இடுகைகள்

மதிப்பெண்ணை அள்ளி வழங்கிய ஆசிரியர்!

படம்
பிச்சை எடுக்கும் தடகள வீரர்! மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர், அரசு வேலை தராமல் புறக்கணித்ததால் தெருவில் பிச்சை எடுக்கும் பரிதாபத்திற்கு ஆளாகியுள்ளார். ம.பியைச் சேர்ந்த மன்மோகன்சிங் லோதி, மாற்றுத்திறனாளி தடகள வீரர். கடந்தாண்டு குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் போட்டியின் நூறு மீட்டர் போட்டியில் ஓடி வெள்ளி வென்றுள்ளார். “பத்து ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் எனது வலது கையை இழந்துவிட்டேன். அரசு வேலை கிடைத்தால் எனது குடும்பத்தை காப்பாற்றமுடியும்” என மெல்லிய குரலில் பேசுகிறார் லோதி. அரசின் இரவுக்காப்பகங்களில் தங்கி அரசின் வேலைக்கு முயற்சித்தவர், முதல்வர் சிவராஜ்சிங் சௌகானை பலமுறை சந்தித்து மனுகொடுத்தும் வேலை கிடைக்கவில்லையாம். “எங்களுடைய துறை விதிப்படி லோதிக்கு வேலை தருவது இயலாத ஒன்று. சமூகநீதித்துறையில் அவர் முயற்சிக்கலாம்.” என்கிறார் விளையாட்டுத்துறையின் கூடுதல் இயக்குநர் வினோத் பிரதான். திறமைக்கு இதுதான் அங்கீகாரமா? 2 இஸ்‌ரோவின் 19 திட்டங்கள்! மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இஸ்‌ரோவின் லட்சியத்திற்கு தூரம் அதிகம். அடுத்து

சிறுவனைக் காப்பாற்றி கஜினி டெக்னிக்!

படம்
கைகொடுத்த இந்தியர்கள்! இந்திய அரசு கேரள மாநிலத்திற்கு ரூ.600 கோடி குறைந்த அளவு நிவாரணத்தொகையை அளித்தது. ஆனால் நாட்டின் பிற மாநில மக்கள் கையிலிருக்கும் தொகையை கேரளாவுக்கு அள்ளிவழங்கி இழப்புகளிலிருந்து காப்பாற்ற முயற்சித்து வருகிறார்கள். கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு இதுவரையில் ரூ.ஆயிரத்து 28 கோடி நிதி கிடைத்துள்ளது. கேரளா மீண்டும் புத்துயிர் பெற்றெழ 4.17 லட்சம் மக்கள் பங்களித்திருப்பது பெருமைக்குரிய செய்தி. வரைவோலை, பணமாக மட்டும் ரூ.835 கோடியும், டிஜிட்டல் பரிமாற்றம் வழியாக 146.52 கோடி ரூபாயும் நிவாரண நிதியாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து அனுப்பி வைத்துள்ளனர். சேதமதிப்பு 20 ஆயிரம் கோடிகளுக்கும் அதிகம் என்பதால் கேரள அரசு, பல்வேறு நாடுகளுக்கும் தம் அமைச்சர்களை அனுப்பி நிவாரண நிதியை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது. 2 சகியா? சகோதரியா? காதலி மூலம் கைகளில் ராக்கி கயிறு கட்ட பள்ளி நிர்வாகம் நிர்பந்தப்படுத்த விரக்தியான காதலன் தற்கொலைக்கு முயற்சித்து பரபரப்பை கிளப்பியுள்ளார். திரிபுரா தலைநகரமான அகர்தலாவிலுள்ள பள்ளியில் திலீப்குமார் சாகா படித

