இடுகைகள்

கல்வியில் தடுமாற்றம் என்ன? - இந்தியாவின் கல்வி பரிதாபங்கள்

படம்
கல்வியில் தடுமாறும் இந்தியா! அண்மையில் வெளியாகியுள்ள அசெர் கல்வி அறிக்கை, இந்திய பள்ளி மாணவ, மாணவியரின் திறன் பெருமளவு பின்தங்கியுள்ளது என கூறியுள்ளது. 96 சதவீத மாணவர்கள் பள்ளியில் இணைந்திருந்தாலும் நான்கில் ஒருவருக்கு இரண்டாம் வகுப்பு பாடங்களைக் கூட புரிந்துகொள்ளும் திறன் இல்லை என குண்டு வீசுகிறது இந்த அறிக்கை. மேலும் 50 சதவீதம் பேருக்கு அடிப்படை கணிதமான வகுத்தல், கழித்தல் கூட தடுமாற்றம் என நிஜத்தை பேசியுள்ளது. அதுவும் பசுவின் நலன்களுக்கான வாழும் ராஜஸ்தான் மாநிலத்தில் 8 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே அடிப்படை கழித்தல் கணக்கு தெரிந்திருக்கிறது. அடுத்து யோகியின் மதியூக ஆட்சி நடக்கும் உ.பியில் 60 சதவீத குழந்தைகளுக்கு(மூன்றாம் வகுப்பு) வார்த்தைகளை வாசிக்கத் தெரியவில்லை  என்பது மத்திய, மாநில அரசுகளுக்கு பெருமை சேர்க்காது. குறைந்தபட்சம் இரண்டாம் வகுப்பு மாணவர்களிடம் நாம் என்ன எதிர்பார்ப்போம்? எளிமையான வார்த்தைகள், அடிப்படை கணிதம் பற்றிய புரிதல். கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல் ஆகியவை. அதேசமயம் பயன்களும் இல்லாமல் இல்லை. பள்ளி செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித

மழையரசி - அன்லிமிடெட் காதல் சுனாமி

படம்
மழையரசி - இ.எஸ்.லலிதாமதி அன்லிமிடெட் காதல் நினைவுகளோடு மழை ஈரத்தோடு எழுதியுள்ளார் கவிஞர். ஆனாலும் வலிய கைபிடித்து கவிதை நூலை திணித்துவிட்டார்கள். விமர்சனம் எழுதிவிட அப்போதே துணிச்சல் வந்துவிட்டது. காதல், தனிமை, அழைப்பை தள்ளிப்போடுவது, காதல் பொறாமை, விரக்தி என கவிதை நூல் எழுத என்ன தேவையோ அத்தனையும் இருக்கிறது. தமிழ் இலக்கணத்தை வைத்தே காதல் சொல்லிய கவிதை அருமை. அன்பின் மறுபக்கம் வெறுப்பை என்பதை அழுத்தமாக சொல்லி அன்பு அடிமை விஷம் கவிதை கவிஞரின் பெயர் சொல்லும் கவிதை. காதலின் வெறுமையைச் சொல்லு நிலா எனக்கு நெருக்கம் கவிதை மென்மையான காதலை இயற்கையின் இதமான காதலுடன் சொல்லிச் செல்கிறது. இதோடு குழந்தைகள் நிறைந்த வீடு, பறவைகளின் நினைவிலுள்ள கூடு ஆகியவையும் லலிதாமதியின் எழுத்துக்களில் குறிப்பிடத்தகுந்த கவிதை. எழுதி முடிக்கும்போது பக்கத்து சீட் நண்பர் கேட்டார். ரொம்ப ஃபீலிங்கா இருக்குமே, அதனால்தான் நான் படிக்கிறதே இல்லை என அப்படி ஒரு சிரிப்பு சிரித்தார். என்ன காரணமோ தெரியவில்லை. நான் எந்த பதிலும் சொல்லவில்லை. - கா.சி.வின்சென்ட் நன்றி: பாலகிருஷ்ணன்

விண்வெளியில் ரேடியோ சிக்னல்?

