திலுள்ள மக்களை வாந்தியெடுக்க வைக்கும் துர்நாற்றம் கொண்ட வேதிப்பொருளின் பெயர் Thioacetone. அமெரிக்காவின் விஸ்கான்சின் நகரைச்சேர்ந்த டிம் ஃப்ரீடே , பதினாறு ஆண்டுகளில் 160 பாம்புகளிடம் கடிவாங்கி , விஷத்திற்கு எதிரான தன்மையை பரிசாக பெற்றுள்ளார் .

தனி இசையமைப்பாளர் சூழல் மாறிவிட்டது!

படம்
 தற்போது வெளிவந்து வெற்றிகரமாக பாக்ஸ் ஆபீசை நிரப்பி வரும் கோல்டு படத்தின் இசையமைப்பாளர் இணை சச்சின்-ஜிகார். படங்களுக்கு தனியாக பாடல்களுக்கு இசையமைப்பதோடு பல்வேறு படங்களுக்கு பின்னணி இசையமைத்தும் தம்மை நிரூபித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான், பிரிதம் ஆகியோரின் இசைக்குழுவுக்கு ஆர்கனைசராக இருந்து இசையமைப்பாளர்களாக முன்னேறியவர்கள். நீங்கள் உருவாக்கிய பல்வேறு சிறந்த பாடல்களை இயக்குநர்கள் ராஜ் டிகே, ரெமோ டி சூசா ஆகியோரின் கூட்டணியில் உருவாக்கியிருக்கிறீர்கள். எப்படி நடந்தது இந்த மேஜிக்? பாடல்களை சுதந்திரமாக உருவாக்குவதற்கு இவர்கள் இருவரும் எங்களை நம்புகிறார்கள் என்பதே முக்கிய காரணம். ரெமோ நடன இயக்குநர் என்பதால் ஏபிசிடி படத்தில்  பாடல்களை எனர்ஜியுடன் உருவாக்கினோம். சோர் இன் தி சிட்டி படத்திலிருந்து ராஜ் டிகேயுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். அப்படியென்றால் பாடல் சிறப்பாக உருவாகி வர இயக்குநரும், இசையமைப்பாளரும் இசைவான மனதை கொண்டிருக்கவேண்டும் இல்லையா? மன்மர்சியான் பட ஆல்பம் நன்றாக வந்திருக்கிறது என்றால் அதற்கு படத்தின் இயக்குநரும், இசையமைப்பாளர் அமித் திரிவேதியின் நட்பும்,

விடைதெரியாத புதிர்!

படம்
தொல்பொருள் புதிர் ! முட்டை வடிவிலான இப்புதிர் உலோகத்தை இங்கிலாந்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 1739 ஆம் ஆண்டு கண்டுபிடித்து தோராயமாக 300 ஆண்டுகளாகின்றன . தொன்மையான நாணயங்கள் , வெண்கலம் கலந்து செய்யப்பட்ட 12 பக்கங்களைக் கொண்ட உலோகம் இது . வெவ்வேறு அளவிலான துளைகளைக் கொண்ட இப்புதிர் உலோகம் எதற்கு என்பது இன்றுவரை மர்மமாக உள்ளது . மெல்லிய எடையிலான இந்த உலோகப்பொருளை ஆயுதமாக ரோமானியர்கள் பயன்படுத்தியிருக்க வாய்ப்புண்டு என்பது அகழ்வாராய்ச்சியாளர்களின் யூகம் . ஆனால் கிடைத்துள்ள ஆதாரங்களின்படி கயிற்றில் பயன்படுத்திய உலோக ஆயுதங்கள் எதுவும் புதிர் உலோகத்தை ஒத்ததில்லை . " ஆயுதமாக இந்த உலோகத்தை பயன்படுத்தினார்கள் என்று உறுதியாக எப்படி கூறமுடியும் ? குறிப்பிட்ட தொலைவை அளவிடக்கூட பயன்படுத்தி இருக்கலாமே ?" என மாற்றி யோசிக்க தூண்டுகிறார் இத்தாலியைச் சேர்ந்த இயற்பியலாளர் அமெலியா ஸ்பாராவிக்னா . இதற்கான ஆதாரமான பனிரெண்டு பக்கங்களிலுள்ள மாறுபட்ட அளவிலுள்ள துளைகளை காட்டுகிறார் அமெலியா . ஆனால் இதில் அளவைக்கான கணிதக்குறியீடுகள் இல்லாதது அமெலியாவின் வாதத்தை பலவீனமாக்குகிறது

மீம்ஸ் தடை!