சுயதணிக்கை படங்கள் ஆபத்தானவை! - விஷால் பரத்வாஜ்

படம்
2002 ஆம் ஆண்டு மக்தி திரைப்படத்தை தொடரந்து ஷேக்ஸ்பியரின் மெக்பெத், ஓதெல்லோ, மெக்பெத் ஆகிய புகழ்பெற்ற நாடகங்களை ஓம்காரா, மெக்பூல், ஹைதர் என்ற பெயர்களில் இந்தி திரைப்படங்களாக்கினார் இசையமைப்பாளரும் இயக்குநருமான விஷால் பரத்வாஜ். தற்போது விஷாலின் படாகா என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. சரண்சிங் பதிக்கின் Do Behnin என்ற சிறுகதையை திரைப்படமாக்கியுள்ளார். மும்பை, டெல்லி உள்ளிட்ட பெருநகரங்களில் வாழ்ந்தவர் நீங்கள். கிராமங்களை மையமாக கொண்டே பல்வேறு திரைப்படங்களை எடுத்துள்ளீர்கள். என்ன காரணம்?  சிறு, குறு கிராமங்களிலுள்ள முரண்பாடுகளை என்னை அதிகம் ஈர்க்கின்றன. அதில்தான் திரைப்படத்திற்கான கதைகள் எளிதாக கிடைக்கின்றன. இன்றும் கிராமங்களில் வாழ்வதற்கான போராட்டங்களை நீங்கள் பார்க்க முடியும். வாழ்வின் ஆழமான அனுபவத்தை நீங்கள் இங்குதான் அனுபவ பூர்வமாக உணரமுடியும்.  பஷாரத் பீரின்  Curfewed Nights படித்து அதனை திரைப்படமாக திரும்ப கூறவேண்டும் என விரும்பினேன். நகரங்களைக் கடந்த பேசப்படவேண்டிய விஷயங்கள் கிராமங்களில் உள்ளது என உறுதியாக நம்புகிறேன்.  வேறு ஏதாவது நாட்டில் திரைப்

நம்பிக்கை தரும் ஓவியப்பள்ளி!

படம்
ஆப்பிரிக்காவில் ஓவியக்கலை! ஆப்பிரிக்காவின் கைபெரா நகரிலுள்ள குடிசைப்பகுதியில் இப்படியொரு இடமாக யாருமே ஆச்சரியப்பட்டு போவார்கள். இரண்டே அறைகளைக் கொண்ட உவெஸா(Uweza) கலைப்பள்ளி ஆப்பிரிக்க குழந்தைகளின் கலைத்திறனுக்கு வாசலாக அமைந்துளது. குடிசைகளிலுள்ள குழந்தைகளின் தினசரி பள்ளிவாழ்வுக்கு பிரச்னை இல்லாதபடி ஓவிய வகுப்பு நடைபெறுவது உவெஸா ஸ்பெஷல். 2008 ஆம் ஆண்டு அமெரிக்கா தொழிலதிபர் ஜெனிஃபர் சபிட்ரோ அனைவரும் பார்க்கும்படியான இடத்திலுள்ள இடத்தில் கலைப்பள்ளியை தொடங்கினார். 7-37 வயதுள்ளவர்களை பள்ளியில் இணைத்து ஓவியப்பயிற்சியை தொடங்கினர். இங்குள்ள சுவர்களிலுள்ள அத்தனை ஓவியங்களின் பிரம்மா, மாணவர்கள்தான். இளமையிலேயே வேலைக்கு சென்று சம்பாதிக்கும் நிர்பந்தம் உள்ள நிலையில் ஓவியம் கற்பது நேரம் விரயம் என்பதே இங்குள்ளவர்களின் எண்ணம். ரூ.215- 7,898 விலை ரேஞ்சுகளில் விற்கப்படும் ஓவியங்களில் 60% தொகை கலைஞருக்கும், மீதி பள்ளிக்கும் செலவிடப்படுகிறது. ஆசிரியர் ஓகோத் கூட தந்தையால படிப்பைவிட்டுவிட கேட்டுக்கொள்ளப்பட்டாலும் ஓவியப்பயிற்சியை கைவிடவில்லை. ஓகோத் மட்டுமல்ல இங்குள்ள பிற ஆசிரியர்கள் மாணவர்க

377 - 158 ஆண்டுகால ஒடுக்குமுறை சட்டம் நீக்கம்!

படம்
வானவில் வெற்றி! இயற்கைக்கு விரோதமானது என்று கூறி எல்ஜிபிடி சமூகத்தினரின் வாழ்வுரிமைக்கு எதிராக இருந்த 158 ஆண்டுகால ஆங்கிலேயர் காலத்தின் 377 சட்டத்தை திருத்தியுள்ளது நீதிமன்ற தீர்ப்பு. தீர்ப்பை கூறிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளடங்கிய நீதிபதிகளின் பெஞ்ச், 377 சட்டத்தை பகுத்தறிவற்ற, ஏற்றுக்கொள்ள முடியாத, சர்வாதிகாரம் என விமர்சித்துள்ளனர். 2001 ஆம் ஆண்டு நாஸ் பவுண்டேஷன்(இந்தியா) தொடுத்த வழக்கு இது. பாலுறவு நோய்கள் தொடர்பாக செயல்படும் இவ்வமைப்பு 377 சட்டம் அரசியலமைப்பு சட்டம் மற்றும் உலக மனித உரிமை விதிகளையும் புறக்கணிக்கிறது என்று கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. காமன்வெல்த் மற்றும் 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் எல்ஜிபிடியினருக்கு எதிராக இதே சட்டம் பல்வேறு வடிவங்களில் உள்ளது. உச்சநீதிமன்றத்தில் எல்ஜிபிடி சமூகத்தினருக்கு ஆதரவாக 35 மனுக்கள் தாக்கலாயின. அதில் பரதநாட்டியக் கலைஞர் நவ்தேஜ்சிங் ஜோகர், டெல்லி ஐஐடி மாணவர் வருண் ஐயர், வரலாற்று எழுத்தாளரும் ஹோட்டல் அதிபருமான அமன்நாத், உணவுத்துறை ஆலோசகரான ஆயிஷா கபூர், பத்திரிகையாளர் சுனில் மெஹ்ரா, த