படம்
ரேடியோ சிக்னல் மர்மம் சில நாட்களுக்கு முன்பு விண்வெளியிலிருந்து ரேடியோ சிக்னல் கிடைத்துவிட்டது என ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ந்தனர். ஆனால் அதன் அளவு மில்லி செகண்டுகள் என்பது பின்னர் தெரிந்தபோது மகிழ்ச்சி பலருக்கும் குறைந்துபோனது. என்ன காரணம், ஏனென்றால் அதனை ஆராய முடியாது என்பதுதான். 2007 ஆம் ஆண்டு வானியலாளர் டன்கன் லோரிமெர் ரேடியோ சிக்னலை முதலில் கண்டுபிடித்தார். கருந்துளையில் வெளிப்படும் ஆற்றல் காரணமாக அல்லது நட்சத்திரங்கள் தங்களுக்குள் மோதிக்கொள்வதால் ஏற்படும் அலைகள் என ரேடியோ அலைகளை ஆராய்ச்சியாளர்கள் நினைத்தனர்.  இதனை ஃபாஸ்ட் ரேடியோ பர்ஸ்ட் எனக் குறிப்பிடுகின்றனர். சுருக்கமாக எஃப்ஆர்பி. 2012 ஆம் ஆண்டு புவர்ட்டோ ரிகோவிலுள்ள கண்காணிப்பகத்தில் ரேடியோ அலை ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதன் பெயர் எஃப்ஆர்பி 121102. தொடர்ச்சியாக கிடைத்த ரேடியோ அலைகள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்வதற்கு உதவின. தற்போது சிமே(CHIME) டெலஸ்கோப் மூலம் 13 புதிய ரேடியோ அலைகளை இரண்டு மாதங்களில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து சாதனை செய்துள்ளனர். செய்திகளை இந்த ரேடியோ அலைகளில் அனுப்பி அவை ஒருவருக்கு சென்று

நீதியின் வலதுகரமாக டைகர் பின்னி எடுக்கும் மின்னும் மரணம்!

படம்
image: devianart மின்னும் மரணம் - நீதியின் வலது கரம் சார்லியர் - ஜிர் என எழுத்தாளர், ஓவியர் இணை இணைந்து செய்த சாகசம்தான் லெப்டினென்ட் டைகர் கலக்கும் மின்னும் மரணம்.  1860 களில் நடக்கும் கதை. உள்நாட்டுப்போரில் தெற்கத்திய ஆட்கள் மறைத்து வைத்த தங்கத்தை தேடி அமெரிக்க அரசு, வெகுமதிவேட்டையர்கள், மெக்சிகன்கள் அலையும் அநாயச கதை.  கேப்டன் டைகர் என்ற பெயரில் முத்து காமிக்ஸ் வெளியிட்ட கதை. இப்போது சரியான மொழிபெயர்ப்பில் லெப்டினென்ட் என திருத்தமாக வெளியாகிறது. என்ன விலைதான் ரூ. 1000. வாங்கிப்படித்து நண்பர்களுடன் பகிரலாம்.  லெப்டினென்டாக உள்ள டைகர், மாதத்திற்கு ஒருமுறை குளித்தாலும் நீதியின் வழுக்காத வலது கரம். மனிதர்களை அநாவசியமாக கொல்பவர் கிடையாது. செவ்விந்தியர்களோ, வெள்ளையர்களோ அனைவரையும் நம்மவராக கருதுபவர். அனைவரும் விக்ரமன் பட கேரக்டர்களாக இருந்தால் எப்படி கதை நகரும். ட்விஸ்ட் இங்கேதான் வருகிறது.  சும்மா காடுமேடு எல்லாம் சுற்றி அலைந்த டைகரிடம் மெக்சிகோவுக்கு அனுப்பிய தங்கத்தை தேடிப்பெறும் ஒப்பந்தம் கிடைக்கிறது. ஜிம்மி, ரெட் சகிதமாக கிளம்புவருக்கு சிகுவாகுவா சில்க் என்