படம்
விமர்சனத்திற்கு சிறை ! பல்வேறு மதங்களின் மூடத்தனங்களைக் குறித்த மீம் கிண்டல்கள் இணையத்தில் சகஜம் . ஆனால் ரஷ்யாவில் அதுபோல ஏதாவது பகடி , அங்கதங்களை உருவாக்கி பகிர்ந்தால் போலீஸ் ரெய்டு மற்றும் மத அடிப்படைவாதம் புகாரில் சிறைவாசத்தோடு வங்கி கணக்குகளும் அரசால் முடக்கப்படும் அபாயம் ரஷ்யாவில் உருவாகியுள்ளது . மத நம்பிக்கைகளை புண்படுத்தியதாக ( சட்டம் 148) பர்னால் நகரவாசியான டேனில் மார்க்கின் என்ற பத்தொன்பது வயது இளைஞர் ரஷ்யாவில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார் . இதோடு மோடுஸ்நாயா , பத்திரிகையாளர் துவா ஆகியோரும் மீம்கள் மற்றும் கட்டுரைகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர் . நேரடியாக வன்முறை , அடிப்படைவாதம் ஆகியவற்றை இவர்களின் எழுத்துக்கள் வெளிப்படுத்தவில்லை என்றாலும் கருத்து சொல்லவே பயப்படவேண்டும் என்ற நோக்கில் ரஷ்ய அரசு போலியாக புகார்களை உருவாக்கி அரசை விமர்சிப்பவர்களை கைது செய்து வருவது தொடர்கதையாகியுள்ளது . ரஷ்ய டெக் நிறுவனமான Vkontakte இது குறித்து அரசை விமர்சித்துள்ளது . 2016 ஆம் ஆண்டிலிருந்து ரஷ்ய உளவு ஏஜன்சி , 5 ஆயிரம் மனித உரிமை ஆர்வலர்களை கைதுசெய்து சிறையிலடைத்துள்ளத

அயர்லாந்தில் வரி பித்தலாட்டம்!

படம்
வரியற்ற சொர்க்கம் ! பனாமா தீவு , மொரிஷியஸ் , சிங்கப்பூர் என பலரும் லிஸ்டில் அடுக்குவார்கள் . ஆனால் அயர்லாந்து நாட்டை பலரும் நினைத்தே பார்த்திருக்க மாட்டார்கள் .   டப்ளின் நகரை தலைநகராக கொண்ட அயர்லாந்தின் மக்கள்தொகை 47 லட்சத்து 61 ஆயிரத்து 657. தனிநபர் வருமானம் 72 ஆயிரத்து 632 டாலர்களைக் கொண்ட இந்நாடு அமெரிக்க கம்பெனிகள் வரியற்ற லாபம் பெற சட்டப்பூர்வமாகவே உதவுகிறது என பெர்க்லி , கலிஃபோர்னியா , டென்மார்க் பல்கலைக்கழக பொருளாதார அறிஞர்கள் அறிக்கை (The Missing Profits of Nations) வெளியிட்டுள்ளனர் . 2015 ஆம் ஆண்டில் அயர்லாந்தில் (12.5% வரி ) 106 பில்லியன் டாலர்கள் , கரீபியன் தீவுகள் 97 பில்லியன் , சிங்கப்பூர் 70 பில்லியன் , நெதர்லாந்து 57 பில்லியன் என பன்னாட்டு நிறுவனங்கள் லாபம் பார்த்துள்ளனர் . " அதிக வர்த்தக செயல்பாடுகளின்றி பெரும் லாபம் என்றால் அதனைக் கவனிப்பது அவசியம் " எனும் பொருளாதாரவியலாளர் தாமஸ் தோர்ஸ்லோவ் . இவரது குழு வெளிநாட்டு நிறுவனங்களின் வணிகநடவடிக்கைகளை கண்காணித்து மேற்கண்ட லாப சதவிகிதத்தை கணக்கிட்டுள்ளனர் . ஆல்பபெட் , ஹெச்பி , ஆப்பிள

ட்வின்ஸ், குளோன்ஸ் என்ன வித்தியாசம்?

படம்
ஏன் ? எதற்கு ? எப்படி ? ட்வின்ஸ்களுக்கும் குளோன்களுக்கும் என்ன வித்தியாசம் ? தாயின் ஒரே கருமுட்டையில் வளரும் இரட்டையர்கள் ஒரே டிஎன்ஏவை பெற்றிருந்தாலும் அவர்களின் பெற்றோர்களின் டிஎன்ஏக்கள் மாறுபடும் . குளோனிங்கைப் பொறுத்தவரை ஒரே ஒருவரின் டிஎன்ஏக்களை பெற்று உருவாக்கப்படுகிறது . அதேசமயம் டிஎன்ஏ அளிப்பவரின் அச்சு அசல் பிரதியாக குளோனிங் இருப்பதில்லை . இரட்டையர்கள் கருவில் வளரும் போது ஹார்மோன்கள் , சத்துக்களை தனித்தனியே பெற்று வளர்கிறார்கள் .

விமானங்களுக்கு வெள்ளை நிறம் ஏன்?

படம்
விமானங்களுக்கு வெள்ளைநிறம் ! கார் , பைக் உள்ளிட்ட வாகனங்களுக்கு உள்ள வெப்பவிதிகள் அப்படியே விமானத்திற்கும் பொருந்தும் . பிற நிறங்களைவிட வெள்ளை நிறத்தை பயன்படுத்தினால் சூரியனின் வெப்பக்கதிர்வீச்சு சுற்று குறையும் . விமானத்தின் அலுமினிய உடல் சூரியனால் ஏகத்துக்கும் சூடாவதால் அதனைக் குறைக்க பெரும்பாலும் வெள்ளை நிற பெயிண்டை தேர்ந்தெடுக்கின்றனர் . அதிக உயரத்தில் பயணிக்கும்போது சூரிய வெப்பத்திலிருந்து வெளியாகும் புற ஊதாக்கதிர்களின் அளவையும் பெருமளவு வெள்ளைநிறம் தடுக்கிறது .