இந்தியா முழுக்க ஒரே கார்டு! - NCMC அறிவீர்களா?

படம்
  ஒரே தேசம் ஒரே கார்டு! லண்டன் மற்றும் சிங்கப்பூரிலுள்ளதைப் போல பஸ்,மெட்ரோ ரயில், உள்ளூர் ரயில் என அனைத்து போக்குவரத்திற்கும் ஒரே அடையாள அட்டையை பயன்படுத்த இந்திய அரசு ஆலோசித்து வருவதாக நிதி ஆயோக் அமைப்பின் இயக்குநரான அமிதாப் கன்ட் கூறியுள்ளார். “எதிர்காலத்திற்கேற்ப வாகனங்களை வடிவமைப்பதோடு மக்களின் பயன்பாட்டையும் வடிவமைப்பு முக்கியம். அரசு அதற்கான முயற்சிகளில் உள்ளது” என்கிறார் அமிதாப் கன்ட். இவ்வாண்டிற்கான வாகன மாநாட்டில் இந்தியா அடுத்த தலைமுறை வசதிகளை அறிமுகம் செய்யவிருக்கிறது. லண்டன் ரயில்களில் பயணிக்க உதவும் ஆய்ஸ்டர் கார்ட்டை போலவே, தலைநகரான டெல்லியிலும் ரயில்களில் பயணிப்பதற்கான கார்டு இவ்வாண்டின் ஜனவரி 9 தேதியன்று சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசின் இணையதளத்தில் இத்திட்டத்திற்கான பொருத்தமான பெயரை மக்கள் தேர்ந்தெடுக்க அரசு கோரியுள்ளது. தேசிய பொதுபோக்குவரத்து அட்டை(NCMC) மூலம் கடைகள், ஸ்மார்ட்நகரங்கள், டோல்கேட்களிலும் எளிதில் பணம் செலுத்தும் வசதியை அரசு கொண்டுவர எண்ணியுள்ளது.    

வீடற்றோர் நிலை என்ன?

படம்
அயர்லாந்தின் தோல்வி! வேலைவாய்ப்பு, தொழில்துறை என அனைத்தும் சிறப்பாக இயங்கும் அயர்லாந்து ஐரோப்பிய யூனியனின் நம்பிக்கை நட்சத்திரம். 5.6% ஜிடிபி வளர்ச்சி கொண்ட அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் 700 குடும்பங்கள் தங்க வீடின்றி தடுமாறி வருகின்றனர். அயர்லாந்து அரசு கடந்தாண்டு வெளியிட்ட அறிக்கையில்(ஜூலை,2017) 6,024 பெரியவர்கள், 3,867 குழந்தைகளுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டியது அவசியம் என கூறப்பட்டிருந்தது. தற்காலிக டென்ட் முகாம்களை அமைத்து பொருளாதாரத்தில் தடுமாறுபவர்களுக்கு அரசு உணவளித்து வருகிறது. “சமூக வளர்ச்சி திட்டங்களில் அரசின் தோல்வி இது. மக்கள் பலரும் தங்கும்படியான சமூகவளாகங்களை அரசு உருவாக்குவது அவசியம்” என்கிறார் சமூக செயல்பாட்டாளரான நியாம் ராண்டல். வீடுகளுக்கான தேவை அதிகரிக்கும் சமயம், தங்குமிடங்களுக்கான விலை, வசதிகளை பெறுவதிலும் சிக்கல் நிலவிவருகிறது. வாடகை கட்டிடத்தை சமூகசெயல்பாட்டாளர்கள் குழு ஆக்கிரமித்ததை மக்கள் பாராட்டினாலும் நீதிமன்றம் அதனை எதிர்த்து போராட்டக்காரர்களை அக்கட்டிடத்தை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது. கருக்கலைப்பு சட்டம், ஓரினச்சேர்க