குற்றங்களைத் தீர்க்க இளைஞர்களால் முடியும் - நம்பிக்கை அதிகாரி

படம்
உங்களுடைய நாட்டு பிரச்னைகளை நீங்களே தீர்க்க முன்வராவிட்டால் எப்படி? சரி, யார்தான் அதனை தீர்ப்பது? என யதார்த்தமான கேள்விகளை முன்வைக்கிறார் வழக்குரைஞராக இருந்து ஐபிஎஸ் ஆபீசராக சாதித்த ஹர்ஸ் போடர். வழக்குரைஞராக இருந்து பிரச்னைகளை பார்த்தவர் தற்போது அதனை தீர்க்கும் வழிதேடி மாற்றங்களை விதைத்து வருகிறார். கடந்த ஆண்டின் டெட்எக்ஸ் கேட்வேயில் தனது சிந்தனைகளை மக்களிடம் பகிர்ந்துகொண்டார். வெறும் சிந்தனை மட்டுமல்ல செயலிலும் புலிதான். மகாராஷ்டிராவில் குற்றங்களை களைய மகாராஷ்டிரா இளைஞர்கள் நாடாளுமன்றம் என்ற அமைப்பைத் தொடங்கி 42 ஆயிரம் இளைஞர்களை ஈர்த்துள்ளது சாதனை அல்லவா? மேலும் பார்வையற்றோருக்கான ஆதரவு சட்டங்களையும் இயற்ற முயற்சித்து வருகிறார். “நான் அடிப்படையில் வழக்குரைஞர் என்பதோடு ஆக்ஸ்போர்ட்டில் பெற்ற கல்வி அறிவும் பிரச்னைகளை எளிதாக புரிந்துகொள்ள உதவியது. அரசின் உதவியுடன் மக்களுக்கு என்னவிதமான உதவிகளை செய்யமுடியும் என யோசித்து செயல்படுகிறேன்” என நம்பிக்கை பெருக பேசுகிறார் ஹர்ஸ் போடர். மாலேகானில் போலீஸ் அதிகாரியாக பொறுப்பேற்றவர் உடான் எனும் திட்டத்தை உருவாக்கி கலவரங்களில் ஈடுபட்ட இள

அடிப்படை ஊதியம்(Ubi) தர இந்தியா தயாரா?

படம்
படம்: நியூஸ் கிளிக் தெலுங்கானாவில் மாநில அரசு அமல்படுத்திய ரைத்து பந்து திட்டம் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு மீண்டும் அதிகாரத்தை தந்திருக்கிறது. இது இந்தியா, அடிப்படை ஊதியம் திட்டத்தை வறுமையில், வேலையின்மையில் தவிப்பவர்களுக்கு அமலாக்கலாமே என யோசிக்க வைத்துள்ளது. இது நிறையப்பேர் நினைப்பது போல விவசாயக்கடன் போல அரசுக்கு சுமை ஏற்படுத்துவது அல்ல. ரைத்து பந்து திட்டத்தின் கீழ் ஒரு ஏக்கருக்கு விவசாயி செய்யும் முதலீட்டுக்கு அரசு 4 ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. இதே திட்டத்தை இந்தியா முழுக்க அரசு அமலாக்கினால் 3.1 ட்ரில்லியன் டாலர்கள் செலவாகும் என மதிப்பிடலாம். 2011 யுனிசெஃப் செய்த ஆராய்ச்சிப்படி பெரியருக்கு 300, சிறுவர் ஒருவருக்கு நூற்றைம்பது என மாதம் முந்நூறு ரூபாய் கொடுத்தால் அரசுக்கு ஆண்டுக்கு பதினெட்டாயிரம் ரூபாய் செலவாகும் என்பது கணக்கு. இந்த தொகையை அதிகரித்தால் அரசு பிற நலத்திட்டங்களை கைவிட்டாக வேண்டிய சூழல் ஏற்படும். மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை மாற்றலாமா என்பதிலும் நிறைய குழப்பம் நிலவுகிறது. சரியா, தவறா, அடிப்படை ஊதியத்திற்கு மாற்றா என்பதிலும் பொரு

சோதனை ஜெயித்தால் இந்தியா நொறுங்குவது உறுதி!

படம்
படம்: தி இந்து நேர்காணல் அசாமின் குடியுரிமைச்சட்ட மசோதா இந்தியாவின் அடிப்படைடையைத் தகர்க்கிறது.  யோகேந்திர யாதவ், ஸ்வராஜ் இந்தியா கட்சி தலைவர் தமிழில்: ச.அன்பரசு ஆங்கில மூலம்: பிரீத்திகா கன்னா(லிவ் மின்ட்) அசாமின் குடியுரிமை சட்ட மசோதாவை எப்படி பார்க்கிறீர்கள்? இந்திய நாடாளுமன்றத்தில் அமலான மசோதாக்களிலேயே பெரும் நாசகர அழிவை ஏற்படுத்தும் மசோதா இதுவே. ஏனெனில் இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது இம்மசோதா. மதம் சார்ந்து மக்களை குடியுரிமை பெற வற்புறுத்துவதாக இம்மசோதா அமைகிறது. மதம் பொறுத்து  ஒருவரை தீண்டத்தகாதரவராக கருதமுடியாது என்று கூறும் அரசியலமைப்பின்  15 ஆம் பிரிவுக்கு இது எதிரானது. முஸ்லீம்கள் வாழ்வது பாகிஸ்தான், இந்துக்கள் மட்டுமே வாழ்வது இந்தியா என்ற பொருளை அழுத்தமாக இம்மசோதா ஏற்படுத்துகிறது. ஜின்னா மற்றும் சாவர்க்கரின் சிந்தனைவழியே இச்சட்ட மசோதா செல்கிறது. இவ்வழியில் நாம் நடப்பது குடியரசு நாடான இந்தியாவின் பன்முகத்தன்மையை முற்றாக  அழித்துவிடும். இம்மசோதாவுக்கு எதிராக நிற்பது இந்தியர் ஒவ்வொருவரின் கடமையும் கூடத்தான். வடகிழக்கு மாநிலங்களை பிரிவினை செய்ய பாஜக ந

பெங்களூரு மினிமலிச ஆளுமைகள்

படம்
அர்விந்த் சிவக்குமார் பெங்களூரைச் சேர்ந்த அர்விந்த் சிவக்குமார், மினிமலிச சிந்தனையை வாழ்வுக்கு அப்ளை செய்து வென்றிருக்கிறார்.இவர் புதிய ஆடைகளை வாங்கி பத்து ஆண்டுகளாகிறது. தன் மனைவியுடன் தனியாக வீடு எடுத்து தங்கியவர், இப்போது சூழல் சிக்கனம் கருதி தன் பெற்றோருடன் ஒன்றாக சேர்ந்து வசிக்கிறார். ஏன்? மின்சாரம், பொருட்கள் பயன்பாடு என பல விஷயங்களில் இது லாபம் என்று சிரிப்பவர், பட்டு, தோல் பொருட்களை தவிர்த்துவிட்டு வீகன் டயட்டுக்கு மாறி பல ஆண்டுகள் ஆகிறது. இதற்கு முக்கியக்காரணம், ஆறு வயதில் இவர் கலந்துகொண்ட இயற்கை பற்றிய முகாம் ஒன்று. அங்கு தேவையில்லாமல் பொருட்களை வீண்டிக்க கூடாது என அறிவுறுத்த அதனை பின்னாளிலும் கடைபிடித்து இன்று அவரைப் பற்றி நாம் பேசுமளவு வளர்ந்திருக்கிறார். சாகர் மன்சூர் நான் வெகு ஆண்டுகளாக இளநீர் வாங்கினால் ஸ்ட்ரா வாங்காமல்தான் அதனைக் குடிக்கிறேன். இந்த மாற்றத்திற்கு நீங்கள் பழகினாலே பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கலாம் என ஆச்சரியப்படுத்துகிறார் மன்சூர். டிபன் பாக்ஸ், ஸ்டீல் ஸ்ட்ரா என போகுமிடமெல்லாம் கொண்டு செல்லும் புதுமைப் பெண் மன்சூர். கடந்த 2

மினிமலிச சிந்தனை - கற்க வேண்டியது என்ன?

படம்
மினிமலிச சிந்தனை அறையில் இரண்டு பேர்தான் இருப்பார்கள். ஆனால் நான்குபேர்களுக்கான பொருட்களை வைத்திருப்பார்கள். அது பிரச்னையில்லை. ஆனால் நடமாட இடம் வேண்டுமே? இதற்காகவே மினிமலிசம் கலாசாரம் நடைமுறையில் பிரபலமாகி வருகிறது. இதுகுறித்து குங்குமத்தில் நான் எழுதிய கட்டுரையை யாரும் படித்திருக்க மாட்டீர்கள். உண்மையைச் சொல்லித்தானே ஆக வேண்டும். வெரி வெல், பிரச்னையில்லை. உலகமெங்கும் மினிமலிச சிந்தனையைப் பரப்பும் சிந்தனையாளர்களின் அணிவகுப்பு இதோ... மேரி கோண்டோ ஜனவரி முதல் தேதியிலிருந்து நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் தொடர் இது. மேரி எப்படி தன் கிளைண்ட்களின் வீட்டை குப்பைகளை குறைத்து எளிமையாக்குகிறார் என்பதே இத்தொடர். வாய்ப்பிருந்தால் பாருங்கள். ஃப்யூமியோ சசாகி பெங்குயின் பதிப்பகத்தில் குட்பை திங்க்ஸ் ஆன் மினிமலிஸ்ட் லிவ்விங் என புத்தகம் போட்டிருக்கிறார். டோக்கியோவில் வசிக்கும் இளைஞரின் வாழ்க்கை எப்படி மினிமலிச கருத்துக்குள் வருகிறது, அதன் விளைவுகள் என்ன , சமூகம் அதனை எப்படி பார்த்தது என்பதை புட்டு வைத்திருக்கிறார். புக் விலை ரூ. 500. கல்வி வேலை வழிகாட்டி நிருபரான வெங்கடசாமி ப

செய்தி பிரியர்களுக்கான பெஸ்ட் ஆப்ஸ்

படம்
செய்தி ஆப்ஸ் feedly தினசரி ஊரு உலகத்தில் என்ன நடக்கிறது என தெரிந்துகொள்ளும் வெறியரா? பிடியுங்கள் ஃபீட்லி ஆப்பை. இணையம், பிளாக், பதிப்பகம் என பல இடங்களிலுள்ள செய்திகளை மினிமலிசமாக தெரிந்துகொள்ள உதவும் ஆப். உடனே பிடித்த செய்திகளை நட்பு கேங்குகளுக்கு பகிரவும் முடியும். லேப்டாப், பிசி, போன் என அனைத்திலும் அட்டகாச திறனுடன் செய்திகளை படிக்க வைக்கிறது ஆப். The Score விளையாட்டு வெறியர்களுக்கான ஸ்பெஷல் ஆப். உலகிலுள்ள எந்த கிரவுண்டிலும் கிட்டிப்புல், பச்சைக்குதிரை முதற்கொண்டு பிரிமியம் விளையாட்டு வரை என்ன விளையாடினாலும் டிவிகளை முந்திக்கொண்டு ஆப்பில் தகவல் சொல்லி விடுகிறார்கள். உங்களுக்கு எந்த டீம் பிடிக்குமோ அந்த டீமின் ஸ்கோர்களை மட்டுமே பார்க்கும் வசதியும் உண்டு. அப்புறமென்ன டவுன்லோடு செய்து பட்டையக் கிளப்புங்கள். Pocket பாக்கெட் ஆப், நீங்கள் பார்க்கும் சுவாரசிய செய்திகளை அனைத்தையும் சேமித்து வைக்க வழிகாட்டுகிறது. ட்விட்டர், ஃபிளிப்போர்டு உள்ளிட்ட இணையதளங்களில் பாக்கெட் ஆப்பை முக்கியமாக பரிந்துரைக்கும் அளவு புகழ்பெற்ற ஆப் இது. தேவையான செட்டிங்குகளை செய்துகொண்டால் செய்திக

டேலன்டை அதிகரிக்கும் ஆப்ஸ்!

படம்
உங்கள் திறனை அதிகரிக்கும் ஆப்கள் otter voice notes நீளமான இன்டர்வியூவை எஸ்.ராவிடம் எடுக்கிறீர்கள் என்றால் அதை எழுதும்போது பீதியாகிவிடுவீர்கள். அதில் அவரின் சிரிப்பு பாதிநேரம் என்றால் விளக்கம் 45 நிமிடத்திற்கு மேல் வரும். அதனால்தான் ஓட்டர் வாய்ஸ் நோட்ஸ் ஆப் பயன்படுத்துங்கள் என்கிறோம். 2018 ஆம் ஆண்டில் பெஸ்ட் ஆப்களில் இதுவும் ஒன்று. 600 நிமிஷங்கள் வாய்ஸ் பதிவு செய்யும் பதிவு இதில் உண்டு. நேர்காணல், வெட்டி அரட்டை, தேறாத எடிட்டோரியல் ஆட்களின் கட்டுரை பற்றிய கவலைகளை பதிவு செய்து ஆச்சரியப்படலாம். இரண்டு மூன்றுபேர் இடியாப்பம் போல பேசினாலும் உங்கள் குரலை எளிதாக கண்டுபிடித்து தருகிறது இந்த ஆப். இதனால் மிமிக்ரி செய்யும் சூப்பர்மேன்களை தவிர பிறருக்கு உதவியாக இருக்கிறது இந்த ஆப். கூகுள் பிளே ஸ்டோரில் தரவிறக்கி பயன்படுத்தி மகிழுங்கள். Drops உலகெங்குமுள்ள 30 மொழிகளிலுள்ள வார்த்தைகளை எளிதாக கற்க உதவும் ஆப். கடந்தாண்டின் பெஸ்ட் ஆப்பாக கூகுள் தேர்ந்தெடுத்து பட்டியலிட்டு பெருமைப்படுத்தியுள்ளது. புதிய மொழிகளை மாதந்தோறும் இணைத்துவருவது இந்த ஆப்பின் ஸ்பெஷல். ஐந்து நிமிடம் செல